வணிகக் குடியின் சங்கேத மொழிகள்.

1891 மாநிலக்‌ கணக்கெடுப்பில்‌, “செட்டி என்ற பெயர்‌ ஒரு குறிப்பிட்ட சாதிப்‌ பெயராகவும்‌, பட்டப்‌ பெயராகவும்‌ பயன்படுத்தப்படுகிறது. இந்தப்‌ பட்டத்தைச்‌ சூட்டிக்‌ கொள்‌ளும் மக்கள்‌ வேளாளன்‌ தன்னை முதலி என்று சொல்லிக்‌ கொள்வதைப்‌ போலத்‌ தங்களையும்‌ செட்டிச்‌ சாதியைச்‌ சேர்ந்தவர்களாகக்‌ கூறிக்‌ கொள்கின்‌ றனர்‌. இவ்வாறு செட்டி என்ற பட்டத்தைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருப்பது கணக்கெடுப்புப்‌ பதிவில்‌ ஓல குழப்பங்களை ஏற்படுத்தி யுள்ளது. உரிய செட்டிச்‌ சாதியுடன்‌ வேறு பல சாதி களும்‌ சேர்க்கப்பட்டிருப்பதாக உட்பிரிவுகளிலிருந்து தெரிய வருகிறது ”’ எனக்‌ கூறப்பட்டுள்ளது.

மீண்டும்‌ 1901 மாநிலக்‌ கணக்கெடுப்பில்‌, “செட்டி என்றால்‌ வணிகன்‌ என்பது பொருள்‌, பட்டப்‌ பெயராகவும்‌ தொழிலைச்‌ சுட்டும்‌ பெயராக வும்‌, வரன்முறையின்‌ றிப்‌ பயன்படுத்தப்படும்‌ சாதிப்‌ பெயர்‌ களுள்‌ இதுவும்‌ ஒன்று. நெசவாளர்கள்‌, எண்ணெய்‌ ஆட்டு வோர்‌ முதலியவர்களும்‌ இதனைப்‌ பட்டப்‌ பெயராகப்‌ பயன்‌ படுத்துகின்றனர்‌. பலர்‌ தங்கள்‌ தொழில்‌ வணிகத்‌ தொடர்பு டையது என்பதனைக்‌ காட்டச்‌ செட்டி என்ற பெயரைத்‌ தங்கள்‌ பெயருக்குப்‌ பின்‌ இணைத்துக்‌ கொள்கின்றனர்‌. உரிய முறையில்‌ பயன்படுத்தினால்‌ இது ஒரு சாதியினை மட்டும்‌ குறிக்கும்‌ பெயராக அமையும்‌.” எனக்‌ கூறப்பட்டுள்ளது. செட்டிகள்‌ எண்ணிக்கையில்‌ மிகுத்திருப்பதோடு மிகப்‌ பரத்து பட்டவர்களாகவும்‌ வாழ்த்து வருகின்றனர்‌. பலவாக உள்ள இவர்களுடைய உட்பிரிவுகள்‌, பலவேறு வகைப்பட்ட வாழ்க்கை நடைமுறைகளைப்‌ பின்பற்றுவனவாக உள்ளன, இந்த உட்‌ பிரிவுகளுள்‌ நன்கு அறியப்பட்டவை பேரி செட்டிகள்‌, நாட்டுக்‌ கோட்டைச்‌ செட்டிகள்‌, நகரத்துச்‌ செட்டிகள்‌, காசுக்காரச்‌ செட்டிகள்‌ என்பனவாம்‌, இவற்றுள்‌ பேரி செட்டிகள்‌, நாட்டுக்‌ கோட்டைச்‌ செட்டிகள்‌ ஆகிய இரு தலைப்பி அது தனிக்‌ கட்டுரைகள்‌ உள்ளன. மதுரை மாவட்டத்தைச்‌ சேர்ந்த செட்டி களின்‌ பின்வரும்‌ பிரிவுகளைப்‌ பற்றி என்‌ குறிப்புகளில்‌ பதியப்‌ பட்டுள்ளது.

