தமிழ் காட்டுக் கல்வெட்டுக்களில் சித்திரமேழி பெரியநாட்டார், வளஞ்சியர், பேரிளமையார், ஐஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார் போன்ற சில குழுக்களின் பெயர்கள் காணப்படுகன்றன. அதே போன்று “சங்கரப்பாடியார்” என்ற ஒரு குழுவும் குறிக்கப்படுகிற து. இக்குழுவினர் யாவர்? இவர்களின் பணி என்ன? என்பதைப் பற்றி காண்போம்.
சங்கரப்பாடியார் பற்றி வேறுபட்ட கருத்துக்கள்
ஒரு ஈகரத்தில் சைவர்கள் வாழும் இடத்துக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் சங்கரப்பாடி என்பதாகும் என்று திரு. இருஷ்ண சாஸ்திரி என்பார் கூறியிருக்கிறார்.! இரு. நீலகண்ட சாஸ்திரியார் தமது “சோழர்” என்னும் நூலில் சங்கரப்பாடியார் என்போர் கோயில்களில் விளக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்தனர் என்றும் குறிப்பாகக் கோயில் வீளக்குகளுக்கு எண்ணை அளிக்கும் பணியைச் செய்து வந்தனர் என்றும் கூறிவீட்டு, அவர்கள் ஒரு குழுவாகவும் வாழ்ந்திருக்கன்றனர் என்பதும் ஒரு சல கச் வெட்டுக்களால் புலனா கின்றன” என்று எழுதியுள்ளார். கோயில்களில் விளக்கேற்றும் பொறுப்பைச் சங்கரப்பாடியார் மேற்கொண்டிருக்தனர் என்பதைத் திரு. டி. வி. மகாலிங்கம் அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.* டாக்டர் நாகசாமி அவர்கள், மணிக்கிராமத்தார், நாகாதேசி போன்று சங்கரப்பாடியாரும் வியாபாரக் குழுவினர் என்று கூறியுள்ளார். திரு. கே. வி. சுப்பிரமண்ய அய்யர் அவர்கள் “சங்கரப்பாடியாரில் சிலர் நகர அமைப்பில் அங்கம் வகிக்கும் அளவில் இருந்திருக்கிறார்கள்; அவர்களில் சிலர் வியாபாரிகளாக விளங்கியிருக்கிறார்கள்; ஒரு குழுவாகவோ அல்லது ஒரு தனிக்குடியாகவோ வாழ்ந்திருக்கிறார்கள்; எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குடியைச் சேர்ந்த அனைவரும் பொறுப்பாளி என ஓட்ட்மொத்தமாகக் கூறியிருகிறார்கள்”” என்று எழுதியுள்ளார்.” திரு, கே. ஜி. இருஷ்ணன் அவர்கள் சங்கரப்பாடியார் என்போர் எல்லா ஜாதி மக்களும் கலந்து வாழும் இடத்தில் (qarter reserved for mixed or confused castes) வசிப்போர் என்று கூறியுள்ளார். திரு. தி ந .சுப்ரமண்யன் அவர்கள் சங்கரப்பாடியார் என்ற சொல் அக்கு மிகத் தெளிவாகச் செக்கார், எண்ணை வியாபாரம் செய்பவர் என்று பொருள் தந்திருக்கிறார்.
சங்கரப்பாடியர்களைப் பற்றிக் .கூறும் கல்வெட்டுக்களை ஆய்ந்து பார்க்கையில் திரு. தி. ந. கப்ரமண்பன் அவர்கள் கூறும் கருத்து மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது அதற்கு ஆதாரமாகப் பெரியபுராணத்தில் காணப்பெறும் திருவொற்றியூர் கலியரின் வர லாறும் துணை செய்கிறது.
கலியரின் வரலாறு
“தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூரிலே செக்கார் குலத் திலே கலியர் என்னும் சிவபக்தர் இருந்தார். “தயிலவினைத் தொழில் மரபில் சக்கரபாடித் தெருவிலே வரித்து வந்த கலியருகீகு ஒற்றியூர் உடையாரிடம் அளவீடலாத பக்தி. இரவும் பகலும் எம்பெருமான் ஆலயத்தலே திருவிளக்கு ஏற்றிவைக்கும் பணிபுரிக்து வக்தார்.
தம்மிடம் கலிபருக்கு உள்ள அழ்ந்த பக்தியை உலகோருக்கு எடுத்துக்காட்ட வரும்பிலுர் ஈசன். கலியர் செல்வம் கரைக் து சம்பாத்தியத்தைத் தேடவேண்டிய நிலை உண்டாயிம்மு. தாம் எண்ணெய் ஆடி. தம் எண்ணெயைக் கொண்டு விளக்கது எரிப்பது இயலாது ஆயிற்று. பிறரிடமிருந்து எண்ணெய் வாங்கிச் சென்று அதை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபத்தைத் தம் திருப்பணியில் செலவிட்டு வந்தார்.
