ஜனப்பன் அல்லது சணப்பன் என்போர் தொழில் அடிப்படையில் கவர பலிஜர் வளஞ்சியர் குலத்தின் ஒரு பிரிவினர்.
இவர்களின் முக்கியத் தொழில் பொருட்களை தொலைத்துரம் எடுத்துச்செல்லும் வணிகச்சாத்துக்குத் தேவையான கோணிப்பைகளை செய்வது. இவர்கள் சாத்துவணிக்கத்தில் ஒரு முக்கிய அங்கமான மூட்டைகளுக்கு தேவையான கோணிப்பைகள் செய்து தந்ததால், இவர்களை கோணிகா என்றழைத்தனர். சணல் பை காரர் என்பதே ஜனப்பர் என தெலுங்கில் மறுவியுள்ளது. இவர்களை ஜனப்பச் செட்டி என்று அழைத்துக் கொண்டனர்.
சாது செட்டி என அழைக்கப்பட்ட இவர்கள், பெருமை மிக்க தமிழ் இலக்கியங்கள் கூறும் சாத்து வணிகராகவும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்களில் ஒரு சிலர் சிறந்த வணிகராக இருந்து நாட்டை ஆளும் தேசாய்/தேசாதிபதி பதவி வரை வகித்துள்ளனர். இவர்களைத் தமிழில் சாளுப்பன் என்றழைத்தனர். இவர்களிடையே 24 கோத்திரங்கள் (24 மனை தெலுங்கு செட்டி) உள்ளது. சாத்துச்செட்டி என்பதன் திரிபே சாது செட்டியாகும்.
இவர்கள் கோணிப்பைச் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தியது ஹெம்ப் எனப்படும் சணல் ஆகும். இதற்காகப் பயன்படும் தாவரம் Cannabis sativa எனப்படும் ஒருவகை கஞ்சா செடியாகும். இதே வகை செடியில் பூத்தக் குல்லைப்பூவை தங்கள் குல அடையாளமாக வடுக வேடுவர்கள் மாலையாக அணிந்து கொண்டனர் என முன்பு பார்த்தோம்.
ஜனப்பன் என்போர், வணிகச் சாத்து எனும் அன்றைய வணிகப் பயணக்குழு (Commercial Logistics Transport) வுக்கு, பொருட்களை எடுத்துச் செல்லும் மூட்டைகளை (Packing) செய்து கொடுத்த துணைக்குழு (Packaging Partners) எனலாம். இன்று எவ்வாறு அமேசான், பிளிப்கார்ட் போனறவைகளுக்கு அட்டைப் பெட்டிகள் முக்கியமோ அன்று வணிகத்துக்கு சணல் மூட்டைகள், கூடைகள், பெருந் தாழிகள் அவ்வளவு முக்கியமானதாக இருந்தன.
#வளஞ்சியர்