பஞ்சசதவீரர் என்ற ஐந்நூற்றுவ வணிகக்குழுவின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பஞ்ச=ஐந்து, சத=நூறு = பஞ்சசத = ஐந்நூற்றுவர் 

மதுரை, மே.26- மதுரை ஆண்டார்கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தின் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு வட்டாரத் தில் உள்ள பாப்பாக்குடி கிராமம் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு வயற்காட்டில் 800 ஆண்டுக ளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக் கப்பட்டது. மேலமடைகிராம நிர்வாக அலுவலர் இளங்கும ரன் தகவலின் அடிப்படையில் மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டி யன் இந்த கல்வெட்டு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன், பாண்டிய நாட்டு வரலாற்று மைய ஆய் வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை படி எடுத்தனர். கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் குறித்து மூத்த வர லாற்று ஆய்வாளர் சாந்தலிங்

கம் கூறியதாவது:- இந்த கல்லை அந்த பகுதி மக்கள் முனியன்கல்லு என அழைக்கின்றனர். 4 அடி

13-ம்நூற்றாண்டு கல்வெட்டை படத்தில் காணலாம்

உயரமுள்ள இக்கற்பலகையின் 3 புறமும்கல்வெட்டு வெட்டப் பட்டுள்ளது. மொத்தம் 47 வரிகளை கொண்டுள்ளது. இந்த கல்வெட்டின் முதல் 6 வரிகள் கிரந்த எழுத்துக்களில் சமஸ்கி ருதத்தில் வணிகர்களின் மெய்க்கீர்த்தியை கூறுகிறது. கல்வெட்டு சமஸ்தபுவனா சார்ய பஞ்ச சதவீரசாசனம் என்று சாசனம் குறிப்பிடுகிறது. அதாவது ஐநூற்றுவர் என்னும் வணிகக்குழுவினர் அளித்த சாசனம் என்பது இதன்பொரு ளாகும்.

13-ம் நூற்றாண்டு

இதில் வணிகர்கள் தங்களை அய்யப்பொழில் பரமேஸ்வரியின் மக்கள் என்று கூறி கொள்கின்றனர். பல வணிகக்குழுக் கள் ஒன்று கூடி சமயத்தன்மை என்கிற தங்களது தொழில் தர்மத்தை நடத்துகின்றனர். நகரம், கிராமம், மணிக்கிரா மம், கோழிக்குறிச்சி, கடிகைத் தாவளம், ஏறுசாத்து, இறங்கு சாத்து (ஏற்றுமதி, இறக்குமதி) வணிகர்களுமான திசையாயி ரத்து ஐநூற்றுவர் என்ற குழு வினர் பறப்பு நாட்டுப்பிரிவுக் குள் அடங்கிய இளமைநல் லூர் என்ற ஊரை சேர்ந்த வணிகவீரர்கள் இவ்வூரில் ஒரு வணிகத்தாவளத்தை ஏற்ப டுத்தி காவல் புரிந்து வணிகர்க ளுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.

இளமைநல்லூர் என்பதற்கு நானாதேசி நல்லூர் என்று மற் றொரு பெயரும் வழங்கப்பட் டுள்ளது. இளமைநல்லூர் என் பதே இன்று இளமனூர் என்ற ஊராக இருக்கலாம் என தெரி கிறது.பதினெட்டுபட்டிணத்து பதினெண்விசையத்தார் என்ற பெருங்குழுவினர் வணிகவீரர் களை கொண்டுவீரத்தாவளம் அமைத்து வணிகம் செய்துள் ளனர். தாவளம் என்பது காவல் அரண்மிக்க தங்குமிட மாகவும், சரக்குப்பெட்டகம் (குடோன்) ஆகவும் செயல் பட்ட இடமாகும். முக்கியத்து வம் வாய்ந்த இக்கல்வெட்டு மதுரைக்கு அருகில் கிடைத்திருப்பது வரலாற்று அறிஞர்களுக்கு வியப்பை தந்துள்ளது.

இதற்கு முன்பு நத்தம், கோவில்பட்டி, சத்திரபட்டி, சிவகங்கை மாவட்டம் திரு மலை, பிரான்மலை போன்ற இடங்களில் இத்தகைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி.13-ம் நூற்றாண்டில் அரசர்களின் ஆதரவை எதிர்பார்க் காமல் தன்னிச்சையாக வணி கர்கள் செயல்பட்டுள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply