“வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற பரந்து பட்ட எல்லைகளைக் கொண்ட தமிழ் மண்ணில் எத்தனையோ வகையான இனக்குழுக்கள் இருக்கின்றன. அதில் நாயக்கர் இனம் என்பது பேசப்படக்கூடிய ஒன்றாக விளங்குகின்றது. தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர்கள்
சங்க காலத்தில் இருநது இவர்கள் தமிழகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்தனர் வடுகர் இனமாக சங்க காலத்தில் சுட்டப்பெற்ற இவர்கள் தங்களுக்கென்று பல்வேறு வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்றி வந்தனர். தொழில் சார்ந்த அடிப்படையில் பல பகுதிகளுக்கு இவர்கள் பிரிந்து சென்றனர்.
இனக்குழுக்களில் வடுகர் இன தோற்றம் வரலாறும் இன்றைய மனிதர்களின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் “இனம்” என்பதன் வரலாற்றை ஆராய வேண்டுமானால் பலதரப்பட்ட கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. மொழிபெருதேயத்தார் என்று இலக்யெங்களில் மொழி சார்ந்த இன மக்களைக்கூறுவர். ஒருவர் இனம் என்பது பழைய சமூகத்தார் மொழியை அடிப்படையாகக் கொண்டு பகுத்ததை கூறுகின்றது. ஆனால், இன்று பெருவாரியான ஆய்வுகள் சாதிய அடிப்படையிலான ஆய்வுகளை இனத்தின் குழுக்களாக பிரித்து பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. இனம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரவினால் ஆய்வுக்கு உரிய பொறுமையாக பார்க்கப்பட்டது. சங்ககால மக்களின் வாழ்வியலின் மூலம் இனம் சார்ந்த கோட்பாடுகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டது. தமிழின் தொன்மையை இலக்கிய வளங்கள் எடுத்துரைப்பது போல இனத்தின் பெருமையை இலக்கியங்களோடு பண்பாடும் கலாச்சாரமும் எடுத்துரைக்கின்றன.
இனக்குழுக்களின் வடுகர் சமூகம்பற்றிவும் , வடுகர் யார்? என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. வேங்கடமலையின் தெலுங்கு மொழி பேசும் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது குறுந்தொகை.
“குல்லை கண்ணி வடுகர் முனையிது வல் வேல் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் ” (குறு-11)
இன்று கஞ்சம் கொள்ளையை மாலையாக அணிந்தவர்கள் என்றும், போதகர் என்றும், வேறு மொழி பேசும் நாட்டை உடையவர்கள் என்றும் கூறுகின்றது. அதுபோல,
“வடுகர் முன்னுற மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண் உற ஓங்கிய பனி இருங் குன்றத்து” (அகம் 281)
என்று கூறியதோடு மாறுபட்ட வடுகர் என்ற கருத்தை எடுத்துரைக்கின்றது. மோரியர் தென்திசை நாடுகளை கைப்பற்ற எண்ணி தான் செல்லும் திசை களுக்கெல்லாம் பாதை அமைத்து கடந்து சென்றனர். வடுகர் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தனர் என்ற கருத்தை,
“செம்பு உறழ் புரிசை பாழி நூறி வம்ப வடுகர்” என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் எடுத்துரைககின்றன. வடுகர்கள் பற்றி,
“தொன்றுதொட்டு அருவா அருவா வடதலை நாடுகள் தமிழகத்தைச் சேர்ந்தவையாக இருந்துவநீதன.(தெலுங்கரும், கன்னட ரும்) தமிழரை (அரவர் அருவற் அதாவது அருவாநாட்டார் என்றும் தமிழகம் என்றும் தொன்று தொட்டு இன்று வரையும் கூறி வருகின்ற வழக்காறு அருவா ,அருவா வடதலை நாடுகள் தமிழகத்தில் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன. (மயிலை சீனி வேங்கடசாமி -49)
என்று மயிலை சீனி வேங்கடசாமி கூறுகின்றார் ஆக, வேங்கட மலைக்கு வடக்கே வாழ்நதவர்கள் தெலுங்கு மொழி பேசும் வடுகர் என்பது திண்ணம். இவர்களின் தொடக்க கால வாழ்வியல் முறைகள் பழக்க வழக்கங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவு, உடை, திருமணம், சடங்குகள் தொழில் என்ற நிலைகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இதுபோன்றே இன்றும் காணப்படுகின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும் வடுகர் நாயக்கர் என்று வழக்குச் சொல்லில் நாயுடு என்று வழங்கப்படுகிறது.
