வலங்கை உய்யக்கொண்டர்கள் கவறைகள் எனக் கூறும் மலம்பட்டி வணிகக்குழுக்‌ கல்வெட்டு

மலம்பட்டி வணிகக்குழுக்‌ கல்வெட்டு

மு.நளினி, திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, துவரங்குறிச்சியிலிருந்து பாலக்‌ குறிச்சிக்குப்‌ பிரியும்‌ பாதையில்‌ உள்ள மலம்பட்டியில்‌ தச்சமலை சார்ந்த காட்டுப்பகுதியில்‌ நடப்பட்டுள்ள தனிக்கல்‌

காலம்‌: கி.பி. 11-12 ஆம்‌ நூற்றாண்டு

மண்ணில்‌ புதையுண்ட நிலையில்‌ ஏறத்தாழ நான்கரை அடி உயரமுள்ள கருங்கல்‌ பலகைக்‌ கல்லின்‌ நாற்புறத்தும்‌ எழுத்துகள்‌ ஆழமாக வெட்டப்பட்டுள்ளன. எண்பத்தெட்டு வரிகளில்‌ அமைந்துள்ள இந்த ஆவணத்தை ஐயப்பொழில்‌ பரமேசுவரியின்‌ மக்களாகத்‌ தங்களை அறிமுகப்படுத்திக்‌ கொள்ளும்‌ திசையாயிரத்து ஐநூற்றுவரில்‌ கொடும்பாளூரைச்‌ சேர்ந்த வீரபட்டனம்‌ குழுவினரும்‌ மதுரை அடிக்கிட்டனம்‌ குழுவினரும்‌ இணைந்து உருவாக்கியுள்ளனர்‌. வேளைக்காறர்‌, கவறைகள்‌, கண்டழி, கண்டச்செட்டி, சிங்கம்‌, வலங்கை, வீரர்‌ எனும்‌ ஏழு குழுக்களைச்‌ சேர்ந்த வீரர்கள்‌ மலம்பட்டிக்‌ கல்வெட்டில்‌ இடம்பெறுகின்றனர்‌. இவர்களுள்‌ கவறைகள்‌, கண்டழி குழுக்களைச்‌ சேர்ந்த வீரர்களே எண்ணிக்கையில்‌ மிகுதியாக உள்ளவா.

கவறைகள்‌

  1. தசமடிக்‌ கவறைகள்‌,
  2. கொங்குமண்டலக்‌ கவறைகள்‌

என இரண்டு பிரிவுகளாக இருந்தனர்‌. இவ்வீரர்‌ கூட்டங்களை வணிகக்‌ குழுவினர்‌, ‘நம்‌ மக்கள்‌‘ என்று பெருமையோடு குறிப்பிடுகின்றனர்‌.

திசையாயிரத்து ஐநூற்றுவருக்குத்‌ தொடர்ந்து தொல்லை தந்த இருவரை வணிகக்‌ குழு வீரர்கள்‌ கொன்றனர்‌. வீரன்‌ நாடான்‌ வானைக்‌ கொன்றவர்களாக எட்டு வீரர்களின்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றுள்ளன. அவர்களுள்‌ மூவர்‌ இராஜராஜர்‌, இராஜேந்திரர்‌ பெயர்களைத்‌ தம்‌ பெயர்களின்‌ முன்னொட்டுக்களாகக்‌ கொண்டு உள்ளனர்‌. அகப்பிஞ்சி என்பாரைக்‌ கொன்றவர்களாகப்‌ பதினான்கு வீரர்கனின்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றுள்ளன. அவர்களுள்‌ கவறைகளும்‌, கண்டழியும்‌ கூடுதலாக உள்ளனர்‌. வீரச்செயல்‌ நடந்த வணிக ஊரைப்‌ பெருமைப்படுத்தும்‌ விதமாக ஐநூற்றுவர்‌ அதை வீரதாவளமாக அறிவித்தனர்‌.

வீரப்போரில்‌ இறந்தவராக ஊகிக்கத்தக்க “கவறைகள் உய்யகொண்டார்” எனக் கல்வெட்டில் குறிப்பிடும் வலங்கை கவறை விடங்கன் உய்யக்‌ கொண்டானின்‌ குடும்பத்திற்கு வயல்‌, குளம்‌ அனித்து, அவ்வயலை வீரகள்‌ வேளைக்காறனான வீரகள்‌ மதலை உழுது உரிமையாளர்களுக்கு உரியனதந்து தாமும்‌ அனுபவித்துக்‌ கொள்ள வழியமைத்தனர்‌. ஊரில்‌ இருந்த அம்பலத்தை மெழுக வாய்ப்பாகக்‌ கவறை விடங்கனுக்கு மெழுக்குப்‌ புறமாக நிலத்துண்டும்‌, ‘பாவாடையாக”த்‌ துணியும்‌ அளித்தன