வணிகர்கள்
25 செப்பேடு, பட்டயங்களில் வணிகர்களைப் பற்றி பல செய்திகள் கூறப்படுகின்றன. வணிகர்களில் பலர் வியாபாரம் மட்டும் செய்யாமல் நிலம், கோயில் உரிமையாளர்களாகவும் இருந்துள்ளனர். கொங்கச் செட்டியார்கட்குக் “கவுண்டர்” பட்டமும் கூறப்படுகிறது. ஆவணங்களில் கல் அரக்கு, கால்நடை, கோதும்பை, சந்தனம், சவுளி சீரகம், சேவு நவதானியம், நவரத்தினம், நீலம், நூல், பலசரக்கு புகையிலை, மஞ்சள், லவணம்(உப்பு), வெல்லம், வெற்றிலை போன்ற பல பொருள்கள் விற்கப்பட்டதாகக் கூறுகிறது. வணிக மையங்கள் பேட்டை என அழைக்கப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள் ஏறுசாத்து, இறங்கு சாத்து எனப்பட்டன. நிசப்பொதி, மூலைப் பொதி, தலைச்சுமை, எருது, வண்டி மூலம் வணிகப் பொருட்கள் வந்தன. சுங்கம், பேரம், தரகு போன்றவை வணிகம் தொடர்பான சொற்கள். பல வணிகர்கள் “மகமை” மூலம் கோயில்கட்குக் கொடை கொடுத்துள்ளனர். இசுலாமியரும் வணிகராக இருந்துள் ளனர். முசிலிமான், வேடசந்தையூர், இராவுத்துமார் ஆகியோர் கூறப்படுகின்றனர். கொங்கு அவணங்களில் பல்வேறு வணிகச் சமுதாயங்கள் குறிக்கப்படுகின்ற
இருபத்து நான்கு மனையார், எட்டுவகைப் பலர், கவறைச் செட்டி, கன்னடச் செட்டி, கொங்கச்செட்டி, கோமுட்டி, சாலிய செட்டி, செட்டிக்காரர், செட்டிகள், சேடசெட்டி, தேசத்தூர், தேவாங்கச்செட்டி, நகரத்தார், நான்கு திசை ஐம்பத்தாறு தேசத்துப் பலர், பட்டக்காரர், பட்டுநூல் வெட்டி, பலபட்டறைச் செட்டி, பன்னிரண்டாம் செட்டிகள், மூத்தாஞ் செட்டி, ராவுத்தமார், வர்த்தகர், வெள்ளாஞ் செட்டிகள் எனப்பல்வேறு பிரிவினர் கூறப்பட்டுள்ளனர்.
பல சமூகத்தார் தேவர், ஆசாரிகள், நாயக்கர், பண்டாரம், நாவிதர், வள்ளுவர் குலத்தார் ஆகியோருக்குத் தனித்தனிச் செப்பேடுகள்,
பட்டயங்கள் உள்ளன. ஆவணங்களில் அகப்படியர், இடையர், உப்பிலியர், உவச்சர், ஒட்டர், கம்பளத்தார், கருணீகர், கன்னடியர், குறும்பர், கோசங்கிகள், சக்கிலியர், சவளக்காரர், சனுப்பர், சிவியார், சோழியர், திருவெம்படிக்காரர், தொட்டியர், தொம்பர், தொழுவன், தோட்டி, பச்சை மலையாளர், பள்ளர், பாஞ்சாலர், பாலிடையர், மல்லர், மலையாளர், யாதவர், வண்ணார், வன்னியர், வாணிபர், வாரியார், வீரமுஷ்டிகள், வீர முடியாளர் முதலிய பல சமூகத்தார் குறிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு சமூகத்தவர்கள் பலபட்டறை, பலபட்டறையர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். வலங்கை இடங்கை
இவர்கள் வலக்கை, இடக்கை, வலதுகை இடது கை, வலங்கைப் பாணத்தூர் இடங்கைப் பாணத்தூர், வலங்கையர் இடங்கையர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.
