வரலாற்றுப்பார்வையில் – தசமடி எறிவீர பட்டினம், பெரியகுளம்

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி . பெரியகுளம் நகராட்சி சேர்மனாக இருந்து தமிழகத்தின் முதல்வராக பதவியில் அமைத்த தொகுதி. இவை தவிர நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேத்தா, கவிஞர் மேத்தா, கவிஞர் வைரமுத்து (பூர்விகம் கரட்டுப்பட்டி தற்பொழுது வடுகபட்டி வைரமுத்து) என பல பாரம்பரியமிக்க ஊர். 

தேனி மாவட்டத்தின் பழமையான ஊர் ஆகும். பெரியகுளம் வராநதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வராநதியின் தெற்குப்பக்கம் அமைந்துள்ள ஊரை தென்கரை என்றும் வடக்குப்பக்கம் அமைந்த ஊர் வடகரை எனவும் அழைக்கப்படுகிறது. பழமையை நினைவு படுத்தும் கோட்டை மேடு, தண்டுப்பாளையம், ஆண் மற்றும் பெண் மருதமரங்கள், மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என பலவரலாற்று சிறப்பு அம்சங்களைக்கொண்டது. 72 பாளையப்பட்டுக்களில் பெரியகுளமும் ஒன்று. பெரியகுளம,; ஆலங்குளம் , தேசி எறிவீர பட்டினம் என்றும், குளந்தை நகரம் எனவும் அழைக்கப்பட்டு தற்பொழுது பெரியகுளம் என அழைக்கப்படுகிறது. இதற்கு சான்றாக அருள்மிகு பாலசுப்பிரமணியன் என்ற பெரியகோயில் கல்வெட்டுக்கள் உள்ளது. ராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயிலும், வடகரையில் அமைந்துள்ள கயிலாயநாதர் கரட்டில் உள்ள உய்யவந்த ஈச்சரமுடைய நாயனார் திருக்கோயிலும் மேலும் கூடுதல் வலுசேர்க்கிறது. இக்கோயில்களில் கல்வெட்டுக்களை பொறித்தவர்கள் முதலாம் மாறவர்மண் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன், நடை கொடை ராயன், மறைபுக்கார் காவலன், இம்மடி வயிறு நாயக்கர் மன்னர்கள் ஆவர்.

ஆலங்குளம்

~~பூவும் நீரும் ஒரு மரப்பெயராகும்
ஆழ்கடல் விடமும் ஆலமாகும்~~ -பிடமங்கலம்
இவற்றில் ஆல் என்பது நீரை குறிக்கும் சொல்லாகிறது. அதே வேலையில் ஆல்-து என்ற அமைப்பினதாகிய ~~ஆறு~~ என்னும் சொல்லின் பொருண்மை அதன் பகுதியாகிய ~~ஆல்~ என்ற சொல்லின் பொருண்மையினின்றும் நெகிழ்ந்து நிற்கிறது. எனவே ஆல் என்ற சொல் நீரையும் குறிக்கிறது.

முருகன் கோயிலில் அமைந்துள்ள கல்வொட்டு ஒன்றில் ~~மாடக்குளக் கீழ் மதுரை~~ என்ற தொடர் காணப்படுகிறது. இதே கருத்தை சின்னமனூர் செப்பேடும், இராசசிங்கப் பெருங்குளக் கீழ்ச் ச+ழ நகரிருந்தருளி~ என்று பிறிதொரு ஊரோடு தொடர்பு படுத்திக்காட்டுகிறது. எனவே குளங்களின் அருகாமையில் ஊர் அமைந்ததால் அதுவே ஊர்ப்பெயராக அமைந்துள்ளது.

தேசி எறிவீர பட்டினம்

பிற்காலச் சோழர் வரலாற்றை பதிவு செய்த சதாசிவ பண்டாரத்தார் எறிவீரபட்டினம் பற்றி இவ்வாறு விளக்குகிறார். ஒரு வணிகர் குழு வணிகம் புரிந்து, வாழ்ந்து வந்த இடங்கள் காவலுக்குட்பட்டு வீரபட்டினம் – எறிவீர பட்டினம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.

இவ்வணிகப் பெருங்குழுவினர் அலைகடலுக்கு அப்பாலும், தங்கள் செல்வாக்கினைச் செலுத்தியிருந்தனர் என்பது சுமத்ரா தீவில் ~~லோபா-டோவா~~ என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.1088 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்வெட்டால் புலனாகிறது.(ம.இராசகேர தங்மணி-முதலாம் இராசேந்திர சோழன்-பக்கம் 379ஃ80.
பெயர் மாற்றத்தின்கான காரணம் பதினொன்றாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் இருந்து வணிகம் புரிந்த நானாதேசிகன், அய்யப்புழல் காட்டுர் என்ற ஊரை வாங்கி, வீரபட்டினமாகச் செய்து கொண்டனர் என்று ஒரு கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.

