சோழர்கள் கடாரப் போரை துவங்க காரணமான வணிகக் குழுக்கள்

திருப்புறம்பியத்தின் ஐநூற்றுவ வளஞ்சியர் , ஆதித்தபுரியின் மணி கிராமம், சிரவல்லியின் நானாதேசியர் போன்றவை வணிகரின் குழுக்கள் ஆகும் . சோழரின் உள் நாடு , இந்தியாவின் மற்ற பாகங்கள், வெளி நாடுகள் ஆகிய மூன்றிலும் இவர்கள் வாணிபஞ் செய்தனர் . தொழிற் குழுக்களைவிட இவ் வணிகக் குழுக்கள் வலிமையில் மேம் பட்டுக் காணப்பட்டன . நகரங்களில் நகரங்களில் நகராட்சி மன்றங்களான ‘ நகரம் இக் குழுக்களின் கையில்தான் பெரும்பாலும் காணப் பட்டது . கி . பி . 1000 – க்குப் பின்பு ராஜராஜன் காலத்தில் ஏற்பட்ட ஏகாதிபத்திய அரசின் பெருமிதம் இக் குழுக்களைத் துரிதகதியில் இயங்க வைத்தது . இதன் விளைவாக ராஜேந்திரன் காலத்தில் வெளிநாட்டு வணிகத்தின் தரமும் அளவும் பெருகிப் போயின. கடல் கடந்த வெளிநாட்டு வணிகத்தை இக் குழுக்களே முன்னின்று நடத்தின . சோழ அரசு வணிகத்தை நேரடியாக மேற் கொள்ளவில்லை . 1028 – ல் நிகழ்ந்த கடாரப் போரினை ராஜேந்திரன் தொடங்குவதற்கு இக் குழுக்களே காரணம் . வெளிநாட்டு வணிகத்தின் பாதுகாப்புக்கும் விரிவாற்றலுக்கும் வழி செய்கின்ற முறையில் அடிப்படையெழுச்சி ஏற்பட்டது . சோழ நாட்டு வணிகர்கள் தனியாராக இயங்காமல் குழுக்களாக விளங்கிய காரணத்தால் அரசினரின் ஆதரவை எளிதாகப் பெற்றார்கள் . வல்லடிப் போர்களை மேற்கொண்டிருந்த சோழ மன்னர்களுக்குப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தும் மாற்றாரின் வலிமைப் பற்றியச் செய்திகளைச் சேர்ப்பித்தும் பற்பலப் பணிகளை குழுக்கள் ஆற்றின . ஆதாயந் தேடுகின்ற வேட்கையை அதிகமாகப் பெற்றிராத இக் குழுக்களை முழுவதும் நம்பி சோழ நாட்டின் பொருளாதாரம் இயங்கவில்லை . மேனாட்டுக் குழுக்கள் ஆதாயந்தேடி , அரசனை ஆதரித்து , முதலாளித்துவத்தை நிலை நாட்டியது போல , சோழ நாட்டுக் குழுக்கள் துரிதமாக வளர்கின்ற பொருளாதாரத்தைச் சார்ந்து இருக்கவில்லை. விநியோகத் துறையில் இக் குழுக்களை அங்கீகரித்துப் பணவியலுக் குரிய முறையில் தன்னை மாற்றிக் கொள்ள முடியாத அளவிற்குச் சோழரின் பொருளாதார அமைப்பில் தன்னிறைவுக் கிராமப் பொருளாதாரத்தின் பிடிமானங்கள் பல்கிக் கிடந்தன , தந்தம் , அகில் போன்ற காட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்த சோழ நாடு தொழில்வளம் பெருகிக் காணப்படவில்லை . எனவே வணிகரும் அதனடியாக வரும் பணயியலும் சோழ நாட்டில் தோன்றவில்லை . வெளியுலக வணிகத் தொடர்பும் சோழ மன்னரோடு இணக்கமும் ஊராட்சி மன்றங்களில் தலைமையும் , கோயில்களில் செல்வாக்கும் , மக்களிடையே மதிப்பும் கொண்டு இயங்கிய இவ் வணிகக் குழுக்கள் எண்ணிறந்த அறக் கட்டளைகளைச் செய்து பெருமையும் கொண்டு விளங்கின .

