சங்க காலத்திற்கு (ழன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் சங்கெடுத்தல் நிகழ்ந்து வந்திருக்க வேண்டும் என்பதைச் சங்க இலக்கியங்களும், அகழாய்வுகளும் மெய்ப்பிக்கின்றன. அக்காலத்தில் தமிழகக் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற சங்கு குளித்தலைப் பற்றி வெளிநாட்டுப் பயணியரின் குறிப்புகள் எதுவும்… காணப்படவில்லை. எனினும் முத்துக்குளித்தலைப் பற்றி அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். சங்கெடுத்தல், முத்துக்குனித்தல் ஆகிய இரு தொழில்களையும் பரதவர்கள் மேற்கொண்டதாலும், சங்கைவிட முத்து மிக மதிப்புள்ளதாலும் அவர்கள் சங்கு குளித்தல் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டனர் என்று கூறலாம். மேற்கண்ட சான்றுகளில் பண்டைய தமிழகப் பகுதியில் சங்கெடுப்போர், தொழிலின் உடைமையாளர், வணிகம் பற்றிய செய்திகளைக் காண இயலுகிறது.
௦கரவம்சம் என்னும் பாளி மொழி நூல் பல இடங்களில் சங்கு பற்றிய குறிப்புகளைத் தருகிறது. இந்நூலில் தேவானம்பிரிய தஇசன் (8.மு.250-௫.மு.210) என்னும் இலங்கை அரசன் அசோகருக்கு அன்பளிப்பாக அனுப்பிய விலை உயர்ந்த பொருட்களில் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது”. எனவே இலங்கைப் பகுதியில் நடைபெற்ற சங்கெடுத்தல் இலங்கை மன்னன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது எனக் கருதலாம். மேலும் அத்ததசாஸ்தரம் கருவூலங்களில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியலில் பாண்டிய சவடஹ என்னும் பொருளையும் கூறுகிறது”. சாமா சாஸ்திரி பாண்டிய ௪வ.டஹ என்பதைப் பாண்டி௰ நாட்டிலிருந்து பெறப்பட்ட மணியாகும் எனக் கூறியுள்ளார். அக்காலத்தில் தமிழகத்தில் சங்கு என்னும் பெயர் வழங்கப்படாமல் கோடு, வளை, பணிலம் என்றே வழங்கப்பட்டது. ஆகையால் பாண்டிய நாட்டிலிருந்து பெறப்பட்ட கோடு என்பதை பாண்டிய கவடா என
அரத்தகரஸ்திரம் குறிப்பிட்டு இருக்கலாம். படகில் சங்கு பிடிக்கச் செல்வதற்கு அரசுக்குச் செலுத்தும் வாடகை எவ்வளவு என்பதையும் அச்த்சசசஸ்திரம் குறிக்கிறது. அவ்வாறாயின் சங்க காலத்திலிருந்தே பீகார் பகுதிக்குச் சங்குகள் பாண்டிய நாட்டிலிருந்து ஏற்றுமதியாயின என உறுதியாகக் கூறலாம். சங்க இலக்கியங்களில் சங்கெடுத்தல் மற்றும் முத்துக் குளித்தலைப் பற்றிய குறிப்புகள் ஏராளமான உள்ளன.
பரதவர்கள் சங்கெடுத்தல் மற்றும் முத்துக் குளித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை
விளைந்து முதிர்ந்த விழுமுத்தி
னிலங்கு வளையிருஞ்சேரி (2தரைககசஞ்ச? 135-136) எனக் குறிப்பிடுகிறது. சூல்முற்றி ஒளி முதிர்ந்த ரிய முத்தினையும் அதாவது, விளங்குகின்ற சங்கனையுமுடைய பெரிய சங்கு குளிப்பார் இருப்பினையும் உடைய கொற்கை ”” என்னும் மேற்கண்ட குறிப்பாலும்,
எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய
வான் திமில் பரதவர் (அகத.ரனுு 350:10:11). என்னும் கூற்றில் பரதவர் கொடிய சுறாக்களைத் தவிர்த்துச் சங்குகளை எடுக்கும் திறன் பெற்றிருந்தனர் என்னும் கூற்றாலும் தெளிவாகிறது. சென்ற நூற்றாண்டில் பரதவர்களின் 13 பிரிவுகளில் முத்துக்குளிப்போர் என்ற ஒரு பிரிவும் சங்கு குளிப்போர் என்ற ஒரு பிரிவும் இருந்தது என்னும் கூற்றிலிருந்து பரதவர் சங்க காலத்திலிருந்தே சங்கெடுத்தல் தொழிலில் ஈடுபட்பினார் எனக்கூறலாம்”.
