அரசருக்கு பதிலாக வணிகத்தில் ஈடுபடும் ராஜசெட்டி

அரசரின் விளைநிலங்களில் இருந்து உற்பத்தியான, அரசருக்கு சொந்தமான ஆலை போன்ற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்த, வணிகத் தலைவனை, “இராஜ ஷ்ரேஷ்தி” அல்லது “அரச செட்டி” Royal Merchant எனப்பட்டார். அண்டை நாடுகளுக்கும் கடல்கடந்து தொலைதூர நாடுகளுக்கு அரச தூதுவராக சென்றவர்கள் இந்த இராஜ சேத்திகள்.

அர்த்த சாஸ்திரம் அரச செட்டிகள் மீது பல புதிய கட்டுப்பாடுகளை வித்தித்தது. வணிகக் கழங்களும், பெரும் வணிகரும் அரசுக்கு முள் போன்றவர்கள் என எச்சரித்தது.

“இராஜேந்திரச் சோழ செட்டி” என்ற சோழ அரச வணிகரை கொலை செய்த மற்றொரு ஹலிமட்டா என்ற வணிகருக்கு அளித்த மரண தண்டனைப் பற்றி கர்நாடக மாநில இராஜேந்திரச் சோழப் பேரரசு கால கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டிலேயே இராஜ ஷ்ரேஷ்தி பற்றிய ஆவணங்கள் நமக்கு கிடைக்கின்றன.

இந்திய அரச செட்டியும் தச்சர்களை விற்ற இயேசுவும்

விற்பனையில் லாபத்தில் இவர்களுக்கு பங்கு கிடைத்தன். இராஜ செட்டிகள் அரசர்களை பங்குதாராக மட்டுமில்லாமல் ஏதேனும் பகுதியை நிர்வகித்தவராகவும் இருந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் அரசால் நிர்ணயிக்கப்படும் வணிகர்கள், அரசர்களின் பினாமி போன்றவர்கள் எனலாம்.

குத்நாபர் Gondophares என்ற இந்தோ பார்த்திய அரசவையில் ஹப்பன் Habban என்ற இராஜ ஷ்ரேஷ்டி இருந்தார். இவரை யூதர் என்றும் கூறுவர். அந்த அரசனுக்கு மாளிகை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்தது.

யவனத் தச்சர்களுக்கு அன்று இந்தியாவில் நல்ல மதிப்பு இருந்தது. மணிமேகலையின் தமிழகத்தில் இருந்த யவனத் தச்சர்கள் பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன.

ஹப்பன் செட்டியை மாளிகைகளைக் கட்ட தச்சர்களை கொண்டுவர அரசன் தூது அனுப்புகிறான். அந்த செட்டி நேரே யூதேயாவுக்கு வந்து அங்கு இயேசுவை சந்தித்து தனக்கு ஓர் நல்ல தச்சன் வேண்டுமென கேட்கின்றார். சிரியன் பைபிள் படி இயேசு தச்சு தொழிலோடு, தச்சர்களை வேலைக்கு அனுப்பும் லேபர் காண்ட்ராக்கடராக சித்தரிக்கப்படுகிறார். அதாவது தச்சர்களைக்கொண்ட கைவினைக் கலைஞர்களின் (Artisans Guild) வணிகக் குழுவை நடத்தியுள்ளார். இயேசுவின் முன்னோரான ஆப்ரகாமின் தந்தை காலம் முதலே மெசபடோமியாவின் ஊர் நகரில் புகழ்வாய்ந்த தச்சுத்தொழில் செய்த மர தெய்வ சிலைகளைச் செய்யும் வணிகராக இருந்துள்ளனர்.

ஹப்பனிடன் பணம் பெற்றுக்கொண்டு இயேசு யூதேயாவைச் சேர்ந்த தாமஸ் என்ற தச்சுத்தொழிலோடு கட்டுமானத் தொழில் தெரிந்த பொருந்தச்சனை அனுப்பிவைக்கின்றார்.

இந்தியாவிற்கு வந்த தாமஸ், பணத்தைப் பெற்றுக்கொண்டு பணியைத் துவங்குகிறார். ஆனால் மாளிகை கட்டாமல் அந்த பணத்தில் சமயப் பணிகளையும், மக்களுக்கு உதவிகளும் செய்து செலவழித்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த அரசன் தன்னை ஏமாற்றிவிட்ட தாமஸுக்கும், அவரை கொண்டு அரச செட்டி ஹப்பனுக்கும் சேர்த்து மரண தண்டனை அளித்து விடுகிறார். வரலாற்றில் அரச செட்டிகள் அரசர்களில் வணிகத்தில் வரும் பணத்தைக் கையாடல் செய்தது குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.

Leave a Reply