செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை …… நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் …… பெருமாளே.
செட்டி என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
செட்டி என்று வனம் மேவி
இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே.
செட்டி என்று சிவகாமி தன் பதியில் … வளையல் செட்டி
வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில்,
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) … கைகள் சிவக்க,
வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே …
மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான
மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
செட்டி என்று வனம் மேவி … வளையல் செட்டியின் வேடத்துடன்
நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,
இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக …
அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே. …
அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும்
பெருமாளே.
முழு பாடல்:
சிதம்பரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 479 – வாரியார் # 639 )
கட்டி முண்டக முன் திருப்புகழ் அடுத்த திருப்புகழ்
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன …… தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி …… மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ …… டசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத …… முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு …… புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு …… முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் …… விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை …… நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் …… பெருமாளே.