பெண்கள் மட்டுமே அணிந்துள்ளதால், வளையல் பெண்மையின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது.
ஆனால், பாண்டிய மன்னன் வெள்ளை நிற சங்கு வளையல்கள் அணிந்து இருந்தான் என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது, சின்னமனூர் செப்பேட்டின் மெய்க்கீர்த்தியில் இரண்டாம் இராசசிம்மன் சங்கினால் ஆனா வளையல் அணிந்து இருந்தான் என கூறுகின்றது. வளையல் என்பது அதிகாரம், செழுமை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டது என்பதை அறியலாம். வளை என்றாலும் சங்கினைக் குறித்த சொல்லே.
வளை (சங்கு) சங்குக்குத் தமிழ் பெயர் வளைஎன்பது. தமிழகத்தின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்த படியால் வளை அதிகமாகக் கிடைத்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும் வலம்புரிச் சங்கு என்றும் இருவகையுண்டு. வலம் புரிச் சங்கு கிடைப்பது அருமை. ஆகையால் வலம்புரிச் சங்குக்கு விலையதிகம். சங்குகளை வளைகளாக அறுத்து வளை யல் செய்தார்கள். அக்காலத்துத் தமிழ் மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்தார்கள். கண்ணாடி வளை யல் அணிவது அக்காலத்து வழக்கம் அல்ல. சங்குவளை யணிவது மங்கலமாகக் கருதப்பட்டது. அரண் மனையில் வாழ்ந்த அரசகுமாரிகள் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழை மகள் வரையில் எல்லோரும் அக்காலத்தில் சங்கு வளைகளை அணிந்தார்கள் . ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல் உண்டாக்கும் தொழில் அக்காலத்தில் சிறப் பாக நடந்தது. கடல்களிலிருந்து சங்குகள் எடுக்கப்பட்டன.
கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுச் சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரி வித்தார்கள் . “இலங்கிரும் பரப்பின் எறிசுரா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவார் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை: (அகம், 350: 11-14) (வலம்புரி-வலம்புரிச் சங்கு, பரதவர்-கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள்; கடலில் கப்பல் ஒட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில்; பணிலம் ஆர்ப்ப-சங்கு முழுங்க) : கொழ்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங் களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய் கார்கள். “வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை”
(நற்றிணை, 77: 8-9)
வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக் கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் கொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் . இத்தொழில் கூறப்படுகின்றது. அரம்போழ் அவ்வளை” (ஓங்குறுநூறு, நெய்தல் 106) “கடற்கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை” (ஐங்குறு, வளைபத்து 28) “கோடீர் எல் வளை” (ஐங்குறு, வளைப்பத்து) “கோடீர் இலக்குவளை”: (குறும், 31:5) (கோடு-சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர் .
“வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து
வளைகளைந் தொழிந்த கொழுந்து
(அகம், 34: 1-8)
வேளாப்பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது லிசுவப் பிரா மணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வளைகளை விற்கும் தொழிலும் அக்காலத்தில் இறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு வீஇயில் சங்குகளை வளையல்களாக அறுக்மும் தொழில்: நடந்தது.” “அணிவளை போமுநர் அகன்பெரு வதியும்” (சிலம்பு, : 5-47) சோழ இட் இ வஞ்சிமா நகரத்தில், “இலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு அலங்குமணி வினைஞர் இரீடுய மறுகும்” (மணிமே, 28:.44-45) இருந்தன.
சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாக ரிகமாகக் கருதினார்கள். அன்றியும் , அது மங்கலமாகவும்
கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள். எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள் “அணிவளை முன்கை ஆயிமை மடந்தை: (அகம், 361:4) “சின்னிரை வால்வளைக். குறுமகள்” (குறும், 789:6) “வளைக் கை விறலி: (புறம், 1/285:4) “வல்லோன். வாளரம் பொருத கோணேர் எல்வளை அசன்தொடி செறித்த முன்கை” (தற், 77: 8-70) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந்திருந்ததா கூறப்படுகின்றன. ‘ சொக்கப் பெருமான் வலாயல் விற்றதாகத் திருவிளையாடல் புராணத் தில் (வளையல் விழ்ற படலம்) கூறப்படுகின்றது. இடம்புரிச் சங்கினால் செய்து வஃாயல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள். வலம்புரிச் சங்குகள் விலைய இத மானபடியால் செல்வச் சமாட்டிகளும் இராணிகளும் அணித் தார்கள். செல்வ மகளிர் போ ற்றோடு (பொன் வளையல்) அணித்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணித் கார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியவுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கை களில் தங்க வளைகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்கு வளையையும் அணிந்திருந்தார்.
“பொலத்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளயொடூ கடிகைநூல் யாத்து” (தெடுநநெல்வாமை…, 7471-1423) என்று நெடுநெல்வாடை, கூறுகின்றது. கவிரிப்பூம்பட்டிவத் தில பேர்போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கன் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்தியந்தாளன்” மதுரையில். கோவலனை இழந்து லகைம்பெண் ஆலாபபேப து கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு . வாயைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தான் ள் சிலப்பதிகாரம் கூறுகின்றது. கொற்றவை வாயிலில் டுபாற்றொடி தகர்த்து (கட்டுரைக் காதை, 781) (பொம் ரொடி-பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உடை). ….. மணமகன், தான் மணக்க இருக்கும் மணமகளுக்குச் சங்குவளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லமல், பாறகு நாடு முழுவதிலும் அக்காலத்தில் இருந்தது. இற்றைக்கு 2000 அண்டுகளுக்கு முன்லோ சிந்து வெளியில் இருந்து ஹரப்பா நகரத்துத் இராவிட நாகரிக மகளிரும் சங்கு வளை சு அணிந்திருந்தனர் என்பது அ. ங்க அகதழ்ந்கெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் சங்கு வவைகஞும் இருந்த தகுனால் அறிகி3ர ம்.* கொற்கை காவிரிப்பூம்பட்டினம் உறையூர் முதலான அவர்களில் நிலத்தை அகழ்த்தெடுத்தபோது அங் திருந்து கிடைத்த பழம் பெரருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் “துண்டுகஷம் கிடைத்துலா. இதனால், சங்க செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்குவளை களை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறுகின்றது . சங்கு முழங்குவது மங்கல ாாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊறுவது வழக் கம். அரண்மனைகவிலே காலை வேளையில் முரச கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைக் துபிலெழுப்பினார்கள். அரண் மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை , “தூக்கணங் குரீடுத் தூங்கு கூடேய்ப்ப ஒருசிறைக் கெளீஇய திரிவாய் வலம்புரிஞாலங் காவலர் கடைத்தலைக் காலைத்கோளன்றினும்’ (புறம், 325: 17-74) என்றும் , “மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால் வெண் சங்கொடு வகைபெற் ஜரோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்ப” (சிலம்பு, 74; 72-14) என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில்-அரண்மனை .) பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணிந்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. இ.பி. 78 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற் பட்ட பிறகு கண்ணாடி. வளையல் அணியும் வழக்கம் ஏற் பட்டது. ஆகவே பழைய சங்கு வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழிலும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழி லும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவதும் விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.