செங்குந்தூர் வெற்றிப் பட்டயம், ஆசாரிகள் வெற்றிப் பட்டயம், மல்லிகுந்தம் பட்டயம் ஆகிய வலங்கை இடங்கை பற்றிய முழுப் பட்டயங்கள், காலிங்காரயன் அணைப் பட்டயம், சேவூர்ச் செப்பேடு, மோரூர்க் காங்கேயர் ஏடு, கன்னிவாடிப் பட்டயம், வேலூர்ச் செப்பேடு ஆகியவற்றில் வலங்கை இடங்கை பற்றிய சில செய்திகள் கூறப்படுகின்றன.
ஆசாரிகள் (பஞ்சு கம்மாளர், தட்டார், கொல்லர், தச்சர், கன்னார், கல்வேலைக்காரர்), கம்பளத்தார், செங்குந்தர், தேவேந் திரப் பள்ளர், நகரத்தார், மாதாரகள், வன்னியர் ஆகியோர் இடங்கயைர் என்றும், கவறைச் செட்டிகள், சாணார், சேனியர் முதலியவர்கள் வலங்கையர் என்றும் கூறப்படுகின்றனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட உரிமை பற்றிய வழக்குகள் பூர்வம் தீர்ந்த பட்டயங்கள் மூலமாகவும், காஞ்சிபுரம் காமாடசியம்்ம கோயிலில் கிடைத்த செப்பேடு மூலமாகவும் தீர்த்து வைக்கப்பட்டன. தோற்றவர்கள் அபராதமும், வென்றவர்கள் வெற்றிக் காணிக்கையும் அளித்துள்ளனர்
இந்தப் பெயரில் வழங்கப் பெறும் சமூகத்தினர் நான்கு வகையினர் இந்த மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டுக் கோட்டை அல்லது நகரத்தார், மஞ்சப்புத் தூர் அல்லது ஆயிரவைசியர், தெலுங்குச்செட்டி அல்லது கோமுட்டி செட்டி, வேளாண் அல்லது வெள் ளாளச் செட்டி எனப்படுவர். தங்கள் இயற்பெயரின் ெ தாடர்பாக செட்டி அல்லது செட்டியார் என்ற சொல்லையும் இணைத்து அவர்கள் வழங்கி வருகின்றனர். இந்தச் சொல் தமிழ்ச்சொல் அல்ல. தமிழில் வந்துள்ள திசைச் சொல்லாகும். சிரேஷ்டி என்ற வடசொல்லின் திரிபு என்றும் எட்டி என்ற தமிழ்ச் சொல்லின் விக ரம் தான் செட்டி என அறிஞர்கள் கருதுகின்றனர்.
- நகரத்தார்
இது நாட்டுக்கோட்டைச் செட்டிகளைக் குறிப்பதாகும். முந்தைய தமிழ்ச் சமுதாயத்தின் வணிகப் பிரிவினர்களின் குடியிருப்பு நகரம் என்றும் நேமம் எனவும் குறிக்கப்பெற்று வந்தது. அந்த மரபினரின் வழியினர் ஏன் பதற்காகவே இவர்கள் நகரத்தார் என வழங்கப்பெற் றனர். இந்த மாவட்டத்தில் திருப்புத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய வட்டங்களில் இவர்கள் ஆங்காங்கு வாழ்ந்து வந்த பொழுதிலும் இவர்களது பூர்வீகம் சோழவளநாட்டு பூம்புகார் எனச் சொல்லப்பட்டு வருகிறது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் புகார் நகரம் கடற்கோளினால் அழிவு எய்திய பொழுது, அங்கிருந்து வெளியேறிய மக்கள் கூட்டத் தொகுதியினரின் வழியினராக இவர்கள் கருதப்படுகின்றனர். தென்புலத்தில் பாண்டிய நாட்டில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், பிரான்மலைக்கு கிழக்கேயும், வெள்ளாற்றுக்குத் தெற்கேயும் இவர்களது குடியேற்றங்கள் ஏற்பட்டன.
