யானைப் படை பாதுகாப்பு கொண்ட வணிகக்குழுக்கள்

பண்டைக்காலத்தே உலக அரங்கில்‌ நடைபெற்ற வணிகத்தில்‌ தமிழகம்‌ மிகச்சிறந்த இடத்தினைப்‌ பெற்றிருந்ததுக . வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும்‌, தமிழக மன்னர்களுக்கும்‌ பெரும்‌ செல்வத்தை அளித்தது. சங்க காலம்‌ பொற்காலம்‌ என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச்‌ செழிப்பு அடிப்படையாய்‌ விளங்கியது எனலாம்‌.

பொதுவான வணிகம்‌ பற்றிய முன்னுரையுடன்‌ தொடங்கும்‌ இவ்வியல்‌ கூலமரபுச்‌ சமுதாய காலத்திலேயே தமிழகத்தில்‌ சிறப்புப்‌ பெற்றிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு வணிகம்‌ பற்றியும்‌, வணிகத்திற்கு அடிப்படைத்‌ தேவையாக விளங்கிய இயற்கைக்‌ கனிமவளங்கள்‌, மற்றும்‌ வணிகப்‌ பொருட்களைக்‌ கொண்டு செல்லப்‌ பயன்பட்ட பெருவழிகள்‌ பற்றியும்‌, இவ்விரு அடிப்படைத்‌ தேவைகளில்‌ அதியர்‌ ஆட்சிப்பகுதி சிறந்திருந்த தன்மை பற்றியும்‌, குலமரபுத்‌ தலைவர்கள்‌ சிலரிடையே நடந்த போர்களிற்‌ சில வணிகம்‌ காரணமாக நடந்திருக்க வேண்டும்‌ என்ற கருத்து பற்றியும்‌, குலமரபுச்‌ சமூதாயம்‌ வீழ்ந்த பின்னரும்‌, தொடர்ந்து இடைக்காலத்திலும்‌, தி.பி.12,13-ஆம்‌ நூற்றாண்டு வரையிலும்‌, அதற்குப்‌ பின்னரும்‌ கூட தருமபுரி மற்றும்‌ கரூர்‌ வரையுள்ள மேலைக்‌ கடற்கரையில்‌ இருந்து வரும்‌ பெருவழிப்‌ பகுதிகள்‌ வணிகத்திற்‌ சிறந்து நின்ற தன்மையினையும்‌ விரிவாக ஆராய்கிறது.

ஒருவருக்கொருவர்‌ அறிந்த மக்களுக்குள்ளேயோ அல்லது பண்பாட்டு கலப்பில்லாத மக்களுக்குள்ளேயோ தமக்குள்‌ இசைந்து பொருள்களை மாற்றிக்‌ கொள்வதே வணிகம்‌ எனப்படுகிறது. இவ்வணிகத்தினைக்‌ கொடை வணிகம்‌ (2144 1௧0௦), நெறிப்படுத்தப்‌ பெற்ற வணிகம்‌ (௨ண்ம்ா்‌8106ம11206) மற்றும்‌ சந்தை வணிகம்‌ (118101 ௨06) என்று பலவகைப்படுத்துவர்‌.” இருவருக்கிடையே உள்ள உறவால்‌ நடப்பது முதல்வகையிலும்‌, ஒப்பந்தங்கள்‌, சேமிப்பு, சட்டப்படியான பாதுகாப்புச்‌ செய்தல்‌, விலை குறித்து உடன்படிக்கைகள்‌ போன்ற செயல்முறைச்‌ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசு என்ற நிறுவனத்தின்‌ மூலம்‌ நடைபெறுவது இரண்டாம்‌ வகையிலும்‌, தேவையின்‌ அடிப்படையில்‌ தம்முள்‌ இசைந்த விலையினை ஏற்று அவ்வப்போது வாங்குதலும்‌, கொடுத்தலும்‌ என்ற நிலை மூன்றாம்‌ வகையிலும்‌ கருதத்தக்கன. இம்மூன்று .வகையிலும்‌ பண்டைய வணிகம்‌ நடைபெற்றமைக்கான குறிப்புகள்‌ அதியர்‌ ஆட்சிப்பரப்பில்‌ நமக்குக்‌ கிடைக்கின்றன.

