தஞ்சாவூர் நாயக்கர் வரலாறும் பூர்வீகமும் – குடவாயில் பாலசுப்ரமணியன்

தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்தவர் செவ்வப்ப நாயக்கர் என்பவரே. இதுவரை தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியர்களிலேயே மிகச் சிறந்தவராகக் குறிப்பிடப் பெறும் வி. விருத்தகிரீசன் தம் “THE NAYAKS OF TANJORE” ‘ எனும் நூலில் செவ்வப்ப நாயக்கரைப்பற்றிக் குறிப்பிடும் போது, தனக்குப் போதிய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்பதையும், கிடைக்கும் நாயக்கர் கல்வெட்டுக்களில் சோழர் பாண்டியர் கல்வெட்டுக்களில் உள்ளது போன்று வரலாற்றுக் குறிப்புக்களோ (மெய்க்கீர்த்தி), ஆட்சியாண்டுகளோ குறிப்பிடப் பெறாமல் இருப்பதால், குறிப்பாகச் செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின் நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகப் (கால அடிப்படையில்) பெற இயலவில்லை என்றும், அவரது ஆட்சி எந்த ஆண்டு தொடங்கி எப்போது முடிவுற்றது என்று கூறச் சிறிய தடயம் கூடக் கிடைக்கவில்லை என்றும் வருந்துகிறார். கிடைத்த ஒருசில கல்வெட்டுக்கள், நாயக்கர் கால இலக்கியச் செய்திகள் ஆகியவற்றின அடிப்படையில் வரலாற்றுத் தகவல்களை அளிக்கிறார். தஞ்சாவூரி ஆந்திரராஜுலு சரித்தரமு”, “ தஞ்சாவூர் வாரி சரித்தரமு” என்ற பிற்கால மெக்கன்சி சுவடிகளின் அடிப்படையிலும் சில தகவல்களை எழுதியுள்ளார்.

மெக்கன்சி சுவடிகளில் முறையான வரலாறு எழுதப்பெறவில்லை என்பதாலும், அவை செவிவழிக் கதைகள் அடிப்படையிலேயே புனையப்பெற்ற செய்திகள் என்பதாலும், அவற்றை வரலாறு என நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் இலக்கியங்கள், டேனிஷ், டச்சு, போர்த்துகீசிய, ஏசுசபை (ஜெஸ்சூட்) ஆவணங்கள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து, கால அடிப்படையில் ஆராயும்போதுதான் நமக்குச் சரியான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அடிப்படையில் தஞ்சை நாயக்கர் வரலாற்றைத் துல்லியமாக ஆராய்ந்ததன் விளைவாகத் தெளிவான வரலாறு கிடைப்பதோடு, முந்தைய வரலாற்று ஆசிரியர்களின் பல கூற்றுக்களும் ஊகங்களும் பிழைபடலாயின.
வி. விருத்தகிரீசன், முதல் நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கர் பற்றிய ஆய்வுக்கு” எடுத்துக் கொண்ட கல்வெட்டுக்கள் 28 ஆகும்.? செப்பேடுகள் நான்காகும். ஆனால் தற்போது, செவ்வப்ப நாயக்கரின் தனித்த கல்வெட்டுக்கள், அவரது குடும்பம் பற்றிக் கூறும் கல்வெட்டுக்கள், அவரது இறுதிக் காலம் வரை அவரும் அவரது மகனும் இணைந்து வெளியிட்ட சாசனங்கள் சுமார் 90 கல்வெட்டுக்களும் நான்கு செப்பேடுகளும் கிடைக்கின்றன. இவற்றுடன் இலக்கியக் கூற்றுக்கள், பயணியர் குறிப்புக்கள், ஏசுசபைக் கடிதங்கள். பிற ஆவணங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து செவ்வப்ப நாயக்கரின் அரசு பற்றியும், பின்னர் இதே அடிப்படையில் இவருக்குப்பின்வந்த தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றியும் விரிவாகக் காண்போம்.

எனச் சேமகூர வேங்கடகவி என்பவர் தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் எழுதிய தெலுங்கு நூல் “விஜயவிலாசம்” ‘ என்பதாகும். அந்நூலில் அவர் செவ்வப்ப நாயக்கரின் புகழை அழகான கவிதைகள் வாயிலாக எடுத்துரைக்கின்றார்.

1. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு (Historical Series No. 3) -1942
2. The Nayaks of Tanjore – By – V. Vridhagirisan PP. 181 -184.
3. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் – தெலுங்குச்சுவடி எண் : எம். 250
253.
“ஆராஜ சேகருடு-ப்பிய
வாரிஜமுகி தோடு காக வர்திலு விமல
ஸ்ரீ ருசிர வம்சமுன தாத்
ரீர்ஞ்சன ஸுக்ருதி செவ்வ ந்ருபதி ஜனிஞ்சென்”
(பாடல் எண் -9)

உயர்ந்த பிரபுக்கள் குலத்தில் பிறந்தவர் செவ்வப்ப நாயக்கர். அவரது ‘துணைவியாரோ உத்தம குணமுடையவர். செல்வந்தர்களின் குலத்திலுதித்த இவ்விருவரும் இந்நாட்டு மக்களை மகிழ்விக்க வந்தவர்கள்., இவர்களால் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்ந்தனர் என்றும், “டீவி நச்புதராயல தேவியைனை
திருமலாம் பகு நனுஜயை தேஜரில்லு மூர்த்திமாம்பனு பெண்ட்லியை! கீர்த்திவெலய ஜெவ்வ விபுடு மஹோன்னத ஸ்ரீ ஜெலங்கெ” (பாடல் எண் : 11)

அச்சுதராயரின் தேவி திருமலாம்பாவின் தங்கையான மூர்த்திமாம்பாவை மணந்து கொண்டு (செவ்வப்ப நாயக்கர்) உயர்ந்த நிலையைப் பெற்றார் என்றும் கூறுகின்றார்.

கோவிந்ததீட்சிதரின் மகனான யக்ஞநாராயண தீட்சிதர் தஞ்சை நாயக்க மன்னர் இரகுநாத நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர். அவர் இயற்றிய ” சாகித்ய ரத்னாகரம் ” எனும் சம்ஸ்கிருதநூலின் மூன்றாம் சர்க்கம் ஒன்பதாம் சுலோகம்,
ஸுதாம்சு சூடச்ய யதாஸுத கிரே : பயோஜநாபேரிவ பங்கஜாலயா
விதே: ஸவத்ரீவ கிராம் விசாம் விபோரமுஷ்ய
ஜாயாஜனி மூர்த்தி மாம்பிகா “”
(சுலோகம் – 9)

சிவபெருமானுக்கு மலைமகள் மனைவியானது போலும், திருமாலுக்கு மலர்மகள் போலும், பிரம்மனுக்குக் கலைவாணி போலும் இந்த அரசனுக்கு (செவ்வப்பனுக்கு) மூர்த்திமாம்பா என்பவர் துணைவியானாள் என்று விவரிக்கின்றது.

தஞ்சை இரகுநாதநாயக்கரின் அவையை அலங்கரித்த புலவர் குழாத்தில் சிறப்புடன் திகழ்ந்த பெண்பாற்புலவர் இராமபத்ராம்பா என்பவராவார். இவர் யாத்த சம்ஸ்கிருதநூலான “இரகுநாதாப்யுதயம்

“பார்யா பவத்தஸ்ய பாலரே : மூர்த்திம்பிகா மூர்த்தி மதீவ கீர்த்தி : ஆட்யா குணை ரச்சுதராய தேவ்பா : ஸகோதரா ச்லாக்ய குண ப்ரபாவா “

( 6-வது சர்க்கம் – 11 -வது சுலோகம்)

பூமியில் வலிமையோடு இருந்தவருக்கு (செவ்வப்பருக்கு) மனைவியாக அமைந்தாள். மூர்த்திஅம்பிகா எனும் பெயருடனும் கீர்த்தியுடன் திகழ்ந்தாள். அச்சுதராயரின் தேவியானவள் (திருமலாம்பா) நற்குணம் வாய்ந்தவள். அந்தத் தேவியின் உடன்பிறப்பான இவள், குணப்பெட்டகம் போன்றவள் என்று கூறுகின்றது.

இலக்கியங்கள் மட்டுமின்றிக் கல்வெட்டுச் சாசனங்களும் செவ்வப்ப நாயக்கர் மூர்த்திமாம்பா எனும் மூர்த்தி அம்மாளை மணந்ததாகக் கூறுகின்றன. திருவரங்கம் திருக்கோயிலிலுள்ள கிரந்தக் கல்வெட்டொன்று, (தென் இந்தியச் சாசனங்கள் தொகுதி-24 எண்-448)

-என்று கூறுகிறது.