ஆனால், முதலில் இன்றைய இளையாத்தங்குடியில் சிறிது காலம் தங்கி இளைப்பாறிய பிறகு, சிறுசிறு தொகுதியினராக ஒன்பது ஊர்களில் குடியேறினர். இன்று அந்த ஒன்பது ஊர்களையே தங்கள் பூர்வகிளை களாகக் கொண்டு மணவினை உறவினை உருவாக்கிக் கொள்கின்றனர். ஒரே கிளையினர் தங்களுக்குள் மண உறவுகள் கொள்வது இல்லை. ஆனால் பங்காளிகளாக பாந்தத்துடன் பழகிக் கொள்கின்றனர். இளையாத்தங் குடி, மாத்தூர், இரணியூர், பிள்ளையார்பட்டி, வைரவன்கோவில், இலுப்பக்குடி, நேமம், சூரக்குடி, வேலங்குடி ஆகியவைகளே அந்த ஒன்பது ஊர்களாகும். இன்னும் இந்த மக்கள் அருவியூர் என்ற குலசேகர பட்டணத்திலும், பிரான்மலையிலும் பன்னெடுங் காலம் நிலைத்து இருந்தமைக்குச் சான்றாக அந்த ஊர்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த ஊர்களைத் தவிர கீழச் சேவல்பட்டி, செவ்வூர் கண்டனூர், கானாடு காத்தான்; பள்ளத்தூர், கோட்டையூர், காரைக்குடி, அரியக்குடி, தேவகோட்டை, நாட்டரசன் கோட்டை ஆகிய ஊர் களிலும் பெரும்பான்மையினராக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தின் தொன்மையான வணிகச் சாத்துக்களான நானா தேசிகளையும், திசையாயிரத்து ஐந்நூற்று வரை யும் சித்திர மேழி சாத்தினரையும் நினைவுபடுத்தும் வண்ணம் அண்மைக் காலம் வரை கடல் கடந்த நாடு களில் வாணிபத்தில் ஈடுபட்டு வற்றாத பெருஞ் செல் வத்தை ஈட்டினர். இந்த வணிகத்திற்கு அவர்களது பேச்சு வழக்கில் கொண்டு விற்றல்” என வழங்கப் படுவதுஉண்டு. இவர்களது வணிகமரபின் தொன்மையைநினைவுபடுத்தும் வண்ணம், மணவிழாவின் பொழுது இவர்களது மணமகன் குதிரையின் மீது வீந்து ‘பெண் கொள்ளுதலை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் மணவிழா சம்பந்தப்பட்ட கைக்கூலி, மாழி யார் புணம், நகைவகைகள் அளவு, முந்தைய செலா, வணியான வராகன் கணக்கிலா நிர்ணயிக்கப்படுகின் றன. இன்றும் இவர்களது இல்லங்களில் ல் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளும் நல்ல தமிழில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். புதுமை கார்த்திகைப்புதுமை திருவாதிரைப் புதுமை, பொங்தல், சாந்தி, படைப்பு, மருந்திடல், தீர்த்தம் குடித்தல் பிள்ளையார் நோன்பு, பந்தல் பிடுங்கல் ஆகியன” அவைகளா வாகும்
இரண்டாவது உலகப் போரின் தொடர்பாக இலங்கை. பர்மா, சயாம், மலேஷியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறிய இந்த சமூகத்தினர் நமது தாயகத்தில் பல துறைகளிலும் ஈடுட்டு சிறப்பரக உழைத்து வரு கின்றனர். நல்ல பண்பாடும், சிறந்த வாழ்க்கை நிலை யும் கொண்ட இவர்கள் சைவ குழபத்தில் மிகுந்த ஈடு பாடு கொண்டவர்கள் இதன் தாரணமாக திருவண்ணா மலை, தில்லை, மதுரை, இராமேஸ்வரம் ஆகிய