பெருங்கற்காலம் முதல் சங்கு அறுந்து வணிகம் செய்வோர், சங்கறு வாணியன் , கவறைகள், கவறை செட்டி, சங்கறுப்பாணி, சங்கறு கவறை சோழியர், வளையல் செட்டி, வளைச் செட்டி, வளையக்கார செட்டி என ஆவணங்கள் கூறுகின்றன. வட நாட்டில் வளையல் வணிகர்கள் சங்கிகா எனப்பட்டனர். வங்க நாட்டுப் பெண்கள் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை சங்க காலத்து தமிழ் மகளிரைப் போல் அணிந்து வந்தனர்.
வலங்கை பிரிவைச் சேர்ந்த கவறைகள் முத்து மாலைகள், வளையல்கள், வெள்ளை வஸ்திரம், வீரவாளிப்பட்டு, வீரவாளிச்சேலை எனும் ஓவியம் வரைந்த பட்டு சேலைகளை காளை மாட்டின் மீது போட்டு அங்காடிகள், அரண்மனைகளில் வணிகம் செய்துள்ளனர். அதற்கு சுங்க வரி நீக்கப்பட்டது என சோழன் பூர்வ பட்டயம் மூலம் அறியப்படுகிறது.
முருகன் எனும் செட்டி
செட்டி யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
திக்கை யுலகைவல் மாகப் போகிக்”
* செட்டி – முருக பிரான் திரு நாமங்களுள் ஒன்று- பாடல் 215 –
பக்கம் 48; பாடல் 956- பக்கம் 774 கீழ்க்குறிப்பு.
“முருகன் வேள் சாமி யாறு முகன் குகன் குழகன் மாயோன்
மருகன் சேய் கார்த்திகேயன் வரைபக எறிந்தோன் செட்டி” – (சூடாமணி நிகண்டு)
முருகன் சூர்ப்பகை செட்டி குமரன் – திவாகரம்
சேந்தன் குறிஞ்சிக் கிழவன் செட்டி’ பிங்கலம்
செட்டி எனும் நாமம் பன்முறை வரும்படித் தணிகை உலாவில் வரும் பகுதி படித்து இன்புறத் தக்கது; அது பின் வருமாறு:- ‘
யாரென்றாள் இத்தேரில் அன்னமே செட்டியிவன்
பேரென்றாள் அப்பொழுதப் பேதையுந்தான் – சீரொன்று செட்டியே
யாமாகில் தின்ன அவ லோடுகன்னல் கட்டிவாங் கிக்கொடென்று கண் பிசைந்தாள் –
பட்டி வள்ளி கைவளைய லேற்றியிரு காலில் வளைந்தேற்றி
மைவளையு நெஞ்ச மயலேற்றி – வெய்ய
இருட்டு விடி யாமுன் இனத்தவர்கா ணாமல்
திருட்டுவியா பாரஞ்செய் செட்டி – வெருட்டி யொரு
வேடுவனா யோர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியுங் குறச் செட்டி – பாடா நற்
கீரனைப்பூ தத்தாற் கிரிக்குகையுட் கற்சிறை செய் தோரரிய பாவை யுகந்தணைந்து – கீரனுக்கு வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மை யாஞ்செட்டி
ஆட்டிலுவந் தேறுமன்ன தான செட்டி – யீட்டு புகழ்”
திருவேரகம் (சுவாமிமலை)
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர் புகழ் தம்பிரானே.
திரு நடனம் புரிகின்ற செவ்வேட்பரம! செட்டி வடிவைக் கொடு-செட்டி வேடம் பூண்டு, தினைபுனம் அதில்-தினைப் புனத்திலே, சிறு குற பெண் அமளிக்கு உள் மகிழ் செட்டி-சிறிய குறமகளாகிய வள்ளியம்மையின் படுக்கையில் மகிழ்ந்த செட்டியாரே!
மாணிக்கம் விற்ற படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினேழாவது படலமாகும். வீரபாண்டியனின் மரணத்திற்குப் பிறகு அவரின் மகனான செல்வ பாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தனர். அதற்குக் கிரீடம் செய்ய விலைமதிப்பு மிக்க நவரத்தின கற்களைச் சிவபெருமானே வைர வியாபாரியாக வந்து அளித்தார். அத்துடன் செல்வ பாண்டியனுக்கு அபிசேகப் பாண்டியன் என்ற பட்டப் பெயரையும் சூட்டும்படி கூறினார். செல்வ பாண்டியனின் முடிசூட்டு விழா நடந்த பின்பு வியாபாரியாக வந்தது சிவபெருமான் என்பதை அறிந்தனர்.
‘இருக்கடையை விடைக்குறியிட் டடைத்த வாறுஞ் செட்டி யாய் மாணிக்கம் விற்ற வா’
திருவிளையாடல் புராணம் முருகப் பெருமானை அருந்தமிழ்ச் செட்டியாஞ் செட்டி என்கிறது.
