செங்கம் ஏரியில் உள்ள மூன்று நடுகற்களில் இரண்டு நடுகற்கள் எங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதில் முக்கியமானது இரண்டாவதாக உள்ள இராசராச சோழன் காலத்து நடுகல்லே ஆகும். இந்நடுகல்லின் அமைப்பு கீழ்வருமாறு:
1. இந் நடுகல் இரண்டு பக்கமும் எழுத்துப் பொறிப்புகளைக் கொண்டுள்ளது.
2. முன்பக்கம் வீரனின் உருவமும் அவன் எதற்காக இறந்துபட்டான் என்ற செய்தியும் உள்ளன. கல்வெட்டு வரிவரியாகப் பொறிக்கப் படாமல் கல்லைச் சுற்றி மாலை போல் பொறிக்கப்பட்டுள்ளது. (பார்க்க, படம்)
3. வீரனின் உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில் வலதுகையில் குறுவாளுடன், இடதுகையில் கேடயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவனது உடலில் இரண்டு அம்புகள் பாய்ந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலைக்குமேல் சிறிய அளவில் அவன் மேல் உலகம் சென்றதைக் குறிக்கும்படி சிறிய இரண்டு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வீரனை வரவேற்று கையில் கவரி வீசியபடி நின்ற நிலையில் ஒரு தேவலோகத் தூதன், அவன் அருகில் அமர்ந்த நிலையில் நடுகல் வீரன் என இச்சிறிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது வீரன் இறந்தவுடன் மேல் உலகம் சென்றுவிட்டதாகவும் அங்கு அவனுக்குச் சகல மரியாதைகளும் அளிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுவதாகவும் உள்ளது. இதன் மூலம் வீரனை இழந்த குடும்பத்தார் மனநிம்மதி அடைகின்றனர். அன்றைய கால மக்களின் மறு உலக, மறு பிறப்புக் கோட்பாட்டைப் பதிவு செய்வதாக இக்காட்சி அமைந்துள்ளது.
மேலும், வீரனின் வலது காலுக்கு அருகில் குத்து விளக்கும், இடது காலுக்கு அருகில் நீர் வைக்கும் கெண்டியும் செதுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு நீர், மற்றும் நெருப்புவைத்து வழிபாடு செய்யும் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மெய்க்கீர்த்தி
இந்நடுகல்லை தொல்லியல் துறையினர் முன்பே பார்த்துள்ளனரா என்று ஆய்ந்து பார்க்கையில், இந்நடுகல் பற்றிய பதிவு செங்கம் நடுகற்கள்’ என்ற நூலில் இடம் பெறவில்லை என்பதை அறிய முடிந்தது. இந்நிலையில் இந்நடுகல் குறித்த பதிவு வேறு ஏதாவது உள்ளதா என ஆராய்கையில், Seminar on Hero-Stones என்ற நூலில் ஒரு கட்டுரையில் இந்நடுகல்லில் முன்பக்கம் உள்ள செய்தி மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அதாவது நடுகல்லின் முன்பக்கம் பொறிக்கப்பட்டுள்ள வீரனைப் பற்றிய செய்தி மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது.
Kavarai Mayiletti Kamban pendukaļaik kūrai kolla eṛiñju paṭṭan.
This passage says that Kavarai Mayiletti Kamban died in the course of saving some women from molestation. Kavarai Mayiletti Kamban was, as his name signifies, a big merchant of the Gavara community. Kuṛai means cloths. Another inscription of about the same period is worth mentioning in this connection. It is from Velur (T). It records the death of Kaliman. said to be a resident of Mikonrii, after rescuing his elder brother’s daughter from robbers.
இக்கல் புரட்டிப் பார்க்கப்படாததால் இந்நடுகல்லின் பின்புறம் பொறிக்கப்பட்டுள்ள இராசராச சோழன் மெய்க்கீர்த்தி பற்றித் தொல்லியல் துறையினரால் அறியமுடியாமல் போனது தெரியவருகிறது.
