மதுரையை நாயக்கர்களுக்கு முன்பாக மதுரையரை ஆண்ட நாயக்கர்கள்

மதுரை நாயக்கர் வம்சாவளிக்கு முன்பாக மதுரையை ஆட்சி செய்த விஜயநகர நாயக்கர்கள் யார்?

“மதுரையில் இந்துக் குடிகளுக்குப் பலவித கஷ்டநிஷ்ரேங்கள் சம்பவிக்க , அக்கஷ்ட நிஷ்டூரங்களை நீக்கி , இந்து ராஜாங்கத்தை ஸ்தாபிக்கக்கருதி விஜயநகர புக்கராயலு 1350-1379 u பாண்டிய நாடு நாதனற்றுக் கெட்டலைவதைக் கண்டு , கெம்பன்ன உடையா ரைப் பாண்டியநாட்டிற்கு அதிபதியாக அனுப்ப , அவர் 1572 வரையிலும் , அவர் குமாரர் என்பன்ன உடையாரும், மைத்துனர் பிரகாச உடைரும், 1404 வரையீ லும் ஆண்டு சந்ததியற்றுப் போனதனால் , புக்கராயலுடைய பந்துக்களில் பராக்கிரமசாலிகளான சில நாயடுகார்களை பிரதிநிதிகளாக அனுப்பி ஆண்டுவரச் செய்ததாக ஒருசாசனத்தில் தெரிவிக்கப் பெற்றிருக்கிறது . அப்படி அனுப்பப்பெற்ற நாயுடுகார்களாவன :

(1) இலட்சுமண நாயடு , (2) முத்தன்ன நாயடு , இவ்விருவர்களும் 1404 – ம் வருஷமுதல் , 1451 வரையில் ஆண்டு வருகையில், அப்பாண்டிய நாட்டிற்குப் பாத்தியஸ்தர்களாகச் சிலவாரிசுகளைக் கண்டுபிடித்தார்கள் . அவர்களாவன:

சுந்தரத்தாள் , மஹாவிசுவநாதராயர் , காளியாசோமனார் , அஞ்சாதபெருமாள், முத்துராஜ திருமலை மஹாவிசுவநாதராயர் என்பவர்களே . அவர்களுடைய பெயர்களையும் , பாத்தியதைகளையும் பற்றிப் புக்கராயலுக்கு அறிவிக்க , அவர் உடனே பாண்டிய நாட்டை அந்த வார்சுகளிடம் கொடுத்துவிட்டு வரும்படி உத்தரவு கொடுக்க, அவரும் அப்படியே செய்ய , அந்தப் பாண்டியநாட்டு வார்சுகளும் 1451 முதல் 1495 வரையில் ஆகிய 48 ஆண்டுகள் ஆண்டார்கள். அப்படி ஆண்டவர்களை வைப்பாட்டிப் பிள்ளைகளென்று குடிகள் கலகம் செய்து மறுபடியும் விஜயநகரத்துக்கு முறையிட்டு அறிவிக்க, கிருஷ்ணதேவராயலு 1445-1500 ஒரு நரசநாயடுவையும் , 1500-1515 கென்னமநாயடுவையும் , 15191-1519 நரசநாயடுவையும் , பிரதிநிதிகளாக அனுப்பி ஆண்டுவரச்செய்ததில் , அவர்கள் சந்ததிகளில் .

குருகுருதிம்ம நாயடு , 1519-1524 ,
காட்டியம் காமய நாயடு , 1524–1526 ,
சின்னப்ப நாயடு , 1526–1530 ,
ஜங்கம நாயடு , 1530-1535 ,
விசுவநாத நாயடு , 1535-1544 ,
வாதப்ப நாயடு , 1544-1545 ,
தொம்பச்சி நாயம் , 1545-1546 ,
விசுவநாத நாயடு , 1546- 1547 ,
விட்டல நாயடு , 1547-1558 ,

வருஷங்கள் ஆண்டபிறகு , பாண்டிய நாட்டிற்குத் தக்க பாத்தியஸ்தன் என ஒரு சந்திரசேகர பாண்டியன் கிளம்பி வந்து , தனது பாத்தியதையை ஸ்தாபித்துக் காட்டியதனால் , அந்தச் சந்திரசேகர பாண்டியனுக்குப் பட்டம் கட்டி ஆண்டுவரச் செய்தார்கள் .

