தஞ்சாவூர் முத்தரையர் என்னும் சிற்றரசு மரபினரின் தலைநகரமாக விளங்கியது. இதை ஏறத்தாழ கி.பி. 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான். அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது. தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும், வளஞ்சியர், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
முதலாம் ஆதித்தன் (பொ.ஊ. 871–907),) காலத்தில் மடிகை என்பது வணிகர்கள் பல வகை சரக்குகளை ஓரிடத்தில் சேமித்து வைத்து வியாபாரம் செய்யும் பண்டகச் சாலை அல்லது கிடங்கைக் குறிக்கும். இந்தச் சொல்லே பிற்காலத்தில் மளிகை என மருவி பலசரக்குக் கடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி வட்டம், திருச்செந்துறையில் உள்ள ராஜசேகரி வர்மன் என்ற பட்டம் கொண்ட சோழ மன்னரின் 12, 20-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலயச் செட்டி (Aihole ஆய்ஹோலே – ஐம்பொழில் நகரம்) என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவையே தஞ்சாவூரில் வணிகர் பற்றிக் கூறும் தொன்மையான கல்வெட்டுகள் ஆகும். முதலாம் ஆதித்தனின் காலத்திலிருந்தே தஞ்சாவூர் பிற நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் செய்யும் நகரமாக வளர்ச்சி பெற்றிருந்தது என அறிய முடிகிறது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தஞ்சை வீரசோழப் பெருந்தெரு என்ற வணிகர்கள் வாழ்ந்த தெருக்கள் என முதலாம் பராந்தகனின் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல, தஞ்சாவூரில் அப்போது வழங்கப்பட்ட கண்டருள் கண்டப் பெருந்தெரு என்பதும் ஒன்று.
கங்கைகொண்டசோழபுரத்தில் பூமிக்கடியில் கிடைத்த முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டில் தஞ்சாவூரில் இருந்த இருமடி சோழப் பெருந்தெருவில் வளஞ்சியார் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் வந்து குடியேறியது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வளஞ்சியார் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். சுந்தர சோழன் காலத்தில் (கிபி 957-974) தஞ்சாவூரில் பெரிய அங்காடி என்ற வணிக வளாகம் இருந்தது என அறிகிறோம். இதேபோல, தஞ்சாவூரில் உள்ளாலை சாலியத் தெரு என்ற தெருவில் பட்டு நெசவு மற்றும் துணி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் வாழ்ந்ததையும், அது தஞ்சாவூர் நகரின் உள்பகுதியில் இருந்தது எனவும் அறிகிறோம். சோழர் காலத்தில் தஞ்சாவூர் மிகப் பெரிய வணிக நகரமாக விளங்கியது. இங்கு பல மடிகைகள், அங்காடிகள், பேரங்காடிகள், பெருந்தெருக்கள் முதலியன இருந்தன. சங்கரபாடியார், சாலியர், வளஞ்சியார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிகர்கள் இங்கு தங்கி வணிகம் செய்தனர்.
இந்த வணிக நகரம் உள்ளாலை, புறம்படி என்னும் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.தலைநகர மாற்றத்தைத் தொடர்ந்து இங்கு வாழ்ந்த வணிகர்கள் கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்று குடியேறினர். அதன் பின்னர், 159 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஊர் வணிக நகரமாகப் புத்துயிர் பெற்று, பாண்டியரின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து ஒரு வணிக நகரமாக விளங்கியது என அறிகிறோம்.
திருசெந்துரை கோவில் கல்வெட்டு இதே விசாலாட்சி சந்நிதியின் தெற்குப்புறம் குமுதப் படையில் காணப்படுகின்றது. இக் கல்வெட்டு புழலய விண்ணகர் அமைக்கப்பட்டதின் காரணத்தைத் தெரிவிக்கின்றது. இக்கல் வெட்டில் அரசன் பெயர் தெரியவில்லை. வெள்ளாளன் புழலயன் என்பவனுக்கு சந்ததி துலங்க. அவனுடைய குரு அவன் பெயரால் விஷ்ணு கோயில் எடுக்க வேண்டும் என்று சொல்ல வெள்ளாளன் புழாலயன் என்பவனும் கல்லால் ஸ்ரீவிமானம்
எடுப்பித்து பிரதிஷ்டை செய்து தன் பெயரால் புழாலய விண்ணகர் என்று பெயர் வைத்த செய்தியை அறிவிக்கின்றது.