சிவால் யங்களில் குடமுழுக்கு திருப்பணிகளை நிறைவேற்றியுள் ளனர். சமய நெறிகளில் இந்த “சமூர்த்தினர் உம் ேசம் பெறுவதற்காக ஆய்வருக்கு கிள மடம் பாதரக்குடி ஆகிய ஊர்களிலும், மகளிருக்கு துலாவூரிலும் மடங் கள் நிறுவப் பெற்றுள்ளன. இன்றும் ‘தலயாத்திரையா கச் செல்லும் நகரித்தார்கிள் வசதியாகத் தங்கி வரு வதற்கு இந்தியா முழுவதிலும் கோயில் உள்ள ஊர் களில் ‘நகரத்தார் விடுதி’ கிலையும் நிர்மானித்து பராமரித்து வருகின்றனர்:
- ஆயிரவைசியர்
செட்டி என்ற விகுதியுடன் வழங்கப்படும் இந்த மக்கள் நகரத்தாருக்கு-நாட்டுக் கோட்டை செட்டிமக்களுக்கு-அடுத்த படியான எண்ணிக்கையில் இந்த மாவட்டத்தில் உள்ளனர். இவர்களது பூர்வீகம் பற்றிய பலவிதமான செவிவழிச் செய்திகள் உள்ளன. ஆனால் வரலாற்று வடிவிலான தடயங்கள் எதுவும் இல்லை. எனினும் அவை, இந்த சமூகத்தினர், நகரத்தார் போன்று வடபுலத்தினின்றும் இந்த மாவட்டத் தில் குடிபுகுந்தவர்கள் என்பதையே குறிக்கின்றன. பெரும்பாலும் சோழ நாட்டிலிருந்து தென் திசைக்கு வந்தவர்கள் என்பது பெரும்பான்மையினரது கருத்து. ஆனால் எட்கார் தர்ஸ்டன் என்ற நூலாசிரியர் இவர்கள் தொண்டை மண்டலம், மஞ்சக்குப்பம் பகுதியினின்றும் வந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் திருவாடானை, இராமநாதபுரம், பரமக்குடி. இளையாங்குடி ஆகிய வட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். திருவாடானை வட்டத்திலுள்ள பாண்டு குடியும், பரமக்குடி வட்டத்தில் உள்ள பரமக்குடியும் இவர்களது பழம்பெரு பகுதிகளாகக் கருதப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் ஜவுளி, அரிசி, பலசரக்கு வணிகத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை மஞ்சப் புத்தூர் செட்டிகள் எனக் குறிப்பிடுவது உண்டு. ஒரு வேளை மஞ்சள்குப்பம் ஊரை தாயகமாக உடையவர் கள் என்ற காரணத்தின் அடிப்படையாக வந்த வழக்காக இருக்கலாம். இவர்களில் சிறுபிரிவினர் பொன், வெள்ளி, நகைகள் வியாபாரத்திலும் அந்த நகைகள் ஈட்டின் பேரில் கடன் தொகை வழங்கும் தேவா தேவிலும் ஈடுபட்டு இவர்களைக் காசுக் கடை செட்டிகள் அல்லது மதுரைச் செட்டி என வழங்குதல் வழக்கமாக உள்ளது.
இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதிகளின் சிறப்பு மிக்க ஆட்சிக்காலத்தில் இந்தச் சிறுபான்மை சமூகத்தின் சிலர் சேது நாட்டின் பெருமைக்குரிய குடி மக்களாக இருந்ததை கி.பி.1745 ஆம் ஆண்டைய செப்புபட்டயம் ஒன்று சுட்டிக் காட்டுகிறது. பின்னர் தொடர்ந்த கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சிக்காலத் தில் சென்னையில் தழைத்து ஒங்கிய ‘பேரி‘ செட்டி களைப் போன்று இவர்கள் எந்தவித முன்னேற்ற மும் எய்தவில்லை.
