அக்கால நெசவுடன் தொடர்புற்றிருந்த பிற சாதியினராகிய ‘சாயக்காரர் மற்றும் ‘வர்ணக்காரர் என்போர் புதுத் துணிகள் மற்றும் நூலிற்கு சாயமிடுவோர் ஆகும். இம்மரபில் சாயக்காரர் துணிகளுக்கு நிறமூட்டலினையும் அவற்றில் அலங்கார அச்சடித்தலினையும் செய்துள்ளனர். சாயக்காரர்களோடு இணைந்து குடியேற்றப்பட்டவர்களாக ‘சித்திரக்காரர்’ காணப்பட்டனர். சித்திரக்காரரது குலத்தொழில்…