நாகர்கள் இந்திய நிலபரப்பு முழுவதும் வாழ்ந்த மக்க என்று அறியப்படுகின்றனர். அவர்கள் செல்வா வளமும், அரண் கொண்ட கோட்டைகளும் விரிவாக பண்டைய இலக்கியங்களில் பெசபடுகின்றன. வணிகக் குடிகள் தங்களை நாகர் வழி வந்தவர் எனக் கூறுவர். நாகர்கள் எவ்வாறு வணிகம் செய்தனர், பன்னாட்டு வணிகத்திற்குள் வந்தனர் என்பதாக பின்வரும் கருத்து கூறப்படுகிறது.
ராமாயணத்தில், இலங்கை வாழ் மக்கள் ராக்ஷஸர்களாகவும் நாகர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்கள் மனிதர்களை விட பேய்கள் மற்றும் ஆவிகள் என்று விவரிக்கப்படுகிறார்கள். இந்த சித்தரிப்பு படையெடுப்பாளர்களுடனான உருவ அமைப்பில் வேறுபட்டவர்களாக இருந்ததால் கூறப்படுகிறது.
Fa-Hien, தனது “பயணங்கள்” (அத்தியாயம் XXXVIII) என்ற புத்தகத்தில் நாகர்களின் வர்த்தகம் பற்றிய தனது வசீகரிக்கும் கணக்கில் இந்த அம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். நிலத்தில் முதலில் மனிதர்கள் இல்லை என்றும், அதற்குப் பதிலாக ஆவிகள் மற்றும் நாகர்க்கள் வாழ்ந்ததாகவும், அவர்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த வர்த்தக நடவடிக்கைகளின் போது, காடுகளில் வாழும் ஆவிகள் பார்வைக்கு வெளிப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் வணிகம் செய்ய விரும்பும் விலை மதிப்புள்ள பொருட்களின் மீது விலைக் குறித்து வைத்துவிடுவர். வணிகர்கள் சுட்டிக்காட்டப்பட்ட விலைகளின் வைத்துவிட்டு, வியாபாரிகள் பொருட்களை வாங்கிக்கொண்டு அப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
இதனை பொதுவாக பரிசு வணிகம் என்றனர். இரு தரப்பும் தங்களிடம் உள்ள விலை மதிப்புள்ள பொருட்களை எந்த விலையும் குறிப்பிட்டு கூறாமல் பண்டமாற்றிக் கொள்வர். இது வணிகத்திற்கான முன்னோடி ஆகும். ஆனால், இங்கு விலை குறிப்பிடப்படுகிறது. எனவே, நாகர்கள் வணிகத்தை துவங்கி பல ஆண்டுகள் ஆகியிருக்கும்.
மேலும், ஃபா-ஹியன் தலைநகரில் வசிக்கும் ஏராளமான வைசிய குலங்களையும் சபாசன் எனும் தென் அரேபிய வணிகர்களையும் கண்டுள்ளார்.
இந்த வணிகர்கள் அழகிய வேலைபாடுகளுடன் அமைந்த வீடுகளில் வசித்து வந்தனர். இது நகரம் செழுமையையும் பன்முகத்தன்மையையும் கொண்டதாக இருந்துள்ளது.
இதையே தமிழ்ச் சங்க இலக்கியமான பட்டினப்பாலை காட்சியும், பன்னாட்டு வணிகர்களும், மாட மாளிகைகளும், பல் மொழி பேசி வணிகம் செய்யும் வணிகர்கள் வாழும் வணிகப் பட்டினங்களை குறிப்பிடுகிறது.
“மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம்” (213-218)
வணிகத் தொழிலோடு, தென்னக அரசாட்சியில் படைப்பற்றுடன் பங்கெடுத்த #கவறை (#கவரை) வீர வளஞ்சியர்களைத் தொல்குடி நாகர் மரபைச் சேர்ந்தவர்கள் என ஆவணங்கள் கூறுகின்றன.
சங்க காலம் தொட்டே நாகர் மரபுடையவர்களைத் தென்னகத்தில் காணமுடிகிறது. இவர்களில் வடப்பகுதி, தென்னகம் மற்றும் இலங்கை என்ற பகுதி அடிப்படையில் பகுப்புகள் உண்டு. குப்தர்கள் வருவதற்கு முன்பு இந்திய நாடு முழுமையும் நாகர்கள் ஆண்டுள்ளனர்.
சங்கக்கால நாகரில் “இருபது நாகர்” குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் போன்ற நாக மரபைச் சார்ந்த மக்களை அறியமுடிகிறது.
காஞ்சிப் பகுதியைச் சேர்ந்த மன்னன் இளந்திரையன் சோழ நாக கூட்டு மரபினன்.
சோழ அரசில் பல அதிகாரிகள் நாகர் மரபைச் சேர்ந்தவர்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காக்கதீய அரசி ருத்ரமா தேவியின் மகளை மணந்தவரும், பல போர்களில் படைத்தளபதியாக செயல்பட்ட நெல்லூரைச் சேர்ந்த அண்ணாலதேவா நாகமரபும், வீரவளஞ்சிய வணிகக் மரபையும் சேர்ந்த கவரை எனக் குறிப்பிடுகிறது.