நாடு முழுவதும் தேசிய விடுதலை உணர்வினால் உந்தப் பட்டு அரசியல் எழுச்சி கொண்ட பொழுது இந்த சமூ கத்தினரும் தங்களது தியாககாணிக்கையை நாட்டிற்கு நல்கினர். ஆனால் நாட்டு விடுதலையின் தாக்கம் அவர் களுடைய சமூக நிலையில் தீவிர மாற்றங்களைக் கொணர வில்லை. தொடர்ந்து வைதீக பழக்க வழக்கங்கள். வர தட்சணைக் கொடுமை, கல்வியில் பின்னடைவு ஆகிய வை அவர்களிடையே நிலைத்துள்ளன.
என்றாலும் பரமக்குடி நகரில் உள்ள இந்த சமூகத்தினர் மட்டும் மிகவும் ஐக்கியமான முறையில் ஆயிரவைசியர் சபை என்ற அமைப்பின் கீழ் தங்களது சமூகம் சம்பந் தப்பட்ட பொதுக் சாரியங்களை நிர்வகித்து வருகின்ற னர். பரமக்குடி நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ் வரர் திருக்கோயில், ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி திருக் கோயில், ஆயிரவைசியர் மேல்நிலைப்பள்ளி, ஆயிரவை சியர் உடற்பயிற்சி சாலைகள் ஆகியவைகளை இந்தச் சபையினர் பராமரித்து நிர்வகித்து வருவதுடன், பா மக்குடி அய்யாச்சாமி செட்டியார் வகையறாக்கள் இந் தச் சமூகத்தினரது நலனுக்காக ஏற்படுத்தியுள்ள ” நந்தவன கட்டட் டிரஸ்ட்” என்ற பொது அமைப்பினையும் இந்தச் சபை இயக்கி வருகிறது.
- வைசியர்
இந்து சமயத்தில் இரண்டாவது நிலையில் உள்ள இந்த மக்கள், இந்த மாவட்டத்தில் இராமநாதபுரம், இராமேஸ்வரம் வட்டங்களில் மட்டும் உள்ளனர். இவர்கள், இன்றைய ஆந்திர மாநிலத்தினின்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியவர்கள் என்றாலும், அவர்களது நடை, உடை, பாவனைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சூழலில் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் அவர்களது பேசும்மொழிமட்டும் தெலுங்காக இருந்து வருகிறது.
வைதிக இந்து சமுதாயத்தைப் பின்பற்றும் இவர்கள் சைவ, வைணவ நெறிகளைக் கடைப்பிடித்தாலும்> சக்தி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்டு உள்ளனர். சக்தியை கன்னித் தெய்வமாக வாசவி என்றும், கன்னிகா பரமேஸ்வரி என்று வழங்கி வழிபட்டு வருகின்றனர். ஏனைய செட்டி மக்களைப் போன்று இவர்களும் வாணிபத்தை குறிப்பாக பலசரக்கு வாணிபத்தைத் தங்களது வாழ்க்கையாக மேற் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில், சிறந்து விளங்கியவரும் நாகூரை இருப்பி டமாகக் கொண்டிருந்தவருமான தனவணிகர் ஒருவர் கி.பி. 1434 இல் இராமேஸ்வரம் திருக்கோயிலின் மேற்கோபுர அமைப்பிலும், ஆலயத்திருமதில்களை நிர் மாணிப்பதிலும் பெரும்பங்கு கொண்டதாகத் தெரிய வருகிறது. இத்தகைய திருப்பணியினை இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ஆலயத்திலும், இந்தக் சமூ கத்தைச் சேர்ந்த சென்னை தம்புசெட்டி கி.பி. 1715- 20 இல் நிறைவேற்றியதாகத் தெரிகிறது. மற்றும் இந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தினர் இராமநாத புரம் பகுதியில் சிறப்புடன் இருந்ததை சேதுபதி மன்னரது கி.பி. 1745 ஆம் ஆண்டைய ஆவணங்களும், இதர அரசு ஆவணங்களும் உறுதி செய்கின்றன. ஆனால், இன்று இவர்களிடையே சமுதாய உணர்வும், அரசியல் ஈடுபாடும் இல்லாத காரணத்தினால், கல்வி மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களைப் போன்று குறிப் பிடத்தக்க நிலைகளை இவர்கள் எய்தவில்லை.