வெளிநாட்டு வணிகம்‌

“ மேற்கு ஆசியாவில்‌ பிர்ஸ்‌, நிம்ருட்‌, ஊர்‌ ஆகிய இடங்களில்‌ கிடைத்துள்ள தேக்கு மரத்துண்டுகளை ஆய்வு செய்த அறிஞர்கள்‌, அவை இந்திய வகையின என்றும்‌, அவை அங்குள்ள கட்டடங்களில்‌ பயன்படுத்தப்பட்ட காலம்‌ கி.மு.6-5-ஆம்‌ நூற்றாண்டாகலாம்‌ என்றும்‌ முடிவு செய்கின்றனர்‌.” கி.மு. இரண்டு மற்றும்‌ முதல்‌ நூற்றாண்டுகளில்‌ கிரேக்க மற்றும்‌ இந்திய வணிகர்களின்‌ குடியிருப்புகள்‌ தமிழகத்தில்‌ இருந்ததைப்‌ பெரிப்புளுஸ்‌ குறிப்பிடுகிறது.” திரு. வெர்மிங்க்டன்‌ அவர்கள்‌ கருத்துப்படி, இந்தியாவிலிருந்து நான்கு மூறை தூதர்கள்‌ கிரேக்கம்‌ சென்றுள்ளனர்‌. அவர்களுள்‌ தமிழகத்‌ தூதர்கள்‌ இருமூறை சென்றுள்ளனர்‌. கிழக்குக்‌ கடற்கரையின்‌ அரிக்கமேட்டில்‌ கிரேக்கக்‌ குடியிருப்புகள்‌ இருந்தன என்பதை அங்குச்‌ செய்யப்பட்ட அகழாய்வுகளும்‌, ஆராய்ச்சிகளும்‌ வெளிப்படுத்தியுள்ளன.” மேலும்‌ தமிழகத்தில்‌ கரூர்‌, காஞ்சிபுரம்‌, புகார்‌, கொற்கை, வசவசமுத்திரம்‌ போன்ற பல ஊர்களில்‌ செய்யப்பட்ட அகழாய்வுகளில்‌ உரோமதாட்டு மதுச்சாடிகள்‌ கிடைத்திருப்பது அங்கிருந்து மது இறக்குமதி செய்யப்பட்டதை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கும்‌ சான்றாகும்‌.” மேலும்‌ கி.மு. மூதல்‌ நூற்றாண்டில்‌ ஆண்ட அகஸ்டஸ்‌ என்ற உரோமானிய மன்னன்‌ முதல்‌ கி.பி. 5-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆண்ட செனோ மன்னன்‌ வரையிலான பல மன்னர்கள்‌ வெளியிட்ட காசுகள்‌, கரூர்‌, மதுரை போன்ற சங்ககாலத்‌ தலைநகரங்களிலும்‌, வெள்ளலூர்‌, கலயமுத்தூர்‌, கண்ணனூர்‌, நவலை போன்ற பிற இடங்களிலும்‌ புதையல்களாக மிக அதிக எண்ணிக்கையில்‌ கிடைத்திருப்பது அந்நாட்டுடன்‌ தமிழகம்‌ கொண்டிருந்த வணிக உறவினைப்‌ புலப்படுத்தி நிற்கின்றது.” உள்நாட்டு வணிகம்‌

சங்க இலக்கியங்கள்‌ வணிகம்‌ பற்றிய பல குறிப்புகளைத்‌ தரூகின்றன.” உப்பு வணிகமே பல இடங்களில்‌ குறிப்பிடப்படுகின்றது. உமணச்‌ சாத்துகள்‌ குறிப்பிடத்தக்கவை. கழுதைகள்‌ மீதேற்றி கொண்டு சென்று மிளகு விற்கப்பட்டதை அறிகிறோம்‌. பெரும்பாலும்‌ உள்நாட்டு வணிகம்‌ பண்டமாற்றாகவே நடைபெற்றது. பெரிய நகரங்களில்‌ மட்டுமே அங்காடிகள்‌ இருந்ததாகத்‌ தெரிகிறது. காவிரிப்பூம்பட்டினம்‌, மதுரை ஆகிய ஊர்களில்‌ நாளங்காடி மற்றும்‌ அல்லங்காடிகள்‌ இடம்‌ பெற்றிருந்தன.” மற்றபடி பண்டமாற்று பற்றிய குறிப்புகளையே சங்க இலக்கியங்கள்‌ மிக அதிக அளவில்‌ காட்டுகின்றன. தமிழகத்திற்குள்‌ மட்டுமின்றி இந்தியா முழுவதும்‌ வணிகத்‌ தொடர்பு இருந்துள்ளது. தென்னகத்துக்‌ கனிம வளங்களையும்‌, தெற்கு நோக்கிச்‌ சென்ற பெரு வழிகளையும்‌ குறிக்கும்‌ அர்த்தசாஸ்திரம்‌, தாமிரபரணி முத்தினையும்‌, சங்கினையும்‌, பிற இடங்களில்‌ கிடைத்த வைரம்‌, வைடூரியம்‌ மற்றும்‌ பல்வகை வண்ணக்‌ கற்களையும்‌ மிக விரிவாக எடுத்துரைக்கிறது.!? இவ்வகை மணிகள்‌ கோவை மற்றும்‌ சேலம்‌ மாவட்டப்‌ பகுதிகளில்‌ கிடைத்த மணிகளாக இருக்கலாம்‌ என்று கருத இடமுள்ளது. பெரியார்‌ மாவட்டம்‌, கொடுமணல்‌ என்ற இடத்தில்‌ அண்மையில்‌ தொடர்ந்து நடைபெற்று வரூம்‌ அகழாய்வுகள்‌ அவ்வூரில்‌ மிகச்‌ சிறந்த மணிகள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலையொன்று இருந்திருக்க வேண்டும்‌ என்பதை உறுதி செய்கின்றன.” பதிற்றுப்பத்தும்‌ “கொடுமணம்‌ பட்ட வினைமான்‌ நன்கலன்‌ “களைச்‌ சுட்டுகின்றது.!? வணிகமும்‌ நகர்ப்புற வளர்ச்சியும்‌

