இலங்கையில்‌ ஐந்நூற்றுவர்‌ கல்வெட்டுகள்‌

௪. சுப்பராயலு, தஞ்சாவூர்‌; ப. சண்முகம்‌, சென்னை

தோக்கியோ (ஜப்பான்‌) தைஷோ பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக பேராசிரியர்‌ நொபொரு கராஷிமா அவர்கள்‌ தலைமையில்‌ மேற்கொள்‌ ளப்பட்ட ‘இடைக்காலத்தில்‌ இந்துமாக்கடலில்‌ வணிக நிகழ்ச்சிகள்‌: என்ற ஆய்வுத்திட்டத்திற்காக இலங்கையில்‌ 1987 ஆகஸ்டு மாதம்‌ செய்த கள ஆய்வில்‌ படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள்‌ நான்கு இங்கே தரப்படுகின்றனர்‌. நான்கும்‌ ஐந்நூற்றுவர்‌ என்ற தென்னிந்திய வணிகக்குழு தொடர்பானவை. இவை ஏற்கனவே யாழ்ப்பாண பல்க லைக்கழகத்‌ தமிழ்ப்‌ பேராசிரியர்‌ ௮. வேலுப்பிள்ளை அவர்களால்‌ வெளியிடப்பட்டுள்ளன’. வேலுப்பிள்ளையின்‌ பாடங்கள்‌ மிகவும்‌ குறைபாடுடையவை ஆதலால்‌ புதிய பாடங்கள்‌ இங்கு மீண்டும்‌ வெளி யிடப்படுகின்றன. இக்கல்வெட்டுகள்‌ பெர்றிக்கப்பட்டுள்ள கற்கள்‌ பல நூறாண்டுகள்‌ வெயிலிலும்‌ மழையிலும்‌ இடந்தமையால்‌ எழுத்து கள்‌ ஆங்காங்கு தேய்ந்தும்‌ உதிர்ந்தும்‌ காணப்படுகின்றன. அதனால்‌ பாடம்‌ முழுமையாகக்‌ கிடைக்கவில்லை. இருப்பினும்‌ பொருள்‌ பெரும்பாலும்‌ விளங்குகிறது எனலாம்‌.

இக்‌ கல்வெட்டு எதிலும்‌ அரசன்‌ பெயரோ, வேறு காலக்‌ குறிப்போ இல்லை. எழுத்தமைதியைக்‌ கொண்டு ௫.பி.1100-1150க்குள்‌ இவை களை அடக்கலாம்‌. இவ்வைம்பது ஆண்டுகள்‌ இலங்கையில்‌ ஓர்‌ உள்‌ நாட்டுப்‌ போர்‌ நடந்து வந்தது என்பதைக்‌ குறிப்பிட வேண்டும்‌.

நான்கு கல்வெட்டுகளும்‌ வீரகொடியாரை முன்னிறுத்திப்‌ பேசுகின்‌ றன. வீரகொடியார்‌ ஐந்நூற்றுவர்‌ வணிகக்குழுவினர்க்கு காவற்பணி புரிந்த படையினர்‌. இவர்கள்‌ பதிநெண்பூமிவீரர்‌, எறிவீரர்‌ என்றும்‌ அழைக்கப்பட்டனர்‌. இவர்களால்‌ பெருமக்கள்‌ என்று மரியாதையுடன்‌ அழைக்கப்படும்‌ ஐந்நூற்றுவர்‌ சில நெருக்கடியான நேரங்களில்‌ இவர்களுக்கு உதவிசெய்து காப்பாற்றியுள்ளனர்‌. அத்துடன்‌ வீரகொடியாரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ தங்கள்‌ நகரத்துக்கு எறிவீர பட்டினம்‌ அல்லது எறிவீர தானம்‌ என்று பெயரிடல்‌, தங்கள்‌ தெய்வமான லோகமாதா (அல்லது பரமேசுவரி) கோயிலுக்கு வீரமாகாளம்‌ என்று பெயரிடல்‌ போன்ற சிறப்புகளும்‌ செய்தனர்‌. அச்சிறப்பை மனங்கொண்டு அதற்கு நன்றிக்கடன்‌ செய்யும்‌ வகையில்‌ வீரகொடியார்‌ தாங்கள்‌ பணிபுரியும்‌ ஊர்களில்‌ தாங்கள்‌ அனுபவித்து வந்த சில உரிமைகளை விட்டுக்கொ டுத்தனர்‌ அல்லது அவ்வூர்களில்‌ உள்ள பரமேசுவரி கோயிலுக்கும்‌ புத்‌ தப்‌ பள்ளிக்கும்‌ தங்களுடைய வழக்கமான ஊதியத்தை (எண்ணை, காசு) கொடையாகக்‌ கொடுத்தனர்‌.

 

 

 

 

*இக்கல்வெட்டுகளை வெளியிட அனுமதியளித்த பேரா. கராஷிமா அவர்களுக்கு நன்றி, இத்திட்டக்குழுவில்‌ ஓர்‌ உறுப்பினராக இருந்த பேராதனைப்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்‌ 5. பத்மநாதன்‌, கல்வெட்டுகளைப்‌ படியெடுக்கவும்‌ பெயர்த்தெழுதவும்‌ உறுதுணையாக இருந்தார்‌. கல்வெட்டுப்‌ பாடங்களைச்‌ சரிபார்ப்பதில்‌ மிகவும்‌ உதவிபு ரிந்த தமிழ்நாடு அரசு தொல்பொருள்‌ ஆய்வுத்துறையைச்‌ சேர்ந்த முனைவர்‌. ௬. இராச கோபால்‌, முனைவர்‌.வெ. வேதாசலம்‌ ஆகியோருக்கு மிக்க நன்றி