அவருடன் வியாபாரத்தில் பலர் போட்டியிடவே அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டு (சக்கர எந்திரம் புரியும் களனில் வரும்! பணி களைச் செய்து கூலியாக எண்ணெய் பெற்று அதைக் கொண்டு ஆலயத்தில் விளக்கு எரித்து வந்தார். அதுவும் பின்னாளில் தடைபட்ட து, பின்னர் தம் மனைவியை விற்று இறைவனது பணியை நிறைவேற்ற முனைந்தார். அவர்தம் இரக்கக் குணத்தை ஈன்கு அறிந்திருந்த அனை வரும் அவர் மனைவியை வாங்க மறுத்துவிட்டனர். எவ்வமழியும் புலப்படாது போகவே தம் உடலிலே உள்ள இரத்தத்தைக் கொண்டு விளக்கெரிக்க எண்ணி கத்தி கொண்டு தம் கழுத்தை அறுக்கத் துணிந்தார். எம்பெருமான் சட்டென்று தோன்றி அவரது முயற்சியைத் தடுத்து அவரை ஆட்கொண்டு விட்டார்” என்று அவரது வரலாறு கூறப்படு கிறது,
கலியரின் வரலாற்றிலிருந்து சக்கரப்பாடியில் வசிப்பவர்கள் செக்காடுபவர்கள் (சக்கர எந்திரம்) என்பதும், அவர்கள் தம் எண் ணெய் கொண்டு கோயில்களில் விளக்கு எரிப்பவர்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுவதை உணரலாம். (திகண்டுகள் தரும் விளக்கம் செக்கார்களுக்கு வேறு பெயராகச் சங்கரப்பாடியார் என்னும் பெயர் குறிப்பீடப்பட்டிருக்கறதா என்று நிகண்டுகளைப் பார்த்தால் சங்கரப்பாடியார் என்னும் பெயரே காணப்படவில்லை. சூடாமணி, கிகண்டு, ஆரியர் நிகண்டு, பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம் ஆகிய எல்லாவற்றிலுமே செக்கார் என்பதற்குச் சக்ரி, நந்தி என்னும் வேறு பெயர்களே தரப்பட்டுள்ளன.
சக்கரம், சக்கரப்பாடி, சக்கிரி
மூ. இராகவையங்கார் தம் “இலக்கிய சாஸன வழக்காறுகள்” என்னும் நூலில் சங்கரப்பாடி என்பது “சக்கரப்பாடி” என்தின் திரிபகத் தோன்றுகிறது என்று கருத்துக் தெரிவித்துள்ளார்.” சக்கர எந்திரம் என்பது செக்கு என்ற பொருளிலும் அவ்வியந்திரத்தைப் பயன்படுத்துவோர் வாழும் இடம் சக்கரப்பாடி என்ற பொருளிலும் கலியர் புராணத்தில் கூறிபிடப்பதை மேலை கண்டோம். மேலும் நம்பியாண்டார் நம்பி அருளிய இரடத்தொண்டர் திருவந்தாதி.
“கும்பத் தயிலம் விற்றும் செக்குழன்றுங் கொள் கூலி
நம்பற் கெரித்த கலி ஒற்றி மாநகர்ச் சக்கிரியே” என்று கலியரைச் “சக்கிரி’ என அழைப்பதால், சக்கரைத்தைப் பயன்படுத்தியோர் சக்கிரி என்று அழைககப்பட்டிருக்கன் றனர் என்பதும் தெரியவருகிது.