…….. பாகேன மூர்த்தியம்பா செவ்வ பூபயோ :

ஸ்ரீ வீராச்யுத பூபால சேகரேண ஸமர்பிதான் ஸந்திதௌ ரங்கநாதஸ்ய ஷஷ்டி தீபான் “

இதே கோயிலில் உள்ள தமிழ் – தெலுங்குக் கல்வெட்டொன்றில்

” செவ்வப்ப நாயனி வாரிகின்னி மூர்த்தி அம்மவாரி (கின்னி) ஸ்ரீ ரங்கநாத சுவாமி வரப்பிரஸாதம் வல்லனு ஜனனமைன அச்சுதப்பநாயனி வாரு…. செவ்வப்பன் மூர்த்திஅம்மாள் தம்பதியர்க்குத் திருவரங்கன் திருவருளால் அச்சுதப்ப நாயக்கர் பிறந்தார்- என்று குறிக்கப்பெற்றுள்ளது.

இவை அனைத்தும் செவ்வப்ப நாயக்கர் மூர்த்திமாம்பா எனும் மூர்த்தி அம்மாளை மணந்ததை உறுதிப்படுத்துகின்றன. அத்தேவி விஜயநகரப் பேரரசரும், கிருஷ்ண தேவராயரின் தம்பியுமான அச்சுததேவராயரின் மனைவியருள் ஒருத்தியான திருமலாம்பாவின் தங்கை என்பதைத் தெளிவுபட விவரிக்கின்றன. இவ்வாறு பேரரசரின் மைத்துனியை மணந்து கொண்டதால்தான் செவ்வப்ப நாயக்கருக்குத் தஞ்சை அரசு ஸ்ரீதனமாகக் கிடைத்தது என்று ஆந்திர ராஜுலு சரித்தரம் கூறுகின்றது. ஆனால் “சாஹித்யரத்னாகரம்” எனும் நூலில் இரகுநாத நாயக்கரின் அவைக்களப் புலவரான யக்ஞநாராயண தீட்சிதர், செவ்வப்பன் தனது வலிமையால்தான் தஞ்சை அரசைப் பெற்றான் என்று கூறுகிறார். ஸ்ரீதனமாகத் தஞ்சை அரசு கிடைத்தது என்ற குறிப்பினை நாயக்கர்கள் காலத்து இலக்கியங்களோ, சாசனங்களோ கூறாமல் இருப்பதால், பின்னாளில் கற்பனைகளால் புனையப்பட்ட “தஞ்சாவூரி ஆந்திர ராஜுலு சரித்தரமு” கூறும் கூற்றினை ஏற்பதற்கு இடமில்லை. இனி நாம் ஆராயப்போகும் சாசனங்களும், இலக்கியங்களும், பேரரசின்பால் செவ்வப்பன் மற்றும் அவனது குடும்பத்தினரின் விசுவாசமும், வீரமுமே தஞ்சை அரசு கிடைக்கக் காரணமாய் அமைந்தன என்பதைத் துல்லியமாகக் காட்டி நிற்பதனைக் காணலாம்.

” சினசெவ்வபூப சேகரேண

பிரதிதே நாச்யுத பூமிபாலகேன மகுலாபரணம் மனமவ வம்சா :

ரகுநாத க்ஷிதிபால ரக்க்ஷ்க்ஷி தாஸ்தே ! ‘

என்று இராமபத்ராம்பா தனது ” இரகுநாதாப்யுதயம் ” எனும் காவியத்தின் எட்டாம்சர்க்கம் பதினாறாம் சுலோகத்தில் குறிப்பிடுவதிலிருந்து, சின்ன செவ்வப்ப அரசன் அரசர்களுள் மிகச் சிறந்தவன் என்றும், அவனது பராக்கிரமத்தால்தான் தஞ்சை நாயக்க வம்சத்தார்க்கு மகுடம் கிடைத்தது எனவும், இரகுநாதனுக்கும் இவ்வாறுதான் கிடைத்தது என்றும் அறிகிறோம்.