ஆயினும் இத்தொழில் யாருடைய ஆளுகைக் கீழ் இருந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை. முத்துக் குளிப்போரையும், சங்கெடுப்போரையும், வளையல் அறுப்போரையும் கொண்ட கொற்கைத் . துறைமுகம் பாண்டியருடைய ஆட்சியின் கீழ் இருந்ததை மதுரை
கரஞ்ச)(133-138) சுட்டுகின்றது. ச]/பசணாறு/பை_ (55-56) கொற்கைப் பாண்டியரின் எல்லைக்கு உட்பட்டதாகக் கூறுகிறது. மேலும் பான் கெள (28௩ &௦ய) என்னும் சனப்பயணி முதலாம் நூற்றாண்டில் இந்தியப் பகுதியிலிருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஒரு முத்து ஏழு அங்குலம் அளவிருந்ததாகவும் தமது சீகென் ஹன் சென (75’12717181101:01) என்னும் நூலில் குறிக்கிறார்”. அது முத்தாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வெண்சங்கைக் குறிப்பதாகலாம். முத்துக் குளிக்கும் தொழில் பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது எனவும் அடிமைகள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் எனவும் பெறிப்ஞச குறிப்பிடுகிறது”. எனவே சங்குக் குளிக்கும் தொழிலும் பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும் சங்க காலத்தில் பாண்டியர் பெருவழுதி நாணயங்களில் சங்கு பொறிக்கப் பட்டுள்ளமை இதற்குப் பிறிதொரு சான்றாக அமைகிறது”. சங்க கால நகரங்களான கொற்கை, அழகன்குளம், ஆகுச்சநல்லார், கொடுமணல், பூம்புகார், அரிக்கமேடு, திருக்காம்புலியூர், அழகரை, உறையூர் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வில் அதிக அளவில் உடைந்த சங்கு வளையலகளும், சங்குக்கழிவுகளும் கிட்டின. சங்க காலத்தில் சங்குகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் எடுக்கப்பட்டன என்பதுடன் அதன் பயன்பாட்டையும் வணிக முக்கியத்துவத்தையும் இதன் வழி அறியலாம்.
உப்பு, முத்து, சங்கு, பவளம், இரத்தினக் கற்களைக் ‘ கடலிலிருந்து எடுக்கும்போது கடற்பொருட்களின் கண்காணிப்பாளர் பார்வையிட்டு வணிகத்தை முறைப்படுத்த வேண்டும் என ஆாததசரஎற்திரம் குறிப்பிடுகிறது”. முத்து, சங்குக் குளிக்க மன்னரது படகுகளைப் பயன்படுத்துவோர் நவ்காஒறாகு௯ம் (120162 பரவா!) எனும் படகு வாடகையை
அளிக்க வேண்டும் அல்லது ஒருவர் தனது சொந்தப் படகைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆர்த்தசரஸ்திரம் குறிப்பிடுகிறது” . இது குஜராத் கடற்பகுதியைக் குறிப்பத்தாகலாம்.
இலங்கைக்கு மேலுள்ள கண்டத்தில் மாரல்லோ (௨1௦) என்னுமிடத்திலிருந்து சங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக .பி.545ல் காஸ்மாஸ் (005105) என்னும் எகிப்து துறவி கூறுகிறார்… அவர் குறிப்பிடும் பகுதி தமிழகக் கடற் பகுதியைக் குறிப்பதாகலாம்.
இதற்குப் பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டோரைப் பற்றிய குறிப்பைத் இளை லை ,தரறிறறு.ம். ப தெரிவிக்கிறது.
