பூந்தோட்டக் காவல்காரர்களும் வளஞ்சிய ஐந்நூற்றுவர்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மேல் நங்கவரம் கிராமத்தில் பிடாரி அம்மன் எனும் கன்னிமார் கோயில் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர் குழுவின் கல்வெட்டு ஒன்று கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துடன் உள்ளது. இந்த அம்மன் கோயிலில், வளஞ்சியர் ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவைக் குறிக்கும் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஆகும்.
கி.பி. 1-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ம் நூற்றாண்டு வரையில் இந்த வணிகர்கள் பயன்படுத்தி வந்த பாதை பெருவழிப் பாதை என்று அழைக்கப்பட்டது. தற்போது இது மங்கமாள் சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதை மேற்கில் கேரள கடல்கரை பகுதியில் தொடங்கி, பாலக்கரை, கோவை, வெள்ளலூர், காங்கேயம், கரூர், குளித்தலை, நங்கவரம், உறையூர் வழியாக காவிரிப் பூம்பட்டினம் வரை செல்கிறது.
நங்கவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், வளஞ்சியர் ஐநூற்றுவர் என்ற வணிகக் குழு நங்கவரத்தில் தங்கியிருந்ததாகவும், அங்குள்ள பிடாரியம்மன் கோயிலுக்கு பூந்தோட்டம் அமைத்துக் கொடுத்து, அதற்கென ஒரு காவலரை நியமித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பூந்தோட்டத்தை வணிகக் குழுவைச் சேர்ந்த பவத்ரோசமன் அமைத்துக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, தோகைமலை சாம்தான் குளக் கரையில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இது சோழ நாட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதல் வட்டெழுத்து கல்வெட்டாகும். குளித்தலை பகுதி சோழ நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் எல்லைப் பகுதியாக இருந்ததாகவும், சேந்தன் நந்தனார் என்ற படைவீரன், வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த பகைவனை ஈட்டியால் குத்திக் கொன்று, தானும் இறந்தான் என்றும் இக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணி மங்கம்மாள் சாலையிலுள்ள பிடாரி அம்மன் கோவில் அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில், பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல் வெட்டானது, வளஞ்சியர், அய்னூற்றுவர் வணிகர் குழுவினர் கல்வெட்டு பெருவழி எனும் இடத்தில் நடப்பட்டது. இது ஐந்தடி உயரம், இரண்டடி அகலத்தில் சதுர வடிவில் அமைந்துள்ளது. மேல்புறத்தில் தாய் தெய் வத்தின் உருவம், அதன் இருபுறம் குத்துவிளக்கு மற்றும் அதற்கு கீழ் பசும் பையும் உள்ளது. கல் வெட்டில் கி.பி., 10ம் நூற்றாண்டில், பவத்ரோஜ்மன் என்ற வணிகன் நங்கவரத்திலுள்ள பிடாரி அம்மன் கோவிலுக்கு, பூந்தோட்டம் அமைத்து, காவலர்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்து குறிப்பிடப்பட் டுள்ளது.
கல்வெட்டின் பின்புறம் வணிகர் தெய்வமாக கருதிய, அம்மனின் உருவம் (காளி) இருபக்கங்களிலும் வாள், சுருள்கத்தி, சுத்தியல், அரிவாள் ஆயுதங்களுடன், புடைப்பு சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல் வெட்டு கி.பி., ஒன்றாம் நூற்றாண்டில், மேற்கு கடற்கரை கேரளாவிலிருந்து, கிழக்கு கடற்கரை காவிரி பூம்புகார் சென்ற, வணிக பெருவழியில் அமைந்துள்ளது. இவ்வழி, தற்போது ராணி மங்கம் மாள் சாலை என்று அழைக்கப்படுகிறது.