பிறந்த மண்

அரசுரிமை பெற்ற பின்பு தஞ்சாவூருக்கு வந்த செவ்வப்ப நாயக்கரின் பிறந்த மண் எது? தெலுங்கு நாட்டைச் சேர்ந்தவரா ? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா ? என்ற கேள்விகள் செவ்வப்ப நாயக்கர் பற்றிய ஆய்வுக்கு இன்றியமையாதவையாகும். சாசனங்களும் இலக்கியங்களும் தமிழகத்து நெடுங்குன்றத்தினைச் சார்ந்தவர் என்பதைத் தெளிவாகச் சுட்டுகின்றன. தமிழில் “நெடுங்குன்றம்” என்றும் சம்ஸ்கிருதத்தில் தீர்க்கசைலம் என்றும் அழைக்கப்பெறும் இவ்வூர் தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் உள்ளது. நெடுங்குன்றம் இராமச்சந்திர பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று, ” ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் படைவீட்டு ராஜ்யத்து குழைப்பலூர் நாட்டு. முருகுமங்கலப்பற்று, பல்குன்ற கோட்டத்து மேற்குன்ற நாட்டில் நெடுங்குன்றம்” 1 என்று குறிப்பிடுகின்றது.

திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்துக் கல்வெட்டு ” நெடுங்குன்றம் மல்லப்ப நாயக்கர் தம்பியார் செவ்வப்ப நாயக்கர் ” என்றும்,3, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிற் கல்வெட்டு ” தொண்டைமண்டலம் நெடுங்குன்றம் சதுர்த்த கோத்திரத்து திம்மப்பநாயக்கர் புத்திரன் செவ்வப்ப நாயக்கர்” 3 என்றும், இதனையே குத்தாலம் கல்வெட்டும், மாந்தை கல்வெட்டும்’ கூறுகின்றன. இச்சாசனங்களின் சான்றால் செவ்வப்ப நாயக்கர் தமிழகத்தில் தொண்டை மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து நெடுங்குன்றம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பது உறுதியாகின்றது. தஞ்சை நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கர் பெயரில் பாடப் பெற்ற ” விஜயராகவ நாயக்க அய்யன் பேரில் முளைப்பாட்டு ” என்ற ஓலைச்சுவடி தஞ்சாவூர் அரண்மனை நூலகத்தில் சுவடி எண் 614 ஆக உள்ளது. இது விஜயராகவ நாயக்கர் காலத்து நூலாகும். அதில், ” நெடுங்குன்றம் துலங்க துலங்கவரும் துரந்தரீகன் செவ்வையன் அச்சுதையன் சொலும் பொன் வரம்பெற்ற ரகுநாதன் மகிழ்ந்தளித்த மனுசீலன் சீலமிகு ராச கோபாலருக்குத் திருப்பணிகள் கோலரத்னாபரணம் துவங்க வரும் கோவேந்திரன் கோவேந்திரன் பணி விசைய ராகவன்……… என்று குறிக்கப்பெறும் இலக்கியச் சான்றாலும் செவ்வப்ப நாயக்கரின் பிறந்த மண் நெடுங்குன்றம் என்பதே பெறப்படுகின்றது.

சென்னையிலிருந்து செங்கம் செல்லும் பேருந்து தடத்தில் நெடுங்குணம் என மருவி வழங்கப் பெறும் ஊரே பல்குன்றக் கோட்டத்துத் தீர்க்கசைலம் எனும் நெடுங்குன்றமாகும். குலமும் கோத்திரமும்
விஜய நகரப் பேரரசர் அச்சுததேவராயரின் மனைவி திருமலாம்பா தேவியின் தங்கையை மணந்தவர் செவ்வப்பர் என்பதால், இவரும் துளுவகுலத்தைச் சேர்ந்தவரா? என்ற ஐயம் தோன்றலாம். ஆனால் திருமலாம்பா அச்சுதராயரின் பட்டத்தரசி (பட்ட மகிக்ஷி) அல்ல. வேறு குலத்தைச் சார்ந்தவர். செவ்வப்ப நாயக்கரின் குலமும் கோத்திரமும் பற்றிச் சாசனங்களும், இலக்கியங்களும் விரிவாகப் பேசுகின்றன.

திருவண்ணாமலை திருக்கோயிலிலுள்ள சதாசிவராயர் காலத்துக் கல்வெட்டொன்று பின் வருமாறு குறிப்பிடுகின்றது.