கோயில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்குவோர்
சங்கரப்பாடியார் பற்றி தெரிவிக்கும் பெரும்பாலான கல்வெட்டுகள் அவர்கள் கோயில்களில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்கும் பொறுப்பைப் பெற்றிருந்ததாகவே காட்டிகின்றன ‘ உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்து, வடக்கில் அங்காடியைச் சேர்ந்த சங்கரப் பாடி யார் மன்னுபெரும் பழுவூரைச் சேர்ந்த சேந்தன் கணபதி என்னும் சூரசிகாமணி பல்லவரையன் என்பானிடம் 15 கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு திருப்புலிவலத்து மஹாதேவர் கோயிலில் ஒரு நுந்தாவிளக் குக்கு ஒவ்வொரு நாளும் ஒரு உழக்கு எண்ணெய் வழங்கவதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கின்றனர் 1 முதலாம் பராந்தகச் சோழனுடைய 18-ஆம் ஆட்சி ஆண்டில் (கிபி. 925) காஞ்சிபுரத்தை அடுத் துள்ள இரணஜயப்பாடி., ஏகவீரப்பாடி, வாமனசங்கரப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த சங்கரப்பாடியார் 20 கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு ஒரு நுந்தாவிளக்கை நிர்வகிக்கும் பொழுப்பை மேற்கொண்டிருக்கின்றனர்13
ஒரு குழுவினர்
அவர்கள் ஒரு தணிக்குழுவாக விளங்கி இருக்கிறார்கள் என்பது மற்றொரு கல்வெட்டினால் புலனாகிறது. சங்கரப்பாடியைச் சேர்ந்த 25 குடும்பத்தினர், இராஜேந்திர சோழப்பாடி என்ற புதிய குடியிருப்பில் சென்று தங்கவேண்டும் என்றும் அவர்கள் 15 விளக்கு களுக்கு வேண்டிய எண்ணெயை வழங்க வேண்டும் என்றும் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) ஆணை பிறப்பித்ததை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது.! முதலாம் பராந்தகன் காலத்தில் குமாரமாத்தாண்ட புரத்துச் சங்கரப்பாடியார்கள் இருபத்தி ஐந்து கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு ஒரு நுந்தாவிளக்னுக்கு ஒவ்வொரு நாளும் உழக்கு எண்ணெய் அளிப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர்.’* மற்றொரு கல்வெட்டு மூலம் அவர்கள் எண்ணெய் ஆட்டும் தொழிலை மேற்கொண்டி ருந்தனர் என்பதை “செக்கு ஒன்றுக்கு சங்கரபாடியார் பேர் பன்னிரண்டு ஆக” என்ற தொடரால் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.”
திருவிளக்குக் கொடை
சங்கரப்பாடியார்களுள் சிலர் கோயில்களுக்கு இருவிளக்கு கொடை அளித்திருக்கின்றார்கள். திருக்கழக்கன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் காணப்பெறும் முதலாம் இராஜேந்திரன் (4. பி. 1014-1044) காலத்தியக் கல்வெட்டு ஜெயகொண்ட சோழ மண்டலச்துத் திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழபுரத்து ஸ்ரீமூலஸ்தானத்து உடையார் தேசவிடங்க தேவர்க்கு ஆமூர்க் கோட்டத்து ன மாமல்லமாராகிய சனனாபுரத்துச் சங்கபப்பாடியான் கொளம்பாக்கிமான் மாதேவன் எட்டி. ஒரு இரு நுந்த॥ விளக்குக்காகத் தொண்ணூறு ஆடு அளித்ததையும், அவ்வூபைச் சேர்ந்த மற்றெரு சங்கரப்பபடியான் தென்னவனடி விளக்கு அரைக்காக நாறபத்தைந்து ஆடு அளித்ததையும் கூறுகிறது.
நகரத்தாரில் ஒரு பகுதியினர்
சங்கரப்பாடியார்கள் ஈகரத்தார்களுள் ஒரு பகுதியினராகக் ௧௫ தப்பட்டு வந்கருக்கன்றனர். திருக்கழுக்குன்றத்தில் இருந்த ஈகரத் தாரில் வியாபாரிகள், சாலியர், சங்கரப்பாடியார் ஆயெ அனைவரும் இருக் தருக்கின்றனர்.
‘ஐயங்கொண்ட சோழமண்டலத்து அதிராஜராஜக் கோட்டத்து களத் தூர் காட்டு கருக்கமழு குன் றமான உலகளந்த சோழபுரத்து ககரத்துக்குச் சமைந்து வியாபாரிகள் மசசங்கக் கொழுந்தும், உழுதக் குறையும்; சாலியத் ஆச்சந்கட்டையும்; சங்கரபாடியான் அங்காடி எடுத்த பாதமும் மாறிவெண்ணா வயலும் உள்ளிட்ட ஈகரத்தோம்” என்று முதலாம் இராஜாதிராஜனுடைய (2.பி. 1018-54) கல்வெட்டில் காண முடிகிறது, குடிகளுள் ஒருவர் சங்கரப் ஈடியார் சமூதாயத்தில் சிறந்த நிலையைப் பெற்று, குடி களுள் ஒரு பிரிவினராக, சாலியர், பட்டினவர் ஆஃயெவர்களோடு சமமாக மதிக்கப்பட்டிருகின்றனர் என்பதை குடியிருப்பில் சென்று தங்கவேண்டும் என்றும் அவர்கள் 15 விளக்கு களுக்கு வேண்டிய எண்ணெயை வழங்க வேண்டும் என்றும் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) ஆணை பிரப்பித்ததை ஒரு கல்வெட்டு உனர்த்துகிறது. முதலாம் பராந்தகன் காலத்தில் குமாரமாத்தாண்ட புரத்துச் சங்கரப்பாடியார்கள் இநபதின் கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு ஒரு கொக்தாவிளக்னுக்கு ஒவ் வொரு நாளும் உழக்கு எண்ணெய் அளிப்பதாக உறுதி.பளித்திருக்கின்றனர். மற்றொரு கல் வெட்டு மூலம் அவர்கள் எண்ணெய் ஆட்டும் தொழிலை மேற்கொண்டிருந்தனர் என்பதை “செக்கு ஒன்றுக்கு சங்கரபாடியார் பேர் பன்னிரண்டு ஆக” என்ற தொடரால் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.”