பின்வரும்‌ சாதியாரும்‌, குடியினரும்‌ செட்டி என்ற பட்டத்‌ தையோ அதற்குச்‌ சமமான ஷெட்டி என்ற பட்டத்தையோ தரித்துக்‌ கொள்வதாகப்‌ பதியப்பட்டுள்ளது,

பலிசர்‌ – வணிகச்‌ சாதி, தெலுங்கர்‌.
பண்டர்‌ – பயிர்த்தொழில்‌ செய்யும்‌ சாதி, துளுவர்‌.
சமணர்‌ – சணப்பார்‌ – முதலில்‌ பலிசர்‌ சாதியின்‌ ஓர்‌ உட்பிரிவாக இருந்தவர்கள்‌. கோணிப்பை தயாரிப்ப வர்கள்‌.
கவரை – பலிசருக்கச்‌ சமமான தமிழ்ப்‌ பெயர்‌.
கோமட்டி – வணிகம்‌ புரியும்‌ தெலுங்கர்‌.
கொரச்சர்‌ – நாடோடிக்‌ குடிகள்‌.
குடுமி – திருவாங்கூரைச்‌ சேர்ந்த சாதியினர்‌. கொங்கணிப்‌ பிராமணர்‌ இல்லங்களில்‌ பணி புரிவோர்‌.
தோபி – ஒரிய வண்ணார்‌
காணீகர்‌ – எண்ணெய்‌ ஆட்டுவோர்‌
காவுடர்‌ – பயிர்த்தொழிலாளரான கன்னடிய
கம்மலர்‌ – கள்‌ இறக்கும்‌ தெலுங்கர்‌.

புரிவோர்‌, – பிலிமக்க, தேவாங்கர்‌, பட்டுநால்காரர்‌, சாலியர்‌, சேடன்‌, சேணியன்‌ – இவர்கள்‌ அனைவரும்‌ நெசவுத்‌ தொழில்‌

குடிகார்‌ – மரவேலைப்பாடு செய்வோரான கன்னடியர்‌,

மண்டலன் செட்டி –

மேதரர் – தெலுங்கர்.பிரம்பு பிளப்பவர், பாய் பின்னுபவர்.
நாயர் – மலபாரைச் சேர்ந்த சில நாயர்களின் தொழில் காரணமான பட்டப் பெயர்.

பட்டணவன் – மீனவர், தமிழர்.
பட்டபு – மீனவர், தெலுங்கர்.

சேனைக் குடியன் – வெற்றிலைக் கொடிக்கால் வைத்து வெற்றிலை வணிகம் செய்பவர்கள்.

சாணான் – தமிழ் நாட்டுக் கள் இறக்கும் வகுப்பார்.

சோனர் – பொற்கொல்லர்

தொரெயர் – மீனவர், கன்னடியர்.

உப்பலியன் – உப்புக் காய்ச்சுவோர், கர்ப்பூரம் தயாரிப்பதால் சிலர் தங்களைக் கர்ப்பூரச் செட்டி எனவும் கூறிக் கொள்கின்றனர்.

வாணியன் – தமிழ் நாட்டுச் செக்கார்

வயநாடன் செட்டி –

சென்னையைச்‌ சேர்ந்த மோடெல்லியர்களும்‌, செட்டிகளுமான பெட்டிக்‌ கடைக்காரர்‌களும்‌ துணி வணிகர்களும்‌ பேசுவனவே ரகசிய மொழிகளுள்‌ நம்‌ கவனத்தை மிகவும்‌ கவர்வனவாகும்‌. இவர்கள்‌ வணிகத்தில்‌ பெரும்பாலும்‌ பொருள்கள்‌ கொள்முதல்‌ செய்யும்போதே உரிய தொகை செலுத்துகின்றனர்‌. எனவே இவர்கள்‌ எண்களுக் குரிய ஒரு தனி அட்டவணையை வைத்துள்ளனர்‌. ஒன்று முதல்‌ பத்து வரையான எண்களுக்குத்‌ தனிப்‌ பெயர்கள்‌ உள்ளன. அவற்றை இன்றும்‌ பயன்படுத்துகின்றனர்‌. அவ்வாறு பயன்படுத்துபவர்கள்‌ அவற்றின்‌ பொருள்‌ என்ன எனத்‌ தெரிந்து கொள்ளாமலே பயன்படுத்துகின்ற அளவுக்கு அவை நெடுங்காலமாகப்‌ பழக்கத்தில்‌ உள்ளன. இந்து சாத்தி ரங்களில்‌ மனம்‌ ஒன்று எனக்‌ கூறப்படுவதால்‌ மனத்தைக்‌ குறிக்‌ கும்‌ மதி என்ற சொல்‌ ஒன்று என்பதற்குப்‌ பதிலாகப்‌ பயன்‌ படுத்தப்படுகிறது. நல்வினை, தீவினை என வினை இரண்டாக உள்ளமையால்‌ வினை என்ற சொல்‌ இரண்டுக்குப்‌ பதிலாகப்‌ பயன்படுத்தப்படுகறது. இராசதம்‌, தாமசம்‌, சாத்வீகம்‌ எனக்‌ குணம்‌ மூவகைப்படுவதால்‌ மூன்றைக்‌ குறிக்கக்‌ குணம்‌ என்ற சொல்‌ பயன்படுத்தப்படுகிறது.