“அண்ணாமங்கலப்பற்று பல்குன்ற கோட்டத்து நெடுங்குன்றத்திருக்கும் சுவரை நாயக்க பாடிகளில் திம்மப்பணயக்கர் புத்திரன் பெரிய மல்லப்ப நாயக்கர்.
(கல்வெட்டு எண் : 421 – திருவண்ணாமலைக் கல்வெட்டுக்கள்)

இக் கல்வெட்டின் காலம் கி. பி. 1556 ஆகும். இங்குக் குறிப்பிடப்பெறும் இருவரும் முறையே செவ்வப்ப நாயக்கரின் தந்தையும், உடன்பிறந்தவரும் ஆவர். கவரை நாயக்க பாடிகளுக்குரிய இவர்கள் நாயக்கர்களில் (நாயன்காரு – நாயுடுகளில்) கவரை நாயுடு என்ற வகுப்பிற்குரியவர்கள் என்பது உறுதிபெறுகின்றது. தமிழகத்திலுள்ள நாயுடு இன மக்கள் கம்மவார், பலிஜா, கவரை என்ற இனப்பகுப்புகளுக்குள் அடங்குவர். N.வெங்கடரமணையா செவ்வப்பனைப் பலிஜா வகுப்பைச் சார்ந்தவர் என்று இரகுநாதநாயகாப்யுதயம் பதிப்பில் சான்றுகள் குறிப்பிடாமல் கூறுகின்றார். 1
செவ்வப்ப நாயக்கரின், சுவாமிமலை 2, குத்தாலம் ‘, மாந்தை 1, கல்வெட்டுக்கள் ” நெடுங்குன்றம் சதுர்த்த கோத்திரத்து திம்மப்ப
நாயக்கர் புத்திரன் செவ்வப்ப நாயக்கர்…. ” என்றே கூறுகின்றன.

கல்வெட்டுக்கள் அடிப்படையில்நோக்கும் போது இவர்கள் தங்களை நான்காம் வாணமாகிய சூத்திரர் பிரிவு என்பதைச் “சதுர்த்த கோத்திரம்” என்றே கூறிக் கொண்டனர் என்பதறிகிறோம். கண்ணபிரானை நான்காம் வர்ணத்தினன் என்று புராணங்கள் பேசும். பெரும்பாலான நாயக்க மன்னர்கள் ஆழ்ந்த வைணவ ஈடுபாடும் கண்ணனையே முழுமுதல் தெய்வமாகப் போற்றும் நெறியும் கொண்டு வாழ்ந்தவர்கள் என்பதை இலக்கியங்கள் பேசுகின்றன.

செவ்வப்ப நாயக்கரின் பேரனின் மகனும், தஞ்சையின் இறுதி நாயக்க மன்னருமான விஜயராகவநாயக்கரின் அவையில் அரங்கேறிய ” உஷாபரிணயம் ” எனும் நூலில், இரங்காஜம்மா எனும் அந்நூலாசிரியர் விஜயராகவனை மன்னாரு கோத்திரத்தினன் என்று குறிப்பிடுகிறார். பொதுவாக நான்காம் வர்ணத்தினர் கோத்திரம் என்று குறிப்பிடுவதில்லை.

செவ்வப்ப நாயக்கரின் பணிகள் முழுவதும் சிவாலயங்களுக்கே இருந்தமையால் இவன் ஆழ்ந்த சிவப்பற்றுள்ள சைவ நெறி ஒழுகுபவன் என்பதை அறிகிறோம். இவனது மகனான அச்சுதப்ப நாயக்கன் சைவம் போற்றியதோடு திருவரங்கத்து அரங்கனிடம் ஈடுபாடு கொண்டார். ஆனால் பின் வந்த இரகுநாதனும் விஜயராகவனும் முறையே இராமபக்தனாகவும், மன்னாருதாசனாகவும் வாழ்ந்தனர். இங்குச் சுட்டப்பெறும் மன்னாரு ” என்பவர் மன்னார்குடி இராஜகோபால சுவாமியாவார். கோபாலன் நான்காம் வர்ணத்தினனாகிய கண்ணபிரானேயாவார். எனவே அவரது தாசனாக (அடியானாக) வாழ்ந்த அம்மன்னன் தன்னை மன்னாரு கோத்திரத்தினன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைந்தான். இதனையே இரங்காஜம்மாவும் தன்னுடைய காவியத்தில் கூறுகிறாள். இச்செய்திகளைத் தொகுத்து நோக்கும்போது தஞ்சை நாயக்கர்கள் சதுர்த்த கோத்திரத்துக் கவரை நாயுடு இனத்தவர் என்பது உறுதியாகின்றது.

