கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தொண்டைமண்டல வீர வணிகர்

இடைக்காலத்தில் படை வைத்து வணிகம் செய்வோர், வீர வணிகர், வீர வ(ப)னஜா, வீர வளஞ்சியர், வீர பலிஜர் என வீர என்ற அடைமொழி கொடுத்து போற்றப்பட்டனர். இவர்கள் ஐநூற்றுவ குழுவின் அங்கத்தினர். தொல்காப்பியமும் வணிகர்கள் அரசரைப் போன்ற படை வைத்துக்கொள்ள உரிமை உள்ளவர்கள் எனக் குறிப்பிடுகிறது.

வணிகர்‌களுக்கு மணிமுடி ஒன்றைத்‌ தவிர அரசர் போன்று ஆயுதம் முதல் ஏனைய எல்லாம்‌ உரியவை என்பதை,

“வில்லும்‌, வேலும்‌, கழலும்‌, கண்ணியும்‌ நாரும்‌, மாடியும்‌, தேரும்‌, மாவ. மன்பெறு மரபின்‌ ஏனோர்க்கும்‌ உரியன” என்றும்‌ கூறும்‌ தொல்காப்பியப் பாடல் மூலம்

“இடையிரு வகையோர் அல்லது நாடிற் படை வகை பெறாஅர் என்மனார் புலவர்.”

இதற்கு இளம்பூரணனார் “அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை” கூறப்பெறார். இதற்கு, அரசர்களுக்கும்‌ வணிகர்களுக்கும்‌ மட்டுமே ஆயுதம்‌ தாங்கும்‌ உரிமை உண்டு என்பதே இதன்‌ பொருள்

இவர்களில் தனிவீரரை செட்டி வீரர், செட்டி புத்திரன் எனப்படுகின்றனர். இவர்களுக்கு வணிகம் மட்டுமல்ல, வணிகம் பொருட்டு காவல் மற்றும் சண்டையிடுதல் போன்ற வீரர் தொழில் செய்வதும் முறை என்பது தெளிவு.

வணிகம் பொருட்டு ஏற்படும் பூசலில் இறந்த வணிக செட்டி வீரனுக்கு நடுகல் எடுக்கும் பழக்கமும் உள்ளது.

ஆந்திர மாநிலம் மலகொண்டா பகுதியில் அமைந்துள்ள, நரசிம்மர் கோவில், முன்பு பௌத்த (ஸ்ரமண?) தளமாக இருந்துள்ளது. ஆங்குள்ள குடைவரையில், திராவிட பிராமி எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டு, அரவாலா குலத்தைச் சேர்ந்த நந்த செட்டி மகன் தமிழ் வணிகன் அளித்த தானத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அந்த தமிழ் வணிகனை, ஸ்ரீ வீரி சேத்தி (ஸ்ரீ வீர சிரேஷ்டி) எனக் குறிப்பிடுகிறது. அவனை அருவால குலம் என்கிறது.

அருவா நாடு, அருவா வடதலை நாடு போன்றவரை பண்டைய தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகும் . இந்நாட்டைச் சேர்ந்தோர் அருவாலர் என்போர், இவர்கள் பேசிய மொழி அரவம் என்ற தமிழ் மொழி ஆகும்.

அக்கல்வெட்டில்,

அருவால குலாசா நந்த
சேத்தி புத்தச ஸ்ரீ வீரி
சேத்தி நா தானா

அரவா என்பதும், அருவா மக்கள் என்பது வட தமிழகத்தவரை தென் ஆந்திரர் தெலுங்கு மக்கள் குறிப்பிடும் சொல்லாகும். அரவம் = தமிழ், அரவாளர் = தமிழர் சங்க இலக்கியம் தமிழகத்தின் எல்லை கடந்து வடுகு பகுதியில் வணிகம் செய்யச்சென்ற வணிகரை பற்றி குறிப்புகள் வருகின்றன.

இது போன்ற போர் மரபை பின்பற்றும் தொண்டை மண்டலத்தை சமண வணிக குலத்தைச் சேர்ந்த வணிகரின் கல்வெட்டே அது.

Early South Indian Paleography – T.V Mahalingam

Leave a Reply