திருவீழிமிழலைக் கோயில் மகாமண்டபத்தில் பக்கவாட்டில் உள்ள மண்டபம் கி.பி.11-ஆம் நூற்றாண்டளவில் உக்கல் கிழான் எதிரிலிசோழன் என்கிற பல்லவராயனால் கட்டப்பட்டுள்ளது. திருவீழிமிழலைக் கோயிலில. கவறைநாயக தேவர், அவர்தம் பிராட்டியார் ஆகிய இறையுருவங்களுக்கு நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது படைக்க வேண்டியும், திருப்பரிச்சட்டத்துக்கும், திருவிளக்கெண்ணைக்கும், திருவிழா…