வணிகமும்‌ நகர்ப்புற வளர்ச்சியும்‌ ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அரேபியாவின்‌ மிகப்பெரிய நகரங்கள்‌, செழிப்புற்ற வணிகவழித்‌ தடங்களில்‌ அமைந்திருந்ததையும்‌, சாதவாகனப்‌ பேரரசின்‌ பெரிய நகரங்களும்‌, குடைவரைக்‌ கோயில்களும்‌ வணிக வழிகளில்‌ அமைந்திருந்ததையும்‌ ஆராய்ச்சியாளர்‌ கண்டு துணிந்துள்ளனர்‌.!” வணிகத்தின்‌ மூலம்‌ வரும்‌ வருவாய்‌ விவசாயத்திற்குப்‌ பெரிதும்‌ பயன்படுத்தப்பட்டது என்றும்‌, அதன்‌ மூலம்‌ நகர்ப்புறங்களில்‌ பெருகிய மக்களின்‌ உணவுத்தேவை நிறைவு செய்யப்பட்டது என்றும்‌ கருதப்படுகிறது. எனவே வணிக வளர்ச்சி, வேளாண்மைத்‌ துறை-செழிக்கவும்‌, பெருநகரங்கள்‌ தோன்றவும்‌ வழி கோலியது எனலாம்‌. தமிழகத்தில்‌ சங்ககாலத்‌ தலைநகரங்களும்‌, துறைமூகங்களும்‌ மிகப்‌ பொலிவுடனும்‌, செல்வச்‌ செழிப்புடனும் விளங்கியதை அக்கால இலக்கியங்கள்‌ நமக்குத்‌ தெளிவாகக்‌ காட்டுகின்றன. பண்டைய இச்செழுமைக்கும்‌ பொலிவுக்கும்‌ காரணமாக இருந்தது உள்நாட்டு மற்றும்‌ வெளிநாட்டு வணிகமே எனலாம்‌.

பெரு வழிகள்‌

மூல்லைநிலக்‌ கால்நடை வளர்ப்புக்‌ கூழுவினர்‌ தம்‌ கால்நடைகளுக்காகக்‌ குடிபெயர்ந்து சென்ற வழிகளே தொடக்கத்தில்‌ பிறருக்கும்‌ வழிகளாக அமைந்தன. வணிகர்களும்‌, வழிபாட்டுக்கெனச்‌ செல்வோரும்‌ பயன்படுத்தப்படும்‌ வழிகளாகவும்‌ பின்னர்‌ அவை பயன்பட்டன. அவ்வழிகள்‌ பெரும்பாலும்‌ ஆற்றங்கரையினை ஓட்டியே சென்றன. வரலாற்றுக்கு மூந்தைய கால ஓவியங்கள்‌ பல தமிழகத்தின்‌ பல்வேறிடங்களிலும்‌ அண்மையில்‌ கண்டறியப்‌ பட்டுள்ளன.!* அவையெல்லாம்‌’ புதிய கற்கால மற்றும்‌ பெருங்கற்காலப்‌ பண்பாட்டு மக்கள்‌ விட்டுச்‌ சென்றுள்ள தடயங்கள்‌ ஆகும்‌. அத்தகைய ஓவியங்கள்‌ பலவும்‌ பெருவழிகளிலேயே கிடைத்துள்ளன. அவ்வகையில்‌ தமிழகத்தில்‌ கண்டறியப்பெற்றுள்ள ஓவியங்கள்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மல்லப்பாடி, மகாராஜாக்கடை, மல்லசமுத்திரம்‌, தாளப்பள்ளி, குருவிநாயனபள்ளி போன்ற பல ஊர்களில்‌ இருப்பதோடு, அவை அனைத்தும்‌ கணவாய்களை ஓட்டிய வழித்தடங்களில்‌ கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்‌. பண்டைய வணிகநெறிகள்‌ பற்றி ஆய்வு செய்த அறிஞர்‌ ஒருவர்‌, காஞ்சியிலிருந்து பூனா வரையொன்றும்‌, கோவாவிலிருந்து பாலக்கோடு வழியாகத்‌ தஞ்சாவூர்‌ நாகப்பட்டினம்‌ வரை ஒன்றும்‌, கள்ளிக்கோட்டையிலிருந்து இராமேசுவரம்‌ வரையொன்றுமாக மூன்று பெருவழிகள்‌ இருந்தன என்று கூறியுள்ளார்‌.” பிற்காலக்‌ கல்வெட்டுகளில்‌ கோட்டாற்றுக்குப்‌ போகிற பெருவழி, தஞ்சாவூர்ப்‌ பெருவழி, வஞ்சி வழி, ஆதன்‌ பெருவழி, மலைக்கிறங்கின பெருவழி, சிற்றூர்க்கிறங்கின பெருவழி, காரைத்‌ தொழுவுப்‌ பெருவழி, இராசகேசரிப்‌ பெருவழி, சேரனை மேற்கொண்ட பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, இராசமகேந்திரன்‌ பெருவழி எனப்‌ பல்வேறு தமிழகப்‌ பெருவழிகள்‌ குறிக்கப்‌ பெறுகின்றன.’? இத்தகைய சூறிப்புகள்‌ எல்லாம்‌ தமிழகத்தில்‌ வணிகப்‌ போக்குவரத்திற்கெனப்‌ பல்வேறு பெருவழிகளை அவ்வக்கால அரசுகளே கவனமாக இட்டுப்‌ பராமரித்தன என்‌ பதற்குரிய சான்றுகள்‌ எனலாம்‌.