தந்தையும் தாயும்

தஞ்சை இரகுநாதநாயக்கர் காலத்தில் இராமபத்ராம்பா எழுதிய சம்ஸ்கிருத இலக்கியமான இரகுநாதாப்யுதயம் எனும் நூலில் செவ்வப்பரின் தந்தையான திம்மப்ப நாயக்கரைக் குறிப்பிடும் இடத்து,

” தேஷு ப்ரதீதேஷ்வஜனி ப்ரகாமம் பாதோருஹ லோவனஸ்ய
பதிவிரதாஸு ப்ரதமாபிதேயா பய்யாம்பிகா தஸ்ய பூபவ பார்ய ” (சுலோகம் : 4)
(திம்மப்ப நாயக்கருக்கு) பய்யாம்பிகா திலகமாக விளங்கினாள். உயர்ந்த பதிவிரதையான இத்தேவி திம்மப்பருக்குப் பிரியமாகவும் இருந்தாள் என்று கூறப்பெற்றுள்ளது. இதே போன்று இராஜசூடாமணி தீட்சிதர் எழுதிய சம்ஸ்கிருத நூலான “ருக்குமணி பரிணயம்” எனும் சுவடியில்,
ஆஸீதசேஷாஹித பூமி பால –
சாஸீ ஸுநாஸீரஸமப்ரபாவ :
திம்மாவனீ நாயக பப்யாம்பா
ஜன்மா ஸுதர்மா சினசெல்வபூப :” (34)

என்று கூறித் திம்மப்பருக்கும் பய்யாம்பிகைக்கும் சின்ன செவ்வப்பர் பிறந்தார் என்று கூறப்பெற்றுள்ளது. செவ்வப்ப நாயக்கரின் கொள்ளுப்பேரனான விஜயராகவநாயக்கர் எழுதிய தெலுங்கு நூலான இரகுநாதாப்யுதயம் எனும் யக்ஷகான நாடகத்தில்,

“வாரிலோ க்ருஷண பூவருடு லாவண்ய காருண்ய குணமுல கனகீர்த்தி காஞ்சை அம்மஷா மஹீனகு நாத்மஜீடைன திம்மபூபாலுண்டு தீரத வெலஸெ பய்யாம்பிக வரிஞ்சி ப்ரௌடி வஹிஞ்செ நய்யிருவுரு காஞ்சி ராத்ம ஸம்பவுல பெத மல்ல பூபாலு சினசெவ்வ விபுனி பெதமல்ல பூஜானி பினமல்ல ந்ருபதி வாரிலோ சினசெவ்வ வஸுதா பலாரி மேரு தீருண்டனக மேதினி வெலஸெ ”

கிருஷ்ணப்பிரபுவானவர் அழகுடனும் கருணைக்குணத்துடனும் புகழ் மிகுந்தவராகத் திகழ்ந்தார். திம்மபூபன் அப்பெரியவருக்கு மகனாகப் பிறந்து தீரனாக விளங்கினான். பய்யாம்பிகை எனும் பெண்ணை மணந்து மேன்மையடைந்தான். இவ்விருவரும் பெரிய செவ்வன், சின்ன செவ்வன், பெரியமல்லன், சிறியமல்லன் என்பவர்களைப் பெற்றெடுத்தனர். இவர்களில் சின்ன செவ்வன் பூமியில் வலிமையுடையவனாகவும், மேருதீரனாகவும் விளங்கினான் என்று கூறப்பெற்றுள்ளது.

