கவரர்‌ – Gavara

1891 சென்னை மாநிலக்‌ கணக்கெடுப்பு அறிக்கையில்‌, “இந்தச்‌ சாதி விசாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ மட்டுமே காணப்படுகிறது. மாவட்டக்‌ கையேட்டில்‌ கூறியுள்ளதன்‌ அடிப்‌ படையில்‌ இவர்கள்‌ பயிர்த்தொழில்‌ செய்யும்‌ வகுப்பாராகக்‌ கொள்ளப்பட்டுள்ளனர்‌. எனினும்‌ கவர என்பது கோமட்டி களின்‌ முக்கியமான உட்பிரிவு ஆகும்‌. இந்த கவரர்கள்‌ உண்‌ மையில்‌ கவர கோமட்டிகள்‌ ஆகலாம்‌, இவர்கள்‌ இவ்வாறு அழைக்கப்படுவதற்குக்‌ காரணம்‌ கெளரி தேவியை இவர்கள்‌ தங்கள்‌ -குலதெய்வமாகக்‌ கொண்டிருப்பதுதான்‌”” எனக்‌ கூறப்‌ பட்டுள்ளது.

பின்வரும்‌ குறிப்புகளுக்கு நான்‌ திரு ஹயவதன ராவிற்கு கடப்பாடுடையேன்‌. கவரர்கள்‌ முன்னாளில்‌ கீழைச்‌ சாளுக்கியர்‌ களுக்குரிய வேங்கியில்‌ வாழ்ந்தவர்கள்‌ என ஒரு வழக்கு நிலவு தின்றது. அந்த வேங்கியின்‌ அழிபாடுகள்‌ கோதாவரி மாவட்டத்‌ தில்‌ எல்லூர்‌ அருகே உள்ளது. அந்த நாட்டு அரசன்‌ தனித்துக்‌ கோஷாவாக இருக்கும்‌ இவர்கள்‌ சாதிப்‌ பெண்களுள்‌ ஒருத்தி யைப்‌ பார்க்க விரும்பினான்‌. அதற்கு இவர்கள்‌ உடன்பட வில்லை, அரசன்‌ ஆணைப்படி இவர்கள்‌ வீடுகளுக்கு நெருப்பு இடப்பட்டது. சிலர்‌ வீட்டின்‌ கதவுகளைத்‌ தாழிட்டவர்களாக வீட்டுக்குள்ளேயே வீர மரணம்‌ எய்தினர்‌. மற்றவர்கள்‌ தங்‌ கள்‌ பெண்டிரைப்‌ பெரிய பெட்டிகளில்‌ வைத்துப்‌ பூட்டித்‌ தூக்கிக்‌ கொண்டு கடற்கரைப்‌ பக்கம்‌ தப்பி ஓடினர்‌. அங்கி ருந்து, உடனே கலம்‌ ஏறி அனகாபள்ளி மாவட்டத்தில்‌ இருக்‌ கும்‌ பூதிமதகாவில்‌ கரை சேர்ந்தனர்‌. அங்கிருந்து அவர்கள்‌ கொண்டகிர்லா வரை நடந்து, அதன்‌ அருகே ஓடத்தில்‌ வந்த வர்கள்‌ என்பதனைக்‌ காட்டும்‌ வகையில்‌ ஓடப்பள்ளி என்ற ஊரினை அமைத்துத்‌ தங்கினர்‌. பின்னர்‌ கவரல அனகாபள்ளி என்ற ஊரையும்‌ அமைத்தனர்‌. அனகாபள்ளியைத்‌ தோற்று வித்த அரசனான பாயக ராவ்‌ இடமிருந்து ஓர்‌ அழைப்பினைப்‌ பெற்ற இவர்கள்‌ வடக்கு நோக்கிச்‌ சென்று அனகாபள்ளியில்‌ இன்று கவரபேட்டை என வழங்கப்படும்‌ பகுதியில்‌ தங்கி வாழலாயினர்‌. அந்த ஊரில்‌ நல்லவேளையில்‌ வீட்டுக்கு மனைக்கால்‌ நிறுத்தும்‌ போது வழக்கமாக அதற்காகப்‌ பயன்‌ படுத்தப்படும்‌ பாலை (Mimusops hexandra) மரத்தினைப்‌ பயன்படுத்தாமல்‌ கரையான்‌ அரிக்காது நிலைக்கும்‌ என்ற காரணத்தால்‌ கருங்கழி (408018 யாப) மரத்தைப்‌ பயன்படுத்‌ தினர்‌. இதனால்‌ அனகாபள்ளி பெருகலாயிற்று.