“தலமிசை யெங்கும் விரித்தியற் சொக்கன் றகைமையை மிகமிக வாழ்த்தி, யலகிலா வூழி யிருந்தன ரிருந்த வருந்தமிழ்ச் செட்டியாஞ் செட்டி, யிலகிய மயின்மீ தறுமுகத் தோடு மினியபன் னிருகரத் தோடும், புலவர்கண் டிறைஞ்ச வருளினால் விளங்டிப் போயினான் 3 சாபமு நீஙகி,”
முருகன் வளையல் செட்டி:
முருகவேள் (வளையல் விற்கும்) செட்டி வேடம்பூண்டு வள்ளியிடம் சென்ற லீலை சந்தபுராணத்திற் கூறப்பட இல்லை. ஆனால் தணிகை உலாவிற் கூறப்பட்டுள்ளது. (திருப்புகழ் – பாடல் 215, பாடல் 601,)
முருகனை வளையல் செட்டி எனக் கூறும் திருப்புகழ் – கட்டி முண்டக
குறத்தி மகள் வள்ளியுடன் திருவிளையாடல் புரிந்து கரம் பற்ற நினைத்த முருகன், அவள் கரங்களில் வளையல் இட எண்ணினார். எனவே, வளையல் செட்டி உரு கொண்டு குறத்தி மகளை காணச் சென்றார்.
திருப்புகழ் பாடலானது முருகன் வளையல் செட்டி வடிவம் எடுத்தே வள்ளியை மணந்தது பற்றி கூறுப்படுகிறது.
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை …… நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் …… பெருமாளே.
செட்டி – வணிகன், முருகக்கடவுள் ; ‘*செட்டியுஞ் செட்டி யாயுதித தான்”
செட்டி என்று சிவகாமி தன் பதியில் … வளையல் செட்டி
வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில்,
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) … கைகள் சிவக்க,
வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே …
மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான
மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
செட்டி என்று வனம் மேவி … வளையல் செட்டியின் வேடத்துடன்
நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,
“எழிலுமை கலங்கி யிறைஞ்சல்கண் டிலிரங்கி யிலங்கதி யரைய னம் மன்ப, னுழையிடை யிணிய புதல்வியா யுதித்தா லுலகுளோர் காணவர் துனையா, மழகுற மணந்து காவனக் தியையு மாட்கொள்வ மஞ்சனீ யென்று, செழுமையின் விடுப்பத் தொழுதருள் பெற்றே செட்டியுஞ் செட்டியா யுதித்தா”
ஸ்ரீ வள்ளிகும்மி பாடலில், முதலில் வேடன் வந்த முருகன் பின்பு வயதான வளையல் செட்டியார் வேடத்தில் வந்து வள்ளியை மணமுடித்த செய்தியை அறிய முடிகிறது.
திருவிளையாடல் புராணத்தில் ரிஷி பத்தினிகளுக்கு விமோசனம் கொடுக்க மதுரையில் பிறந்த அவர்களுக்கு வளையல் இட, சிவன் அவர்கள் வளையல் செட்டி வேடத்தில் வந்து அருள் புரிவார்.
திருவருட்பாவில் (82), முருகனை வைசியன் என்கிறது பின்வரும் பாடல்,
“ஓசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற வசியர் மிகநீர் என்றேன்எம் மகன்காண் என்டூர் வளர்காமப் பசிய தொடைஉற் றேன்என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல் இசையக் காண்பேம்” என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ”
தோழீ! நான்,ஒடியும்படி அவ்வளவு சிறுத்த இடையை யுடையவராகிய மாதரைத் திருவொற்றி யூரிலிருந்து கொண்டே மயங்கப் பண்ணுகிற தேவரீர், மிகுதியாக வசியஞ் செய்தலை யுடையீர்,’ என்று சொன்னேன். அதற்கு இவர், ‘நாமல்லோம். எம் மகன்தான் வசியன்!? என்றார். அதற்குமேல் நான், ‘வளர்கின்ற காமமாகிய பசிய மாலையை யுடையேன்’ என்றேன். அதற்கு இவர், பட் டத்தை அவிழ்த்துக் காட்டுவையாயின் பொருந்தப் பார்ப் போம்’ என்கிறார். இதன் பொருள் என்னடி?’ (எ -து.)
(அ – சொ) ஓசிய -ஓடிய.இடுகு – சிறிய. மகன் முருகன். வசியன் – வசப்படுத்துவன், வைசிய இனத்தான் தொடை-மாலை. பட்டம் ஆடை. இசைய -பொருந்த.
(இ -கு.) காண், முன்னிலை அசைச்சொல். வளர் காமம்,வினைத்தொகை.
(வி-ரை.) தலைவி, இறைவரை வசியர் (யாவரையும் வசப்படுத்த வல்லவர்) என்று கூறினான். இறைவர் வைசியர், என்பதற்குத் தலைவிகொண்ட பொருளை ஏற்காமல், வைசியன் (செட்டி) என்று பொருள் கொண்டு “நாம், வைசியன் அல்லோம். எம் மகன் முருகனே வைசியன் (செட்டி) என்றனர். முருகப்பெருமான் வள்ளியம்மையாரின் திருக்கரங்களில் வளையல் இடச் சென்றமையின் வளையல் காரச் செட்டியாயினான்.
ஒற்றி இருந்தே மயக்கின்ற என்பதற்குத் தள்ளி இருந்தே மயக்குகின்ற என்றும் பொருள் கூறலாம். (82)
கதைப் பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், நூலில் வள்ளித்திருமணம் கதை ஒரு புராணக் கதைப்பாடலில், வளையல் செட்டி வேடத்தில் முருகன் வள்ளியை சந்திக்க செல்வதாக பாடல் அமைகிறது.
வள்ளித்திருமணம் கதை ஒரு புராணக் கதைப்பாடல் ஆகும் . அதாவது , நம்பி எனும் வேடர்குலத் தலைவன் சிற்றூர் எனும் பகுதியை ஆண்டு வருகிறான் . அவன் மனைவியின் பெயர் மோகினி . இவர்களுக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆசையாய் வளர்க்க ஒரு பெண் குழந்தை இல்லாமல் மனம் வாடினர் . ஒருநாள் நம்பி காட்டில் வேட்டையாடும் பொழுது வள்ளிக்கிழங்கெடுத்த ஒரு குழியில் பெண்மகவு ஒன்றைக் கண்டெடுத்து மனைவியிடம் கொடுத்து வளர்க்கு மாறு கூறினான் . வள்ளி பருவவயதை அடைந்தபொழுது தினைப்புனக் காவலுக்கு அனுப்பப்படுகிறாள் . தினைப் புனத்தில் வள்ளியைக் கண்டு நாரதர் உனக்கான மணவாளன் முருகப்பெருமான் தான் எனக் கூறுகிறார் . வள்ளி கோபமடைந்து நாரதரை விரட்டியடிக்கிறாள் . நாரதர் முருகப்பெருமானிடம் சென்று வள்ளியினுடைய அழகினைக் கூறி , முருகனின் மனதில் ஆசையைத் தூண்டிவிடுகிறார் .
