மல்லக செட்டி எனும் மல்யுத்த வீரர்களான வீரமுஷ்டிகள்

கீழ்க்கண்டப் படத்தில் இராமர், மல்லக செட்டி எனும் மல்யுத்த வீரரரிடம் சிலம்பம், மல்யுத்தம், வால் பயிற்சி பாடம் பயிலும் காட்சி ஆகும். இவர்கள் செட்டிப் பிரிவில் இருக்கும் மல்யுத்தம் புரியும் வகுப்பார் வீரர்கள் ஆவார். இவர்களை ஜட்டி ஜெட்டி என்றும் அழைப்பர். மல்லக செட்டி இவ்வோவியத்தில் செண்டுடன் இருப்பதை காணலாம்.

மல்லன் + செட்டி = மல்யுத்தம் புரியும் செட்டி.

சேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்தில் உள்ள சிவபெருமான் மேல் அதீத பக்தி கொண்டவர்கள். அதன் பொருட்டு தாங்கள் உருவாக்கிய பிரமாண்டமான அரண்மனைக்கு “இராமலிங்க விலாசம்” என்று பெயர் சூட்டினர்.

தமிழகத்தில் எண்ணற்ற அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தன போர் மற்றும் பிற காரணங்களால் பல முற்றிலும் அழிந்து விட்டன. இன்று தமிழகத்தில் காணப்படும் ஒரு சில அரண்மனைகளில் நல்ல நிலையில் உள்ள அரண்மனைகளில் இவ்வரண்மனை குறிப்பிட்த்தக்கது. மேலும் மற்ற அரண்மனைகளில் இல்லாத அளவிற்கு எழில் மிகு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோயில் கட்டுமானத்தைப் போல கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடன் கிழவன் சேதுபதியால் சுண்ணாம்பு, செங்கல், கருங்கல் கொண்டு கி.பி. 1690 – 1710 வாக்கில் கட்டப்பட்டது.

இங்குள்ள ஓவியங்கள் சேதுபதி மன்னர்களின் ஆன்மீகப்பற்றையும், அகவாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

இங்குள்ள ஓவியங்களில் இராமாயண, பாகவதக்காட்சிகள், சேதுபதி மன்னர்களின் அரசியல் தொடர்பான காட்சிகள், அன்றாட நடைமுறைகள், பொழுதுபோக்குகள் மற்றும் அவர்களது அந்தப்புற வாழ்வினை விளக்கும் காட்சிகள், முக்கியமான வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

இங்குள்ள ஓவியங்கள் யாவும் முத்துவிஜயரெகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி. 1713-1725) வரையப்பட்டன மேலும் இவரது உருவங்கள் ஓவியங்களாக சில இடங்களில் உள்ளன.

வணிகர்கள் பிரிவில் யுத்தம், சண்டை செய்யும் பிரிவினர் மல்லர்கள், மல்லக செட்டி எனப் பட்டனர். இவர்கள் ஜட்டி (Wrestler) எனப்பட்டனர்.

தமிழ் ஓலைச் சுவடி ஒன்று செட்டிகளுக்கும், பிராமணர்களுகும் நடந்த சண்டையைப் பற்றியும், அதில் பிராமணர்கள் கொல்லப்பட்டதையும் கூறுகிறது. அதற்காக பிரம்மஹத்தி தோஷம் கழித்தனர் என்றும் அவ்வோலை சுவடி கூறுகிறது.

அன்னம தேவராயர் கைபீது என்னும் சுவடி, விசயநகர மன்னன் அன்னம தேவராயர் வழித்தோன்றலான இராயதேவரின் துணைவியார் பிராமணர்களுக்குத் தனுக்கோடியில் வல்லம் எனும் கிராமத்தைக் கொடையாகக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.

கலியாணம்மாள் எனும் பெயரிய அவர் காஞ்சிபுரத்திலிருந்து சில பிராமணர்களுடன் இராமேசுவரம் சென்றார். அங்கு, தீர்த்த மாடிய பிறகு, பிராமணர் காஞ்சிப் பகுதியில் உள்ள வல்லம் கிராமத்தை அக்கிரகாரமாகச் செய்து தரவேண்டும் எனக்கோரினர். ஆனால், அவ்வூர் தேவத்தானமாக இருப்பின், வழங்க இயலாது என்று கூறினார். பிராமணர். அது தேவத்தானமல்ல என்றதனால், அவ்வம்மையார். தனுக்கோடியிலே இருந்தபடியே வல்லம் கிராமத்தை சர்வமானியமாக அப்பிராமணர்க்கு அளித்தார்கள்.

இதனால், வரி முதலானவைகள் எங்களுக்கே வரல் வேண்டும் என்று வல்லம் பிராமணர் கோர, அப்பகுதி மக்களுக்கும் பிராமணர்க்கும் பூசல் எழுந்தது. மக்கள், இராயதேவரிடம் முறை யிட, இராயதேவர் படை வீரர்களாகிய மல்லக செட்டிகளை அனுப்பி,பிராமணர்களை விரட்டச் செய்து வல்லம் கிராமத்தைத் தேவத்தானத்துக்குட்பட்ட கிராமமாக்க ஆணையிட்டார்.

மல்லக செட்டிகள், அதன்படியே, வல்லம் பிராமணரை விரட்டி அடித்துத் துன்புறுத்தினர்.