இனம் அல்லது இனக்குழு என்பது பற்றி ஆராயப் புகுமுன் அந்த குறிப்பிட்ட இனத்தின் தோற்றம் தாயகம், மொழி, பேச்சு வழக்கு, மதம், சடங்கு, உணவுவகைகள், ஆடைகள், உடல், தோற்றம் இவற்றை ஆராய வேண்டும். இதில், வடுகர் இனம் சார்ந்த குறிப்பிட்ட தரவுகளை ஆராய வேண்டும் என்பதை மட்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது
கவரா நாயுடு மக்கள் பற்றிய செய்திகள்
பலிஜா வின் மற்றொரு பெயர்தான் கவரா என்றே சிலருக்கு தெரியவில்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கவரா மக்களை ஆந்திர மக்கள் பலிஜா நாயுடு என்றே அழைக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் நாயக்கர் பட்டத்தை மட்டும் பயன்படுத்திய இவர்கள் போகப்போக நாயுடு பட்டதை பயன்படுத்தத் தொடங்கினர். கிராமங்களில் நாயக்கர் என்ற பெயர்தான் இவர்களுக்கு நீடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கவரா பலிஜா மக்கள் முழுக்க முழுக்க வைணவ முறையை பின்பற்றுபவர்கள் நாமம் இட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்கள்… இப்போது இந்த பழக்கம் குறைந்து விட்டது. கவரா மக்கள் மூன்றுவகையாக இருந்துள்ளனர் [.. நிர்வாகம் (அரச குடும்பம் ) 2..(விவசாய குடும்பம் ) 3..(வியாபார குடும்பம்) இதற்கு ஏற்றார் போல் தங்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் ராயல் என்ற பெயரை முதலில் பயன்படுத்திய மக்கள் கவரா பலிஜா மக்கள்தான் இதை கிழக்கிந்திய கம்பெனி தடையும் செய்திருக்கிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை போல் இவர்களும் நிர்வாகம் மற்றும் வியாபாரம் செய்துள்ளனர்.
ஆரம்பகாலத்தில் சைவ உணவுகளை மட்டுமே ஏற்றுகொண்ட இவர்கள் 300 வருடங்களாக தான் அசைவ உணவுகளுக்கு மாறி உள்ளனர். இப்போதும் சனிக்கிழமைகளில் அதிக வீடுகளில் அசைவம்உண்பதில்லை.ஒரு வேளை உணவு மட்டும் உண்ணும் வழக்கம் கொண்டுள்ளனர்.
திருமணமான பெண்கள் இரட்டை பொட்டு தாலி,குண்டு மற்றும் கருகுமணி அணிவார்கள்.
பெண்கள் நெற்றியில் மருதாணியை வைக்க கூடாது அப்படி வைத்தால் பெரிய பாவம் என்று சொல்வார்கள் அதற்கு ஒரு கதையும் இருக்றெது. (கவுரி அம்மன் கதை) 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆண்களின் மார்பில் அரச முத்திரையை சூடு வைத்து எரிக்கும் வழக்கம் இருந்தது. இறந்தால் புதைக்கும் வழக்கம் இவர்களுக்கு இல்லை.
1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பெண்கள் மேலாடை அணியும் வழக்கம் இருந்துள்ளது.இறக்கும் தருவாயிலும் கவுரவத்தை விட்டுகொடுக்கமாட்டான் இந்த கவரா நாயக்கன் என்ற பழமொழி இவர்களுக்கு உண்டு.
மாமிசம்- மது அருநதும் கவரபலிஜா நாயக்கன் அவனுடைய பரம்பரை குணம் மற்றும் உடற்கூறினை இழக்கிறான் என்பது சொல்.. ஒரு பலிஜா ஆண் அநத காலத்தில் குறைந்தது மூன்று பெண்களை யாவது திருமணம் செய்திருப்பார் இப்போது இந்த பழக்கம் இல்லை.
பிராமணர்கள் சொல் பேச்சு -கேட்கும் பழக்கம் உள்ளவர்கள். பழக்கவழக்கங்கள் பிராமணர்களை போன்றே இருக்கும். அநத காலத்தில் பூணூல் அணியும் பழக்கம் இருந்துள்ளது. அதிரசம் என்ற உணவு பொருளை அறிமுக படுத்தியவர்கள் இந்த கவரா மக்கள் தான்…கவுரி நோன்பில் முக்கிய பண்டம் அதிரசம் தான்.
கோவத்தை உடனே காட்டாத மக்கள் தங்கள் கோவத்தை காட்ட சரியான தருணத்தை எதிர் நோக்கும் குணம் உள்ளவர்கள். பெருந்தன்மை மிக்கவர்கள் தங்களின் பெயரை பயன்படுத்த யோசிப்பவர்கள். தன்னுடைய பெயரை மற்றவர் பயன்படுத்தினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்.