இலக்கியங்கள் கூறுவதைக் கல்வெட்டுக்களும் மெய்ப்பிக்கின்றன. சுவாமிமலை குத்தாலம், மாந்தை ‘ என்ற சோழநாட்டு ஊர்களில் உள்ள செவ்வப்ப நாயக்கரது கல்வெட்டுக்கள் “நெடுங்குன்றம் சதுர்த்த கோத்திரத்து திம்மப்ப நாயக்கர் புத்திரன் செவ்வப்ப நாயக்கர்” என்றே கூறுகின்றன. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள நாகத்தி எனும் ஊரில் உள்ள தெலுங்கு கல்வெட்டு ” சதுர்த்தகோத்திரத்து திம்மப்பபுத்ருலு சின்ன செவ்வப்ப ” என்று கூறுகிறது. திருவண்ணாமலைக் கல்வெட்டொன்று ‘, “திம்மைய சின்ன செவ்வ ந்ருபதி ” என்று சம்ஸ்கிருதத்தில் கூறுகின்றது.
திம்மபூபன் என்றும் திம்மப்ப நாயக்கர் எனவும் அழைக்கப்பெற்ற செவ்வப்பனின் தந்தை கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் கீழ் இருந்த விஜயநகரப் பேரரசுக்கு, தமிழகத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்குன்றம் பகுதிக்குப் (தொண்டை மண்டலப் பகுதி) பேரரசின் அதிகாரம் பெற்ற ஆட்சியாளராய்த் திகழ்ந்தார் என்பதனைப் பல்வேறு சான்றுகள் கொண்டு உறுதி செய்யமுடிகின்றது.

கி. பி. 1537 இல் அச்சுததேவராயர் வெளியிட்ட செப்பேட்டுச் சாசனம் ஒன்றில் “ சகம் 1459 ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம், துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள விட்டலேஸ்வரர் கோயிலில் இருந்து கொண்டு, திம்மப்ப நாயக்கர் வேண்டுகோளுக்காகச் செறுவாஞ்சூறு என்னும் கிராமத்தினை ” அச்சுதேந்திர மகாராயபுரம் ” என்று பெயர் மாற்றம் செய்து சர்வமானியமாகப் பல வேதம்வல்ல பிராமணர்களுக்குப் பிரித்து அளித்ததையும் அவ்வாறு கொடுக்கப்பெற்ற சிறுவாஞ்சூறு கிராமம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, சந்திரகிரி ராஜ்யத்து, செங்காட்டுக் கோட்டத்தில் இரண்டாயிரவேலிப்பற்றில் கோனாடி நாட்டு நந்திவல சீர்மையில் உள்ளதாகக் குறிக்கப்பெற்றுள்ளது. இச்சான்றால் கி.பி.1537 இல் செங்காட்டுக் கோட்டத்து இரண்டாயிரவேலிப்பற்று எனக்குறிக்கப்படும் பகுதியான செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டப் பகுதிகள் திம்மப்ப நாயக்கரின் நிருவாகத்தின் கீழ் இருந்தன என்பது தெளிவாகின்றது.

கி. பி. 1516 இல் வெட்டுவிக்கப்பெற்ற மானாமதுரைச் சாசனத்திலும், கி. பி. 1519 இல் எழுதப்பெற்ற ஆனைமலைச் சாசனத்திலும், கி. பி. 1521 இல் பொறிக்கப்பெற்ற காளத்திக் கல்வெட்டிலும் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ” வாசல் ” எனும் பதவிவகித்த அலுவலராகத் திம்மபூபன் எனும் திம்மப்ப நாயக்கர் குறிக்கப்பட்டுள்ளார். சகம் 1453 கரவருடம் (கி.பி. 1531) தென் ஆர்க்காடு மாவட்டம் கிளியனூரில் அச்சுததேவராயரும், திம்மப்ப நாயக்கரும் நலம்பெற வேண்டி அளித்த நிலக்கொடை பற்றிக் கிளியனூர்க் கல்வெட்டு” விவரிக்கின்றது.

கி.பி. 1522 இல் வாசல் திம்மப்ப நாயக்கர் சந்திரகிரி ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்காக ஒரு கிராமத்தைக் காளகஸ்தி கோயிலுக்கு அளித்தார் என்பதைக் காளகஸ்திக் கல்வெட்டுக்கள்’ விவரிக்கின்றன. சோழநாட்டு மயிலாடுதுறை வட்டம் நத்தம் கல்வெட்டில் திம்மப்ப நாயக்கர் சில வரிகளைத் தள்ளுபடி செய்தது குறிக்கப்பெற்றுள்ளது. செஞ்சியில் உள்ள கல்வெட்டொன்றில் திம்மப்ப நாயக்கருக்கு அமரமாகக் கிடைத்த அந்தப் பகுதியில் குளம் ஒன்றின் கரையைச் செப்பனிட்ட பணிபற்றிக் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் ரெய்ச்சூர் போரில் ஈடுபட்டவர் என்பதும் விஜயநகர வரலாற்றின் வாயிலாக அறியமுடிகிறது.