கவரர்‌ தெலுங்கு மொழியே பேசுகின்றனர்‌. மற்ற தெலுங்‌குச்‌ சாதியாரிடையே காணப்படுவது போலவே இவர்கள்‌ சாதியிலும்‌ புறமணக்கட்டுப்பாடுடைய பல குலப்‌ பிரிவுகள்‌ (இல்லப்‌ பெயர்கள்‌) உள்ளன.

பெண்கள்‌ பூப்படையும்‌ முன்போ பூப்படைந்த பின்போ மணம்‌ செய்லிக்கப்படுகின்‌ றனர்‌. மேநரிகம்‌: எனும்‌ தன்‌ உடன்‌ பிறந்தவள்‌ மகளை மணக்கும்‌ வழக்கமும்‌ இவர்களிடையே உள்ள தாகக்‌ கூறப்படுகின்றது, கைம்பெண்கள்‌ மறுமணம்‌ செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்‌ றனர்‌. ஏழு கணவர்களை மணந்த ஒருத்தி பெத்தம்மா எனப்‌ ! போற்றவும்படுகிறாள்‌.
கவரர்களில்‌ சிலர்‌ வைணவர்கள்‌. மற்றவர்கள்‌ சைவர்கள்‌. எனினும்‌ இவ்வேறுபாடு திருமண உறவு கொள்ளத்‌ தடையாய்‌ இருப்பதில்லை, இரு: பிரிவினரும்‌ ஊர்த்‌ தேவதைகளை வழிபடுவதோடு – அவர்களுக்கு உயிர்ப்பலியும்‌ தருகின்றனர்‌. வைணவர்கள்‌ பூரி சகன்னாதரிடம்‌ மிகுந்த பக்தி உடையவர்கள்‌. சிலர்‌ அக்கோயிலுக்குச்‌ ‘ செல்கின்றனர்‌. மற்றவர்கள்‌ அக்‌ கடவுளுக்கு நேர்ந்து கொள்வர்‌. பூரியில்‌ தேர்த்‌ திருவிழா நடை “பெறும்போது கவரர்கள்‌ தங்கள்‌ சர்க்‌ கோயிலில்‌ தேரோட்டம்‌ நடத்துவர்‌, அப்போது பெண்கள்‌ தங்கள்‌ நேர்த்திக்‌ கடன்களைச்‌ செலுத்துவர்‌. தன்‌. தீராத நோய்‌ தீர வேண்டுமென்றோ . “தனக்குக்‌ குழந்தை பிறக்க வேண்டும்‌ என்றோ நேர்ந்து கொண்ட ஒருத்தி தண்ணீரோடு ‘கூடிய ஒரு பெரிய பானையைத்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு வேகமாகத்‌ தேரில்‌ வரும்‌ தெய்வத்தின்‌ முன்‌ ஆடுவாள்‌. பானையிலிருந்து துளும்பி வெளியே சிதற வேண்டிய தண்ணீர்‌ கழே விழாமல்‌ மீண்டும்‌ பானையின்‌ : ய்து விழும்‌ ணன்‌ நிகழ்கின்றது.

வைணவர்கள்‌ இறந்து போனவர்களை எரிக்கின்றனர்‌. சைவர்கள்‌ இறந்தவர்களை உட்கார்ந்த:நிலையில்‌ புதைப்பர்‌. வழக்கமான சின்ன, பெத்த ரோசு. சாவு நாள்‌ சடங்குகள்‌ நடத்தப்படும்‌.

