மூலன்‌ குலம்‌ – கவறை மன்றாடி

மூலன்‌ என்பது சங்க காலத்தில்‌ வழக்கிலிருந்த தொன்மையான பெயர்‌. மூலனார்‌, மாமூலனார்‌, ஆவூர்‌ மூலன்கிழார்‌, ஐயூர்‌ மூலன்‌ கிழார்‌ என்பன போன்ற பல பெயர்களைச்‌ சங்க இலக்கியங்களில்‌ காணுகின்றோம்‌. ஆதி சைவ நூலாகிய திருமந்திரத்தை எழுதியவர்‌ திருமூலர்‌. திரு என்பது சிறப்பு அடைமொழி. அவர்‌ பெயர்‌ மூலர்‌ என்பதேயாகும்‌.

நல்‌. நடராசன்‌ கொங்கு வேளாளரில்‌ ““மூத்த குடியினர்‌, முதன்மைக்‌ குடியினர்‌” மூல குலத்தார்‌ என்று கூறுகிறார்‌. மூல குலத்தாரில்‌ ‘கவறை மன்றாடி: என்பவர்‌ ஒருவர்‌ இருந்ததாகவும்‌, அவர்‌ தனக்குரிய அன்னக்கொடியை ஏற்றினார்‌ என்றும்‌ கூறப்படு கிறது. எனவே மூல குலத்தலைவருக்கு அன்னக்கொடி” இருந்தது என்று கூறப்படுகிறது. பழைய கோட்டைப்‌ பயிரகுலச்‌ சர்க்கரை

மன்றாடியார்க்கும்‌ அன்னக்கொடி உண்டென்று கூறப்படுகிறது.

நல்‌. நடராசன்‌, மோகனசுந்தரம்‌, தே.ப. சின்னசாமி ஆகியோர்‌ பழையகோட்டைப்‌ பயிர குலத்தார்‌ மூல குலத்தாரைத்‌ தாக்கி அன்னக்‌ கொடியைக்‌ கைப்பற்றியதாகவும்‌ அதனால்‌ மூலகுலத்தார்‌ தங்கள்‌ காணியாட்சியூராகிய மூலனூரை விட்டு வெளியேறிக்‌ கொங்கு நாட்டின்‌ பல பகுதிகளுக்குச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌. அவர்கள்‌ கூறியபடியிருந்தால்‌ மூலனூரில்‌ பயிர குலத்தார்‌ காணி கொண்டிருக்கவேண்டும்‌. அங்கு பயிரன்‌ குலத்தார்‌ காணியாளராக இல்லை. கொங்கு வேளாளரில்‌ போர்‌ செய்து மற்றவர்‌ காணியைக்‌ கைப்பற்றியதாக ஒரு ஆதாரம்‌ கூட இல்லை. மூலன்‌, பயிரன்‌ இருவரும்‌ அன்னக்கொடியைத்‌ தங்கள்‌ கொடியாகக்‌ கொண்டிருக்கலாம்‌.

றுகிறார்‌. அவர்‌ திருமந்திரம்‌ எழுதிய திருமூலர்‌ கொங்கு வளாளரில்‌ மூல குலத்தைச்‌ சேர்ந்தவர்‌ என்றும்‌, அவர்‌ வழி ந்தவர்களே கொங்கு வேளாளரில்‌ மூல குலத்தார்‌ என்றும்‌ றுகிறார்‌. பெருமாநல்லூர்‌, அவிநாசி, மூலனூர்‌, புதுப்பாளையம்‌ முதலிய ஊர்கள்‌ மூலன்‌ குலத்தார்‌ காணியூர்கள்‌ என்று கூறப்படுகிறது.

தென்கரை நாட்டின்‌ மூலனூரில்‌ முதல்‌ காணியாளர்கள்‌ மூல (கூலத்தார்‌ ஆவர்‌.

‘மூலகுல சேரிலான்‌ முன்பூசன்‌ செட்டியுடன்‌

சீலமிகு கம்பளத்தான்‌ சீராளன்‌ – மூலநகர்க்‌

காணிகொண்ட செல்வக்‌ கருணை தழைத்தோங்க

வேணமுதன்‌ மையைந்து மே: என்பது மூலனூர்க்‌ காணிப்பாடலாகும்‌. அமராவதியாற்றில்‌ அணைகட்ட எதிர்ப்பு

மதுரை நாயக்கர்‌ காலத்தில்‌ கொங்கு 24 நாட்டு அதிகாரியாக இருந்த வீரப்பராயர்‌ அனுமதியுடன்‌ மூலனூர்ப்‌ பூசகுலத்‌ தொண்டை மானும்‌ சங்கரண்டாம்பாளையம்‌ வேணாடுடையாரும்‌. அமராவதி யாற்றில்‌ அணை கட்ட முயற்சி செய்தனர்‌. மூல குலத்தாளி தலைமையில்‌ சேரிலான்‌ குலத்தார்‌. குழாய குலத்தார்‌, கம்பளத்தான்‌, காவுலவன்‌ (வேட்டுவர்‌) ஆகியோர்‌ தங்கள்‌ படையோடு வந்து எதிர்த்தார்கள்‌ – விவாதம்‌ செய்தனர்‌. யார்‌ சொல்லியும்‌ சமாதானம்‌

ஆகவில்லை. மதுரை நாயக்கரிடம்‌ வழக்குச்‌ சென்றது.

மீனாட்சியம்மன்‌ சன்னதியில்‌ இரு சாரார்‌ பெயரையும்‌ சீட்டு எழுதிப்போட்டு எடுக்க முடிவு செய்ததில்‌ மூல குலத்தார்‌ அணிக்குத்‌ தோல்வி ஏற்படுகிறது. தென்கரை நாட்டுப்‌ பட்டயம்‌ கீழ்வருமாறு கூறுகிறது. 