பெருங்கடல் வெண்சங்கு காரணமாய் பேணா
திருங்கடன் மூழ்குவர் (தணைமசலைதரற்றைம் புது 33) பெருங்கடல் வெண்சங்கு பெறுதல் காரணமாகத் தங்களுயிரைப் பாதுகாவாது கடலினுள்ளே குளிப்பார்” என்று பரதவரைக் குறிக்கிறது. ஆயினும் இத்தொழில் வணிகம், ஆளுமை குறித்த சான்றுகள் ஏதும் அதில் இல்லை. இத்தொழில் அக்கடற்கரைப் பகு… . ஏண்ட மன்னர்களின் ஆளுகையின் இழ் இருந்திருதத-: வண்டும். 10ஆம் நரற்றரண்டில் முதலாம் பராந்தக. அம்பரம் நடராசர் கோயிலுக்குப் பொன்கூரை வேய முழு. விலை உயர்ந்த முத்துக்களை அளவித்ததையும், முதலாம் இராசேந்திர சோழன் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முத்துக்கள் பரிசவித்ததை நோக்கும் போது இக்கடற்கரைப்பகுதி சோழர்களின் ஆளுகையின் கீழிருந்தது எனலாம்”. ஆயினும் அச்சமயத்தில் இத்தொழில் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கழ் இல்லாமல் இருந்ததை முதலாம் குலோத்துங்கன் முத்தின் ் சலாபத்தை வென்றான் என்னும் மெய்க்கீர்த்தியின் கூற்
அறியலாம்”. இச்சமயத்திலேயே மன்னார் வளைகுடாப் பகுதயில் நடைடுபற்ற சங்கு குளித்தல் தொழிலும் இவர்கள் ழ் வத்திருக்க வேண்டும். ஆனால் இத்தொழில் பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது என்பதற்குப் பக்தி இலக்கியங்களில் சுட்டப்பெறும் சங்கு வகைகளும் அணிகலன்கள் ஆகியனவும் இடைக்காலத்தில் கோயில்களில் அளிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த சங்குகளும் சான்றாக அமை௫ன்றன”. ரெய்னாட் (1241ம00) என்பார் கி.பி.8517இல் இலங்கைக்கு வருகைபுரிந்த பொழுது சங்கு ஏற்றுமதித் தொழில் நடைபெற்றதைக் குறித்துள்ளார்”. இலங்கையைப் பற்றிய குறிப்புகள் எழுதிய சுலைமான் (கயிவ்ாபா) மற்றும் அபு ஜெய்த் (கம சீல், இ.பி, 976) என்பாரும் இலங்கைக் கடற்பகுதியில் நடைபெற்ற சங்கெடுத்தல் மற்றும் முத்துக் குளித்தலைப் பற்றிக் குறிப்.பிடுகன்றனர்”.
இடைக்காலப் பாண்டியர் ஆளுகைக்குட்பட்ட மன்னார் வளைகுடாப்பகுதியில் எடுக்கப்பட்ட முத்து சீனாவிற்கும் அரேபியாவிற்கும் வணிகப் பொருட்களாக எடுத்துச் செல்லப்பட்டது என்பதை செள-ச-குவா ((1௩3ஊட]ம41:9 கி. பி. 1225), மார்கோபோலோ (0421002010, இ.பி.1260-1300), ஜான் மான்டே கார்வினோ (௦17௩ ௦7 18௦142001717௩௦ இ.பி. 7292-3) ஆகியோர் குறிப்பிடுகன்றனர்’. எனவே, சங்கெடுத்தலும் பாண்டியரின் 8ழ் இருந்தது எனலாம். மேலும், வாங் த-யுவான் (வாத 1 3-ப்பு கிபி.1330) இக்கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற முத்துக் குளித்தலைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறினாலும் சங்கு குளித்தல் பற்றிய குறிப்புகள் எதனையும் அளிக்கவில்லை”. இக்காலகட்டத்தில் மன்னார்வளைகுடாப் பகுதியில் வணிகர்களாகக் குடியேறிய அரேபியர்களும் இத்தொழிலில் ஈடுபட்டனர். இதனால் இத்தொழிலில் இந்து பரதவருக்கும், இசுலாமியருக்கும் இடையே போட்டி நிலவத் தொடங்கியது. 