‘பூபன் ” என்ற சொல் உயர் நிலையைக் குறிப்பதாகும். திம்மப்ப நாயக்கர் எனும் திம்ம பூபன் கிருஷ்ண தேவராயரிடத்தில் “வாசல்” எனும் உயர்நிலை அலுவலராகப் பணிபுரிந்து, பின்பு அச்சுததேவராயர் காலத்தில் நாயக்கதானமாகத் தமிழகத்தின் வடபகுதியில் உள்ள தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியைப் பெற்று ஆட்சியாளராகத் திகழ்ந்தார் என்பதனைச் சாசனங்கள் எடுத்தியம்புகின்றன.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் நெடுங்குன்றத்துத் திம்மபூபனைத் தவிர மேலும் சிலர் திமமப்பநாயக்கர் என்ற பெயரில் பிறபகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார்கள் என்பது மற்றச் சாசனங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அதுபோலவே கப்பலூர்ச் சாசனத்தின் வாயிலாகச் செவ்வப்பனின் கீழ்த் திம்மப்ப நாயக்கர் என்பவர் பணிபுரிந்ததைக் காண்கிறோம். சிற்றாமூர்ச் சாசனத்தின் வாயிலாகத் தஞ்சை அச்சுதப்ப நாயக்கரின் ” காரியத்துக்கு கர்த்தரான திம்மப்பனாயக்கர் ” ஒருவர் குறிப்பிடப் பெறுகிறார். இவ்விருசாசனங்களிலும் காணப்பெறும் திம்மப்பன் செவ்வப்ப நாயக்கரின் உடன் பிறந்தவரான மல்லப்பநாயக்கரின் மகன் என்பதனைக் கல்வெட்டொன்று கூறுகிறது. தாத்தா மல்லப்பரின் பெயரினைப் பெயரனும் கொண்டனன். உடன் பிறந்தோர்
திம்மபூபன் பையாம்பிகா தம்பதிகளுக்கு நான்குபுதல்வர்கள் என்பதைத் தஞ்சை விஜயராகவநாயக்கரின் ” இரகுநாதாப்யுதயம் ” உறுதி செய்கின்றது.” பெத்தசெவ்வ, சின்ன செவ்வ, பெத்தமல்ல, சின்னமல்ல என்று அவர்களது திருநாமங்களை யும் கூறுகின்றது.

“ராஜீலு கொந்தரு ப்ரக்யாதி கனிரி வாரிலோ கிருஷ்ண பூவருண்டு லாவண்ய காருண்ய குணமுல கனகீர்த்தி காஞ்சை அம்மஹா மஹீனகு நாத்மஜீண்டைன திம்ம பூபலாலுண்டு தீரத வெலஸெ பய்யாம்பிக வரிஞ்சி ப்ரௌடி வஹிஞ்சை நய்யிருவுரு காஞ்சி ராத்மஸம்பவுல பெதசெவ்வ பூபாலு பினசெவ்வ விபுனி பெதமல்ல பூஜானி பினமல்ல நிருபதி வாரிலோன பினசெவ்வ வஸுதா பலாரி மேரு தீரு டனங்க மேதினிவெலஸெ

சரஸ்வதி மகால் நூலகம் – சம்ஸ்கிருதப்பிரிவுச் சுவடி எண் : 3722. 2. A.R. No. 289 of 1950-51,
I. I.vol XXIV No. 490

A.R. 704 of 1904

S. I. I. Vol 23 No. 497 A. R. 497 of 1917

RA.

That to Ter A A TON out Cove

aser to CoA

A.R. No. 72 of 1925
கோயிற்சாசனங்கள், சாசனம் 91 (U.2875-6) 4. A.R. No. 497 of 1907

1. Tanjore Sarasvathi Mahal Series No. 32. Raghunathanayakabhudayam Page-21-(1951)
2. S. I. I.vol 23 No. 497. 3. A.R. No. 497 of 1907
4. A.R. No. 72 of 1925

1. S.I.I. Vol 23 No. 497 1.A.R.No.167 of 1919 2. A.R. No. 497 of 1907 3. A.R. No. 72 of 1925 4, 275 of 1968 – 69
5. 419 of 1929
8.A.R.No. 455 of 1906
6. A.R. No. 8 of 1932-33 (A) 9.A.R.No. 182 of 1922
7. A.R. No. 447 of 1924 10. A.R. 167 of 1919
Srer to erroM RAS
rer to erg MAA

 

Download Full Book: Here