ஆண்கள்‌ வலது, இடது மணிக்கட்டுகளில்‌ தங்கக்‌ காப்பு அணிவர்‌. பெண்கள்‌ வலது மணிக்கட்டில்‌ வெள்ளிக்‌. காப்பும்‌ இடது மணிக்கட்டில்‌ திருமணத்தின்போது அணிவிக்கப்படும்‌ பவளக்‌ காப்பினையோ அல்லது பவளம்‌ போலத்‌ தோற்றம்‌ தரும்‌ காப்பினையோ அணிவர்‌. இவர்கள்‌ சேலைத்‌ தலைப்‌ பினை இடது தோளில்‌ இடுவர்‌. விசாகப்பட்டினம்‌ மாவட்‌ டத்தைச்‌ சேர்ந்த மற்ற பிராமணரல்லாத பெண்களைப்‌ போல இவர்கள்‌ சுருட்டுப்‌ பிடிப்பதில்லை.
இந்தச்‌ சாதியின்‌ பரம்பரைத்‌ தொழில்‌ வணிகமே.

இதனாலேயே புறமணக்கட்டுப்பாடு உடைய பல குலங்கள்‌, செட்டிகள்‌ என்ற பெயர்பெற்றனவாக உள்ளன. இன்று கவரர்‌ பயிர்த்தொழில்‌ செய்வதோடு கடின உழைப்புக்குப்‌ பெயர்‌ போன விசாகப்பட்டின மாவட்ட உழவர்களாகவும்‌ கருதப்படு கின்றனர்‌. காய்கறி, பால்‌, தயிர்‌ முதலியவற்றை விற்கப்‌ பெண்‌ கள்‌ நெடுந்தொலைவு நடந்து செல்வர்‌.
அண்ணா, அய்யா என்பன இந்தச்‌ சாதிக்குரிய பட்டப்‌ பெயர்கள்‌. நாயுடு என்பதையும சிலபோது பட்டப்பெயராகத்‌ தரிப்பர்‌.

கவரை தமிழ்நாட்டில்‌ வந்து தங்கி வாழும்‌ தெலுங்கு வணிகரஏான பலிசருக்கு உரிய பெயர்‌. இப்பெயர்‌ மகாபாரதத்தில்‌ கூறப்பட்டுள்ள குருவின்‌ சந்ததியினரான கவுரவர்‌ அல்லது கெளரவர்‌ என்பதன்‌ திரிந்த வடி.வமாகும்‌ என்பர்‌. சிவனின்‌ மனைவீயான கெளரியின்‌ புதல்வார்களே கெளரவாலு என்று பெயர்‌ பெற்றனர்‌ என்றும்‌ கூறுவர்‌. இப்‌ பெயரின்‌ தோற்றம்‌ பற்றியதான வேறு விளக்கங்கள்‌ வருமாறு:-

௮) கவர்யுகு என்ற வடசொல்லின்‌ திரிந்த வடிவம்‌,
ஆ) கலத்தல்‌ எனப்‌ பொருள்படும்‌ கவர்‌ என்ற வட ல்லில்‌ இருந்து அல்லது பின்னலிடப்பட்ட எனப்‌
பொருள்படுவதான கவரக என்ற வடசொல்லிருந்து இப்பெயர்‌ அமைந்திருக்கலாம்‌.

இரு கவரை அல்லது கவரர்‌ எனற பெயர்‌ கால்நடைகளை வாங்குவோர்‌, விற்போர்‌ என்ற பொருள்‌ அடிப்படை
யிலும்‌ வந்ததாகலாம்‌.