75-76ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத் தொடக்கத்தின்போது இராமேஸ்வரம் பகுதி சேதுபதி மன்னர்களிடம் இருந்தது. எனவே சங்கு குளித்தலில் கிடைக்கும் வருவாயைச் சேதுபதி மன்னர்கள் தொடர்ந்து அனுபவித்து வந்தனர். ஆனால் காயல்பட்டினம் பகுதியில் பரதவர், இசுலாமியர் இடையே நடைபெற்ற . போட்டியால் மன்னரின் ஆதரவாளர்களான இசுலாமியர் முத்து எடுத்தலிலும் சங்கெடுத்தலிலும் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் நசுக்கப்பட்ட பரதவர்கள் 1523இல் போர்த்துக் தசியரின் உதவியை நாடினர். இவர்களில் பெரும்பாலோர் இருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதோடு, முத்துக் குவித்தலிலும் சங்கு குளித்தலிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. …..ணேம் இவர்கள் கடற்பகுதியில் மட்டும் ஆளுகை செலுத்தியதால் காலந்தோறும் போர்த்துக்கசேயரின் ௮2-௮௦ வேறுபட்டு இருந்ததைப் பல்வேறு சான்றுகளால் அறியலாம். போர்த்துக்&சியர்கள் முத்துக் குளித்தலில் கிடைக்கும் வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அப்பகுதியில் உள்ள முத்துக் குளிப்போரிடமும் சங்குக் குளிப்போரிடமும் வரி வசூலித்தனர்’. புன்னைக்காயல் பகுதியில் 1543ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற சங்கெடுத்தலுக்காக ரூ.88,000 பணம் வரியாகப் பெற்றனர். எனவே தூத்துக்குடிக் கடல் பகுதியில் முத்துக் குளித்தலில் மட்டுமன்றி, சங்கு குளித்தலிலும் அவர்கள் வருமானத்தை எதிர்நோக்கனர்’
564ஆம் ஆண்டு முதல் 1578ஆம் அண்டு வரை இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமத்திலிருந்த முத்து மற்றும் சங்கு குவிப்பவர்கள் 20 கூறு சங்குகளை வரியாகப் போர்த்துக் கீசியர்களுக்கு அளித்தனர். 1595ஆம் அண்டில் இலங்கை : மன்னார் பகுதியிலிருந்த மீனவர்களிடமும் 40 கூறுகள் சங்கு வரியாகப் பெற்றனர்’. தூத்துக்குடிக் கடற்பகுதிகளில் கட்டிய சங்குகள் அனைத்தையும் வாங்கும் உரிமை 1558இலிருந்து போர்த்துக்கீசியரிடமே இருந்தது”. ஆயினும் அப்போதைய போர்த்துக்கிய மன்னர் இச்சட்டத்தை ரத்து செய்தார். எனவே போர்த்துக்்&சியரால் கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பரதவர்கள் சங்குகளை வாங்கி விற்பனை செய்யும் உரிமைபெற்று வங்கத்திற்கு அனுப்பி, க் உயர்வடைந்தனர் .
