கவறை செஞ்சி நாயக்கர்களும் ஜைனர்களும் – செஞ்சி நாயக்கரின் பூர்வீகம் எது?

“நாங்கெல்லாம் அரசர் பொண்ணு கேட்டே தராமால், ஊரை விட்டு காலி செய்துவிட்டு வந்துவிட்டோம். பொதுவாக இடம்பெயர்ந்த செட்டியார் (கவரை செட்டியார் உட்பட) மக்கள் தாங்கள் ஏன் இடம்பெயர்ந்தோம் எனக் கூறும் கதைகள் இவைகளைப் போலத்தான் இருக்கும்.”

சங்க இலக்கிய காலம் தொட்டே சோழ, பாண்டிய, நாயக்க அரசுகள் வரை இது நீடித்துள்ளது. தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களுள் செஞ்சி நாயக்கர்கள் சிறப்பிடம் வாய்ந்தவர்கள். ஐரோப்பியர் காலத்தில் நடுநாட்டு வணிகம் அவர்களிடம் நேரடியாகவே இருந்துள்ளது. செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்களின் உறவினர்கள் கடலூரில் ஏற்றுமதி வணிகம் செய்து இருந்துள்ளனர். மற்ற வணிகக் குல நாயக்கர்களின் வணிகத் தொழில் பற்றி அவ்வளவாக தெரியவில்லை.

ஸ்ரீநிவாச்சாரியின் கூற்றுப்படி செஞ்சி மன்னன் வேங்கடபதி நாயக்கன், 1570-1600 வாக்கில் செஞ்சியை ஆண்டிருக்கலாம். நமக்கு கிடைத்த கிரந்த சுவடிகளின் படி, அந்த நாயக்க மன்னனின் ஆட்சியின் போது பிராமணரிடம் சென்று அவர் தனக்கு பிடித்த பெண்ணை மணம் புரிய கேட்டுள்ளனர். அவர் கவறை குல வணிக மரபு என்பதால் அவருக்கு பிராமணர்கள் பெண் தர மறுத்துவிட்டனர். ஆனால் அதனை நேரடியாகக் கூறாமல், நீங்கள் ஜைனர்களிடம் பெண் கேளுங்கள், அவர்கள் பெண் கொடுத்தால் நாங்கள் பெண் கொடுக்கிறோம் என்றனர்.

வேங்கடப்ப நாயக்கரும் ஜைனர்களிடம் சென்று பெண் கேட்கிறார். அவர்கள் நேரடியாகவே பெண் தர மறுத்துவிட்டனர். எனவே அதன் சாமியார்களை சிரைச்சேதம் செயவிடுகின்றார்.உடையார் குல ஜைன மக்களும் பெண் தராமலும் ஊரை காலி செய்துவிடுகின்றனர். இந்த ஆவணத்தில் ஜைனர்களின் எதிரி என்று காஞ்சிபுரம் தாத்தாச்சாரி ஒருவர் குறிப்பிடப்படுகிறார். இந்த ஆவணத்தின் படி செஞ்சி நாயக்கரின் பூர்வீகம் விருத்தாசலம் எனக் கூறப்படுகிறது. 

According to this manuscript Origin of Gingee Nayaks is Virudhachalam. 

R. No. 1548 .

ஜைனமார்க்க விரோதி மன்னன் வரலாறு ( வெங்கடபதி

நாயகன் வரலாறு ) . JAINAMARGAVIRUDHI MANNAN VARALARU (VENKATAPATI NAYAKAN VARALARU) . Foll . 2 ( b ) -5 ( a ) . Extent , 50 granthas .

Complete. Beginning :

ஜைனமார்க்கத்தில் விரோதித்து ராஜரீகம் பண்ணினவன் செய்த வயணம் .

சகாப்தத்தில் தசள ( 1400 ) வருஷம் சென்ற விடத்தில் விருத்தாசலம் துக்கடியில் சேர்ந்த திருவதி துக்கடியில் வேவாகொல்லை வெங்கடம்மா பேட்டையிலிருக்கும் கவறை வெங்கடபதி நாயகன் என்கிறவன் செஞ்சியில் அதிகாரஞ் செய்யுங் காலத்தில் பிராமணர்களை உங்கள் ஜாதியில் ஒரு பெண் கொடுக்கவேண்டுமென்று கேட்டான்

End :

வீரஸேனாசார்யர் கேட்டுக் காஞ்சீபுரத்துக்குப்போய் தாதாசார்யருடனே வாதம் செய்து அவனைத் தோற்பித்து அந்த ஸ்தம்பத்தையும் கீழே தள்ளிப்போட்டு அனுப்பிவிட்டு ஜைனர்களுக்கும் தெராவவொ செய்து *கோண்டு உப்பு வேலூர் வந்து சேர்ந்தார் . சேர்ந்த மூன்றா மாதம் சரீரத்திற்கு உபத்திரவமாய் வியோகமாய்விட்டார் . அன்று முதல் இன்று வரைக்கும் அவரால் உத்தாரணம் பண்ணப்பட்ட ஜைன மார்க்கம் விளங்கி வருகிறது . அன்று முதல் உடையார் அவர்களுக்கு பொஓ மாய் ஜைன மார்க்கத்தில் முதல் மரியாதை சமகாவ்- @ o மரியாதி நடந்து வருகிறது .

ஸ்ரீ

( கு.-பு. ) –

இது டிஸ்கிருப்டிவ் காடலாக்கு 2973 – ஆம் நம்பர் பிரதியைப் பெயர்த்து எழுதிவைக்கப்பெற்றதாகும் . திண்டிவனத்துக்கருகா மயிலுள்ள செஞ் சிக்கோட்டையில் அதிகாரம் வகித்து வந்த கவறை வெங்கடபதினாயகன் என்பவன் ஜைனப்பெண்ணொருத்தியை மணக்க விரும்பி அதனால் அவமானமடைந்து அம்மதத்தவர்களைச் சிரச்சேதம் செய்யும்படி உத்திரவு செய்ய அதிலிருந்து தப்பியவருள் ஒருவனான தாயனூர் காங்கேய உடை யாரென்பவன்மேல் காட்டிலிருந்து வீரசேனாசார்யர் என்பவரை அழைப் பித்துத் தங்கள் ஜைனமத விரோதியாயிருந்த காஞ்சிபுரம் தாதாசார்ய ரென்பவரை வாதில் வெல்லச் செய்து தம்மதத்தவர்களுக்கு மந்தி ரோபதேசமும் செய்வித்து ஜைனமதத்தை உத்தாரணம் செய்ததான இச்செய்தியே இந்நூலில் கூறப்படுகிறது . இந்நூலுக்குக் “கவறை வெங்கடபதி நாயகன் வரலாறு” எனப் பெயர் கொடுக்கலாமெனத் தோற்று கிறது . முற்றுமுள்ளது 

மூலம்: ஜைனமார்க்க விரோதி மன்னன் வரலாறு ( வெங்கடபதி நாயகன் வரலாறு ). A Triennial Catalogue of Tamil Manuscripts : Collected during the years 1943-44 to 1946-47 for the Government Oriental Manuscripts Library, Madras