கோவை மற்றும்‌ சேலம்‌ மாவட்டப்‌ பகுதிகளிலேயே பெரும்பாலான பெருவழிகளின்‌ பெயர்கள்‌ பற்றிய குறிப்புகள்‌ கிடைத்திருப்பது அப்பகுதியின்‌ வணிகச்‌ சிறப்பினைப்‌ புலப்படுத்துவதாய்‌ உள்ளது. வெளிநாட்டிலிருந்து மேலைக்‌ கடற்கரையில்‌ வந்திறங்கிய வணிகர்கள்‌ பாலக்காட்டுக்‌ கணவாய்‌ வழியாகத்‌ தமிழகத்திற்குள்‌ வந்து, பேரூர்‌, வெள்ளலூர்‌, பல்லடம்‌, காங்கேயம்‌, கரூர்‌ வழியாகத்‌ தமிழகத்தின்‌ ஏனைப்‌ பகுதிகளுக்குச்‌ சென்றுள்ளனர்‌. மேலும்‌ வடஇந்தியாவிலிருந்து தமிழகம்‌ வருவோரும்‌ வடமேற்கு எல்லைப்புறத்தில்‌ உள்ள கணவாய்களின்‌ வழியாகவே உள்ளே நுழைந்துள்ளனர்‌. தருமபுரியிலிருந்து தேன்கனிக்கோட்டை ஓசூர்‌ வழியாகத்‌ தென்கன்னட நாட்டினை இணைக்கும்‌ பெருவதியும்‌, தருமபுரியினைக்‌ கிருஷ்ணகிரி வழியாகச்‌ சித்தூருடன்‌ இணைக்கும்‌ வடுகப்பெருவழியும்‌ குறிப்பிடத்தக்கவை. இத்தகைய வசதியான பெருவழிகள்‌ பல கூடும்‌ இடமாக அதியரின்‌ ஆட்சிப்பரப்பு விளங்கியதால்‌ தமிழக வணிகத்தில்‌ அவர்கட்கொரு சிறந்த இடம்‌ இருந்தது. தருமபுரி மாவட்டம்‌ நவலையில்‌ கிடைத்துள்ள மூத்திரை குத்தப்‌ பெற்ற வெள்ளிக்காசுகளும்‌, உரோமானியக்‌ காசும்‌ இதனை வலியுறுத்தும்‌ மிகப்‌ பழைய தொல்பொருட்‌ சான்றுகளாக உள்ளன.

குலமரபுச்‌ சமுதாய கால வணிகம்‌

மேற்குறித்த அடிப்படையில்‌ காணும்‌ போது, பண்டைய தமிழ்நாட்டு வணிகத்தில்‌ அதியரின்‌ பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது எனலாம்‌. அதனை வலியுறுத்தும்‌ சான்றுகள்‌ பல உள்ளன. சான்றாக, அதியமான்‌ பொகுட்டெழினியை ஓளவையார்‌,

எருதே யிளைய நுக முணராவே

சகடம்‌ பண்டம்‌ பெரிது பெய்தன்றே

அவலிழியினும்‌ மிசையேறினும்‌

அவண தறியுநர்‌ யாரென உமணர்‌

கீழ்மரத்து யாத்த சேமவச்சன்ன

இசை விளங்கு கவிகை (புறம்‌.302) என்றும்‌,

அச்சொடு தாக்கிப்‌ பாருற்றியக்கிய |

பண்டச்‌ சாகாட்டாழ்ச்சி சொலிய

வரிமணல்‌ ஜெமிரக்‌ கற்பக நடக்கும்‌

பெருமிதப்‌ பகட்டுக்குத்‌ துறையும்‌ உண்டோ (புறம்‌.90)

என்றும்‌ பாடுகிறார்‌. சங்கப்‌ பாடல்களில்‌ உப்பு விற்கும்‌ வணிகரும்‌; அவரது சாத்துகளும்‌ (வணிகக்கூட்டம்‌) பரந்த அளவில்‌ பேசப்படுகின்றனரெனக்‌ கண்டோம்‌. நெடுந்தொலைவு கொணர்ந்து (தருமபுரிக்கருகில்‌ கடலில்லை என்பது குறிப்பிடத்தக்கது) விற்கப்படும்‌ பொருளான அடிப்படைத்‌ தேவையான உப்பு வணிகத்தில்‌ ஈடுபடும்‌ காளைகளின்‌ அருமை பெருமையினையும்‌, உப்பு வண்டிகளின்‌ சேம அச்சினையும்‌, அவை மலையும்‌ காடுமான பகுதிகளில்‌ ஏறி இறங்கிவரும்‌ சிறப்பினையும்‌ கண்ட ஓளவையார்‌ வணிகத்தின்‌ சிறப்பினை அறிந்தவராதலின்‌ மேற்காட்டியவாறு அவற்றை அதியனுக்கு உவமையாக்குகிறார்‌ எனலாம்‌.

போரும்‌ வணிகமும்‌

திருக்கோவலூர்த்‌ தலைவனான மலையமான்‌ திருமுடிக்காரி அதியனின்‌ சமவெளிப்‌ பகுதிக்கும்‌, தமிழகத்தின்‌ உட்பகுதிக்கும்‌ (கொங்கு நாட்டிற்கும்‌, தொண்டை மண்டலத்திற்கும்‌ நடுவே) இடையேயான வழியில்‌ இருந்த வேறொரு குலத்தலைவன்‌ ஆவான்‌. சேரனின்‌ சார்பாளனாக இருந்த காரிக்கும்‌, அதியனுக்கும்‌ போர்‌ ஏற்பட்டது. இப்போர்‌ வணிகப்‌ பெருவழியினைத்‌ தனக்குரியதாக ஆக்கிக்‌ கொள்ளும்‌ பொருட்டுக்‌ காரியிட்ட போராகவே இருத்தல்‌ வேண்டும்‌. இப்போரில்‌ திருக்கோவலூர்‌ துகளெழும்‌ வகையில்‌ அதியன்‌ வெற்றி வாகை சூடினான்‌. வெற்றி கொண்ட அதியன்‌ மீளும்‌ வழியில்‌ சமணர்க்கு அளித்த கொடை, தருமபுரி திருக்கோவலூர்ப்‌ பெருவழியில்‌ அமைந்துள்ள ஜம்பையில்‌ கல்வெட்டாகப்‌ பொறிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.