கவரைகள்‌ தங்களைப்‌ பலிசர்‌ என அழைத்துக்‌ கொள்கின்‌றனர்‌. பலி நெருப்பிலிருந்தும்‌ குதித்து வந்தவர்‌ எனப்‌ பொருள்‌ படுவது பலிசர்‌ என்ற சொல்‌, பிற தெலுங்குச்‌ சாதியாரைப்‌ போலவே இவர்களிடையேயும்‌ துப்பாக்கி, ஜெட்டி (மல்லர்‌), பகடாளர்‌ (பவளக்காரர்‌), பண்டி (வண்டி), €மநெலி என்பது போன்ற பல புறமணக்கட்டுப்பாடு உடைய குலப்‌ பிரிவுகள்‌ உள்ளன.

இருநெல்வேலி மர்வட்டத்தில்‌ உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ வாழும்‌ கவரைகள்‌ கடலூரில்‌ உள்ள மஞ்சக்குப்பத்திலிருந்து
346 | தென்னிந்தியக்‌ துரைகிருட்டிணம்மா நாயுடு என்பாரோடு அங்கு வந்து குடியேறிய சில குடும்பங்களின்‌ வழிவந்தவர்கள்‌ எனக்‌ கருதுகின்றனர்‌.திருமலைநாயக்கன்‌ ஆட்சிக்காலத்தில்‌ மஞ்சக்குப்பத்தில்‌ ராமராசு என்பவன்‌ இருந்து ஆட்சி செலுத்திவந்தான்‌. அவனுக்கு ஐந்து பிள்ளைகள்‌ இருந்தனர்‌. அவர்களுள்‌. இளையவனான துரைகருட்டிணம்ம அலைந்து திரிவதில்‌ ஆர்வம்‌ மிக்கவன்‌.

ஒருமுறை அவன்‌ தன்‌ அன்னையிடம்‌ கொஞ்சம்‌ பணம்‌ பெற்றுக்‌ கொண்டு திருச்சிராப்பள்ளி சென்று அங்கே கடைத்தெருவில்‌ அமர்ந்திருக்கும்போது யானை ஒன்று மதம்‌ பிடித்து ஓடி. வந்தது. துரைகிருட்டிணம்ம அதன்‌ மதத்தினை அடக்கிப்‌ பணிய வைத்தான்‌. அதனைக்‌ கேள்வியுற்ற விசயரங்க சொக்கநாதன்‌ அமைச்சர்களையும்‌, ஏவலர்களையும்‌ அனுப்பி அவனை அரண்மனைக்கு அழைத்து வந்து அவனோடு உரையாடிக்‌ கொண்டிருக்கும்போது திருநெல்வேலியில்‌ உள்ள சில பாளையக்காரர்கள்‌ வரி கொடுக்க மறுக்கின்றனர்‌ என்ற செய்தி
வந்தது. துரைகிருட்ம.ணம்ம தான்‌ அங்கே சென்று அவர்களைப்‌ பணிய வைப்பதாக முன்‌ வந்தான்‌. அப்பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூரைக்‌ கடந்து செல்லும்போது பாழடைந்த ஒரு கிருட்டிணன்‌ கோயிலைக்‌ கடக்க நேரிட்டது. பாளையத்தாரைப்‌ பணிய வைக்கும்‌ தன்‌ முயற்சியில்‌ வெற்றி இடைத்தால்‌ அந்தக்‌ கிருட்டிணன்‌ கோயிலைப்‌ புதுப்பிப்பதாக அவன்‌ மனத்தில்‌ வேண்டிக்கொண்டான்‌. அவன்‌ திருநெல்வேலியை அடைந்த போது பாளையத்தார்‌ எத்தகைய எதிர்ப்பும்‌ காட்டாமல்‌ வரியினைச்‌ செலுத்திவிடவே துரைகிருட்டிணம்ம வில்லிபுத்‌தாரை அடைந்து அங்கேயே தங்‌்இவிட்டான்‌.

இவர்களுடைய திருமணச்‌ சடங்குகள்‌ தெலுங்குச்‌ சாதியாருடைய திருமணச்‌ சடங்குகளைப்‌ பின்பற்றி அமைந்துள்ளன.,

சிமனெலி குலத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ தங்களைக்‌ கருட்டிணம்மா வின்‌ நேர்‌ சந்ததியினர்‌ எனக்‌ கருதுவதோடு இருமணத்தின்‌ போது இரண்டு சிறப்பான சடங்குகள்‌ மேற்கொள்கின்றனர்‌.