டச்சுக்காரர்கள் கிபி.1658இல் இலங்கைக் கடற்கரையைக் கைப்பற்றிய பின் வணிக இலாபத்தைக் கணக்கில் கொண்டு .7670இல் இந்திய வணிக நகரங்களுடனான அனைத்து வணிகப் பொருட்களின் . ஏற்றுமதி இறக்குமதியைத் தனது வசமாக்னர்; இவ்வணிகப் பொருட்களில் சங்கும் முக்கியமானதாகும். இதனால் சங்குப்பொருளின் வணிகத்தை ஏற்று நடத்திய வணிகர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்’. மேலும் 1670க்கு பிறகு வங்காளத்திற்கான மற்ற வணிகப் பொருட்களுடன் சங்கு ஏற்றுமதியையும் கழக்கந்தியக் கம்பெனியே ஏற்று நடத்இயது”. இக்கால கட்டத்தில் இலங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய கடல் பகுதியில் எடுக்கப்பட்ட சங்குகள் வங்காளத்திற்கு டச்சுக்காரர்களாலும் பின்னர் ஆங்கிலேயர்களாலும் மற்ற வணிகப்பொருட்களுடன் அனுப்பப்பட்டதை 17ஆம் நூற்றாண்டின் பலசார் தரகுறிப்பு. (941852 10/8)
சுட்டியுள்ளது’. க..பி.1644இல் பொக்கேரோ (1௦௦௦) எனும் போர்த்துக்கசுயர் எழுதிய சுவடியில் தாத்துக்குடியிலிருந்து சங்கு வங்கத்துற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அவற்றைக் கறுப்பு நிறத்தவர் வளையவல்களாகச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார் . தி.பி.7678இல் வருகைபுரிந்த ஜான் ஃபிரையர் (018 1௫௮) தாூத்துக்குடிப் பகுதியில் சங்குகள் ‘ பிடிக்கப்பட்டதாகவும், அதில் முத்து உருவாகும் எனவும் குறிப்பிடுகன்றார்’. இ..பி.1700இல் சங்கு, முத்து ஆகியன அதிக வருமானம் தரும் தொழிலாக இருந்தது. இக்கடல்பகுதியில் எடுக்கப்படும் : சங்குகள் யாவும் டச்சுக்காரர்களிடம் அளிக்கப்படவேண்டும் எனவும், அவ்வாறு அளிக்காமல் வேறு வணிகர்களிடம் விற்க முனைந்தாலோ அல்லது மறைத்து வைக்க முற்பட்டாலோ அவர்களைக் கொல்லவும் தயங்கவில்லை என ஃபாதர் மார்டின் (ஊன நர்காப்ற) குறிப்பிடுகிறார். இவற்றை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதக விலைக்கு வங்காளத்தில் விற்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்”. மேலும் இந்தியப் பகுதியில் கிடைத்த சங்குகளின் வணிகத்தையும் டச்சுக்காரர்களே மேற்கொண்டனர். இதற்கு முன்னர் வணிகர்களின் போட்டியினால் ஆண்டிற்காண்டு வங்காளத்தில் சங்கின் விலை மாறுபட்டிருந்தது. ஆனால் டச்சுக்காரர்கள் சங்கு வணிகத்தைச் சொந்தமாக்கியதால் இதன்விலை 1680கவில் கூடியது”.
சேதுபதி மன்னரின் ஜி.பி.1678ஆம் ஆண்டு செப்பேட்டில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களில் சங்கு குறிப்பிடப்படுகிறது. மேலும் பிழபொருட்களுடன் சங்கற்கும் வரி விதிக்கப்பட்டது என்பதனையும் குறிப்பிடுகிறது”. இக்குறிப்பினால் இராமநாதபுரம் கடல் பகுதியில் சங்கெடுக்கும்
உரிமை முழுவதுமாகக் : காலனியாதிக்கத்தின் லர் இல்லாதிருந்தது எனலாம்.
1727இல் ஹேமில்டன் (111௫00) என்பார் வணிகப் பொருட்களில் சங்கைப்பற்றியும், . வங்கத்தில் இவை வளையல்களாகச் செய்யப்படுவதாயும் கூறுகின்றார். 