சங்க நூல்களில் காணும் செய்திகளிலிருந்து சங்க காலத்தில் வீட்டிலும் நாட்டிலும் பழக்கி வளர்த்த விலங்குகள் எவை யெனக் காணலாம் . சங்க காலத்தில் ஆடு , மாடுகளைப் போற்றி வளர்த்தனர் . எருமைகளை வளர்த்தனர் . இவை தவிர ஒட்டகம் , கழுதை , கோவேறு கழுதை ஆகியவைகளையும் பயன்படுத்தின ரென்று தெரிகின்றது .
அரசர்கள் , வணிகர்கள் முதலியோர் யானை , குதிரைகளைப் பயன்படுத்தி வந்தனர் . வீட்டு விலங்குகளென்று சங்க நூல்களில் நாய் ஒன்று தான் கூறப்பட்டுள்ள
வாணிகப் பொருட்களை ஓரிடத்தினின்று வேறோர் இடத்திற்குப் கொண்டு செல்ல எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினர்.
சங்க இலக்கியத்தில் அத்திரி என்றொரு விலங்கு வழங்குகின்றது . கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின் கோதையும் எல்லாம் அதைவெண் மணலே – நற்றிணை
* கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது
“அகம் , 120 . ” கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது
-அகம் , 350. அகவரும் பாண்டியும் மத்திரியு மாய்மாச் சகடமுந் தண்டார் சிவிகையும் பண்ணி
– பரிபாடல் , 10 : 18 – 17 . தாரணி மார்பனொடு பேரணி யணிந் வான வண்கைய னத்திரி யேற மானமர் நோக்கியும் வைய மேறிக்
சிலப்பதிகாரம் , 8 : 118 – 120 . அத்திரி என்னும் விலங்கைக் குதிரை போன்று பயன் படுத்தியதாகத் தெளிவாகின்றது . நெய்தல் நிலத்தில் கழிகளிலும் சேற்றிலும் மணலிலும்
செல்வதற்கு அத்திரி உதவியதாகத் தோன்றுகின்றது . கணைக்கால் அத்திரியின் குளம்பில் சேயிறா ஒடுங்கினதாகக் கூறிய தைக் காணலாம் . அத்திரியின் மேல் இவர்ந்து செல்வது வழக்கமாக இருந்தது . நுகத்தில் பூட்டித் தேரிழுக்கவும் பயன்படுத்தினர் . நீராடுந் துறைக்கு விழாக்காலத்தில் அத்திரியில் இவர்ந்து பெருவணிகர் கள் செல்வதைச் சிலப்பதிகாரமும் பரிபாடலும் கூறி யுள்ளது . கோவலன் இராசவாகனமாகிய
அத்திரி யேறினான் என்று அடியார்க்குநல்லார் உரை கூறியதி லிருந்து கோவேறு கழுதை என்ற பெயர் வந்த முறை விளங்குகின்றது . அத்திரி என்ற விலங்கு ஆண் கழுதையும் பெண் குதிரையும் இணைந்து பெற்ற கலப்பின விலங்கு . இது பொதி சுமக்க நன்கு உதவும் . சங்க காலத்தில் இவ்விலங்கு கடல் வழியாக இறக்குமதியாகி யிருக்கலாம் .
வெளிநாடுகளிலிருந்து அத்திரி என்னும் கோவேறு கழுதைகளும் வரவழைக்கப்பட்டன. அவையும் ஊர்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
“கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண”
-நக்கீரர், அகம். 350:6.7
கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி கெடுகீர் இருங்கழி பரிமெலிந் தகைஇ
-உலோச்சனார் – அகம். 120:10-11
கழிச்சேறு ஆடிய கனைக்கால் அத்திரி குளம்பிலும் சேயிறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே
-நற்றிணை 273:7,9
சிலப்பதிகாரத்திலும் கோவலன் அத்திரி ஊர்ந்து சென்ற செய்தி தெரியவருகிறது. எனவே அற்றை நாளில் அத்திரி உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டமை புலனாகிறது.
2. பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வணிகச்சாத்து சென்றதையும், இடையில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்திய தையும்,கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார்.
