தஞ்சை ரகுநாதநாயக்கரின் அவைக்கள புலவர்களில் ஒருவரும், அவரின் அணுக்கியுமான, ராமபத்திராம்பா (Ramabhadramba) என்ற பெண்பாற்புலவரால் எழுதப்பட்ட நூல் “ரகுநாதப்யுதயம்” ஆகும்.
தஞ்சை மன்னன், ரகுநாத நாயக்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூலில், ரகுநாத நாயக்கர் பாண்டிய இளவரசியை மணந்தது பற்றிய தகவல் அளிக்கின்றார்.
இந்த திருமணத்திற்கு அடுத்து அதிவீர ராம பாண்டியன் தலைமையில் மதுரை படைகள் தஞ்சையை முற்றுகை இட்டதாக கூறப்படுகிறது, எனவே இந்த போர் இத்திருமணத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.
அதேபோன்று, விஜயநகர பேரரசர் அச்சுதராயரும் பாண்டிய இளவரசியை மணந்துள்ளார் என்ற வரலாற்றுக் குறிப்பும் உள்ளது..
Source: THE NAYAKS OF TANJORE by V. VRIDDHAGIRISA