வாகைப்பறந்தலையில்‌ நன்னனின்‌ சார்பாகப்‌ போரிட்ட மினஞிலியுடன்‌, பாண்டியனின்‌ சார்பாக அதியமான்‌ நெடுமிடல்‌ போரிட்டு இறந்தான்‌. பாண்டியனின்‌ வணிகத்திற்கு ஏதுவாக எல்லைப்புறத்தில்‌ அதியன்‌ விளங்கியிருத்தல்‌ வேண்டும்‌. பாண்டியனின்‌ கொற்கை மூத்தும்‌, பிறவும்‌ வடஇந்தியாவுக்குச்‌ செல்லும்‌ வழியிது. நன்னனின்‌ நாடு இயல்பாகவே பெருவளம்‌ பழுநிய நாடு. மலைபடு பொருட்களும்‌, காடுபடு பொருட்களும்‌ நிறைய உள்ள நாடு. அவனது நியமம்‌ என்னும்‌ பேரூர்‌ திருநகராக (செல்வச்‌ செழிப்புடையதாக) விளங்கியது என்பார்‌ பெருங்கொளசிகனார்‌ (மலைபடு.480,548). நியமம்‌ என்ற பெயரே வணிகத்துடன்‌ தொடர்புடையது.” எனவே அவனும்‌ அதியனின்‌ நாட்டுப்‌ பகுதியினை வணிக வழிகளுக்காகப்‌ பெறவேண்டும்‌ என்று கருதியிருக்கலாம்‌. இவ்வகையிலேயே இவ்விருவருக்கும்‌ போர்‌ ஏற்பட்டது எனலாம்‌.

தகடூரும்‌ வணிகமும்‌

தகடூரை “விரவுமொழித்‌ தகடூர்‌” என்று குறிக்கிறது அகநானூறு. பொதுவாகப்‌ பலமொழி பேசுவோரும்‌ வாழும்‌ இடமாக வணிக நகரங்கள்‌ விளங்கியிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்தைப்‌ பாடும்‌ கடியலூர்‌ உருத்திரங்கண்ணார்‌,

மொழிபல பெருகிய பழிதீர்‌ தேயத்துப்‌

புலம்பெயர்‌ மாக்கள்‌ கலந்தினிது உரையும்‌

மூட்டாச்‌ சிறப்பின்‌ பட்டினம்‌ (பட்டினப்‌.216-21)

என்கிறார்‌. இதுபோலவே பல்வேறு மொழி பேசும்‌ மக்கள்‌ வாழும்‌ ஊராகத்‌ தகடூர்‌ விளங்கியதென்ற கூறிப்பினைக்‌ கொண்டு, தகடூர்‌ வணிகத்தில்‌ சிறந்த இடம்‌ பெற்றிருந்தது எனக்‌ கருதலாம்‌.

தகடூரும்‌ கனிம வளங்களும்‌

தகடர்ப்‌ பகுதியின்‌ கனிம வளங்களின்‌ செழுமையினை நிலவியல்‌ அமைப்புப்‌ பகுதியில்‌ கண்டோம்‌. குலமரபுச்‌ சமுதாயப்‌ போர்களுக்கும்‌, அன்றாட வாழ்க்கைப்‌ பயன்பாட்டுக்குமான கருவிகளைச்‌ செய்ய இப்பகுதியில்‌ கிடைத்த இரும்பு இன்றியமையாததாய்‌ இருந்திருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ இப்பகுதியில்‌ கிடைத்த பல வண்ண மணிகளும்‌, படிகக்‌ கற்களும்‌, தமிழகப்‌ பண்டைய வணிகத்தில்‌ சிறப்பிடம்‌ பெற்றிருந்ததால்‌ குலமரபுச்‌ சமுதாய வணிகத்தில்‌ அதியர்‌ சிறப்புப்‌ பங்கு பெற்றிருந்தனர்‌ எனலாம்‌.