வணிக கணங்கள்‌

சோழராட்சியின்‌ போது தென்னிந்திய வணிக கணத்தினர்‌ செல்வாக்குடன்‌ விளங்கியிருப்பர்‌. அவர்களுள்‌ அஞ்லூற்றுவர்‌ என்போர்‌ முக்கியமானவர்கள்‌. இவர்கள்‌ தொடர்ந்து பன்னிரண்டாம்‌ நூற்றாண்டு வரை செல்வாக்குப்‌ பெற்றிருந்து, பல இடங்களில்‌ எறிவீர பட்டணம்‌ என்ற நிறுவனங்களையும்‌ வர்த்தக மையங்களையும்‌ நிறுவினர்‌.!”.

சோழருடைய அரசியல்‌ ஆதிக்க வளர்ச்சிக்குச்‌ சமனாகத்‌ தென்னிந்திய வணிக கணங்களின்‌ நடவடிக்கைகள்‌ இக்காலத்தில்‌ அதிகரித்தன. இக்‌ கணங்களுடைய கல்வெட்டுக்கள்‌ கிடைத்தாலும்‌, அவற்றின்‌ சிக்கலான அமைப்புப்‌ பற்றியும்‌ அவை மேற்கொண்ட நடவடிக்கைகள்‌ பற்றியும்‌ தெளிவான விபரங்கள்‌ பெறுவது கடினமாகும்‌. இக்காலத்து வணிக கணங்களுள்‌ அஞ்ஞூற்றுவர்‌ என்ற பெயரால்‌ பொதுவாக அறியப்படு வோர்பரவலாகத்‌ தெ ன்னாசியாவிலும்‌ தென்கிழக்காசியாவிலும்‌ வர்த்தகம்‌’ மட்டுமின்றி வேறும்‌ முயற்சிகளிலும்‌ ஈடுபட்டனர்‌. இவர்கள்‌ அய்யப் பொழில்‌, திசையாயிரத்து ஜந்நூற்றுவர்‌. நானாகேசி, மற்றும்‌ வீர வலஞ்சியர்‌, போன்ற பல்வகைப்‌ பெயர்களால்‌ அறியப்பட்டனர்‌. இவர்களுடன்‌ வர்த்தகம்‌ அல்லாத பிற தொழில்களில்‌ ஈடுபட்டோரும்‌ சேர்ந்து இயங்கினர்‌. இலங்கையில்‌ உள்நாட்டு வர்த்தகத்திலும்‌ வெளிநாட்டு வர்த்தகத்‌ திலும்‌ அஞ்னூற்றுவரும்‌ அவர்களுடன்‌ கூடிய பிற குழுவினரும்‌ மிகுந்த ஆதிக்கத்தைப்‌ பெற்றிருந்தனர்‌. நாட்டில்‌ இருந்த முக்கியமான வர்த்தக நகரங்கள்‌ பெரும்பாலும்‌ இவர்கள்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ இருந்தன. இவர்கள்‌ முக்கிய நகர மையங்களில்‌ எறிவீர பட்டணம்‌ என்ற பெயரைக்‌ கொண்ட நிலையங்களை நிறுவினர்‌. ஒரு குறிப்பிட்ட நகர மையத்தை எறிவீர பட்டணமாக அவர்கள்‌ பிரகடனப்படுத்தியபோது எத்தகைய -: அந்தஸ்தைப்‌ பெற்று எவ்வாறு அது இயங்கியது என்பதை அறியப்‌ போதிய சான்றில்லை.