இதே அமைப்பில்‌ சுருதி என்ற சொல்‌ நான்கையும்‌, மன்மதன்‌ பஞ்ச பாணங்களைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ சரம்‌ என்ற சொல்‌ ஐந்தையும்‌, ஆறு சமயங்‌ களின்‌ அடிப்படையில்‌ மதம்‌ என்ற சொல்‌ ஆறையும்‌, ஏழு கடல்கள்‌ என்ற அடிப்படையில்‌ திரை என்ற சொல்‌ ஏழினையும்‌, கிரிகள்‌ அஷ்டகிரிகள்‌ என இந்துக்களால்‌ வழங்கப்படுவதால்‌ கிரி எட்டினையும்‌, மணிகள்‌ நவமணிகள்‌ என இந்துக்களால்‌ வழங்குவதால்‌ மணி என்ற சொல்‌ ஒன்பதினையும்‌, திசைகள்‌ பத்து ஆகையால்‌ திசை என்ற சொல்‌ பத்தினையும்‌ குறிக்கும்‌ படியாக இந்த மாற்று மொழிகளை அமைத்துள்ளனர்‌. ரூபாய்க்கு உரிய பொதுவான பெயர்‌ வெள்ளி அல்லது வெள்ளை. தங்கம்‌ என்பது அரை ரூபாயையும்‌, பிஞ்சு வெள்ளி என்பது கால்‌ ரூபாயையும்‌ குறிக்கும்‌. பூ வெள்ளி என்பது ரூபா யில்‌ எட்டில்‌ ஒரு பங்கினைக்‌ குறிப்பதாகும்‌. பணம்‌ எனப்படும்‌ ஒன்றேகால்‌ அணா சுனை எனப்படும்‌. இந்த ரகசியச்‌ சொல்‌லாட்சியைப்‌ பயன்படுத்துபவர்கள்‌ பெரும்பா லும்‌ படி, ரூபாய்‌, அணா ஆகிய சொற்களின்‌ முன்னரே இவற்றைச்‌ சேர்த்துச்‌ சொல்ல வேண்டி வருகின்றது. மதி அணா என்பது ஓர்‌ அணா வையும்‌, மதி படி என்பது ஒரு படியினையும்‌, மதி வெள்ளி என்பது ஒரு ரூபாயையும்‌ குறிப்பதாக இந்தச்‌ சொ ற்கள்‌ பயன்‌ படுத்தப்படும்‌. இதே போல மற்ற எண்களுடனும்‌ இந்தச்‌ சொற்‌ களை இணைத்துக்‌ கூறலாம்‌. திருச்சிராப்பள்ளியைச்‌ சேர்ந்த வணிகர்களும்‌ எண்களைக்‌ குறிக்க இதே அட்டவணையையே பெரும்பாலும்‌ பயன்படுத்துகன் றனர்‌. ஆனால்‌ ரூபாயின்‌ பின்‌னங்களுக்குப்‌ பெரிய அளவில்‌ வேறு சொற்களைப்‌ பயன்படுத்து கின்றனர்‌. இவர்களிடையே மூன்று அணா என்பது ஓர்‌ அணா வைக்‌ குறிக்கும்‌. ஏ அணா இரண்டணா; பூ அணா நான்கணா; பணி அணா எட்டணா; முன அணா பன்னிரண்டு அணா; இவர்களிடையேயும்‌ வெள்ளே என்பது ஒரு ரூபாயைக்‌ குறிக்‌ கும்‌, தமிழ்‌ அகர வரிசையினை அடிப்படையாகக்‌ கொண்டு அமைக்கப்பட்ட புதுமையான தொரு எண்களுக்கான இன்‌ னொரு அட்டவணையும்‌ இவர்களிடையே வழக்கில்‌ உள்ளது. இந்த அட்டவணையில்‌ பி என்ற எழுத்து ஒன்றையும்‌ ன என்ற எழுத்து இரண்டையும்‌, ளை என்ற எழுத்து மூன்றையும்‌, ய என்ற எழுத்து நான்கையும்‌, ல என்ற எழுத்து ஐந்தையும்‌, ம என்ற எழுத்து ஆறையும்‌, வ என்ற எழுத்து ஏழையும்‌, ந என்ற எழுத்து எட்டையும்‌, தி என்ற எழுத்து ஒன்பதையும்‌ அ எனற எழுத்து பத்தையும்‌ குறிக்கும்‌.