7770இல் ராய்னல் (1₹ஷ௩21) என்னும் போர்த்துக்கசியர் தூத்துக்குடியில் சங்கெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இச்சான்றுகளை நோக்கும்போது தாத்துக்குடி, இராமேஸ்வரம் ஆகிய கடல். பகுதிகளில் காலனியாதிக்கக் காலங்களில் சங்கெடுக்கும் உரிமை அரசியல் காரணங்களால் வேறுபட்டு வந்துள்ளது எனலாம். கடல் ஆளுமை போர்த்துக்க&கியர், டச்சுக்காரர்களிடம் இருந்திருந்தாலும் தமது வணிக நோக்கத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் தூத்துக்குடிப் பகுதியில் மதுரை நாயக்கருக்கும், நவாப் மன்னர்களுக்கும் சங்கெடுத்தலில் சில உரிமைகளை அவர்கள் அளித்து வந்துள்ளனர். இதே போன்று இராமேஸ்வரம் பகுதியில் நிகழ்ந்த சங்கு குளித்தலில் சேதுபதி மன்னர்களும் தமது பங்கைப் பெற்றனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. 78ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை .டச்சுக் கம்பெனியாருக்கும், மதுரையை ஆண்ட நவாப்பிற்கும் கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் இருந்துள்ளன. 1801ஆம் ஆண்டு நவாப் மன்னர்களிடம் இருந்து ஆங்கிலக் கஇழக்கிந்திய கம்பெனி மதுரையைக் கைப்பற்றிய பின் சங்கெடுக்கும் முழு உரிமையும் ஆங்கிலேயர் வசமானது. இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும், ஆங்கிலேயருக்கும் ‘ இராமேஸ்வரம் சிவகங்கைப் பகுஇயில் சங்கெடுப்பதில் போட்டி நிலவியது. ஆங்கிலேயர் காலங்களில் நிகழ்ந்த சங்கெடுத்தலின் வரலாறு பற்றிய . செய்திகளை ஹார்னல் தெளிவாகத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்’. இக்காலத்தில் சங்கெடுக்கும் தொழில் மற்றும் முத்துக்குளித்தல் அத்துறையின் கண்காணிப் பாளர்களின் ஆளுகையின் இழ் நடைபெற்றது. அரசு தாமாகவோ, அல்லது தனியாருக் இதனை வாடகையாகவோ அளித்தது. இம்முறை ஆண்டாண்டுக்கு மாறுபட்டுள்ளது. முத்துக்குளித்தல் தொழிலைவிடச் சங்கெடுத்தல் வருமானம் உள்ள தொழிலாக இருந்துள்ளது. ்… 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீன் துறைக் கண்காணிப்பாளராயிருந்த ஹார்னல், அவ்வருமானதீதை அறுதியிட்டுக் கூற முடியாது என்பார். மேலும் முத்துக் குளித்தலை விட்டு நிரந்தர வருமானம் கிடைக்கும் சங்குக் குளித்தல் மேன்மையானது என ஆங்கில அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதைக் கொண்டு, சங்கெடுக்கும் தொழிலில் கிடைக்கும் .நிரந்தர வருவாயை அறியலாம்”. விடுதலைக்குப் பின்னர் சங்கெடுக்கும் உரிமை மாநில .அரசுகளுக்கு விடப்பட்டு- சங்கெடுத்தல் நடைபெற்று வருகிறது. இராமேஸ்வரம்; கழக்கரைப் பகுதிகளில் சங்குக் குளிப்போர் மற்றும் வணிகர்களிடம் நிகழ்த்திய நேர்காணவலின்போது பல விவரங்கள் அறியப்பட்டன. 7978ஆம் ஆண்டுவரை சங்கு குளித்தல் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது. எனவே சென்னை முதல் குமரி வரையுள்ள -: கடலில் எடுக்கப்படும் சங்குகளை நீர்ழூழ்குபவரிடம் குத்தகை எடுப்போர் விலைக்குப் பெற்றனர். இவை ஓரிடத்தில் சேமிக்கப்பட்டு மொத்தமாக வங்காளத்துற்கு அனுப்பப்பட்டன. இழக்கரையில் கிட்டங்கி என்னும் இடத்தில் இராமேஸ்வரம் பகுதிகளில் எடுக்கப்படும் சங்குகள் சேமிக்கப் பட்டன. 1972க்கு.ப் பிறகு அரசு குத்தகை முறையை நீக்கச் சங்கு குளிப்போரிடம் தனித்தனியாக உரிமக்கட்டணம் பெறுகிறது. இதனால் சங்குகளை வாங்கும் வணிகர்கள் அதிகமாயினர். மேலும் சங்குகள் கிட்டாதபோது நீர்மூழ்குநதார் வருமானமற்று : இருந்தனர். குத்தகைதாரர்களின் தொழிற்கூடங்கள் அதரவற்றுப்போயின. தற்போது த.மிழகத்தில் குறைந்தது 15 சங்கு வணிகர்கள் பெரிய அளவிலான தொழிலை மேற்கொண்டுள்ளனர். கிடைக்கின்ற சங்குகளில் பெரும்பகுதியை எவ்.வித மாற்றமுமின்றி வங்காளத்திற்கு அனு.ப்.புகின்றனர்.