அப்போது தஞ்சையிலிருந்து வீரசேகர சோழன் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மீது படையெடுத்துவந்து தாக்கிப் பாண்டிய நாட்டைப் பிடுங்கிக்கொள்ள, அப்பாண்டியன் விஜயநகர ஸமஸ்தானத்துக்குப் போய் முறையிட்டம் , கிருஷ்ணதேவ ராயலு தமது பிரதிநிதியாகிய நாகமநாயடுகாரைத் தக்க தண்டுகளாதிகளோடு போய் வீரசேகர சோழனைத் தாக்கித் துரத்தி , அவனிடமிருந்த பாண்டிய நாட்டைப் பிடுங்கிப் பாண்டியனிடம் கொடுத்து வரும்படி கட்டளை கொடுத் தனுப்ப , அந்த நாகமநாயடும் அப்படியே வந்து சோழ னைத் தாக்கித் துரத்தி , அவனிடமிருந்த பாண்டிய நாட் டைப் பிடுங்கி , அதன் வார்சு தாரனாகிய பாண்டியனிடம் கொடுக்காமல், தன் சொந்தமாக்கிக்கொள்ள, இது சங்கதி விஜயநகர ஸமஸ்தானத்தாருக்குத் தெரிய , விஜயநகரத் தார் விசனப்பட்டு, இப்படி இராஜத் துரோகம் செய்த நாகம் நாயுடுவைக் கொன்று அவன் அக்கிரமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பாண்டியாட்டைப் பிடுங்கி, சரியான வாரிசாகிய சந்திரசேகர பாண்டியனிடம் கொடுத்துவரும் படி நாகமநாயடுவின் குமாரராகிய விசுவநாதநாயடுகாரை அனுப்ப, அவ்விசுவநாதநாயடும் வந்து , தன் தகப்பன் என்ற முறையையும் கருதாமல், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தன் தகப்பனான நாகமநாயடைப் பிடித்துச் சிறையில் வைத்தும் , அந்த நாகமநாயடு பிடித்து அக்கிரமமாக வைத்துக்கொண்டிருந்த பாண்டிய நாட்டைப் பெற்று அதன் வார்சாகிய சந்திரசேகரபாண்டியனிடம் கொடுத்தும், அப்பாண்டியனுக்கு முடி சூட்டி, அச்சங்கதிகளை விஜயநகரராயலுக்கு அறிவித்தனர்.

அந்த ராயலும் விசுவநாத காநாயடுகாருடைய சத்தியத்தைக் கண்டு வியந்து கொண்டாடி, அவரை அப்பாண்டியநாட்டில் சிலவருடங்களிருந்து, அப்பாண்டியனுக்கு உதவி செய்துவரும்படி செய்ய , அந்த விசுவநாத நாயடும் அப்படியே செய்து வருகையில், அச்சந்திரசேகரபாண்டியனும் அவன் குமாரனும் சில வரு ஷங்களாண்டு சந்ததியற்று இறந்து போகவே , பாண்டியநாட்டிற்குத் தகுந்த வார்சுகளற்றுப்போன சங்கதியை விஜய ககரத்தாருக்குத் தெரிவிக்க , அந்த விஜயநகர ஸமஸ்தானத் தார் , விசுவநாத நாயடுகாருடைய சுத்தவீரத்துவம் , சத்தியம் , சுவாமிபக்தி , தருமகுணாதிசயங்களைக் கேட்டும் , பாண்டிய நாட்டை அந்த விசுவநாயடுகாரே ஆளத்தக்க வல்லவர் என்று பாண்டிய நாட்டுக் குடிகளுடைய வேண்டு கோளைக் கருதியும் , விஜயநகர ஸமஸ்தானத்திலிருந்து தேலப்பிராம்மணர்களிடம் கங்கை தீர்த்தம் , இராஜகில்லத்து அல்லது கட்டளை, கத்தி கட்டாரி, ஆடை ஆபரணங்களைக் கொடுத்தனுப்பி , பாண்டிய நாட்டுக்குப் பிரதான பட்டன மாகிய மதுரையில் கி.பி 1559 – விசுவநாதநாயடுகாருக்குப் பாண்டிய சக்கரவர்த்தி என்ற மகுடாபிஷேகம் செய்வித்துப் பட்டம் கட்டிவைத்தார்கள் .

அந்த விசுவநாத நாயடு காரும் அவருடைய பதினாறு சந்ததிகளும், பதினாறு பேறு களைப் பெற்று நாயடுகாரு ஸமஸ்தானத்தார் என்ற பெய ரால் , சுமார் இருநூறு வருஷகாலம் இந்து தருமசாஸ்திரப் படி ஆண்டார்கள் .

தக்ஷண இந்தியா சரித்திரம்
by பகடால நரசிம்மலுநாயுடு