ஆழ்வார்பேட்டை செப்பேடுகள் – கவறை (கவரை) செப்பேடுகள்

இடம்‌: சென்னை ஆழ்வார்பேட்டை லில்லி விஜயராகவன்‌ தொகுப்பில்‌ உள்ளது. காலம்‌: இ.பி. 1904.

செய்தி: 34 செ.மீ 19 செமீ அளவுடைய செப்புத்‌ தகட்டில்‌ ஒருபுறம்‌ மட்டும்‌ எழுத்துக்கள்‌ உள்ளன. 98 ஜாதி கவரைச்‌ செட்டிகள்‌, கிருஷ்ண செட்டி என்ற இருஷ்ணம நாயக்கருக்கும்‌ அவர்‌ வழிமுறையினர்க்கும்‌ முராரி தேசாயி செட்டிமைப்‌ பட்டம்‌ கொடுத்து, மடத்தலைவர்‌ ஸ்ரீவேதாந்த சுவாமிகளுக்கு குருக்காணிக்கை ஒதுக்கியமை

 

 

===

செட்டிகள்‌ தலைவருக்கும்‌, குருவிற்கும்‌ காணிக்கை செலுத்த தீர்மானம்‌ சென்னை ஆழ்வார்ப்பேட்டை திருமதி லில்லி விஜயராகவன்‌ தொகுப்பில்‌ உள்ளது.

34X19 செ.மீ. அளவுடைய இச்செப்பேட்டில்‌ ஒரு பக்கம்‌ மட்டும்‌ 44 வரிகளில்‌ வாசகம்‌ பொறிக்கப்பட்டது.

கலிவருடம்‌ நான்கு லட்சத்து முப்பத்து ஓராயிரத்துத்‌ தொள்ளாயிரத்து நான்கு எழுத்திலும்‌ எண்ணாலும்‌ கலந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்‌ வருடம்‌ ஸ்ரீமுக சொல்லப்பட்டுள்ளது. மெய்யெழுத்துக்கள்‌ புள்ளியிடப்பட்டுள்ளன. வருடக்‌ குறிப்பு சரியில்லாததைக்‌ கொண்டும்‌. செய்திகளைக்‌ கொண்டும்‌ இது 20ஆம்‌ நூற்றாண்டில்‌ எழுதப்பட்டது எனலாம்‌. மன்னர்‌ பெயரெதுவுமில்லை.

இது கிருஷ்ண செட்டி எனப்படும்‌ கிருஷ்ணம நாயக்கரை ஸ்ரீவேதாந்த சுவாமிகள்‌ முன்பாக கவறை 354 குலத்துச்செட்டிகளும்‌ மிதுனம்‌. மேஷம்‌ பல ராசி சாதி செட்டிகளும்‌ கூடி சாதிக்கு அதிபதியாக்கிக்‌ கொடுத்த செப்புப்‌ பட்டமாகும்‌. ஏற்கனவே: இப்பட்டம்‌ முராரி தேசாயி செட்டி என்பவர்க்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றி இப்பொழுது கொடுத்துள்ளனர்‌. இதன்படி தலைக்கட்டு ஒன்றுக்கு ஒருபணம்‌ வீதம்‌ இவருக்கு கொடுக்கவும்‌, வேதாந்த சுவாமிகளுக்கு வருடம்‌ 52 பணம்‌ கொடுக்கவும்‌ தீர்மானித்துள்ளனர்‌.