கோவேறு கழுதையும் வணிகச் சாத்தும்

வாணிகப் பொருட்களை ஓரிடத்தினின்று வேறோர் இடத்திற்குப் கொண்டு செல்ல எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினர்.

வெளிநாடுகளிலிருந்து அத்திரி என்னும் கோவேறு கழுதைகளும் வரவழைக்கப்பட்டன. அவையும் ஊர்தியாக மட்டுமே பயன்படுடு தப்பட்டன.

கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண

-நக்கீரர், அகம். 350:6.7

கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி கெடுகீர் இருங்கழி பரிமெலிந் தகைஇ

-உலோச்சனார் – அகம். 120:10-11

கழிச்சேறு ஆடிய கனைக்கால் அத்திரி குளம்பிலும் சேயிறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே

-நற்றிணை 273:7,9

சிலப்பதிகாரத்திலும் கோவலன் அத்திரி ஊர்ந்து சென்ற செய்தி தெரியவருகிறது. எனவே அற்றை நாளில் அத்திரி உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டமை புலனாகிறது.

2. பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வணிகச்சாத்து சென்றதையும், இடையில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்திய தையும்,கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார்.

தடவுகிலைப் பலவின் முழுமுதற்கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு

-பெரும்பாண். 77.82

3. கிழக்குப்பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை மூட்டை களாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர்.

அணங்குடை முந்நீர் பரந்த செருவின் உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செய்யாடவர் கிரை பரப் பொறைய கரைப்புறக் கழுதைக் குறைக் குளம் புதைத்த கற்பிறழ இயவு

-அகம். 207: 1-6 சேந்தம்பூதனார்

– சங்க இலக்கியம்-சில பார்வைகள்

Leave a Reply