பேரரசு தோன்றுவதற்கு முன்‌ வணிகம்‌

குலமரபுச்‌ சமுதாய இறுதியில்‌ வீழ்ச்சியடைந்த வணிகம்‌, பல்லவ பாண்டியர்‌ ஆட்சியின்‌ போது மலர்ச்சியடைந்தது. மணிக்கிராமத்தார்‌, நானாதேசிகன்‌, திசையாயிரத்து ஐந்நூற்றுவர்‌, அஞ்சுவண்ணத்தார்‌, வளஞ்சியர்‌, பதினெண்விஷயத்தார்‌ போன்ற பல வணிகக்‌ குழுக்கள்‌ தோன்றிச்‌ சிறந்தன. இவர்கள்‌ தமிழகத்திற்கு மட்டும்‌ உரியவர்கள்‌ என்றில்லாது, தென்னகம்‌ முழுமைக்கும்‌ செல்பவர்களாகவும்‌, கடல்கடந்தும்‌ வணிகம்‌ மேற்கொண்டவர்களாகவும்‌ விளங்கினர்‌. குறிப்பாக நானாதேசிகள்‌ வெளிநாட்டு வணிகத்தில்‌ பெரும்பங்காற்றினர்‌. பல்லவர்‌, பாண்டியர்‌ கல்வெட்டுகளில்‌ இத்தகைய வணிகர்‌ பற்றிய குறிப்புகள்‌ மிகப்பரந்த அளவில்‌ கிடைக்கின்றன. நகரத்தார்‌ என்ற சொல்‌ வணிகர்‌ அனைவரையும்‌ குறிக்கும்‌ பொதுச்‌ சொல்லாக விளங்கியது. அவர்களது நிர்வாக அமைப்பு நகரம்‌ என வழங்கப்பட்டது. வணிகக்‌ குழுவினர்‌ தாம்‌ செல்லும்‌ வழிகளில்‌ தங்கிச்‌ செல்ல வசதியாகத்‌ குறிப்பிட்ட இடைவெளியில்‌ தங்குமிடங்களைக்‌ கொண்டிருத்தல்‌ அவசியமான ஒன்று. மேலும்‌ இவர்கள்‌ வணிகப்‌ பொருட்களைப்‌ பல பெருவழிகள்‌ கூடும்‌ இடங்களில்‌ சேமித்து வைத்துத்‌ தேவைக்கேற்ப எடுத்துச்‌ செல்லுதல்‌ மற்றும்‌ பரிமாறிக்‌ கொள்ளுதல்‌ ஆகிய பணிகளை மேற்கொண்டிருந்தனர்‌. அவ்வாறு அவர்கள்‌ தங்குமிடங்களிலும்‌, பொருள்களைச்‌ சேமித்து வைக்குமிடங்களிலும்‌ காவலுக்கெனத்‌ தம்‌ வீரர்களை நிறுத்தி வைத்திருந்தனர்‌. இவையன்றிப்‌ பெருவழிகளிலும்‌, எல்லைப்‌ பகுதிகளிலும்‌, ஆற்றைக்‌ கடக்குமிடங்களிலும்‌, பட்டினப்‌ பகுதிகளிலும்‌ அமைந்த வரி (சங்கம்‌) வசூலிக்கும்‌ இடங்களிலும்‌, காவல்‌ வீரர்கள்‌ இருந்தனர்‌. இவ்வாறு சுங்கம்‌ பெறும்‌ இடங்கள்‌ “சாரிகைக்‌ கொட்டகைகள்‌” எனக்‌ கல்வெட்டுகளில்‌ குறிக்கப்‌ பெறுகின்றன. இவற்றின்‌ அருகிலும்‌ காவல்‌ வீரர்கள்‌ தங்கியிருந்தனர்.

இப்படை வீரர்கள்‌, மூனைவீரர்‌, செட்டிவீரர்‌, கொடிவீரர்‌, எறிவீரர்‌ எனப்‌ பல பெயர்களால்‌ அழைக்கப்‌ பெற்றனர்‌. வணிகர்கள்‌ மற்றும்‌ வணிகப்‌ பொருட்களின்‌ மூகாமிடங்கள்‌ *தாவளங்கள்‌ ‘ என்றும்‌, ‘அடிக்கீழ்த்தளங்கள்‌” என்றும்‌ பெயர்‌ பெற்றன.’”

இத்தகைய வணிகக்‌ குழுக்கள்‌, நாட்டின்‌ பொருளாதாரத்திற்கு மூதுகெலும்புகளாய்‌ இருப்பதோடு, அறப்பணிகள்‌ பலவும்‌ செய்துள்ளன. அறச்செயல்களுக்குப்‌ பெரும்பொருளை அள்ளித்‌ தருவதோடு நின்றுவிடாமல்‌ அவ்வறங்களைப்‌ பராமரிக்கும்‌ பணியினையும்‌ இக்குழுவினர்‌ பல இடங்களில்‌ ஏற்றுள்ளனர்‌. பல்வகைப்பட்ட மக்களும்‌ தாம்‌ செய்யும்‌ அறப்பணிகளுக்கு முதலாக வைக்கும்‌ பணத்தினை ஏற்று அதன்‌ பலிசை (வட்டி) மூலம்‌ பணிகளை நிறைவேற்றும்‌ பொறுப்பினை இவர்கள்‌ ஏற்றதால்‌ நாட்டின்‌ பொருளாதாரம்‌, அறம்‌ ஆகிய இரண்டுமே வணிகர்களால்‌ வளர்ந்தன என்றறிகிறோம்‌.