நானாதேசிகளும், நாட்டாரும், நகரத்தாரும் முதலாம் இராசாதிராசனின் ஆட்சிக்காலத்தில் சிராவள்ளி (சிராப்பள்ளி?) என்ற ஊரில் கூடி நானா தேசிய தசமடி எறிவீர பட்டினம் என்று அவ்வூரின் பெயரை மாற்றியமைத்ததுடன் அவ்வூர் மக்களுக்கு சில உரிமைகள் வழங்கியதாக அறிகிறோம். ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி வட்டத்திலுள்ள ~~பசனிகொண்டா~~ ஊரிலுள்ள கல்வெட்டு இதனை உறுதிபடுத்துகிறது.

(ஆதாரம்:

1ம.இராசகேர தங்கமணி-முதலாம் இராசேந்திர சோழன்-பக்கம் 379ஃ80
2.புலவர் கா.கோவிந்தன்-தமிழர் வணிகம்-பக்கம் 82-86
ஆங்கிலக் கிழக்கிந்தியக் வணிகக் குழுவினரைப் போன்று கட்டுப்பாடுள்ள சமுதாய அமைப்பiயும் ஓரளவு படை வலிமையையும் பெற்ற நானா தேசியினர் பன்னிரெண்டாம் நூற்றாண்டளவில் ஆலங்குளத்திற்கு வருகை புரிந்தனர்;. தம் தொழிலைப் பெருக்கினர். ஊர்ப்பெயர் மாற்றத்திற்கு உடன் நின்றனர்
(ஆதாரம்:கே.கே.பிள்ளை-தென் இந்திய வரலாறு-பக்கம் 11)
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யும் பொழுது ஊரின் முன்பகுதியில் ஆன அல்லது அழகிய ஒன்ற ஒரு சொல்லை இடையில் கூறிப் புதுப்பெயரைப் பின்னர் கூறுவது மரபாக உள்ளது.
உதாரணமாக கீரனூர் ஆன கொழுமங்கொண்ட சோழநல்லூர் என்று அழைப்பது போல ஆலங்குளம் என்ற பழமையான ஊர்ப்பெயரை காலப்போக்கில் மாற்றம் செய்து ~~ஆலங்குளமான நானாதேசி எறிவீரபட்டினம்~~ என புதுப்பெயருடன் அழைக்கப்பட்டது. இதனை ஆவணமாக்க இராசேந்திர சோழீச்சுரர் திருக்கோயிலில் கல்வெட்டில் பதித்துள்ளனர்.

இவ்வாறு பெயர்மாற்றம் செய்த பின்னர் தங்கள் வணிகத்தையும், வளத்தையும் பெருக்கி இடம் பெயர்ந்தனர்.
குளந்தை மாநகர் இங்குள்ள பெரிய கோயிலில் உள்ள செவ்வேளுக்குக் ~~குழந்தை வேலநாத சுவாமி~~ என்று பெயர் உண்டு. அவ்விறைவன் குழந்தை வடிவினன் ஆதலின் அப்பெயர் அழைக்கப்பட்டது. இராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயிலில் திருச்சுற்று மதில் வெளிப்பகுதியில்-கிழக்கு மூலையில் ஒரு கல்வெட்டு உள்ளது.

பிற்காலத்து இறையன்பரால் வெட்டுவிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் ~~குழந்தை~~ என்ற தொடர் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடைபயிலும் அச்சொல் இங்குள்ள முருகக் கடவுளுடன் இணைக்கப்பட்டுக் ~~குளந்தை வேலநாத சுவாமி~~ எனவும், முன் ஒட்டில் உள்ள ~~குளந்தை~~-ஊர்ப்பெயராகவும் நூல்வழியில் சிறப்பிக்கப்படுகின்றன..

கல்வெட்டு பார்வையில் பெரியகுளம்

1….கோமாறபன்ம..வனச்சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியற்கு யாண்டு ~கரு~-வது அருளியச் சொல்..ள நாடடு ~~ஆலங்குளமான~~தெசிய-முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்-முருகன் கோயில் கருவறை மேற்குச்சுவரில் அமைந்துள்ளது.

2.சுந்தரபாண்டியன் தேவற்கு யாண்டு பதின் ஏழாவதின் எ(தி) ராமாண்டின் எதிராமாண்டு மார்கழி மாதம் எறிபடைநல்லூர் நாயனார் கணக்க பண்டாரிகளொடும் ~~ஆலங்குளத்தில்~~ நாயனார் எழுந்தருளியிருந்து-முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்-கயிலாயநாதர் கரடு உய்யவந்த ஈச்சமுடைய நாயனார் திருக்கோயில் அடிச்சுற்று.

3.கோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியர்க்கு யாண்டு ~~உகா~ வது மேனெடுங்குளநாட்டு ஆலங்குளமான தேசிய வீரபட்டினத்து-குலசேர பாண்டியன்-இராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயில் மேற்கு அடிச்சுற்று

4.விரோதிகிருது வருடம் தை ~க0~ ஆம் தேதி நெடுங்குள நாட்டுப் பெரியகுளத்து நாயனார்-இம்மடி வயிறு நாயக்கர்-கோயில் மேற்குச் சுவர்மேல் குமுதம் என பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம்.
தற்பொழுது பெரியகுளத்தின் மேற்கு பகுதியில் பெரியகுளம் ஒன்று உள்ளது. அந்த பெரியகுளம் தான் ஊர்ப்பெயராக அமைந்துள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

மூலம்: வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம் | பெரியகுளம் (myperiyakulam.blogspot.com) By Senthil