“விஷ்ணு பிரதிஷ்டை புழாலய விண்ணகர் என்று உன்னா மத்தாலெடுக்க வேண்டுமென்று பணிக்க அதுவெய் முஹுர்த்தமாக அடிமண்ணைக் கல்லி மண்வெட்டி நீர் நிறுத்தி ஆனையால் மிதிப் பிச்சு கல்லாலே ஸ்ரீவிமானமெடுப்பித்து வடக்கினின்று திருமேனி கொடுவந்து தே வரை” என்று வரும் வாசகத்தால்
அறியலாம். ஈசான மங்கலத்தைச் சார்ந்த திருச்செந்துறையின் மேற்கில் விஷ்ணு கோயிலை மாணிக்க வாணிய கருநாடக புழாலய செட்டி கற்றளியாக மாற்றியதை குறிப்பிடுகின்றதே ஒழிய இக்கோயில் இருந்ததற்கான தடயங்கள் ஒரு சிலவேனும் கிடைத்தில. இந்த புலாலய விண்ணகரம் முழுவதுமாக அழிந்துவிட்டது.
தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி இரண்டாம் தொகுதியில் “மாணிக்க வாணியன் ( பெ ) இரத்தின வியாபாரி ( 891 ) தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலய செட்டிக்கு ( SII,viii,634 .) ” மாணிக்க வாணியன் என்போர் இரத்தின வியாபாரி என்கிறது.
புலாலய விண்ணகர்:
திருச்செந்துறை சிவன் கோயிலினுள் உள்ள விசாலாட்சி சந்நிதியின் மேற்குப் பகுதியில் குமுதப் படையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு இராசகேசரியின் 20ம் ஆட்சி ஆண்டில் புழலய செட்டி என்பவன் இவ்வூர் திருமேற்றளியான ஸ்ரீகோயிலை புலாலய விண்ணகர் என்னும் பேரால் கற்றளி எடுப்பித்து பிரதிஷ்டை செய்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
இவ்வூர்க் கற்றளிப் பெருமானடிகள் கோயில் இராஜகேசரியின் 23ம் ஆட்சியாண்டிலோ அதற்கு முன்போ எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறே இந்த புலாலய விண்ணகரும் இதே காலத்தில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்னும் கருத்தை திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மற்றொரு கல்வெட்டு இதே விசாலாட்சி சந்நிதியின் தெற்குப்புறம் குமுதப் படையில் காணப்படுகின்றது. இக் கல்வெட்டு புழலய விண்ணகர் அமைக்கப்பட்டதின் காரணத்தைத் தெரிவிக்கின்றது.
இக்கல் வெட்டில் அரசன் பெயர் தெரியவில்லை. வெள்ளாளன் புழலயன் என்பவனுக்கு சந்ததி துலங்க. அவனுடைய குரு அவன் பெயரால் விஷ்ணு கோயில் எடுக்க வேண்டும் என்று சொல்ல வெள்ளாளன் புழாலயன் என்பவனும் கல்லால் ஸ்ரீவிமானம் எடுப்பித்து பிரதிஷ்டை செய்து தன் பெயரால் புழாலய விண்ணகர் என்று பெயர் வைத்த செய்தியை அறிவிக்கின்றது.
“விஷ்ணு பிரதிஷ்டை புழாலய விண்ணகர் என்று உன்னா மத்தாலெடுக்க வேண்டுமென்று பணிக்க அதுவெய் முஹுர்த்தமாக அடிமண்ணைக் கல்லி மண்வெட்டி நீர் நிறுத்தி ஆனையால் மிதிப் பிச்சு கல்லாலே ஸ்ரீவிமானமெடுப்பித்து வடக்கினின்று திருமேனி கொடுவந்து தே வரை” என்று வரும் வாசகத்தால் அறியலாம். ஈசான மங்கலத்தைச் சார்ந்த திருச்செந்துறையின் மேற்கில் விஷ்ணு கோயிலை மாணிக்க வாணிய கருநாடக புழாலய செட்டி கற்றளியாக மாற்றியதை குறிப்பிடுகின்றதே ஒழிய இக்கோயில் இருந்ததற்கான தடயங்கள் ஒரு சிலவேனும் கிடைத்தில. இந்த புலாலய விண்ணகரம் முழுவதுமாக அழிந்து விட்டது.
திருக்கடியூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்-மையக்கோயிலின் வடக்கு அடிவாரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழரின் கங்கைகொண்டசோழபுரம் மாணிக்க வாணியன் என்ற வணிகன் சந்திரன் 140 காசினை தானம் அளித்தது பற்றி குறிப்பு வருகிறது. கடாரங்கொண்டசோழ மயிலாட்டி, மதியத்திற்குப் கடவுளுக்கு திருச்சொறு படைப்பதற்கு மகாசபையில் வைப்பாக வைத்தது பற்றி கல்வெட்டு கூறுகின்றது. எனவே மேற்கண்ட மாணிக்க வாணியரும் இவனும் தொடர்புடையவனாக அவனது சந்ததியாக இருக்கலாம்.
மூல நூல்கள்:
முனைவர் இல. தியாகராசன் கட்டுரை
(A. R. No. 20 of 1906)