முன்னரே குறித்தபடி இந்தியாவின்‌ பல்வேறு பகூதிகளில்‌ இருந்தும்‌, மேலை நாட்டிலிருந்தும்‌ வந்து தமிழகத்தின்‌ உள்நாட்டுப்‌ பகுதிகளுக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தகடூர்‌ இருந்ததால்‌, இங்குப்‌ பல்வகையான வணிகம்‌ பற்றிய குறிப்புகள்‌ கிடைக்கின்றன. கி.பி. எட்டாம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த நடுகல்‌ ஒன்றில்‌ ‘வதிசெல்வான்‌ கல்‌” என்ற தொடர்‌ காணப்படுகிறது.” பெருவழியில்‌ காவல்புரிந்த வீரன்‌ ஒரூவன்‌ இறந்துபட்டதையே இக்கல்வெட்டுத்‌ தெரிவிப்பதாதல்‌ வேண்டும்‌. வணிகர்களே ஊராளும்‌ தலைவர்களாகவும்‌ இப்பகுதியில்‌ விளங்கியிருக்கின்றனர்‌. தொல்குடியினராகவே பெரும்பாலும்‌ விளங்கிய மக்கள்‌ வாழ்ந்த இப்பகுதியில்‌ வணிகர்களே ஓரளவு செல்வம்‌ படைத்தவர்களாகச்‌ சிறந்திருத்தல்‌ வேண்டும்‌. பல்லவ மகேந்திரவர்மனின்‌ கல்வெட்டு, ‘மீவேணாட்டு கிப்பையூர்‌ ஆளும்‌ வணிகர்‌, ஒருவரைக்‌ குறிக்கின்றது.” இப்பகுதிகளில்‌ ஏற்படும்‌ சிறுசிறு பூசல்களிலும்‌ வணிகக்‌ கூட்டத்தாரின்‌ வீரர்களே பங்குபற்றினர்‌ போலும்‌. அதியமான்‌ வழிவந்த தொல்குடித்‌ தலைவனான *தெழினியார்‌” ஒருவரின்‌ சார்பாக வணிகச்‌ சடையன்‌ என்ற வீரன்‌ ஒருவன்‌ யானை மீதமர்ந்து போரிட்டு வீரமரணம்‌ அடைந்தான்‌ என்பதையும்‌ ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.” எனவே வணிக வீரர்கள்‌ யானைகள்‌ வைத்திருந்தனர்‌ என்பதும்‌ தெளிவாகிறது.” ஊத்தங்கரை வட்டத்தில்‌ உள்ள ரெட்டியூரில்‌ வளஞ்சியர்‌ ஐந்நூற்றுவர்‌ என்ற வணிகக்‌ குழுவினர்‌ அம்பலம்‌ (கோயில்‌ அல்லது மன்டபம்‌) ஒன்று எடுத்ததை ஒரு கல்வெட்டு ௬ட்டுகின்றது.”” இவ்வாறு எந்த ஒரு பெருமன்னரும்‌ இல்லாத காலத்திலும்‌ கூட, இப்பகுதியில்‌ வணிகர்கள்‌ பற்றிய கல்வெட்டுகள்‌ கிடைப்பதிலிருந்து, இப்பகுதியின்‌ வணிகச்‌ சிறப்பு புலப்படுகிறது.

கி.பி.12,13-ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ வணிகம்‌

கி.பி.12-.13-ஆம்‌ நூற்றாண்டளவில்‌ மீண்டும்‌ அதியமான்களின்‌ ஆட்சி நிலைபெற்றபோது, அவர்கள்‌ வணிகத்திற்கு ஆக்கமும்‌ ஊக்கமும்‌ அளித்தனரென்பதற்குச்‌ சான்றுகள்‌ பல காணப்படுகின்றன. கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஓசூர்ப்பகுதியில்‌ மயிலாப்பூரைச்‌ சேர்ந்த வணிகக்‌ குழுவினர்‌ வந்து தங்கியிருந்துள்ளனர்‌ என்பதை அவ்வூர்க்‌ கோயிலுக்குச்‌ சந்திவிளக்குக்கென அவர்கள்‌ நிவந்தம்‌ அளித்துள்ள செய்தி மூலம்‌ அறிகிறோம்‌.”* சிந்தல்பாடியெனும்‌ ஊர்‌ தேசிப்பட்டணம்‌ என்று வழங்கப்பட்டது.” பொதுவாகப்‌ பட்டணம்‌ என்ற சொல்‌ வணிக நகரத்தைக்‌ குறிப்பதாகும்‌. சூரபட்டணம்‌, நானாதேசிப்பட்டணம்‌ போன்று, தகடூரைச்‌ சுற்றிச்‌ சுமார்‌ 12,13-ஆம்‌ நூற்றாண்டளவில்‌ இருந்த ஊர்களின்‌ பெயர்கள்‌, அப்பகுதியின்‌ வணிகச்‌ செழுமையினைக்‌ குறிப்பனவாகும்‌. சிந்தல்பாடியான தேசிப்பட்டணத்தைச்‌ சேர்ந்த வணிகன்‌ அளித்த கொடையினை ஒரு கல்வெட்டும்‌, சூரபட்டணத்தில்‌ இருந்த குலோத்துங்க சோழநாட்டு வீரஞ்செய்வார்க்கு ஊதியம்‌ அளிக்க வகை செய்ததை வாணியம்பாடிக்‌ கல்வெட்டும்‌ தெரிவிக்கின்றன.” தருமபுரிக்கருகில்‌ உள்ள கடகத்தூர்‌ நானாதேசிப்‌ பட்டணம்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருந்தது. “நானாதேசி”யெனும்‌ பன்னாடுகளுக்குச்‌ சென்று வணிகம்‌ செய்யும்‌ குழு தருமபுரிப்‌ பகுதியில்‌ கால்கொண்டிருந்ததை இக்கல்வெட்டு மூலம்‌ அறிகிறோம்‌.””

தகடூர்‌ வணிகரின்‌ தளமாக விளங்கியது என்பதைக்‌ கி.பி.1227-ஆம்‌ ஆண்டைச்‌ சேர்ந்த கல்வெட்டு ஒன்று தெளிவாகக்‌ காட்டுகின்றது.” திருக்கோச்செங்கணீஸ்வரம்‌ என்றழைக்கப்பட்ட கோயிலுக்கு இராஜராஜ அதியமான்‌ கொடுத்த பதின்க௧ண்டக விதை நிலத்தினைக்‌ கந்தமுழான்‌ செயங்கொண்டான்‌ திருவண்ணாமலை யுடையான்‌ என்பவன்‌, தானமாக அளித்தான்‌. அவனைத்‌ “தகடூரில்‌ தளமுடைய வியாபாரி” என்று அக்கல்வெட்டு சுட்டுகின்றது. முன்னர்க்‌ குறிப்பிட்டபடி இவ்வூர்‌ வணிகர்கள்‌ தங்குமிடமாகவும்‌, வணிகப்‌ பொருட்களின்‌ சேமிப்பிடமாகவும்‌ விளங்கியதையே இது காட்டுகிறது. மேலும்‌ தீர்த்தம்‌, குந்தாணி ஆன கொத்தூர்‌ ஆகிய ஊர்களிலும்‌ வணிகர்களைத்‌ குறிக்கும்‌ கல்வெட்டுகள்‌ அமைந்துள்ளன. கொத்தூரில்‌ உன்ள கல்வெட்டு, வணிகர்களின்‌ சின்னங்கள்‌ பலவற்றைக்‌ கொண்டிருப்பதோடு அடிக்கீழ்த்தளம்‌, அத்திகோசத்தார்‌, நான்குதிசைப்‌ பதினெண்விஷயத்தார்‌ ஆகியோரையும்‌ குறிப்பிடுகின்றது.

