எது குல கவரை

எது குல கவரை

வட தமிழகத்தில் கவரைகள் வாழும் ஊர்களில் வைணவ நெறியை பின்பற்றும் தமிழ் கோனார்கள் மட்டுமே உள்ளனர். தமிழ் பேசும் கவரைகளுடன், நல்ல உறவு முறை கொண்ட சமூகம் தமிழ் கோனார்களும், தமிழ் பண்டாரங்களும், தமிழ் பேசும் செங்குந்த முதலியார் இங்கே உள்ளனர். வேங்கடமுடையானை வழிபடும் இவர்களை, கோனார் என்பதே அழைக்கப்படும் பெயர். இங்கே வாழும் ரெட்டியார்கள் தமிழ் மொழி மட்டுமே பேசும் சமூகமாக உள்ளனர்.

பழனி மாவட்ட இடையர் என அழைத்துக்கொள்ளும் கோனார்களில் சிலருக்கு, “கவரச்சி அம்மன்” என்ற நாயக்கர் வழி வந்த தெய்வம் குல தெய்வமாக உள்ளது. அதுவரை மேய்ச்சல் சமூகமாக இருந்தவர்கள், அந்த தெய்வம் வந்ததில் இருந்து, சொந்தமாகக் கால்நடை வைத்திருக்கும் சமூகமாக மாறியது என்கின்றனர். கவரச்சி அம்மன் நாயக்கரின் மாடுகளுடன் வந்த தெய்வமாக அது கருதப்படுகிறது. மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

சோழர்கால கல்வெட்டுகளில், கவறை மன்றாடி, கோனுழான் கவறை மன்றாடி என்ற பெயர்கள் வருகின்றன.

இப்பகுதியில் கொல்லா என அழைக்கப்பட்ட சமூகம் வேறாக இருந்துள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் இல்லை. அதே போல கோனார் அளவுக்கு எண்ணிக்கை உள்ள சமூகமாகவும் அது இல்லை.

CENSUS OF INDIA 1951 நூலில் எது குலத்தை சேர்ந்த கவரை என்ற பொருளில் “எது குல கவரை – Edhukula Kavarai Yadhukula Kavarai” என ஒரு சமூகம் பற்றி குறிப்புகள் வருகின்றன. இதனைப் பற்றி மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.