ஐந்நூற்றுவர் விட்டுச்‌ சென்ற கல்வெட்டுக்கள்‌ இலங்கையில்‌ பல இடங்களில்‌ கிடைத்துள்ளன. இவை கூடுதலாக வட கிழக்குப்‌ பகுதியில்‌ காணப்படுவது கவனிக்கத்தக்கது. இக்‌ கல்வெட்டுக்கள்‌ காணப்படும்‌ இடங்கள்‌: அநுராதபுரம்‌, பொலன்னறுவை, பதவியா, வாஹல்கட, தெற்றியாமுல்ல, மணற்கேணி மற்றும்‌ ஆன உளுந்தாவ ஆகியவையாம்‌. பதினோராம்‌ பன்னிரண்டாம்‌ நூற்றாண்டுகளில்‌ மேற்‌ கூறிய இடங்களில்‌ வர்த்தக நகர மையங்கள்‌ இருந்தன. பல்வேறு இனக்குழுக்களைச்‌ சேர்ந்தோர்‌, சிறப்பாகத்‌ தெலுங்கர்‌, கேரளர்‌, கன்னடர்‌ மற்றும்‌ தமிழர்‌, ஒன்று சேர்க்கப்பட்டனர்‌. இவ்வாறு இவர்கள்‌ பல்லினத்‌ தன்மை கொண்டிருந்தாலும்‌ தமிழ்‌ மொழியையே இலங்கையில்தங்கள்‌ ஆவணங்களில்‌ பயன்படுத்தினர்‌. இவர்களுள்‌ ஒரு பிரிவினர்‌ இலங்கையில்‌ தங்கள்‌ வர்த்தகத்தை நன்கு நிறுவி, தம்மைச்‌ தென்னிலங்கை வலஞ்சியர்‌ என்று வர்ணித்துத்‌ தென்னிந்தியாவில்‌ பல்வகை நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டனர்‌.

அஞ்னூற்றுவ வளஞ்சியரில் லிருந்து தெளிவாக வேறுபட்ட வணிக கணங்களாக ‘இயங்கியோருள்‌ குறிப்பிடத்தக்கவர்கள்‌ மணிக்‌ கிராமம்‌ மற்றும்‌ அஞ்சுவண்ணம்‌ என்ற கணங்களைச்‌ சேர்ந்தோராவர்‌. இவர்களுள்‌ கேரளத்தில்‌ தோற்றம்‌ பெற்ற மணிக்‌ கிராமத்தவர்‌ சோழர்‌ ஆட்சிக்கு முன்னரே இலங்கையில்‌ வர்த்தக நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டு வந்தனர்‌ என்பது முன்னர்‌ குறிப்பிடப்பட்டது. 

இலங்கை: முஸ்லிம்களுடைய வரலாற்றில்‌ முக்கியதீதுவமுடைய அஞ்சுவண்ணத்து வர்த்தகர்‌ எப்பொழுது இலங்கைக்கு வந்தனர்‌ என்பதை அறிவது கடினம்‌. இவர்கள்‌ மேற்காசிய வர்த்தகர்களின்‌ வழித்‌ தோன்றல்கள்‌. பாரசீக (ஈரானிய) வர்த்தகர்களும்‌ அராபிய வர்த்தகர்களும்‌ அஞ்சு வண்ணத்தில்‌ அடங்கினர்‌ எனலாம்‌. இஸ்லாமியர்‌ மட்டுமின்றி யூதர்களும்‌ இவர்களிடையே காணப்பட்டனர்‌ என்று கொள்ளலாம்‌. மேற்காசியாவில்‌ இருநீது வந்த இவர்களுடைய குடியிருப்புக்கள்‌ கேரளத்தின்‌ கரையோரத்தில்‌ முதலில்‌ நிறுவப்பட்டு பின்னர்‌ பரவின எனலாம்‌. ஒன்பதாம்‌ நூற்றாண்டிலிருந்து இவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகள்‌ பற்றிய செய்திகள்‌ கிடைக்கின்றன. அஞ்சு வண்ணம்‌ என்ற பெயர்‌ பாரசீகச்‌ சொல்லாகிய ஹஞ்ஜமான என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகக்‌ கருதப்படுகின்றது.!£ இலங்கையில்‌ அஞ்சு வண்ணத்தைச்‌ சேர்ந்தோர்‌ சோழராட்சியின்‌ போது இருந்திருப்பர்‌ என்பதில்‌ ஐயமில்லை. பதினோராம்‌ நூற்றாண்டில்‌ இவர்கள்‌ மாதோட்டத்தில்‌ இருந்தமை பற்றிய செய்தி ஆந்திரத்து விசாக பட்டினத்தில்‌ கடைத்த தெலுங்குக்‌ கல்வெட்டுக்கள்‌ மூலம்‌ தெரிய வருகின்றது. இலங்கையின்‌ கரையோரத்தில்‌ பின்னர்‌ இருந்த முஸ்லிம்‌ குடியிருப்புக்கள்‌ இந்த அஞ்சுவண்ணத்தவர்‌ குடியிருப்புக்களுடன்‌ தொடங்கியிருக்கலாம்‌.

