கவரா மக்கள் கவறைகள் வழிபடும் கவரேஸ்வரர்

ஐம்பொழில் நகரம் என அழைக்கப்பட்ட அய்யவழிபுரம் (Ayyavalipura) ஐஹோலேவை (Aihole) தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஐந்நூற்றுவர் வணிகக் குழுவில் பல பிரிவினர் இருந்தனர். இவர்கள் வீர வணிக குழுவாக இணைந்து வணிகப் பாதுகாப்பு அளித்து தென்னகம், தெற்காசியாவில் செயல்பட்டு வந்த வீர வளஞ்சிய சமயத்தை (வணிகக் குழுவினை) பாதுகாத்தனர். இதனால் இவர்கள் வீர வளஞ்சியர் அதாவது வீர வணிகர் எனப்பட்டனர். இதன் தலைவர்கள் அய்யாவழிபுரதீஸ்வரர் (Ayyavalipuravaradeeshwara) என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. இவ்வணிகப் பிரிவில் நகரத்தார், கண்டலி, கவறைகள் இருந்துள்ளனர். இவர் தத்தம் பிரிவின் பெயரில் சிவ (மகேஸ்வரர்) ஆலயங்கள் எழுப்பி வழிபட்டுள்ளனர். 

குறிப்பாக, கன்னடப் பகுதிகளில் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. வணிகக் குழுவில் இருக்கும், “கண்டலி” எனும் வீர வணிகப் பிரிவினர் கண்டலேஸ்வரர் என்றும், “நகரத்தா” அல்லது “நகரத்தார்” “நகரேஸ்வரர்” என்ற பெயரிலும், கவரே அல்லது கவறைகள் கவரேஸ்வரர் என்ற பெயரிலும் ஆலயங்களை எழுப்பியுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மாண்டிய மாவட்டம் தனகுரு பகுதியில் ஊருக்கு வெளியே ஐந்நூற்றுவர் எழுப்பிய, கவரேஸ்வரர் ஆலயம் உள்ளது. பதினோறாம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டுகளை கொண்டுள்ள இக்கோவில் மூலவரின் பெயரை “வீர சோழ கவரேஸ்வர உடையார்” Veerachola Kavareshwara Udeyar’ எனக் குறிப்பிடுகிறது.

இதனை கன்னட நாட்டில் செயல்பட்ட, வீர வளஞ்சிய சமயத்தைக் காக்கும் ஐநூற்றுவர் வணிகக் குழுவில் இருந்த சோழ நாட்டைச் சேர்ந்த கவறை வணிகர்கள் எழுப்பியுள்ளனர் என்பதை அறியலாம். மேலும் கவரைகள் வீரபத்திரர் வழிபாட்டினை கொண்டவர்கள். இங்குள்ள மண்டபம் காலபைரவர் மண்டபம் எனப்பட்டுள்ளது.

சோழ நாட்டு வணிகர்களின் நாடுகள் கடந்து செய்யப்பட வணிகப் பெருமையைக் கூறும் வரலாற்று அடையாளம், இன்று மோசமான நிலையில் உள்ளது. வீர சைவ சமஸ்தான மடம் இங்கு உருவாக்கப்பட்டதாக அறியமுடிகிறது. கவரே பனாஜிக என பின்னாளில் அழைக்கப்பட்ட பலர் இன்று லின்காயத்துக்களாக வீர சைவ வழியினை கன்னட நாட்டில் பின்பற்றி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் பல இடங்களில் கவரேஸ்வரர், கௌரீஸ்வரர் என்ற பெயரில் பல சிவாலயங்களை இவர்கள் அமைத்துள்ளனர்.

Google Photos

Dhanaguru (4076): This is situated 17 kms east to the taluk centre Malavalli and referred in records as ‘Da(ha)naguru, Dhannuru situated in the ancient Badagarenadu. One Tamil and two Kannada (Ganga and Hoysala) inscriptions are reported from this place. The Tamil record of about 11th century in the Gowrishwara temple outside the village, eulogizes the merchant guild of Ayyavole-500, refer to the construction of Mahadeva temple caused by them at Dhanaguru, naming the deity as ‘Veerachola Kavareshwara Udeyar’ as well as a Bhairava mantapa and the grant given to it. The present Gavareshwara (Gowreshwara) temple is the ancient Kavarai Ishwara temple referred in the record. The name is because the Gavare’s (merchants) caused the construction. The temple has garbhagriha, antarala, navaranga with a southern entrance and mukhamantapa. To the left of the temple is a mantapa of Kalabhairava (referred in records). The temple has a Shivalinga in its garbhagriha, three petalled lotus in the ceiling, poornakumbhas in the five band decorated doorframe. The doorframe of the antarala is decorated with three bands. The navaranga has sculptures of Ganapa and Saptamatrikas.

The central ceiling is flat with lotus decorations. On the pillars in the mukhamantapa of the side entrance to the navaranga, has bas-relief’s of Bedara Kannappa, Kalingamardana and Nataraja holding a Veena, Kamadhenu and a devotee. The simple walls of the temple have decorated pillars. ‘Veerashaiva Samsthana Matha’ a centre belonging to the Balehonnuru Rambhapuri Peetha lineage has been established here. The fifth among the Acharyas of this Peetha was Shadaksharadeva famous as ‘Mummadi Shadakshara Deshikendra Shivacharyaswamy’ and a great Kannada-Sanskrit poet of about 1629-1700 A.D.

He has written more than 18 works such as Kavikarnarasayana in Sanskrit, Rajashekhara Vilasa, Shabarashankara Vilasa and Basavaraja Vijaya in Kannada in Champu style. He is said to have resided in the Gavimatha at the neighboring Halasalli village while writing his works. He was the family teacher to a certain Amritamba of Arasu lineage, the mother of Chikkadevraja Odeya and was the last writer in the style of Kannada Champu writings. His gadduge is now located at Yelanduru. Among the fifteen Shivacharyas, the gadduge of ‘Adya Guru Uddana Shivayogi’ including the ten gadduges of the Shivacharyas, in the lineage of the teachers of this Peetha were established in this village. The archival materials found in the small cave in front of the gadduge of Uddana Shivayogi are preserved in the cave itself. The ruined stone structure to the right of the Matha is the remains of an ancient matha and requires preservation. There are other temples such as Upparige Basappa, Veerabhadra, Ganesha, Anjaneya. Hucchamma as well as recently built beautiful Masjid and a Dargahs.

 

ಗೌರೀಶ್ವರ ದೇವಸ್ಥಾನ – Google Maps