சங்க கால சங்கு வளையல் வணிகம்

சங்குக்குத்‌ தமிழ்‌ பெயர்‌ வளை என்பது. தமிழகத்தின்‌ மூன்று பக்கங்களிலும்‌ கடல்‌ சூழ்ந்திருந்த படியால்‌ வளை அதிகமாகக்‌ கிடைத்தது. சங்குகளில்‌ இடம்புரிச்‌ சங்கு என்றும்‌ வலம்புரிச்‌ சங்கு என்றும்‌ இருவகையுண்டு. வலம்‌ புரிச்‌ சங்கு கிடைப்பது அருமை. ஆகையால்‌ வலம்புரிச்‌ சங்குக்கு விலையதிகம்‌. சங்குகளை வளைகளாக அறுத்து வளை யல்‌ செய்தார்கள்‌. அக்காலத்துத்‌ தமிழ்‌ மகளிர்‌ எல்லோரும்‌ சங்கு வளைகளைக்‌ கையில்‌ அணிந்தார்கள்‌. கண்ணாடி வளை யல்‌ அணிவது அக்காலத்து வழக்கம்‌ அல்ல. சங்குவளை யணிவது மங்கலமாகக்‌ கருதப்பட்டது. அரண்‌ மனையில்‌ வாழ்ந்த அரசகுமாரிகள்‌ முதல்‌ குடில்களில்‌ வாழ்ந்த ஏழை மகள்‌ வரையில்‌ எல்லோரும்‌ அக்காலத்தில்‌ சங்கு வளைகளை அணிந்தார்கள்‌ . ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல்‌ உண்டாக்கும்‌ தொழில்‌ அக்காலத்தில்‌ சிறப்‌ பாக நடந்தது. கடல்களிலிருந்து சங்குகள்‌ எடுக்கப்பட்டன.

கொற்கைக்‌ கடலில்‌ முத்து உண்டானது போலவே சங்குகளும்‌ உற்பத்தியாயின. பரதவர்‌ கடலில்‌ முழுச்‌ சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி ஊருக்குத்‌ தெரி வித்தார்கள்‌ . “இலங்கிரும்‌ பரப்பின்‌ எறிசுரா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில்‌ பரதவார்‌ ஒலிதலைப்‌ பணிலம்‌ ஆர்ப்பக்‌ கல்லெனக்‌ கலிகெழு கொற்கை: (அகம்‌, 350: 11-14) (வலம்புரி-வலம்புரிச்‌ சங்கு, பரதவர்‌-கடற்கரையில்‌ வசிக்கும்‌ நெய்தல்‌ நிலமக்கள்‌; கடலில்‌ கப்பல்‌ ஒட்டுவதும்‌ முத்து சங்குகளைக்‌ கடலில்‌ முழுகி எடுப்பதும்‌ இவர்கள்‌ தொழில்‌; பணிலம்‌ ஆர்ப்ப-சங்கு முழுங்க) : கொழ்கைக்‌ கடலில்‌ மட்டுமன்று, கடலில்‌ பல இடங் களிலும்‌ கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச்‌ சங்குகள்‌, இடம்புரிச்‌ சங்குகள்‌) சிறு வாளினால்‌ அறுத்து அரத்தினால்‌ அராவி அழகான வளையல்களைச்‌ செய்‌ கார்கள்‌. “வல்லோன்‌ வாளரம்‌ பொருத கோணேர்‌ எல்வளை”

(நற்றிணை, 77: 8-9)

வளையல்களில்‌ கொடிகள்‌ பூக்கள்‌ வரிக்‌ கோடுகள்‌ முதலியவை அமைத்து அழகாகச்‌ செய்யப்பட்டன. வளையல்‌ அறுக்கும்‌ கொழில்‌ ஆங்காங்கே நடந்தது. சங்கச்‌ செய்யுள்களில்‌ . இத்தொழில்‌ கூறப்படுகின்றது. அரம்போழ்‌ அவ்வளை” (ஓங்குறுநூறு, நெய்தல்‌ 106) “கடற்கோடு அறுத்த அரம்‌ போழ்‌ அவ்வளை” (ஐங்குறு, வளைபத்து 28) “கோடீர்‌ எல்‌ வளை” (ஐங்குறு, வளைப்பத்து) “கோடீர்‌ இலக்குவளை”: (குறும்‌, 31:5) (கோடு-சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத்‌ தொழில்‌ செய்தவர்களுக்கு வேளாப்‌ பார்ப்பான்‌ என்று பெயர்‌ .

“வேளாப்‌ பார்ப்பான்‌ வாள்‌அரம்‌ துமித்து

வளைகளைந்‌ தொழிந்த கொழுந்து

(அகம்‌, 34: 1-8)

 

வேளாப்பார்ப்பான்‌ என்பதன்‌ பொருள்‌ வேள்வி செய்யாத பார்ப்பான்‌ என்பது. அதாவது லிசுவப்‌ பிரா மணர்‌. சங்குகளை வளையாக அறுக்கும்‌ தொழிலும்‌ சங்கு வளைகளை விற்கும்‌ தொழிலும்‌ அக்காலத்தில்‌ இறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில்‌ சங்கறுக்கும்‌ தொழில்‌ நடந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில்‌ ஒரு வீஇயில்‌ சங்குகளை வளையல்களாக அறுக்மும்‌ தொழில்‌: நடந்தது.” “அணிவளை போமுநர்‌ அகன்பெரு வதியும்‌” (சிலம்பு, : 5-47) சோழ இட்‌ இ வஞ்சிமா நகரத்தில்‌, “இலங்கரம்‌ பொரூஉம்‌ வெள்வளை போழ்நரோடு அலங்குமணி வினைஞர்‌ இரீடுய மறுகும்‌” (மணிமே, 28:.44-45) இருந்தன.

சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர்‌ நாக ரிகமாகக்‌ கருதினார்கள்‌. அன்றியும்‌ , அது மங்கலமாகவும்‌

கருதப்பட்டது. கைம்‌ பெண்கள்‌ தவிர ஏனைச்‌ சுமங்கலிப்‌ பெண்கள்‌. எல்லோரும்‌ சங்கு வளைகளை அணிந்தார்கள்‌ “அணிவளை முன்கை ஆயிமை மடந்தை: (அகம்‌, 361:4) “சின்னிரை வால்வளைக்‌. குறுமகள்‌” (குறும்‌, 789:6) “வளைக்‌ கை விறலி: (புறம்‌, 1/285:4) “வல்லோன்‌. வாளரம்‌ பொருத கோணேர்‌ எல்வளை அசன்தொடி செறித்த முன்கை” (தற்‌, 77: 8-70) என்றெல்லாம்‌ சங்க நூல்களில்‌ அக்காலத்து மகளிர்‌ வளையணிந்திருந்ததா கூறப்படுகின்றன. ‘ சொக்கப்‌ பெருமான்‌ வலாயல்‌ விற்றதாகத்‌ திருவிளையாடல்‌ புராணத்‌ தில்‌ (வளையல்‌ விழ்ற படலம்‌) கூறப்படுகின்றது. இடம்புரிச்‌ சங்கினால்‌ செய்து வஃாயல்களைச்‌ சாதாரண நிலையில்‌ உள்ள பெண்கள்‌ அணிந்தார்கள்‌. வலம்புரிச்‌ சங்குகள்‌ விலைய இத மானபடியால்‌ செல்வச்‌ சமாட்டிகளும்‌ இராணிகளும்‌ அணித்‌ தார்கள்‌. செல்வ மகளிர்‌ போ ற்றோடு (பொன்‌ வளையல்‌) அணித்து அதனுடன்‌ வலம்புரிச்‌ சங்கு வளையலையும்‌ அணித்‌ கார்கள்‌. தலையாலங்கானத்துச்‌ செருவென்ற பாண்டியன்‌ நெடுஞ்செழியவுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கை களில்‌ தங்க வளைகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச்‌ சங்கு வளையையும்‌ அணிந்திருந்தார்‌.