அப்போது பிராமணரைக் கொன்ற பாவம் நீங்குதற்காக, ஒரு மல்லக செட்டி, வல்லம் திருவரங்கத்தீசுவரர் ஆலயத்தின் ஈசானிய திக்கில் (வடகிழக்கு) சிவ பிரதிட்டை செய்தான் என்று விளக்குகிறது இச்சுவடி.
மல்லக செட்டிகள் தமிழில் ஒரு வழக்கையே ஏற்படுத்தியுள்ளனர்.

“அந்தப்படியே அவாள்‌ வந்தவிடத்திலே யிந்த கிராமத்திலே யிருக்கிற பிராமணாள்‌ வெகு சனங்களை கூட்டிக்கொண்டு ராசா ஆக்கினை(ைைய ஷடாவிச்சவிடத்திலே வந்திருக்கிற மல்லசெட்டிகள்‌
பெலசாலிகளானபடியினாலே கையிலே யிருப்பு உலக்கையை யெடுத்துக்ககொாண்டு பிராமணாளை துரத்தி துரத்தி அடித்தார்கள்‌. இதனை ஓலைசுவடி,

பிராமணாளெல்லாரும்‌ பயந்து ஓடிப்போயி அதிலொரு
பிராமணன்‌ வைககல்ப்‌ போருக்குள்ளே புகுந்துகொண்டான்‌. அவனை ஒரு மல்லன்‌ யிருப்பு (இரும்பு) உலக்கையினாலே அடிச்சயிடத்திலே
அத்த பிராமணன்‌ மண்டை நசுஙகி செத்துப் போனான்‌.
அந்த தோஷம்‌ அந்த மல்லனுக்கு வந்தபடியினாலே அந்த தோஷம்‌ போ(கற) நிமிற்த்தியாற்தம்‌ அந்த மல்லனாகப்பட்டவன்‌ வல்லம்‌ (இருவரங்‌)கத்தீஸ்வரர்‌ கோயிலுக்கு யீசானிய திக்கிலே சிவ பிறகிஷ்ட்டை பண்ணி வைற்றான்‌. ” எனக் கூறுகிறது.

யாருக்கும் பணியாத ஒருவனை, ‘இவன் சரியான மல்லசு செட்டியா இருக்கிறானே’ என்று கூறல் இன்றும் வழக்காக உள்ளதை நோக்கலாம்.

இச்சுவடியில் ஓர் அரிய வரலாற்றுக் குறிப்பு உளது, அஃதாவது, வல்லம் திருவரங்கத்தீசுவரர் ஆலயத்தைப் பிரித்து, சுலுப்புகான் என்பான் வந்தவாசிக் கோட்டை கட்டப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக அறிவிக்கிறது சுவடி.

.வல்லம் கிராமப் பிராமணரை விரட்ட வந்த மல்லக செட்டிகள் நிலையாக தமிழ் மண்ணில் ஊன்றிக்கொண்டனர். இராசமல்லர் எனும் மல்லக செட்டி காஞ்சிப்பகுதித் தலைவனாகி, சிவ, வைணவத் தலங்களுக்கு ஏற்றம் தந்து வாழ்ந்தான் எனச்சாற்றுகிறது சுவடி விசயநகரத்து மன்னனிடத்தில் திவானாக (அமைச்சனாக) துந்துசெட்டி என்பான் இருந்தான். அவன் ‘கர்வத்தை அடக்க, மன்னன் ஒரு அறைக்குள் செட்டி இருக்கும்போது, புலியை அவிழ்த்துவிடச் செய்தான். செட்டி, புலியைக் கொன்று மன்னன் அருகே இறந்த புலியை வீசினான். மன்னன், அச்செட்டிக்குப் பொன் அளித்துச் சிறப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஓவியத்தின் மூலம், செட்டிகள் என்போர் வணிகம் மட்டும் செய்யாமல், யுத்தப் பயிற்சிகளை அளிக்கும் ஆசான்களாக திகழ்ந்தனர் என்பதை அறியலாம்.

கவரைகளின் ஒரு பிரிவாக அறியப்படும் இவர்கள் வீரமுஷ்டிகள் எனப்படுகின்றனர். இவர்கள் தையலம் தயாரித்து நரம்பு வலிகளை நீக்கும் வர்மக்கலை ஆசானாக திகழ்ந்துள்ளனர்.

இவர்கள் தஞ்சை நாயக்கரின் அரண்மனை பொக்கிஷங்களைக் காக்கும் காவலராக நியமிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில், , General Matthews ன் தலையை வெறும் கைக்களால் பியித்து எடுத்தவர் எனப் படுகின்றனர்.

அந்த காலத்தில் தசரா பண்டிகையின் போது, இவர்கள் மல்யுத்த சண்டை போட்டி நடத்தியது பற்றிய குறிப்புகள் எட்கர் துர்ச்டன் கூறுகிறார். இவர்கள் இந்தியா முழுவதும் சென்று மல்யுத்த சண்டை போட்டிகளை நடத்தினர் என்றும், அதற்கு பரிசாக அக்காலத்திலேயே ரூபாய் 500 வரை அறிவிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் வளஞ்சியர் வணிகப் பிரிவில், தண்டம் எனும் வரி வசூலிப்போராகவும் இருந்துள்ளனர்.

மூலம்:

  1. இராமலிங்க விலாசம்‌ இராமாயண ஓவியக்‌ குறிப்புகள்‌
  2. தமிழக ஊர்‌ வரலாறுகள்‌, பதிப்பாசிரியர்‌: டாக்டர்‌ எஸ்‌. செளந்தரபாண்டியன்‌,
  3. தகவலாற்றுப் படை
  4. CASTES AND TRIBES OF SOUTHERN INDIA – VOLUME II—C to J