முருகன் வேடனாக வேடம் தரித்து வள்ளியிடம் சென்று திருவிளையாடல் நடத்துகிறார் . வள்ளி அண்ணன்மார்களை அழைக்க முருகன் மறைந்துவிடுகிறார் . பின்பு வளையல் செட்டி வேடமிட்டும் வயதான முதியவர் வேடமிட்டும் திருவிளை யாடல் நடத்துகிறார் . வள்ளி அண்ணன்மார்களை அழைக்க முருகன் மறைந்துவிடுகிறார். பின்னர் கணபதியின் துணையுடன் வள்ளியைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து மறைந்து விடுகிறார் . வள்ளி உண்மை நிலையைப் புரிந்து அழுது புலம்புகிறாள் . முருகபெருமான் காட்சியளித்து கந்தர்வ மணம் செய்து கொள்கிறார் . அப்போது அங்கு வந்த நாரதரிடம் வள்ளி மன்னிப்பு கோருகிறாள் . பின்பு அங்கு வந்த வள்ளியின் சகோதரர்கள் முருகனுடன் மோதி மடிகின்றனர் . வள்ளியின் வேண்டுதலை ஏற்று மீண்டும் அவர்களை உயிர்பிக்கிறார் முருகன் . அதன்பின்பு இருவரும் விடைபெற்று செந்திலம் பதியை அடைகின்றனர் .
செட்டி வடிவைக் கொடு —
முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக வனம் போனார். “செட்டியப்பனை” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.
“செட்டியென்று வனமேவி இன்பரச
சக்தியின் செயலினாளை யன்புருக
தெட்டி வந்து புலியூரின் மன்றுள்வளர் பெருமாளே” — (கட்டிமுண்ட) திருப்புகழ்
… … … … … … … “வள்ளி
கைவளையல் ஏற்றி, இரு காலில் வளைந்து ஏற்றி
மைவளைய நெஞ்ச மயல் ஏற்றி – வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய்செட்டி, – வெருட்டியொரு
வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச்செட்டி, – பாடாநல்
கீரனைப் பூதத்தால் கிரிக்குகையுள் கல்சிறைசெய்து
ஓர் அரிய பாவை உகந்து அணைந்து – கீரனுக்கு
வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, – ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, – பூ ஏந்திக்
கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, – தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை மயில் ஆமு குமர செட்டி, சதிர் உடனே
சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி – பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், – இப்போதுஎம்
வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு வா எனச் சீர்
ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்” — தணிகையுலா
பழனியாண்டவன் காவடிச் சிந்து
நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்
தெள்ளுபுகழ் மானவடிவு கண்டுசிந்தை மிகவே மயங்கி
வள்ளியரைத் தானெடுக்க என்ன வடிவெடுப்போம் வேலவரும் 74
குறவேஷமொடு வருவோம் வள்ளி தையலரைத் தானெடுக்க
பரதேசி வேடங் கொண்டு வள்ளிப் பாவையரை நாமெடுப்போம் 75
வளவிச்செட்டி வேடங்கொண்டு வள்ளிமாதரைக் கைப்பிடிப்போம்
இளகிமனம் வாடியதால் சுப்பிரமணியர் என்னவேடம் போடுவோம்
76. வளவி – வளையல் (பேச்சு வழக்கு) 76
சுந்தரர் அருளிய ஏழாம்-திருமுறை 07.059 பொன்னும் மெய்ப்பொருள் பகுதியில்
செட்டி வடிவுடன் வளையலிட வள்ளியிடம் சென்றதை “பட்டி வள்ளி கை வளையல் ஏற்றி, இரு காலில் வளைந்தேற்றி, மை வளைவு நெஞ்ச மய லேற்றி – வெய்ய இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல் திருட்டு வியாபாரஞ் செய் செட்டி… மூவர் வணங்கு முருகப்ப: செட்டி, பாவனைக்கும். அப்பாலுக் சுப்பாலாம் ஆறுமுக செட்டி. யிவன்” எனவரும் தணிகை உலாவிற்காண்க. செட்டி முருகவேளுக்கு ஒரு பெயர். கடற் சூர் தடிந்திட்ட செட்டி யப்பனை”- சுந்தரர் – திருவாரூர் – 411.59-7
ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூரானை மறக்கலு மாமே. 10
முருகவேள் பன்னிரு திருமுறை : தொகுதி-1
பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள மலையில் தண்டாயுதபாணி வீற்றிருக்கின்றார். பொதிகை சென்ற அகத்தியர், இங்கு முருகனைத் தரிசிக்க வந்தார். அப்போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார். இதனால் ஊர் “செட்டிகுளம்’ எனப்பட்டது. வடபழநிமலை என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. மதுரையில் இருந்து கோபத்துடன் கிளம்பிய கண்ணகியை, இத்தல முருகன் சாந்தப்படுத்தினார். இதனால், உக்கிரம் குறைந்த அம்பிகை, இவ்வூர் அருகிலுள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனாக கோயில் கொண்டுள்ளாள். வளையக்கார செட்டிகளுக்கு இது குல தெய்வமாக உள்ளது.
சுந்தரரின் தேவாரம், வேம்பத்தூராரின் திருவிளையாடற்புராணம் தனிப்பாடல்கள் போன்றவற்றில் முருகனைக் குறிக்க செட்டி (cetti) என்ற சொல் எடுத்தாளப்பட்டுள்ளது எனக் குறிக்கப்பட்டுள்ளார். செட்டி என்பதற்கு வைசியன் [முட்டில் வாழ்க்கைச் செட்டியார் பெருமகன் (பெருங். இலாவாண. 20, 126)] என்பதோடு, முருகன் [கடற்சூர் தடிந்திட்ட செட்டி (தேவா. 742, 10)] என்னும் பொருளையும் பேரகராதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முருகவேளுக்கு ஒரு பெயர் “முருகன் வேள் செட்டி யாறு முகன் குகன் குழகன் மாயோன் மருகன்” – சூடாமணி நிகண்டு கூறுகிறது. ஏரகத்துச் செட்டியார் சுவாமி மலையில் வணிகம் செய்யும் செட்டியார் என முருகன் உருவகப்படுத்துகிறார். “செட்டி யெனுமொர்திரு நாமக்கார”, திருப்புகழ் கூறுகிறது. முருகப் பெருமானுக்குச் “செட்டி” என்றும் ஒரு பெயருண்டு. “கடற்சூர் தடிந்திட்ட செட்டி” (ஆரூர்) என்று நம்பியாரூரர் குறிப்பது காண்க. பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக் கவசத்தில் “இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க” என்பார்.