தடவுகிலைப் பலவின் முழுமுதற்கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு
-பெரும்பாண். 77.82
3. கிழக்குப்பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை மூட்டை களாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர்.
அணங்குடை முந்நீர் பரந்த செருவின் உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செய்யாடவர் கிரை பரப் பொறைய கரைப்புறக் கழுதைக் குறைக் குளம் புதைத்த கற்பிறழ இயவு
-அகம். 207: 1-6 சேந்தம்பூதனார்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், 15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
களர் நிலத்திலும், கல் நிலத்திலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அங்கே வில்லேந்திய மறவர் இருப்பர். அவர்கள் வேட்டையாடிய விலங்கின் கறியைச் சுட்டுத் தின்பார்கள். தோள் வலிமை மிக்க கழுதையின் மேல் சுமையை ஏற்றிக்கொண்டு வழிப்போக்கர்கள் வருவர். வாள் வீரர்கள் அவர்களோடு போரிட்டு அவர்களின் தலையை வெட்டி வீழ்த்துவர். அவை புலால் நாற்றம் அடிக்கும். வழிப்போக்கரின் அரிய செல்வ வளங்ககளை மறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து ஊரில் (குறும்பு) உள்ள அனைவரையும் துடி முழக்கி அழைத்து குடும்பத்தார் எண்ணிக்கையில் பங்கிட்டுத் தருவர்.
கோவேறுகழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்தது என்பதால் இரண்டின் குணங்களையும் கொண்டிருக்கும். எனவே இதன் விலங்கியல் பெயர் ஈகுஸ் அசினஸ் x ஈகுஸ் கபாலஸ் ( Equus asinus x Equus caballus ) ஆகும். கழுதைகள் பொதிசுமக்கும் திறன் கொண்டவை; ஆனால் கழுதைகளால் வேகமாக ஓடவோ நெடுந்தூரம் ஓடவோ இயலாது. குதிரைகள் வேகமாக நெடுந்தூரம் ஓடும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பொதிசுமக்க இயலாது. குதிரை மற்றும் கழுதைகளின் கலப்பினமான கோவேறு கழுதைகளால் பொதிசுமக்கவும் முடியும்; நன்கு வேகமாக ஓடவும் முடியும். சங்க இலக்கியங்களில் அத்திரி என்றும் வேசரி என்றும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
கடற்கரை மணற்பரப்பிலும், கடலின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் சேற்றுநிலங்களிலும் நீரிலும் கூட அத்திரிகள் பாய்ந்தோட வல்லவை. அதனால் தலைவன் தலைவியைச் சந்திக்க அத்திரி பூட்டிய தேரில் வந்து செல்வது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கொடு நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது …. – அகம். 350
கழிமுகப் பகுதியில் இருந்த சேற்றின்மேல் ஓடிவந்ததால், அத்திரியின் உடலெல்லாம் சேறுபூசி இருந்ததாகவும் அதன் குளம்புகளின் கீழே செந்நிற இறால்கள் சிக்கி இருந்ததாகவும் கூறும் பாடல்வரிகள் கீழே:
கழி சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பினும் சேஇறா ஒடுங்கின – நற். 278
கழிமுகப் பகுதியில் இரவிலே தலைவன் அத்திரியின்மீது ஏறி வரும்போது கடற்கழி நீரில் இருந்த சுறாக்கள் அத்திரியின் காலைக் கடித்துப் புண் உண்டாகியதால் அது தளர்வாகச் சென்றதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:
கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம். 120
வையை ஆற்றில் புதுப்புனல் வந்தபோது புனலாட்டுத் திருவிழாவிற்கு ஆடவரும் பெண்டிரும் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் குதிரைகளும் யானைகளும் கோவேறுகழுதைகளும் மக்களையும் பொருட்களையும் சுமந்துகொண்டு ஆற்றின்கரையே இடிந்துவிழுவதைப் போலச் செல்கின்றன. இதைப்பற்றிக் கூறும் பரிபாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி. 22
– சங்க இலக்கியம்-சில பார்வைகள்
டாக்டர் சி. பாலசுப்ரமணியன்