இந்த எழுத்துக்கள்‌ அனைத்தையும்‌ இணைத்து “பின்ளையலாம்‌ வந்திது’ என நினைவூட்டு வாசகமாக எப்பொழுதும்‌ எளிதாக நினைவில்‌ கொள்ளலாம்‌. இந்த வணை அளவுகள்‌, ரூபாய்கள்‌, அணாக்கள்‌ ஆகியவற்றோடு இணைத்துக்‌ கூறவும்‌ பயன்படும்‌. சென்னையிலும்‌, செங்கல்‌ பட்டு மாவட்டத்திலும்‌ கெட்டி ரகக்‌ கைத்தறித்‌ துணிகளை விற்பனை செய்பவர்கள்‌ தங்களுக்கெனத்‌ தனித்ததொரு அட்ட வணையைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. இது ஒரு பைசாவிலிருந்து ஆயிரம்‌ ரூபாய்‌ வரை அனைத்துத்‌ தொகையையும்‌ சுட்ட உதவும்‌ முழுமையான அட்ட வணையாகும்‌, இந்து வணிகர்கள்‌ அவ்வப்போது இந்துஸ்தானியை அடிப்படையாகக்‌ கொண்ட ஒரு ரகசிய மொழியையும்‌ பயன்படுத்துகின்றனர்‌. சென்னை நகரின்‌ ஒரு பகுதியில்‌ இந்த வழக்கத்தைக்‌ காணலாம்‌. அவர்கள்‌ மொழியில்‌ “பாவ்‌ கானே” ஓர்‌ அணாவையும்‌. “அட கானே” இரண்டணாவையும்‌, “பாவக்‌ ரூபா” ஒரு ரூபாயையும்‌ என்பது போலத்‌ தொடர்ந்து சுட்டும்‌. தரகர்கள்‌ தங்களுக்கெனத்‌ தனிமொழிகளை உடையவர்கள்‌. “படியைப்‌ பார்‌” என்ற தொடரை அவர்கள்‌ விலையைக்‌ குறைத்துக்‌ கேள்‌ அல்லது விலையைக்‌ குறைத்துக்‌ கூறு எனச்‌ சந்தர்ப்பத்தை ஓட்டிப்‌ பொருள்‌ தரும்படி பயன்படுத்துவர்‌. அதே போல முடுக்கப்‌ பார்‌” என்ற தொடர்‌ அதிக விலை கேள்‌ என அறி வுறுத்துவதாகும்‌. ஒரு தரகன்‌ சிவன்‌ தாம்பரம்‌ எனக்‌ கூறுவ னாயின்‌ விற்பவன்‌ கூறுகின்ற விலையில்‌ தரகனுக்குரிய தரகுத்‌ தொகையும்‌ அடங்கி உள்ளது எனப்‌ பொருள்படும்‌. தெலுங்குத்‌ தரகர்களிடையேயும்‌ இது போன்ற குழூஉக்குறித்‌ தொடர்கள்‌ வழக்கில்‌ உள்ளன. அவர்களிடையே *மலசு வக்காடு’ “நா வக்காடு? என்ற தொடர்கள்‌ முறையே விலையை உயர்த்து என்பதையும்‌ விலையைக்‌ குறை என்பதையும்‌ குறிப்பனவாகும்‌,”

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி 2

Leave a Reply