வள்ளி முருகன் திருவிளையாடலில், வள்ளியை திருமணம் செய்ய முருகன் வயது முதிர்ந்த வளையல்கார செட்டியாராக வரும் கதை நாம் அறிந்ததே. இதனை வள்ளி கும்மி பாடல் கூறுகின்றது. வளையல் பற்றி தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் என்னக் கூறுகின்றன என்பதை ஆய்வாளர் சேதுராமன் கூறுவதை காண்போம்.
வள்ளித்திருமணம் கதை ஒரு புராணக் கதைப்பாடல் ஆகும். அதாவது , நம்பி எனும் வேடர்குலத் தலைவன் சிற்றூர் எனும் பகுதியை ஆண்டு வருகிறான் . அவன் மனைவியின் பெயர் மோகினி . இவர்களுக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆசையாய் வளர்க்க ஒரு பெண் குழந்தை இல்லாமல் மனம் வாடினர் . ஒருநாள் நம்பி காட்டில் வேட்டையாடும் பொழுது வள்ளிக்கிழங்கெடுத்த ஒரு குழியில் பெண்மகவு ஒன்றைக் கண்டெடுத்து மனைவியிடம் கொடுத்து வளர்க்கு மாறு கூறினான் . வள்ளி பருவவயதை அடைந்தபொழுது தினைப்புனக் காவலுக்கு அனுப்பப்படுகிறாள் . தினைப் புனத்தில் வள்ளியைக் கண்டு நாரதர் உனக்கான மணவாளன் முருகப்பெருமான் தான் எனக் கூறுகிறார் . வள்ளி கோபமடைந்து நாரதரை விரட்டியடிக்கிறாள் . நாரதர் முருகப்பெருமானிடம் சென்று வள்ளியினுடைய அழகினைக் கூறி , முருகனின் மனதில் ஆசையைத் தூண்டிவிடுகிறார் .
கதைப் பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும் நூலில், முருகன் வேடனாக வேடம் தரித்து வள்ளியிடம் சென்று திருவிளையாடல் நடத்துகிறார். வள்ளி அண்ணன்மார்களை அழைக்க முருகன் மறைந்துவிடுகிறார் . பின்பு வளையல் செட்டிவேடமிட்டும் வயதான முதியவர் வேடமிட்டும் திருவிளை யாடல் நடத்துகிறார் . வள்ளி அண்ணன்மார்களை அழைக்க முருகன் மறைந்துவிடுகிறார். பின்னர் கணபதியின் துணை யுடன் வள்ளியைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து மறைந்து விடுகிறார் . வள்ளி உண்மை நிலையைப் புரிந்து அழுது புலம்புகிறாள் . முருகபெருமான் காட்சியளித்து கந்தர்வ மணம் செய்து கொள்கிறார் . அப்போது அங்கு வந்த நாரதரிடம் வள்ளி மன்னிப்பு கோருகிறாள் . பின்பு அங்கு வந்த வள்ளியின் சகோதரர்கள் முருகனுடன் மோதி மடிகின்றனர் . வள்ளியின் வேண்டுதலை ஏற்று மீண்டும் அவர்களை உயிர்பிக்கிறார் முருகன் . அதன்பின்பு இருவரும் விடைபெற்று செந்திலம் பதியை அடைகின்றனர் .
முருகனின் குலத்தொழில் வளையல் விற்பது
அறத்தமிழ் வணிகத்திலேயே ஒரு விநோதமான வணிகத்தை ஒரு தனிப்பாடல் கூறுகிறது:
மதுரையில் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் 64ல் வளையல் விற்ற படலம் என்ற ஒன்றுண்டு. அதில் சிவன் வளையல் செட்டியாராக வந்து மதுரை மகளிர்க்கு அற்புதமான வளையல்களை விற்றாராம்!
இரண்டொரு நாளில் முருகன் மதுரையின் அதே வீதிகளில் உலா வந்தாராம்! பெண்கள் முருகப் பெருமானது பவனியில் தன்னை மறந்து மயங்கி நிற்க, உடல் இளைத்து போட்டிருந்த வளையல்கள் எல்லாம் கழன்று வீழ முருகன் அவற்றை வாங்கிச் சென்றாராம்! ஊர் மயிலை என்றாராம்!
சற்று நேரம் கழித்து நிதானித்த பெண்கள் கூடி; கேட்டாயா கதையை! செட்டியப்பன் வந்து வளையல் வித்துவிட்டு போவானாம்! பின்னாலேயே அந்தச் செட்டிப் பிள்ளை வந்து வளையலை எல்லாம் கழற்றி வாங்கிட்டுப் போவானாம்! நல்ல வியாபாரம் இது! செட்டியப்பன் வளையலைக் குறைந்த விலைக்கு விற்ற போதே சந்தேகம் வந்தது. அப்பன் மாட்டிவிட்டுப் போவான்; பிள்ளை கழட்டிகிட்டுப் போவான்!! நல்ல செட்டிக் குடும்பம்! ஒரு நல்ல செட்டியார் செய்யும் வேலையா இது?
இப்படி ஒரு விநோதமான வாணிபத்தை அதன் அடிநாதத்தில் முருகனடியார்க்கு ஏக்கத்தால் உடல் இளைத்ததாக நயமாக நற்றமிழில் குழைத்துத் தருகிறது இப்பாடல்.
