கோறன் என்ற சொல்லுக்கு, கொல்லும் தன்மை உடையவன் (வன்மையுள்ள எதிரி அரசன்) என்று பரிமேலழகர் உரைக்கின்றார்.
“கோறன் மாலையரென்பது தோன்ற”
மார்கண்டேயனைக் காக்க, சிவ பெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம்.
“காலனை உதைப்பர் போலும் கடலு வூர் வீரட்டனாரே”
அதே போல,
“கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே
கூறுகிற்ப மெய்ப்பொருட் கடற்றையே” என்று
அதாவது, காலனை வெந் கண்ட வென்றிப்பெருமானே” என்றும் சமணரின் திருக்கலம்பகம் அருகக் கடவுளைச் சுட்டுகிறது
“கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்!
என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி அருகரை பாடுகிறது.
சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காக (மார்க்கண்டற்காக) எமனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் அளித்தார் என்பது சைவரின் புராணக் கதை. அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவாநிலையை தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையது போல காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே.
அதாவது, சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர், அருகக் கடவுள் பிறப்பை நீக்கி சாவினைக் கடந்தார் என்பது சமணக் கொள்கை. இங்கே அருகர், சாவினை வென்ற வீரர் என்பதால் கோறன் எனப்படுகிறார்.
பழனி, பெரியாவுடையார் கோயில் வடக்குச்சுவரில் உள்ள கேரள மன்னன் கோ வீரநாரண அதிசய சோழதேவரின் 31 ஆட்சியாண்டு கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது.
1.ஸ்வஸ்திஸ்ரீமன் கோவீரநாரண அதிசய சோழ தேவர்க்கு திருவெழுத்தி
2.ட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்பத்தொன்றாவது கோறன்
3.விழுமியானுக்கு தர்ம்மாத்யமாக கோறஞ் சோழனான
4. கவறை மாணிக்க செட்டி விட்ட…..
இதன் கீழ் 11ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில்
“உகவையும் சில்வரியும்
ராகவும் இந்நிலமும் மா நெல்’
என எழுதப்பட்டுள்ளது.
இது கவறை மாணிக்கசெட்டி விட்ட நிலமாக இருக்கலாம். இங்கு கவறை மாணிக்க செட்டியான கோறன் சோழன் என அழைக்கப்படுகின்றார். இவர் கோறன் என்று அழைக்கபடுவதால் மாணிக்க செட்டி சோழநாட்டு வீரனாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் நிலம் தர்மமாக விடப்படுவதால், கோறன் சோழன் மாணிக்க செட்டியும், கோறன் விழுமியனும் சொந்தங்களாக இருக்கலாம். மேலும் மாணிக்க செட்டி என்பது இயற்பெயரா அல்லது கவறைகளின் இயற்தொழிலான வளையல்கள், முத்து, வைர மாணிக்கம் போன்ற அணிகலன் வணிகம் செய்தவராக இருக்கலாம்.
சரி, வணிகர் எவ்வாறு வீரர் என்கிறீர் என்றால், சாத்து வணிகம் செல்லும், தாவளங்ககளில் வணிகர்களைக் காக்கும், வளஞ்சியர் குழுவில் இருந்த வலங்கை உய்யக்கொண்டான் எனும் கவறை வணிக வீரர்கள், வணிகப் பாதுகாப்பு குறித்து வீரராக இருந்த வணிகர்கள். எதிரிகளோடு சண்டையிட்டு மரித்த வலங்கை வீரரான கவறை விடங்கனுக்கு ஐந்நூற்றுவர் நிலம் ஒதுக்கி சிறப்பு செய்துள்ளனர்.
கவறைகளின் முத்து வியாபாரம்
சோழன் பூர்வபட்டயம் கவரை வளஞ்சியர் முத்து வியாபாரம் செய்தனர் என்ற குறிப்பையும் தருகின்றது. திருவல்லறை தமிழி கல்வெட்டு, முத்து வியாபாரம் செய்யும் காவிதி அந்தை அசீதன் என்ற முத்து எனும் வணிகரை பற்றி குறிப்பிடுகிறது. காவிதி என்ற பெயர் கேரளா மாநிலத்தில் இன்றும் கவரைகளின் பட்டமாக உள்ளது. சங்கறு . கவறைக்கும், , பசுமையும், சக்கரக் கோலும், அதித்தாரும் அடையாளமுடையவர்கள் என்கிறது வலங்கை இடங்கை புராணம்.
மூல நூல்:
பழனி வரலாற்று ஆவணங்கள்
சமணமும் தமிழும்
௩. நூலாரு ணூல்வல்ல குதல் வேலாருள் வேன்றி வினையுரைப்பான் பண்பு. பரி: (௫ - ள்.) வேலையுடைய வேற்றாசரிடைச் சேன்று தன்னா சனுக்த வென்றிதநம் வினையைச் சோல்லுவானுக்த இலக்கணமாவது நீதிநாலை யுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல் கோறன் மாலையரென்பது தோன்ற * (வேலார்? என்றம், 1 தூது வினை யிரண்டுமடங்க *வென்றிவினை'என்றுங் கூறினார், வல்லனாதல்-உணர்வு மாத்திர முடையராய 4 அவர் முன் வகுக்குமாற்ற லுடையனாதல், தெளி:--(இ- எ்.) வேலாருள் - வேலினையுடைய வேற்றரசரிடத்௮, (சென்று), வென்றி - (தன்ன ரசனுக்கு) வெற்றியைத் தருகின்ற, வினை யுரைப்பான், தொழிலைச் சொல்லுவானுக்கு, பணபு-இலக்கணமாவ அ, நூலா ருள் - நீதிநூலை யறிந்த மந்திரிகளிடத்து, நால்வல்லனாகுதல் - (சான்) ௮௩ நீதி நாலில் வல்லவனா சல், (௭-2). வேற்றரசர் கொல்லுர்தன்மையுடையா ரென்ப துதோன் "வேலார்" என்றும், தூ.துபோதல் தன்னரசனுக்கு வெற்றியைத் தருகின்ற வினையைக் கூறுதலென்னு மிரண் மடங்க (வென் றிவினை'என் அம, சொல்லினார். வல்லவனாதல்-அறிதல் மாத்திர முடையவராகிய அவர் முன் தான்வகுத்துக் கூறும் வல்லமை யுடையவனாதல். வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்