“பொலத்தொடி தின்ற மயிர்வார்‌ முன்கை வலம்புரி வளயொடூ கடிகைநூல்‌ யாத்து” (தெடுநநெல்வாமை…, 7471-1423) என்று நெடுநெல்வாடை, கூறுகின்றது. கவிரிப்பூம்பட்டிவத்‌ தில பேர்போன செல்வச்‌ சீமானாக இருந்த மாநாய்கன்‌ மகளான கண்ணகியும்‌ வலம்புரிச்‌ சங்கு அணிந்தியந்தாளன்‌” மதுரையில்‌. கோவலனை இழந்து லகைம்பெண்‌ ஆலாபபேப து கண்ணகி தன்‌ கைகளில்‌ அணிந்திருந்த சங்கு . வாயைக்‌ கொற்றவைக்‌ கோயிலின்‌ முன்பு தகர்த்து உடைத்தான்‌ ள்‌ சிலப்பதிகாரம்‌ கூறுகின்றது. கொற்றவை வாயிலில்‌ டுபாற்றொடி தகர்த்து (கட்டுரைக்‌ காதை, 781) (பொம்‌ ரொடி-பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உடை). ….. மணமகன்‌, தான்‌ மணக்க இருக்கும்‌ மணமகளுக்குச்‌ சங்குவளை கொடுப்பது அக்காலத்து வழக்கம்‌. சங்குவளை அணியும்‌ வழக்கம்‌ தமிழகத்தில்‌ மட்டுமல்லமல்‌, பாறகு நாடு முழுவதிலும்‌ அக்காலத்தில்‌ இருந்தது. இற்றைக்கு 2000 அண்டுகளுக்கு முன்லோ சிந்து வெளியில்‌ இருந்து ஹரப்பா நகரத்துத்‌ இராவிட நாகரிக மகளிரும்‌ சங்கு வளை சு அணிந்திருந்தனர்‌ என்பது அ. ங்க அகதழ்ந்கெடுக்கப்பட்ட மனித எலும்புக்‌ கூடுகளுடன்‌ சங்கு வவைகஞும்‌ இருந்த தகுனால்‌ அறிகி3ர ம்‌.* கொற்கை காவிரிப்பூம்பட்டினம்‌ உறையூர்‌ முதலான அவர்களில்‌ நிலத்தை அகழ்த்தெடுத்தபோது அங்‌ திருந்து கிடைத்த பழம்‌ பெரருள்களுடன்‌ உடைந்து போன சங்கு வளையல்‌ “துண்டுகஷம்‌ கிடைத்துலா. இதனால்‌, சங்க செய்யுட்களில்‌ கூறப்படுகிற அக்காலத்து மகளிர்‌ சங்குவளை களை அணிந்திருந்தனர்‌ என்னும்‌ செய்தி வலியுறுகின்றது . சங்கு முழங்குவது மங்கல ாாகக்‌ கருதப்பட்டது. கோயில்களிலும்‌ அரண்மனைகளிலும்‌ சங்கு ஊறுவது வழக்‌ கம்‌. அரண்மனைகவிலே காலை வேளையில்‌ முரச கொட்டியும்‌ சங்கு முழங்கியும்‌ அரசரைக்‌ துபிலெழுப்பினார்கள்‌. அரண்‌ மனைகளில்‌ வலம்புரிச்‌ சங்கு காலையில்‌ முழங்கியதை , “தூக்கணங்‌ குரீடுத்‌ தூங்கு கூடேய்ப்ப ஒருசிறைக்‌ கெளீஇய திரிவாய்‌ வலம்புரி

ஞாலங்‌ காவலர்‌ கடைத்தலைக்‌ காலைத்கோளன்றினும்‌’ (புறம்‌, 325: 17-74) என்றும்‌ , “மறத்துறை விளங்கிய மன்னவன்‌ கோயிலும்‌ வால்‌ வெண்‌ சங்கொடு வகைபெற்‌ ஜரோங்கிய காலை முரசங்‌ கனைகுரல்‌ இயம்ப” (சிலம்பு, 74; 72-14) என்றும்‌ கூறுவதனால்‌ அறிகின்றோம்‌. (கோயில்‌-அரண்மனை .) பற்பல நூற்றாண்டுகளாக மகளிர்‌ சங்கு வளைகளை அணிந்து வந்த வழக்கம்‌ சமீபகாலம்‌ வரையில்‌ இருந்தது. இ.பி. 78 ஆம்‌ நூற்றாண்டு முதல்‌, முஸ்லீம்‌ தொடர்பு ஏற்‌ பட்ட பிறகு கண்ணாடி. வளையல்‌ அணியும்‌ வழக்கம்‌ ஏற்‌ பட்டது. ஆகவே பழைய சங்கு வளை அணியும்‌ வழக்கம்‌ பிற்காலத்தில்‌ மறைந்து போயிற்று. சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும்‌ தொழிலும்‌ சங்குகளை வளையல்களாக அறுக்கும்‌ தொழி லும்‌ வளையல்‌ விற்கும்‌ வாணிகமும்‌ மகளிர்‌ வளையல்‌ அணிந்த வழக்கமும்‌ இருந்தன. காதுகளில்‌ சங்குக்‌ குழையணிவதும்‌ விரல்களில்‌ சங்கு மோதிரம்‌ அணிவதும்‌ கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.