“தேங்குவளை அன்னவிழித் தேன்மொழியார்க் குன்தந்தை
தாங்குவளை விற்கத் தமியோம்கை – ஈங்குவளை
கொள்ளத் தலைப்பட்டாய் கோமயிலைச் செட்டிநீ
மெள்ளக் குலத்தொழிலை விட்டு“
செட்டியார் குலத்தொழில் விற்பது; ஆனால் அதற்கு மாறாக இங்கே வாங்குகிறாயே! இது உன் வளையல் விற்கும் உன் குலத்தொழிலுக்கு அடுக்குமா என்று நயமான பாடலில் பதிவிட்ட புலவர் பெயர் இல்லை! செட்டியார்கள் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள்; அவர்கள் கோபத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என்று புலவர் தன் பெயரை மறைத்தாரோ என்னவோ!
=========
ஐந்து வகை மங்கலப் பொருட்களில் வளையலும் ஒன்றாகக் கருதப் படுகிறது. தற்போது எளியவர் முதல் செல்வந்தர் வரை அனைத்துப் பெண்களும் தம் கைகளில் வளையல்கள் அணிகின்றனர்.
வட இந்தியாவில் மொகஞ்சதாரோவில் கிடைத்த புகழ்பெற்ற நடன மகளின் வலது கையின் தோள்முதல் முன்கை வரை வளையல்கள் காணப் படுவது இதன் தொன்மையை உணர்த்தும். இங்கு நடைபெற்ற அகழ் வாய்வுகளில் பொன், தந்தம், எலும்பு, சங்கு, சுடுமண் ஆகியவற்றாலான வளையல் துண்டுகள் அதிக அளவில் கிடைத்திருப்பதைக் கொண்டு இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் வளையல்களைப் பெருமள விற்கு அணிந்திருந்தனர் என்பது தெரிகிறது. மேலும் பார்கூத் சாஞ்சி, மதுரா, அமராவதி, நாகார்ச்சுனகொண்டா ஆகிய இடங்களில் கிடைத்த பழமையான பெண் சிற்பங்கள் அனைத்தும் தம் கைகளில் அணிந்திருப்பதைக் கொண்டு அக்கால மக்கள் வளையல்கள் அணிவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது நன்கு விளங்கும்.
தமிழகத்தில் பெருங்கற்காலம் முதல் வளையல் அணியும் வழக்கம் இருந்துள்ளது. ஆதிச்சநல்லூர், பைய்யம்பள்ளி, பெரும்பேர், கோவலன் பொட்டல் ஆகிய இடங்களில் உள்ள பெருங்கற்சின்னங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் சங்கு மற்றும் சுடுமண்ணாலான வளையல் துண்டுகள் கிடைத்திருப்பதைக் கொண்டு இக்கால மக்கள் பெரும்பாலும் சங்கு, சுடுமண் ஆகியவற்றாலான வளையல்களையே அணிந்திருந்தனர் எனத் தெரிகிறது.
சங்க காலம்
சங்ககால மகளிர் அனைவரும் தம் கைகளில் வளையல்கள் அணிந் திருந்தார்கள். சங்க இலக்கியங்கள் வளையல்களை ‘வளை’ அல்லது ‘தொடி’ என அழைக்கின்றன. சங்குக்குத் தமிழ்ப் பெயர் ‘வளை’ என்பது. தமிழகத்தின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருப்பதால் கடலில் மூழ்கிச் சங்கு எடுக்கும் தொழில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச் சங்குகளை வளைகளாக அறுத்து வளையல் செய்யும் தொழிலும் சிறப்புற்றிருந்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும், வலம்புரிச் சங்கு என்றும் இருவகை உண்டு. வலம்புரிச் சங்கு கிடைப்பது அரிது. எனவே வலம்புரிச் சங்குக்கு விலை அதிகம். சங்கு புனிதமானது. எனவே அரண்மனையில் வாழ்ந்த அரச மகளிர் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழைகள் வரை அனைவரும் சங்கு வளைகளை அணிந்தார்கள். இடம்புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண பெண்களும், விலையுயர்ந்த வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களோடு பொன்னாலான வளையல்களை அரச மகளிரும், வணிகர் போன்ற செல்வ மகளிரும் அணிந்தனர்.
வளையல்கள்
கொற்கைக் கடலில் சங்குகள் மிக அதிகமாகக் கிடைத்தன. கொற்கையில் நடைபெற்ற அகழ்வாய்வில் நூற்றுக்கணக்கான சங்குகளும், அறுத்தது போக, எஞ்சிய சங்குப் பகுதிகளும் சங்கு வளையல் துண்டுகளும் மிக அதிக அளவில் கிடைத்தன. எனவே கொற்கை, சங்க காலத்தில் சங்கு வளையல்கள் செய்யும் உற்பத்திக் கூடமாக விளங்கியது எனலாம். சங்குகளை அக்காலத்தில் சிறு அரம் கொண்டு அறுத்து அழகான வளையல் செய்தார்கள். தமிழகத்தில் அரிக்கமேடு, வசவசமுத்திரம். காஞ்சீபுரம், கொற்கை, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், கரூர், அலகரை, திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் சங்ககால மண் அடுக்குகளில் சங்கு வளையல் துண்டுகளும், அறுத்த சங்குத் தொகுதிகளும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இந்த சங்கு வளையல் துண்டுகளின் மேற்பகுதியில் கூர்மை யான அரம் கொண்டு வரையப்பட்ட நேர்கோடுகள், நாற்கரம், முக்கோணம், செங்கோணம். குறுக்குவெட்டுக் கோடுகள் போன்ற அலங்கார கோடுகள் காணப்படுகின்றன. சில வளையல் துண்டுகள் ஒருபுறம் தட்டையும், ஒருபுறம் உட்குழியும் கொண்ட வெட்டு அமைப்பும்’ சில வளையல் துண்டுகள் ஒரு புறம் தட்டையும் ஒரு புறம் மேற்குவியும் கொண்ட செதுக்கு அமைப்பும்’ கொண்டு காணப்படுகின்றன. இத்தகைய செதுக்கு அமைப்புகளின் மீது பொன் தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன. திருக்காம்புலியூரில் கிடைத்த சில சங்கு வளையல் துண்டுகளின் மேற்பகுதியில் செங்காவி வண்ணம் தீட்டப் பட்டிருந்தது. இச்சங்கு வளையல் துண்டுகள் செங்கோணம், குவிசெதுக்கு அமைப்பு, பள்ளம் போன்ற வடிவம் ஆகிய குறுக்கு வெட்டு தோற்றங்களுடன் காணப்பட்டன.’