அவற்றுள்‌ ஒன்று கிருட்டிணம்ம பேரண்டாளு எனப்படும்‌. ‘ அதில்‌ சத்திரியச்‌ சடங்குக்கு முன்னாக மணமகனும்‌ மணமக ளும்‌ கோயிலுக்குச்‌ செல்லும்போது தங்கள்‌ தலையில்‌ பானை குலங்களும்‌ குடிகளும்‌களைச்‌ (குரிகெலு) சுமந்து செல்வர்‌. கிருட்டிணம்ம பேராண்‌டலு என்னும்‌ சடங்கு முகூர்த்த நாளுக்கு முன்‌ தினம்‌ நடத்தப்‌
படுகிறது. அது திருமணமான சுமங்கலியான கிருட்டிணம்மாவின்‌ ஆவியினை வழிபடுவதாகும்‌ அப்போது சுமங்கலி ஒருத்‌இக்குப்‌ பூதய சேலை ஒன்றினை வெற்றிலை பாக்கு, காணிக்கை ஆகயவற்றொடு வழங்குவதோடு மற்றவர்களுக்கு முன்பு அவர்‌
களுக்கு உணவளிப்பர்‌. இது கிட்டத்தட்ட சிரார்த்த சடங்‌
கனை ஒத்த சடங்கே. ஓமம்‌ வளர்ப்பதும்‌ மந்திரம்‌ சொல்‌
வதும்‌ ஆகியன மட்டும்‌ இதில்‌ இடம்பெறுவதில்லை. ஓமம்‌
வளர்த்தலும்‌ மந்தரம்‌ சொல்வதும்‌ பிராமணர்களாலும்‌
தங்கள்‌ சடங்குகளை நடத்துவிக்கப்‌ பிராமணர்களை அமர்த்தும்‌
சல சாதியார்களாலும்‌ மேற்கொள்ளப்படுகிறது, இதன்‌ அடிப்‌
படைத்‌ தத்துவம்‌ இறந்துபோன சுமங்கலியான மகளிரின்‌ ஆவி
யினைத்‌ திருப்திப்படுத்தலேயாம்‌. ஒரு குடும்பத்தில்‌ அவ்வாறு
ஒருத்தி சுமங்கலியாக இறப்பாளாயின்‌ அக்குடும்பத்தில்‌ நடை
பெறும்‌ நல நிகழ்ச்சிகளைத்‌ தொடங்குவதற்கு முன்பெல்லாம்‌
சுமங்கலிப்‌ பிரார்த்தனை நடத்தப்பட வேண்டும்‌. சமய நம்‌
பிக்கையுள்ள மகளிர்‌ இச்‌ சடங்கினை நடத்தத்‌ தவறினால்‌ அச்‌
சுமங்கலி ௮க்‌ குடும்பத்திற்கு ஏதேனும்‌ கேடு செய்யலாம்‌ என
நம்புகின்றனர்‌. மணமகன்‌ இடையில்‌ உள்ள கச்சையில்‌ வாள்‌
சொருகும்‌ பழக்கம்‌ மெல்ல மறைந்து வருகின்றது.
மதுரை மாவட்டக்‌ கையேட்டில்‌ மதுரை மாவட்டக்‌ கவரர்‌ கள்‌ பற்றிக்‌ கூறப்பட்டுள்ளதாவது:- “*இம்மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மட்டும்‌ கிடைக்கும்‌ தனிச்‌ சிறப்பு வாய்ந்த மண்ணி
னைக்‌ கொண்டு வளையல்கள்‌ செய்து விற்பதே இவர்களுள்‌ பெரும்பாலோர்‌ மேற்கொண்டுள்ள தொழில்‌. இத்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளவர்கள்‌ தங்களைச்‌ செட்டிகள்‌ எனக்‌ கூறிக்‌ கொள்‌ கின்றனர்‌. நெசவு, சாயம்‌ போடுதல்‌, வண்ணம்‌ தீட்டுதல்‌ போன்ற பிற தொழில்களில்‌ ஈடுபட்டுள்ளவர்கள்‌ தங்களை