மணிக்‌ கிராமத்தவரும்‌, அஞ்சு வண்ணத்தவரும்‌ அஞ்ஞூற்றுவருடன்‌ கூடிப்‌ பல்வகை முயற்சிகளில்‌ ஈடுபட்டனர்‌ எனலாம்‌. அவ்வாறு மூன்று கணத்தினரும்‌ ஒன்று கூடித்‌ தென்னிந்தியாவில்‌ இயங்கியமைக்குப்‌ பதினமூன்றாம்‌ நூற்றாண்டுச்‌ சான்று உண்டு. அஞ்னூற்றுவர்‌ மேலோங்கிய செல்வாக்குடைய வணிக கணத்தினராக இருந்தாலும்‌, அவர்களுக்கும்‌ பிற கணத்தவர்களுக்கும்‌ இடையில்‌ பகைமையோகடும்‌ போட்டியோ இருக்கவில்லை என்பதை இச்சான்று காட்டுகின்றது.

இலங்கையில்‌ தென்னிந்திய வணிக கணத்தினர்‌ தமிழைக்‌ தங்கள்‌ ஆவணங்களில்‌ பயன்படுத்தியமை இக்‌ கணத்தின்‌ பெரும்பாலும்‌ தமிழ்‌ பேசுவோராய்‌ இருந்தனர்‌ என்பதைக்‌ காட்டுகின்றது. அவர்களுடைய ‘ பல்வகைப்பட்ட செயல்களும்‌ பெரும்பாலும்‌ தமிழ்‌ பேசும்‌ மக்கள்‌ குடியிருந்த இடங்களிலே நடைபெற்றன எனலாம்‌. இக்‌ கணத்தினரிடையே இருந்த தெலுங்கர்‌, கன்னடர்‌ மற்றும்‌ கேரளர்‌ ஆகியோரும்‌ தமிழையே பயன்படுத்தினர்‌ என்று கூறுவதில்‌ தவறில்லை. எவ்வாறு பல்வேறு தென்னிந்திய இனக்‌ குழுக்கள்‌ தமிழ்‌ மொழியால்‌ இணைக்கப்பட்டு இலங்கையில்‌ உருவாகிய தமிழ்‌ இனக்குழுவின்‌ ஆக்கத்துக்கு உதவினர்‌ என்பதற்கு இது ஒரு சான்றாகும்‌. உண்மையில்‌ இக்‌ காலத்தில்‌ வெளிநாட்டு வர்த்தகத்தின்‌ ஒரு முக்கிய மொழியாகத்‌ தமிழ்‌ மொழி இலங்கையின்‌ துறைகளில்‌ பயன்படுத்தப்பட்டது. இந்நிலை அடுத்துவரும்‌ சில நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரண்டாம்‌ நூற்றாண்டில்‌ பொலன்னனுவை மன்னன்‌ .

முதலாம்‌ பராக்கிரம பாகு வெளிநாட்டு வர்த்தகம்‌ தொடர்பாக ஊராத்துறையில்‌ (இன்றைய ஊர்க்காவற்றுறையில்‌) வைத்த பிரகடனம்‌ தமிழ்‌ மொழியில்‌ கல்லில்‌ பொறிக்கப்பட்டுக்‌ காணப்படுகின்றது. இதன்பின்‌ 1410 இல்‌ சீன வர்த்தகர்கள்‌ எழுதி வைத்த கல்வெட்டொன்று காலித்‌ துறையில்‌ (தெற்கு இலங்கையில்‌) தமிழ்‌, சீனம்‌, பாரசீகம்‌ ஆகிய -மூன்று மொழிகளில்‌ பொறிக்கப்பட்டிருப்பதையும்‌ காணலாம்‌. இம்மூன்று மொழிகளும்‌ அக்காலத்தில்‌ இந்து சமுத்திரத்து வர்த்தகர்‌ மொழிகளாக விளங்கின.

The Tamils in Sri Lanka C. 300 BCE to C. 1200 CE