மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமபுரி ஆதீன மண்டபத்தில் கவரா நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி பண்டிகை, கவரகுல குடும்ப விழா மற்றும் “கவரகுல ரத்னா விருது” வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில தலைவர் போஸ் நாயுடு தலைமை வகித்தார். தென் மண்டல தலைவர் லட்சுமணன் நாயுடு மற்றும் மாநில ஆலோசகர் தினகரன் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் உதவி தலைவர் லயன். ராஜேந்திர பாபு, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தின் பொருளாளர் சன்னாசி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ஜெகநாதன், சி.வி.எஸ் கிரானைட் உரிமையாளர் மோகன், காபி,டீ வர்த்தகர் சங்க கௌரவ ஆலோசகர் ராஜகோபால், அதிமுக வட்ட செயலாளர் முனிச்சாலை சரவணன், 76 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், பொம்மை ரவி, சிலம்பம் ஆசான் சரவணபாண்டி, பஜார் ராதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மாவட்ட தலைவர் குமார்நாயுடு, மாவட்ட செயலாளர் சுதாகர்நாயுடு, மாவட்ட பொருளாளர் கிரிதரன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவர நாயுடு மகாஜன சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதாகர் நாயுடு மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்பாபு நாயுடு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.