நடுகல்லின் பின்பக்கத்தில் இம்மெய்க்கீர்த்தி வருமாறு:
1. ஸ்வஸ்திஸ்ரீ தண்டேவிச்
2. சாலைய் கலமறுத்து அங்குள்ள
3. மலைஆளர் தலை அறுத்து தக்க பா
4. டிய் தழைக்காடும் தண்டார் நுள
5. ம்ப பாடியொடும் மிக்க கங்கவ
6. ள நாடும் வேங்கைய் நாடு
7. ம் அது கொண்ட நித்தல
8.மு கோகன்(னா) கியனிருவ்வ
9. ன் அருமொழி தேவர்க் கொ
10. த்த பலத்தார் மும்முடிச்
11. சோழர்க்கு யிராஜ யிராஜ
12. கேசரி வர்மர்க்கு யாண்டு
முதலாம் இராஜராஜன் மூன்றுவித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் திருமகள் போல்’ என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியே எட்டாம் ஆண்டிலிருந்து (கி.பி993) பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. — இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தி யிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே இவனது சாதனைகளில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும், கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளில் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது.
மேற்கண்ட இராசராச சோழனின் இந்நடுகல்லை நட்டவர்கள் சோழனின் காந்தளூர்ப் போரைப் பற்றித் தெளிவாக அறிந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. மேலும் இராசராச சோழனின் வீரத்தைப் பெருமையாக நடுகல்லில் இவர்கள் கூறுவதன் மூலம் தங்களுக்கும் மன்னனுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகின்றனரா என்று எண்ணவும் தோன்றுகிறது. (இதைக் குறித்துப் பின்னர்க் கூறப்படும்).
இன்றில் இருந்து சரியாக 1010 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட் 13 இந்நடுகல் சோழர், சேரர் போர்பற்றிய முக்கியத் தரவாகவும் உள்ளது.
இந்நடுகல்லின் முன்பக்கம் உள்ள வீரன் பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கதாகும். கம்பன் என்பவன் பெண்டுகளின் புடவையை இழுத்தான்/எடுத்துக்கொண்டான் என்பதற்காக அவன் கொல்லப் பட்டான் என்ற தெளிவற்ற செய்தியை அறிய முடிகிறது. கல்வெட்டுச் சிதைவுற்றுள்ளதால் அதில் உள்ள செய்தியைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. எனினும் நடுகல் எடுக்கும் வழக்கத்துக்கு மாறாக இச்செய்தி தவறாக கூறப்படுகிறது. நடுகல்லானது பூசலின் போது வீரச்சாவு அடைந்தவர்களுக்கு எடுக்கப்படுகின்றன.
அச்செய்தி வருமாறு:
“இ(ச)லீத்தனா (சே)ப்பன் ஸாலை தொக்கைபாடி… கவரை மாயிலெட்டி கம்பன் பெண்டுகள் கூரை கொள்ள எறிஞ்சு பட்டான்.”
கவரை (கவறை) மாயிலெட்டி என்பது எண்ணெய் வணிகர்களைக் குறிக்கும் சொல்லாகும். மயிலாட்டி என்பது மஹா சிரேஷ்டி மகா செட்டி எனவும் கூறப்படுகிறது. கவரைகள் (கவரா, Kavara, Kavare, Gavare) என்ற வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே பின்னாளில் வடுகு பகுதியில் பலிஜா என்று அழைக்கபட்ட வளஞ்சியர் ஆகின்றனர். இறந்த வீரன் தொக்கைபாடி என்ற ஊரைச் சார்ந்தவன் என்பதையும் அறிய முடிகிறது. ‘நடுகற்கள் போர் சண்டையில் வீரர்கள் இறந்த இடத்திலேயே நடப்பட்டன’. இவர்கள் தனம் வடுகர், கவரை வடுகர், வடுகர், வடுகன் என பல்வேறுப் பெயர்களால் அழைக்கபடுகின்றனர்.
‘கவரை மாயிலெட்டி கம்பன்’ என்ற தொடரில் வரும் கம்பன் பெயரானது சைவமரபில் உள்ளவர்கள் வைத்துக்கொள்ளும் பெயராகும். கவரைகளில் சைவ வைணவ சமண சமயங்களைப் பின்பற்றியவர்கள் உண்டு. அக்காலகட்டத்தில் சைவ சமயத்தவர்களிடம் இப்பெயர் புழக்கத்தில் இருந்தது. சைவ மரபைச் சார்ந்த எண்ணெய் வியாபாரம் செய்யும் கம்பன் என்பதாக உள்ளது.