- வேளாண்செட்டி முதலியோர்.
இந்த மாவட்டத்தில் செட்டி எனத் தங்களை அழைத் துக் கொள்ளும் இன்னும் சில பிரிவினர்கள் உண்டு. அவர்களில் சிறப்பாக குறிப்பிடத்தக்க சிறுபான்மையி யினர் வேளாண் செடடி என்னும் பிரிவினர், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் உள்ள னர். செட்டி என்ற தங்களது அடைமொழிக்கு ஏற்ப, இவர்கள் முழுமையாக வியாபாரத்தில் இல்லை. விவசா யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாணிகத்தின் ஏற்றத் தாழ்வுகள். அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இவர் களது முந்தையோர், வாணிகத்திலும் விவசாயத்திற்கு மாறி இருக்கலாம்.
இவர்கள் இந்து. சமயத்தினராக இருந்தாலும் இவர் கள் குலதெய்வம் பட்டாணி என வழங்கப்படுகிறார். இளம்பிறைக் கொடி தாங்கி, பரிமேல் அமர்ந்தவரான வீரத்திரு உருவம் தான் இவர்களது பட்டாணி எனப் படுகிறார். இந்தக் குதிரைக்கோல் ராவுத்தரை ஆயிர வைசிய செட்டிகளும் பட்டாணி அல்லது கோரக்கி நாதர் என வழங்கி வழிபட்டு வருவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. (திருப்புவனத்தை அடுத்து இந்த பட்டாணி கோரக்கி நாதர் ஆலயம் ஒன்று உள்ளது.) தமிழக இஸ்லாமியருக்கும் இந்த செட்டி மக்களுக்கும் இடையில் பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு களில் ஏற்பட்ட வணிகத் தொடர்பின் அடிப்படையில் பிற்க லத்தில் ‘பட்டாணி’ தெய்வ வழக்கும் வழிபா டும் புகுந்து இருக்கலாம்.
இவர்களை தவிர, அருப்புக்கோட்டை திருச்சுழியல் வட்டத்தில் உள்ள சாலியரும் தங்களைச் செட்டிகள் என அழைத்துக் கொள்கின்றனர். சேணியர் என்றும் சேடர்கள் என்னும் இவர்களது தொழிலும் வாணிபம் இல்லை. மாறாக நெசவுத் தொழில்தான் இவர்களது நிகரற்ற வாழ்க்கையாக. உள்ளது. தேவர்களுக்கும் ஏற்ற ஆடைகளை நெய்து தரவல்லவர்கள் என்ற பொ நாளில் இவர்களைத் தேவாங்கர் எனவும் வழங்குதல் உண்டு. பிறிதொரு பிரிவினர், இலை வாணிபச் செட்டி கள் என்ற பிரிவினர், எள்ளில் இருந்து எண்ணெய் வடிக்கும் செக்காலைகளை இயக்குபவர்கள். ‘“செக்காரச் செட்டி மக்கள்” என்பது மகாகவி கம்பனது வாக்கு. இன்று விஞ்ஞானம் வளர்ந்து மனித வாழ்க்கைக்கு உத வும் பணியில் பொறிகள் ஈடுபடும் நிலைக்கு வந்த பிறகும் இவர்கள் மாடுகள் பூட்டிய செக்கடிகளைக் கைவிடுப வர்களாக இல்லை.
Srilankan செட்டி குடிகள்
(1)மங்குச் செட்டி, (2) மாணிக்கச் செட்டி, (3) சங்குச் செட்டி,
(4) சதாசிவச் செட்டி, (5) சிங்கக் செட்டி, (6) சின்னவச் செட்டி,
(7)பங்குச் செட்டி. “”