திருவிளக்குக் கொடை
சங்கரப்பாடியார்களுள் சிலர் கோயில்களுக்கு இருவிளக்தகீ கொடை அளித்திகின்றார்கள். திருக்கழக்கன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் காணப்பெறும் முதலாம் இராஜேந்திரன் (4. பி. 1014-1044) காலத்தியக் கல்வெட்டு ஜெயகொண்ட சோழ மண்டலச்துத் இருக் கழுக்குன்றமான உலகளந்த சோழபுரத்து ஸ்ரீமூலஸ்தானத்து உடை யார் தேசவிடங்க தேவர்க்கு ஆமூர்க் கோட்டத் ன மாமல்ல [மாகிய சனனைபுரத்துச் சங்கபப்பாடியான் கொளம்பாக்கிமான் மாதேவன் எட்டி. ஒரு இரு நுந்த॥ விளக்குக்காகத் தொண்ணூறு ஆடு அளித்ததை யும், அவ்வூபைச் சேர்ந்த மற்றெரு சங்கரப்பபடியான் தென்னனடி விளக்கு அரைக்காக நாறபத்தைக் து ஆடு அளித்ததையும் கூறுகிற து.
தகரத்தாரில் ஒரு பகுதியினர்
சங்கரப்பாடியார்கள் ஈகரத்தார்களுள் ஒரு பகுதியினராகக் ௧௫ தப்பட்டு வந்கருக்கன்றனர். திருக்கழுக்குன்றத்தில் இருந்த ஈகரத் தாரில் வியாபாரிகள், சாலியர், சங்கரப்பாடியார் ஆகிய அனைவரும் இருக்கின்றனர்.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து அதிராஜராஜக் கோட்டத்து களத் தூர் காட்டு கருக்கமழு குன் றமான உலகளந்த சோழபுரத்து ககரத்துக்குச் சமைந்து வியாபாரிகள் மசசங்கக் கொழுந்தும், உழுதக் குறையும்; சாலியத் ஆச்சந்கட்டையும்; சங்கரபாடியான் அங்காடி எடுத்த பாதமும் மாறிவெண்ணா வயலும் உள்ளிட்ட ஈகரத்தோம்” என்று முதலாம் இராஜாதிராஜனுடைய (2.பி. 1018-54) கல்வெட்டில் காண முடிகிறது, குடிகளுள் ஒருவர் சங்கரப் பாடியார் சமூதாயத்தில் சிறந்த நிலையைப் பெற்று, குடி களுள் ஒரு பிரிவினராக, சாலியர், பட்டினவர் ஆஃயெவர்களோடு சமமாக மதிக்கப்பட்டிருக்இன்றனர் என்பதை சிதம்பரம் கல்வெட்டு
“இந்த குணமேனிகைபுரத்து ஏறின வீயாபாரிகளும் வெள்ளாளரும், சங்காபாடியாரும், சாலியரும், பட்டினவரும் உள்ளிட்ட குடிகளும், தச்சர், கொல்லர், தட்டார், கோலியர் உள்ளிட்ட கீழ்கலனை களும் கொண்டு இங்கிவந்தம் சந்திராதித்தவர் செலுத்தக்கடவதாகவும”. என்று தெரிவிக்கிறது.
சபை உறுப்பினர்
மிக உயர்ந்த பணியான பொன்னின் மடிப்பை நிர்ணஙிக்கும் பணிரிலும் சங்கரப்பாடியர் இடம் பெற்றிருக்கன்றனர். ஈறதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி. 997-945) உத்தரமேரூர் சது வேதுமங் கலத்துச் சபையானது பொன்னின் தரத்தை அறிந்து கூறுவதற்காகச் சிலரைத் தேர்ந்தெறிக்கத் தீர்மானித்தது. அவ்வாறு தேர்க்தெடுக்கப்பட்டவர்களில் சங்கரப்பாடியாரும் இடம்பெருங்கின்றனர்.
ஆகவே, சங்கரப்பாடியாரது அடிப்படைத் தொழில் செக்கு ஆட்டி எண்ணெய் தயாரித்தல் தான் என்றலும் சில சமபங்களில் அவர்கள் நகரத்தாருள் ஓரு பிரிவினர் நிலைக்கு உயர்ந்து, பொன்னின் தரத்தை நிர்ணயிப்பதற்குச் சபைகளில் அங்கம் வகித்து, வேளாளர் போன்ற குடிகளுள் தாங்களும ஒரு குடியினராக மதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்று உணர முடிகிறது.