அக்காலத்தில் சங்குகளை வளையல்களாக அறுத்துத் தொழில் செய்த வர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர். வேளாப் பார்ப்பான் என்பதன் பொருள் வேள்ளி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விசுவப் பிராமணர் என்பதாம். அக்காலத்தில் முக்கியமான நகரங்களில் சங்கு அறுக்கும் தொழில் சிறப்பாக நடந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழில் நடந்தது குறித்துச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சங்ககால மகளிர் சங்கு வளையல்களை ஆய்ந்து அணிந்து அழகு பெற்றனர். அழகான’ ஒளிபொருந்திய” வெண்மையான “சங்கு வளையல் களை வரிசையாகவும்* ஒழுங்காகவும். நிறைவாகவும் அணிந்தனர். சிலர் கை நிறையவும், சிலர் கொஞ்சமாகவும் வளைகள் அணிந்தனர். கையோடு பொருந்திய குறுந் தொடிகளையும்”. அகன்ற அகன்தொடிகளையும்” கழன்று கீழே விழுவது போன்ற அவிர்தொடிகளையும்” பொன்னாலான பொற்
தொடிகளையும் பூந்தொடிகளையும், ஆம்பல் வள்ளித்தொடிகளையும்”
பாம்பு போன்ற வளைவுகள் உடைய பாம்புத்தொடிகளையும் சங்க கால மகளிர் விரும்பி அணிந்தனர். இவ்வாறு எப்பொழுதும் மகளிர் தம் கைகளில் வளைகள் அணிந்திருந்ததால் தழும்புகள் ஏற்பட்டன” என்றெல்லாம் சங்க நூல்களில் மகளிர் வளையல்கள் அணிந்திருந்தது பற்றிக் கூறப்படுகிறது. ஈதன்றி சுடுமண்ணாலான வளையல்களையும், செம்பினால் ஆன வளையல்களையும் இக்கால மக்கள் அணிந்திருந்தார்.
சங்ககாலத்தை அடுத்துப் பல்லவர் காலம் முதல் பிற்காலம் வரை உள்ள காலத்தைச் சேர்ந்த சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும், தோளில் கேயூரம் எனப்படும் தோள் வளையையும், முன் கையில் வளைகளையும் அணிந்து காணப் படுகின்றன. தெய்வ மகளிரை வணங்குவதாகக் காட்ட பெறும் மாசதி கற்களில் வளையல்கள் அணிந்த முன்கரங்கள் மட்டும் சிற்பங்களாக வடிக்கப் பெறுவது மரபு. இது வளையலுக்கு நம் முன்னோர் அளித்த பெரும் சிறப்பினைக் காட்டும். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களிலும், வளையல்கள் பற்றிக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இக்காலத்தில் சங்கு, சுடுமண். பொன், செம்பு போன்றவற்றோடு விலையுயர்ந்த கற்கள், அரக்கு, சந்தனக்கட்டை, கண்ணாடி, பீங்கான் போன்றவற்றாலான வளையல்கள் வழக்கத்திலிருந்தன. கங்கைகொண்ட சோழபுரம், பேரூர், போளுமாம்பட்டி, உக்கிரன்கோட்டை. நத்தமேடு போன்ற இடங்களிலும் முன்னர் கூறிய அரிக்கமேடு, காஞ்சி,கரூர், வசவசமுத்திரம், உறையூர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களிலும் பிற்கால மண் அடுக்குகளில் சங்கு சுடுமண், அரக்கு, கண்ணாடி ஆகியவற்றாலான வளையல் துண்டுகள் கிடைத்துள்ளன.
பிற்கால இலக்கியங்கள் வளையல்களை அங்கதம், ஆளிக்காப்பு, கங்கணம், கடகம், காப்பு, குருகு, சங்கு, சூடகம், பரியகம், முடுகு, வண்டு, வங்கி எனப் பல்வேறு பெயர்களால் குறிக்கின்றன. அரக்கினாற் செய்யப்பட்ட வளையல்களுக்கு ‘முடுகு’ எனப் பெயர். இக்காலத்தில் சிறு குழந்தைகள் பிடிதம் எனப்படும் கைவளைகள் அணிந்திருந்தனர்.
சோழர்காலக் கல்வெட்டுக்கள் வளையல்களைப் பாகு வளையம்,20 திருக்கைக்காரை கடகம் வளையல்” சூடகம்” எனப் பலவாறு குறிக்கின்றன. பாகு வளையம் என்பது பொன்னால் செய்யப்பெற்று விலையுயர்ந்த கற்கள், முத்துக்கள் ஆகியவை பதிக்கப்பெற்று தோளில் அணிவது ஆகும். திருக்கைக் காரை எனப்படுவது பொன்னால் செய்யப்பட்டு வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு தோள் அல்லது முன்கையில் அணியும் வளையலாகும். கடகம் என்பது பொன்னால் செய்யப்பட்டு முன் கைகளில் அணியும் வளையலாகும். இரத்தினக் கற்கள் பதிக்கப்படும் வளையல் ரத்த கடகம் எனவும் பவழங்கள் பதிக்கப்படும் வளையல் பவழக் கடகம் எனவும் அழைக்கப்பெறும்.
முத்து வளையல், ரத்த வளையல் எனப்படுபவை முன்கைகளில் அணிவ தாகும். சூடகம் என்பது கைக்காரை போன்று பொன்னால் செய்யப்பெற்று விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பெற்று முன்கைகளில் அணியப் பெறுவ தாகும்.