தூண் போன்ற கல்லின் ஒருபுறம் நான்கு கைகளுடன் கூடிய துர்க்கையின் உருவமும், அதன் பின்புறம் திருமகளின் தொன்மையுருவான ஸ்ரீவஸ்தமும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருமகளின் இருபுறமும் குத்துவிளக்குகளும் அதன் கீழே கல்வெட்டும் உள்ளன. கல்வெட்டுப் பகுதியிலேயே ஒரு தண்டில் கோர்த்த இரு தொங்கல்களாகப் பசும்பை சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. வலது புறம் சுருள் பட்டா, அரிவாள், சிற்றுளி ஆகிய படைக்கலன்களும், இடது புறம் நீண்டவாளும், கேடயமும் புடைப்பு சிற்பமாக காட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டின் வாயிலாக பவத்ரோணச்மன் என்பவன் வளஞ்சிய ஐந்நூற்றுவர் பொருட்டு ஐந்நூற்றுவன் என்ற பெயரில் ஒரு தோட்டம் அமைத்ததை அறிகின்றோம். அதனை வாட்படையினரும், பன்மையாரும் காக்க வேண்டும் என்ற செய்தியும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் சிறந்து விளங்கின. வளஞ்சியர்-ஐந்நூற்றுவர் வணிகர் குழுக்கள் காளி, துர்க்கை, அய்யப்பொழில் நங்கை போன்ற தெய்வங்களை வழிபட்ட இவர்கள் குழுவின் பெயரால் பல தர்மங்களைச் செய்து வந்துள்ளனர். அவ்விதமே நங்கவரத்திலும், தோட்டம் அமைத்துள்ளனர் என்று அறியப்படுகின்றது. திரு. கி. ஸ்ரீதரன், பதிவு அலுவலர், திருச்சி, திரு. நா. கணேசன், காப்பாட்சியர், கரூர், ஆகியோர் மேற்கொண்ட களஆய்வின் போது கண்டுபிடிக்கபட்டது.
மேலும், பண்டைய வணிகப் பெருவழிகளை, அரசி மங்கம்மாள் சீர்படுத்தி இருக்கலாம் அறியமுடிகிறது. மேலும் பூந்தோட்ட காவல்காரார்கள் பற்றி அறியமுடிகிறது.
கல்வெட்டு வாசகம் :
- ஸ்வஸ்திஸ்ரீ பவத்ரோணச் மன்
- தோட்டம் வள
- ஞ்சியர் ஐஞ்ஞூ
- ற்றுவர்
- பேர் அஞ்ஞூர்
- றுவன் இவர்
- கள் மக்கள்
- வாள்காளாரும்
- ம் பன்மை
- யாரு ரட்ஷை
இந்த கல்வெட்டு வளஞ்சியர் ஐந்நூற்றுவர் குழுவை சேர்ந்த பவத்ரோணச் மன் என்பவன் நினைவாக, “ஐநூற்றுவன்” எனும் பெயரில் ஒரு தோட்டம் அமைத்தைப்பற்றி கூறியிருக்கலாம் என்றும், இந்தத் தோட்டத்தை வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த வாள் கொண்ட படையினரும், பன்மையர் (தெலுங்கில் பெகன்று) என்ற காவலர்களும் காக்க வேண்டுமென செய்தி இக்கல்வெட்டை கருத இடமுண்டு.
இதன் மூலம் மறைந்த நபர்களுக்கு அவர்களின் நினைவாக கோவில் கட்டுதல், நடுகல் எழுப்புதல், வீரத் தாவளங்கள் அமைத்தல், பல தானங்களை செய்தல் மட்டுமல்லாமல் இறந்தவர் பெயரில் தோட்டங்களை அமைத்தல் குறித்த செய்திகள் நமக்கு கல்வெட்டு வாயிலாக கிடைக்கின்றன.
மூலம்: செய்தித் தாள்கள்.
மூலங்கள்:
தமிழக தொல்லியல் கையேடு – கி. ஸ்ரீதரன்
தமிழக ஐரோப்பியர் வணிகக் குழுக்கள் மு.கனல்விழி அ
www.dinamani.com/