சோழன் தென்னாட்டில் புகுந்து குறும்பு செய்த பரதவரின் வன்மயினை சாய்த்து, வடநாட்டிலிருந்து வநத வடுகரின் வாளையும் அடக்கினான். (புறம். 378:2),
என ஊன்பொதி பசுங்குடையார் குறிப்பிடுகின்றார்
”தென்பரதவர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டிய”
இங்கு “வடுகர்” என்றாலே வடக்கிலிருந்து வந்தவர்கள் எனும்போது, “வடவடுகர்” என்றபோது, “வடவடுகர்”, “தென்வடுகர்” என்ற பிரிவுகள் இருந்தனவோ எனத் தோன்றுகிறது. “தென்பரதவர்”, “வடவடுகர்” இருவரையும் அடக்கியதால், சோழன் இருவருக்கும் இடையில் (பூகோளரீதியாக) இருந்திருக்க வேண்டும். என்னெனில் “வடவாரியர்” எனகுறிக்கும் போது, “வடவாரியர்”, “தென்னாரியர்” எனக்கொள்ளல் வேண்டும். மேலும் கோசர் நந்தர் மோரியர் தொண்டையர் மற்றும் வடுகர் வடக்கிலிருந்து வந்தவர்கள், வடதிசையைச் சார்ந்தவர் என்றுக் குறிப்பிடப்படுகிறார்கள். எனவே இவர்கள் அப்போதைய தமிழகத்திற்கு வடக்கில் இருந்திருக்கலாம், வாழ்நதிருக்கலாம்.
வேங்கட மலையின் வடக்கே உள்ளவர்கள். நாய்களை வைத்து வேட்டையாடியவர்கள். கற்காத பெரிதாக பேசும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் எனப்பொருள்பட “கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்: (அகநானூறு 107) என்று காவிரிப்பூம்பட்டினதீது காரிக் கண்ணனார் குறித்துள்ளார்.
வெள்ளை கொழுப்புச் சோற்றினை உண்ணும் வடுகரின் நாட்டில் எனப்பொருள்பட “வால் நிணம் புகவின் வடுகர் தேஎதீது’ (அகநானூறு 213) என எழுதியுள்ளார் தாயங்கண்ணனார். கன்றுகளை உடைய பெரிய
பசுக்கூட்டங்களை ஊர் மன்றம் நிறையுமாறுக் கவர்ந்து வரும் ஒப்பில்லாத வலிமையான தோளையுடைய வடுகரின் தலைவனான பெரும்புகழையுடைய எருமை என்பான் எனப்பொருள்பட, கன்றுடைப் பெருநிரை மன்று நிறை தரூஉம் நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேர் இசை எருமை’ (அகநானூறு 253) என்று நக்கீரர் குறிப்பிட்டுள்ளார் மாறுபாடு மிக்க வடுகர்கள் முன்னே வர, மோரியர் தமிழரின் நாடுகளைப் பற்ற எண்ணி வந்ததற்கு எனப்பொருள்பட, “முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு ‘ (அகநானூறு 281) என மாமூலனார் எழுதியுள்ளார்.
வலிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்புகளின் செறிவினையுடைய வடுகர் கள்ளினையுடைய செருக்கு மிகுந்து ஆரவாரிக்கும் தமிழ் அல்லாத வேற்றுமொழி வழங்கும் நாடு எனப்பொருள்பட, “தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர் பிழி ஆர் மகிழ்நர் கலி சிறந்து ஆர்க்கும் மொழிபெயர் தேளம்’ (அகநானூறு 295) என மாமூலனார் குறிப்பிட்டுள்ளார்.
இளம் பெருஞ்சென்னி என்ற சோழ மன்னன் தமது குடிக்கு ஆற்றும் கடமையாக, போரில், செம்பினை ஒத்த பாழி என்னும் கோட்டையை அழித்து அங்குள்ள புதியவர்காளான வடுகரின் பசிய தலைகளை வெட்டி’ எனப்பொருள்பட “இளம் பெருஞ்சென்னி குடிக் கடன் ஆகலின், குறை வினை முடிமார் செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி’ (அகநானூறு 375) என்று இடையன் சேந்தங்கொற்றனார் எழுதியுள்ளார் தமிழகத்திற்கு வடக்கில் உள்ள வடுகரை வாளால் விரட்டியவன் எனப்பொருள்பட “வட வடுகர் வாள் ஓட்டிய” (புறநானூறு 378) என்று ஊன்பொதி பசுங்குடையார் சோழ மன்னன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் புகழ்கின்றார்.
முனைவர் வி கலாவதி தமிழ்த்துறைத் தலைவராக இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் பணியாற்றிய வருகின்றார் நாற்பதிற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்களில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் புதுக்கவிதையில் பெரியாரியம், உயிராய் மாற்றும் விழி,எழுத்து கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார் பேராசிரியர் இமயம் விருது, திருக்குறள் செம்மல் விருது, பாரதிதாசன் விருது, போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.