கண்ணாடி வளையல்
தமிழகத்து அகழ்வாய்வுகள் அனைத்திலும் பிற்காலத்தைச் சேர்ந்த மண் அடுக்குகளில் (கி.பி. 9-10 நூற்றாண்டு முதல்) கறுப்பு, மஞ்சள், சிகப்பு போன்ற பல வண்ணங்களாலான கண்ணாடி வளையல் துண்டுகள் காணப்படு கின்றன. அராபியர் தொடர்பினால்தான் கண்ணாடி வளையல் நம்தாட்டில் சிறப்பிடம் பெற ஆரம்பித்தன. கி. பி. 9-10ஆம் நூற்றாண்டில் அராபிய யாத்திரிகர்கள் மூலம் இவ்வளையல்கள் தென் இந்தியாவிற்குள் புகுந்தன. வண்ணங்களால் செய்யப்பட்டிருந்த கண்ணாடி வளையல்களின் கண்டு நம்நாட்டு மகளிரும் இவற்றை விரும்பி அணிய ஆரம்பித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் பாமினி சுல்தான்கள் காலத்தில் இங்கு மிகப்பெரிய கண்ணாடி வளையல் செய்யும் தொழிற்கூடம் தெரியவந்தது. எனவே கி. பி. 14ஆம் நூற்றாண்டு முதல்தான் நம்நாட்டில் கண்ணாடி வளையல் செய்ய ஆரம்பித்தனர் எனலாம். ஆரம்பித்தனர் எனலாம். அக்காலந்தொட்டு இன்றுவரை படிப்படியாக மற்ற பொருட்களாலான வளையல்களின் முக்கியத் துவம் குறைந்து கண்ணாடி வளையல்கள் அணியும் வழக்கம் சிறப்படைந்தது. சடங்குகளில் வளையல்
நம் சமுதாயத்தில் பெண்கள் வளையல் அணிவதை மிகச் சிறப்பாக வைத்துப் போற்றுகின்றனர். கைம்பெண்கள் தவிர பிற பெண்கள் அனை வரும் தம் கைகளில் வளையல்கள் அணிகின்றனர். தற்செயலாகத் தம் கைவளை யல்கள் உடைவதைக்கூட அமங்கலமாகக் கருதுகின்றனர். பெண்கள் பிள்ளை பேற்றின்போது ஒன்பதாவது மாதத்தில் ‘வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்தி முன் கை முதல் முழங்கை வரை வளையல் அணிவித்து மகிழ்கின்றனர். கிராமப் புறங்களில் ஆடிப் பெருக்கின்போது முளைப்பாரிபோடு வளையல்களையும் வைத்து வழிபடுகின்றனர். பெண்கள் தாங்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டி வழிபடும் வரலட்சுமி விரதம், கேதாரிகௌரி விரதம் போன் நோன்புகளின்போது வளையல்களை வைத்து வழிபடுகின்றனர்.
வளையல் செட்டி – மதுரை
தற்போது வளையல் செட்டியார் (காஜுல பலிஜா) என்னும் இனத்தைச் சேர்த்தவர்கள் நகரங்களில் வளையல் கடைகள் வைத்தும், கிராமங்களுக்கு வளையல்களை எடுத்துச் சென்றும் வியாபாரம் செய்கிறார்கள். ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மூல விழாவின்போது இவ்வின மக்கள் சிவபெருமான் வளையல் விற்ற திருவிளையாடலை (திருவிளையாடற் புராணம்-வளையல் விற்ற படலம்) மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
கட்டுரை: வளையலின் தொன்மை
ஆசிரியர்: து.துளசிராமன்,எம்.ஏ.
அகழ்வாய்வாளர்
மூலம்: கல்வெட்டு இதழ் 20
இன்றும் நடுநாடு, சோழநாடு, திண்டுகல், பழனி, இலங்கை கதிர்காமம் வாழும் வளையக்கார செட்டிகளுக்கு முருகனே தெய்வமாக உள்ளது. செட்டி என்றாலும் முருகன் என்ற பொருளை உடையது.
வளையல்கார செட்டியார் அய்யா கும்மி பாடல் (மங்கை வள்ளி கும்மி ஆட்டம்)
மங்கை வள்ளி கும்மி ஆட்டம்|Mangai Valli Kummi Attam
என்ன வடிவெடுத்தார் கந்தர் எழிலென வளையல் செட்டி என்ற கும்மி பாடல் || மங்கை வள்ளி கும்மி.
அடிக்குறிப்புகள்:
1. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டி மாதேவி கைகளில் தங்க வளைகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்கு வளையையும் அணிந்திருந்தால்,2.
3
‘பொலற்கொடி தின்ற மயிர் லார் முன் கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து”
(நெடுநல் வாடை 141;142}
மாதாய்கன் மகளாகிய கண்ணகி கோவலனை இழந்து கைம்பெண ஆனபோது கொற்றவை கோயிலின் முன் வளையைத் தகர்த்து உடைத்தாள்.
‘கொற்றவை வாயிலில் பொற்றொடி தகர்த்து’
(கட்டுரைக் காதை 181)
‘அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை ‘அரம் போழ் அவ்வளை பொலிந்த முன் கை” ”அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ’
Plano-Concave
4. Plano-Convex
(மதுரைக் காஞ்சி 316) (அகநானூறு 652) (அகநானூறு 125:1)
5. “Excavations at Lower Kaveri Valley’ Dr. T. V. Mahalingam Page 50
6. “வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்து வளைகளைத் தொழித்து கொழுந்து’
(அகநானூறு – 24:1-2)
(புறநானூறு 117:10)
(நற்: 56; ஐங்: 20)
‘(அகம் 3 90:16)
7. ‘பழந்தமிழர் வாணிகம்’-மயிலை சீனி. வேங்கடசாமி. 8. ‘ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே’ 9. ‘இலங்குவளை (மலை:46, கலி:125) 10. ‘எல்வளை ஒண்தொடி
11. ‘வால்வளை
12. தொடி செறி யாப்பும் அமை அரிமுன்கை’ 13. குறுந்தொடி மகளிர் தோள்விடல்.
14. ‘அகன் தொடி செறித்த முன்கை ஒலி நூதல்’ 15. ‘அவிர்தொடி முன் ஆய்இழை மகளிர்’
(கலித்தொகை – 54:3) (புறநானூறு 97:24)
(நற்றிணை-77)
(அகநானூறு 16:5)
16. ‘யாவரும் விழையும் பொலற்தொடிப் பகல்வளை 17. ‘ஆம்பல் வள்ளித்தொடிக்கை மகளிர்’ 18. ‘பாம்பு தொடி பாம்பு முடிமேலன
(அகநானூறு 16:5)
(புறநானூறு 352:5) (பரிபாடல் 4:44)
(கலித்தொகை 71:16)
டாக்டர்.இரா.நாகசாமி.
19. ‘எடுத்துக் கொள்வது போலும் தொடி வடுக்காணிய 20.S.I.I.Vol. II Nos.7,39,51 and 86
21. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள்
22. Ibid Page.39.
23. Ibid page. 38.
24.S.I.I.Vol. II No.57.
25. Aspects of Indian History and Archaeology Dr. H. D. Sankalia Page. 230.