நாயக்கன்‌ என அழைத்துக்கொள்கின்றனர்‌. மற்ற நாயக்கன்‌ களிடையே உள்ளதைப்‌ போலவே இவர்களிடையேயும்‌ பூணூல்‌ அணியும்‌ பழக்கம்‌ உள்ளது. வெள்ளெக்குறிச்‌சியில்‌ தற்போது உறையும்‌ நாயக்க அரசர்களின்‌ வழித்தோன்றல்கள்‌ பூணூல்‌
348 தென்னிந்தியக்‌
அணியும்‌ இப்‌ பழக்கம்‌ உடையவர்களாயில்லை. புனிதம்‌ கெட்ட
வர்களாக இழிந்த நிலைக்குத்‌ தாங்கள்‌ தள்ளப்பட்டுவிட்ட
தால்‌ தற்பொழுது தாங்கள்‌ புனிதச்‌ சன்னமான அதனை அணி
வதில்லை என அவர்கள்‌ அதற்குக்‌ காரணம்‌ கூறுகினறனர்‌.’”
தஞ்சாவூர்‌ மாவட்டக்‌ கையேட்டில்‌ தஞ்சாவூர்‌ மாவட்டத்‌
தைச்‌ சேர்ந்த கவரர்‌ பற்றிக்‌ கூறியுள்ளதாவது:- **இவர்களில்‌
பெரும்பாலோர்‌ நாயக்‌ என்ற பட்டப்பெயர்‌ தரிக்கின்றனர்‌.
வணிகத்தில்‌ ஈடுபட்டுள்ளவர்கள்‌, அவர்களுள்ளும்‌ குறிப்பாகக்‌
கண்ணாடி வளையல்‌ விற்பவர்கள்‌, தங்களைச்‌ செட்டிகள்‌ என
அழைத்துக்‌ கொள்கின்றனர்‌. பயிர்த்தொழிலில்‌ ஈடுபட்டவர்‌
களாக உள்ளவர்கள்‌ ரெட்டிகள்‌ எனக்‌ கூறிக்‌ கொள்கின்றனர்‌.
பிள்ளை, முதலி, செட்டி. என்ற பட்டங்களைப்‌ போல நாயக்‌
என்ற பட்டப்பெயரே இவர்களிடையே செல்வாக்கு உடைய
தாக உள்ளது. கூலி வகுப்பாரான பள்ளியர்‌ அரசின்‌ பணியில்‌
அமர்ந்தவுடனும்‌ ஆட்டிடையர்‌ செல்வ வளம்‌ ெற்றவார்களாக
வாழ்க்கை வளம்‌ எய்திய பின்னும்‌ கவரருக்கு உரிய இப்பட்டத்‌
தைத்‌ தரித்துக்‌ கொண்டு வைணவர்களுக்கு உரியதான
நாமத்தை நெற்றியில்‌ தரித்துத்‌ தங்களைக்‌ கவரர்‌ எனக்‌
கூறிக்‌ கொள்கினறனர்‌. எனினும்‌ இவர்களுக்குத்‌ தெலுங்கு
பேச வராது, அது மட்டுமன்றி இவர்கள்‌ தங்கள்‌ முன்னோர்‌
தெலுங்கு நாட்டில்‌ எப்பகுதியைச்‌ சேர்ந்தவர்‌ என்பதையும்‌
கூற அறியார்‌.
கவரர்களுள்‌ மிகப்‌ பெரூம்பான்மையானவர்கள்‌ காசுலர்‌
எனத்‌ தெலுங்கர்‌ வழங்கும்‌ வளையல்‌ என்ற உட்பிரிவினைச்‌
சேர்ந்தவர்களாக உள்ளனர்‌.

Leave a Reply