கல்வெட்டுகள்‌ கிடைத்திருக்கும்‌ ஊர்கள்‌ அனைத்தும்‌ பெரும்பாலும்‌ பெருவழிகளில்‌ உள்ளவையே ஆகும்‌. இவ்வாறு மிகச்சிறந்த வணிகவழியில்‌ தன்‌ பரப்பினைக்‌ கொண்டிருந்த அதியர்குல விடுகாதழகிய பெருமாளும்‌, கி.பி.12-ஆம்‌ நூற்றாண்டில்‌ வணிகத்தினை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ பல செயல்களைச்‌ செய்திருக்கின்றான்‌. அவற்றுள்‌ ஒன்றே தொலைவினைக்‌ குறிக்கும்‌ கற்கள்‌ ஆகும்‌. அவை கிடைத்தமை வரலாற்றின்‌ பேறே எனலாம்‌. அவை அதியமான்‌ பெருவழி” என்ற பெயர்‌ பொறிக்கப்பட்ட கற்பலகைகளாகும்‌. அக்கல்‌ நடப்பெற்றிருக்கும்‌ பெருவழியின்‌ பெயரையும்‌, அப்பெருவழி எங்குச்‌ செல்கிறது என்ற செய்தியினையும்‌, அவை நடப்பெற்ற இடத்திலிருந்து சென்றடையும்‌ ஊர்‌ எவ்வளவு தொலைவில்‌ உள்ளது என்ற தகவலையும்‌ அளிப்பதாக அமைந்துள்ளன. இத்தகைய கற்கள்‌ இதுவரை இரண்டு கிடைத்துள்ளன. அதியமான்‌ கோட்டைக்கும்‌ பாலக்கோடுக்கும்‌ இடையே சாலை ஓரத்தில்‌ வயல்களுக்கிடையே ஒன்றும்‌, தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில்‌ தருமபுரியில்‌ இருந்து எட்டுமைல்‌ தொலைவில்‌ கெங்குரெட்டிபட்டி என்னும்‌ ஊரில்‌ ஒன்றும்‌ ஆக இரண்டுள்ளன.”” முன்னதில்‌,

அதியமான்‌ பெருவழி

நாவற்‌ தாவளத்துக்கு

காதம்‌ 29 என்றும்‌, பின்னதில்‌,

அதியமான்‌ பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம்‌ 227

என்றும்‌ எழுதப்பட்டுள்ளது. இதில்‌ எண்கள்‌ தமிழ்‌ எண்களாக எழுதப்பட்டுள்ளன. ஆனால்‌ அதையொட்டிக்‌ கல்லாதோரும்‌ எளிதில்‌ புரிந்து கொள்ளும்‌ வகையில்‌ இரு பத்துகளைக்‌ குறிக்க இரு பெரிய குழிகளும்‌, ஒன்பதினையும்‌, ஏழினையும்‌ குறிக்க மூறையே ஒன்பது, . ஏழு சிறிய குழிகளும்‌ பொறிக்கப்பட்டுள்ளன (படம்‌ 20). இதிலிருந்து இப்பெருவழிகளைச்‌ செய்தமைத்ததோடு அதன்‌ பராமரிப்பிலும்‌, விடுகாதழகிய பெருமாள்‌ மிக்க கவனஞ்‌ செலுத்தியிருத்தல்‌ வேண்டும்‌ என ஊகிக்கலாம்‌.

29. இதில்‌ குறிக்கப்படும்‌ நாவல்‌ தாவளம்‌ எங்குளது என்று முடிவாகக்‌ கூறுதற்கில்லை. எனினும்‌, இரண்டு கற்களுக்கும்‌ இடையே உள்ள எண்களைக்‌ கொண்டு ஆராய்ந்தால்‌, வடார்க்காடு மாவட்டம்‌ வேலூருக்கருகிலோ அல்லது செங்கற்பட்டு மாவடடம்‌ காஞ்சிபுரத்திற்கருகிலோ இத்தாவளம்‌ இருந்திருக்கலாம்‌ என ஊகிக்கலாம்‌ ஏறத்தாழ இதேகாலத்தில்‌ ஆறகழூரைத்‌ தலைநகராகக்‌ கொண்டு ஆண்ட குறுநிலத்‌ தலைவன்‌ மகதேசன்‌ என்ற பாணர்குலச்‌ சிற்றரசனும்‌ தன்‌ பெயரால்‌ ‘மகதேசன்‌ பெருவழி’ என்ற பெருவழியொன்றினை அமைத்துள்ளான்‌. அது காஞ்சிபுரம்‌ வரை சென்றதெனத்‌ தெரிகிறது எனவே இவ்வதியமான்‌ பெருவழி குறிக்கும்‌ நாவற்தாவளமும்‌, காஞ்சிக்கருகிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

– தமிழக வரலாற்றில் அதியர் மரபு

Leave a Reply