இந்நடுகல்லில் முன்பக்கம் உள்ள செய்தியையும் பின்பக்கம் உள்ள மெய்க்கீர்த்தியையும் பொருத்திப் பார்ப்பதன்வழி சில சுவையான தகவல்கள் புலப்படுகின்றன. இராசராச சோழன் ஈழத்தின்மீது படை யெடுத்தபோது அதில் கலந்துகொண்ட படைத்தலைவன் ஒருவனின் பெயர் கம்பன் மணியன் என்பதாகும். இந்தக் கம்பன் மணியனுக்கும் கவரை மாயிலெட்டி கம்பன் உறவினர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்தமையால்தான் காந்தளூர்ச் சாலைப் போர்பற்றிய தகவலை அவர்கள் தெளிவாகத் தந்துள்ளனரோ, என்று கருத வாய்ப்புள்ளது. அல்லது எண்ணெய் வியாபாரியாக இருந்த கம்பன் குடும்பத்தினர் வியாபார நிமித்தம் காரணமாக எல்லா பகுதிகளுக்கும் சென்று வருகின்றவர்களாக இருந்ததால் அவர்களுக்கு காந்தளூர்ப் போர்பற்றிய செய்தி விரிவாகத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கருதலாம். அல்லது எண்ணெய் வியாபாரத்தில் கம்பன் குடும்பத்தினர் பெரிய வியாபாரிகளாக இருந்ததால் மன்னனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இதனாலேயே இராசராச சோழனின் வெற்றிபற்றியும் அவனுடன் தங்களுக்கு இருந்த நெருக்கத்தைக் காட்டிக்கொள்வதாகவும் இவர்கள் இந்த விரிவான மெய்க்கீர்த்தியைப் பொறித்திருப்பார்களோ என்றும் கருத வாய்ப்புள்ளது. இப்படியான மூன்று நிலைகளில் நடுகல்லின் முன்பக்கம் உள்ள செய்தியை பின்பக்கம் பொறிக்கப்பட்டுள்ள மெய்க்கீர்த்தியுடன் பொருத்திப் பார்க்கலாம்.
கம்பன் என்ற பெயர் எண்ணெய் வணிகர் முதல் படைத்தலைவர் வரை அனைவரிடமும் அன்று புழக்கத்தில் இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. இவ்வாறாகச் செங்கம் ஏரியில் இரண்டாவதாகக் கிடந்த நடுகல் காந்தளூர்ப் போர் பற்றிய முக்கிய குறிப்போடு இராசராசன் வரலாற்றில் முக்கிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்டுகள், எறிஞ்சிபட்ட, அங்குள்ள ஆகிய மூன்று வழக்குச் சொற்கள் இக்கல்வெட்டில் காணப்படுக்கின்றன. இந்தக் குறிப்பு இக்கல்வெட்டை ஆக்கியோர்பற்றி அறிய உதவுவதாக இருக்கும்.
இந்த கம்பனுக்கும் காந்தளூர் சாலை போரில் ஈடுபட்டவரும் உறவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வாணிக குழுவினாராக இருந்தாலும் கவரைகள் போர்களிலும் ஈடுபடும் குழுவாக தமிழகம் மட்டும் அல்லாது தென்னகம் முழுவதும் உள்ளனர். வளஞ்சியரின் பாதுகாப்பு படைவீரர்களும் சோழப்படையோடு தொடர்புடைய வீரராகவும் இருந்துள்ளனர்.
தெளிவற்று இருக்கும் இக்கல்வெட்டின் வாசகம், சண்டையின் போது பெண்களின் புடவைகளை களைந்த எதிரி ஒருவனுடன் போரிட்டு இறந்துப்பட்ட வணிக வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல்லாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்லவர் காலம் முதல் தொறுபூசலின் போதோ, ஊர் பூசலின் போதோ பெண்கள் கவரப்படும்போது, பெண்களைக் காப்பாற்றி சண்டையிட்டு இறக்கும் வீரர்களுக்கு நடுகற்கள் பல எழுதப்பட்டுள்ளன. கன்னடப் பகுதிகளில் இதே போல நிகழ்ந்த போர்களில் மாட்டைக் கவர்ந்து செல்லும் போது ஏற்படும் தொறுபூசலில் போது சண்டையிட்டு இறந்த கவரை வீரனுக்கும், கவரை பொன் ஆசாரி வீரனுக்கு நடுகல் எழுப்பி வழிபட்டுள்ளனர்.
மூலம்: சி. இளங்கோ புதிய பணுவல், நாகசாமி செங்கம் நடுகற்கள்.
#வளஞ்சியர் #கவறை #கவரை #வணிகவரலாறு
www.heritager.in | The Cultural Store #Heritager