ஷ்ரேனி, நிகமா, கணம், சங்கா மற்றும் விராட போன்றவை பண்டைய வட பகுதி வணிகர்கள் குழுக்கள்.
இதில் ஷ்ரேனி என்ற சொல் செட்டி தொடர்புடையது. நிகமா பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும் சங்கா என்பது வணிகர் கூட்டமைப்பாக கருதப்படுகிறது.
வணிகக்கூட்டம் பணம் பலம், படைபலம், அரசியல் செல்வாக்குடன் நாடு முழுக்க வலம்வரும் குழுக்கள். வணிகர்களைக் கண்டு அரசர்களே பொறாமைக்கொள்வர் என்பது இலக்கியத் தகவல். மணிமுடியைத் தவிர வணிகருக்கு அனைத்து உரிமையும் இருக்கின்றது என்பதிலிருந்து நாட்டின் வணிகரின் நிலை பற்றி அறியலாம். வணிகர் உள்ளூர் அரசர்கள் மோதல் இலக்கியங்கள் மற்றும் வரலாறு நெடுக கூறப்படுகிறது.
ஹத்திக்கும்பா கல்வெட்டில் திரமிர சங்காத்தம் என்பதை அழித்தாக காரவேலன் குறிப்பிடுகிறான். அவன் அழித்தது சேர, சோழ, பாண்டிய தமிழர் அரசியல் கூட்டணி என்றும், அது பல ஆயிரம் ஆண்டுகள் இருந்தது என்றும், அந்த தமிழர் கூட்டணி தனுக்கு எதிராக திரும்பும் எனக் கருதி அதனை காரவேலன் அழித்தாக நம்பப்படுகிறது.
ஆனால், வணிக ஆய்வாளர்கள் கலிங்க தேசத்தில் செயல்பட்டு வந்த, தரமிர தேச சங்கம் என்பது “தமிழ் தேச வணிக்குழு” என்றும். அது கலிங்க அரசுக்கு எதிராக செயல்பட்டு, அங்கு அசாதாரண சூழல் நிலவியிருக்கலாம். அதனால் அக்குழுவினர் காரவேலன் அழித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தகவல்: சங்க இலக்கியம் சில பார்வைகள் – சி. பாலசுப்ரமணியன்