்‌ முந்தி அந்த மூல குலத்தாளி வகையராப்‌ பேர்களை ஸ்தானஞ்‌ செய்து சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை ஆகும்போது உங்களுடைய சீட்டை வையுங்கள்‌. நீங்கள்‌ மாலை சந்தனம்‌ போட்டுக்கொண்டு யிடம்பிரி வலம்பிரி சுத்தி வந்து நீங்கள்‌ யெடுங்கள்‌. உங்களுக்கே அந்த சீட்டு வந்தால்‌ நீங்களே அணைகட்டலாமென்று சொன்னார்கள்‌.

யிவர்கள்‌ அந்தப்படிக்கி நேம நிஷ்டையாய்‌ வந்து கோயிலுக்குள்‌ போயிக்‌ கும்பிடும்‌ போது சுவாமியிடத்‌ திலிருந்த தீபம்‌ மறைஞ்சு போச்சுது. பின்னும்‌ சர்ப்பமானது

சுவாமியிடத்திலிருந்து குறுக்கே விழுந்தது. பின்னும்‌

அநேக காரியம்‌ உண்டாச்சுது”

என்பது தென்கரை நாட்டுப்‌ பட்டயச்‌ செய்தியாகும்‌. தொண்டை

மான்‌, வேணாடுடையார்‌ பேருக்குச்‌ சீட்டு வந்தது. கல்வெட்டுகள்‌

பெருமாநல்லூரின்‌ பழைய பெயர்‌ ஒத்தனூரான பெரும்பழன நல்லூர்‌ என்பதாகும்‌. பெரும்பழனம்‌ என்றும்‌ கூறப்பட்டது. அங்குள்ள உத்தம சோழீசுவரர்‌ கோயிலில்‌ மூலன்‌ குலத்தாரின்‌

இரண்டு கல்வெட்டுகள்‌ கிடைத்துள்ளன.

வீரபாண்டிய தேவனின்‌ ஆறாவது ஆட்சியாண்டில்‌ (1271) ஒத்தனூர்‌ ஆன பெரும்பழனத்து வெள்ளாளன்‌ மூலரில்‌ அவிநாசி முதலியான சோழ நாராயணக்‌ காமிண்டன்‌ பெருமாநல்லூர்‌ உத்தம சோழீசுவரமுடையார்‌ கோயிலில்‌ தீபம்‌ வைக்க ஒரு அச்சு பொற்காசு கொடுத்தார்‌. இவ்வாறு பொன்‌ மூலப்‌ பொருள்‌ வைத்து எரிக்கும்‌ விளக்கு நந்தா தீபம்‌, சந்தியா தீபம்‌ என்றுதான்‌ கூறப்பெறும்‌ இக்கல்வெட்டில்‌ ‘தூப தீபம்‌” என்று கூறுவது அரிய செய்தியாகும்‌.

மூல குல சோழ நாராயணக்‌ காமிண்டன்‌ அவினாசி ஊர்த்‌ தலைவராக இருந்துள்ளார்‌. அதனால்‌ அவர்‌ “அவிநாசி முதலி’ என்று

அமழைக்கப்பட்டுள்ளார்‌. இவர்‌ சோழ அரசின்‌ அதிகாரியாக இருந்துள்ளார்‌. காமிண்டன்‌ பட்டம்‌ பெற்றவர்‌.

மதுரை திருமலை நாயக்கர்‌ ஆட்சிக்காலத்தில்‌ (1635) பெருமாநல்லூர்‌ காணியுடைய மூல குலம்‌ முத்தையன்‌ என்பவர்‌ பெருமாநல்லூர்ச்‌ சந்தையில்‌ கிடைத்த வருவாயைக்‌ கோயிலுக்கு அளித்ததை ஒரு கல்வெட்டுக்‌ கூறுகிறது. மூல குல உத்தமன்‌ ஊர்‌ அதிகாரியாக இருந்திருக்க வேண்டும்‌. இதைக்‌ குறிக்கும்‌ கல்வெட்டு வாசகம்‌ கீழே கொடுக்கப்படுகிறது.

“யூவ வருஷம்‌ சித்திரை மாதம்‌ ஸ்ரீமத்‌ ராமப்பய்யரவர்கள்‌ காரியத்துக்குக்‌ கர்த்தரான சிதம்பரநாத பிள்ளை பாறபத்தியத்தில்‌ வடபரிசார நாட்டு ஒத்தனூரான பெரும்பழனத்து காணியுடைய வெள்ளாளர்‌ மூலர்களில்‌ உத்தமன்‌ மேற்படியூர்‌ சந்தையில்‌ மகமை கண்ட ஆதாயம்‌ சுவாமி உத்தம சோழீசுரமுடையார்க்கு அபிஷேக நெய்‌ வேத்தியம்‌ நந்தாதீபம்‌ சந்தியாதீபத்துக்கு அளித்த தன்மம்‌ பரிபாலனமாக நடத்தின பேரெல்லாம்‌ காசி ராமேசுவரம்‌ சேவித்த பலன்‌ பெறுவாராகவும்‌, இந்த தன்மம்‌ விலக்கினவர்கள்‌ கங்கைக்‌ கரையில்‌ காராம்பசு, பிராமணன்‌ மாதா, பிதா, குரு இவர்கள்‌ அஞ்சு பேரையும்‌ கொன்ற தோஷத்திலே போகக்கடவாராகவும்‌.”’