மதுரை சித்திரை திருவிழா 10 ம் நாள் திருவிழாவான, “திருக்கல்யாண வைபவத்திற்கு” திருக்கல்யாண மாங்கல்யம் (பொட்டு) கட்டளைக்காரர் “கவரா குலத்தை” சேர்ந்தவர செய்தனர்.
திரு அழகிரிசாமி நாயுடு வம்சத்தாரின் 6 வது தலைமுரை கட்டளைக்காரர் திரு மல்லினேனி சதீஸ் குமார் நாயுடு, அவர்கள் வீட்டிற்கு, அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கோவில் ஐயர், கோவில் பரிஜார், கோவில் பேஷ்கார், ஆகியோர் மேளதாளத்துடன் வந்து திருமாங்கல்யம் (சின்ன பொட்டு) கட்டளைக்காரர்களிடம் பெற்றுக்கொண்டு, அதனை பல்லக்கில் நேற்று பெற்று சென்றனர்.
அந்த அம்மன் தாலி எனப்படும் பொட்டு(திருமாங்கல்யம்) இன்று திருக்கல்யாணத்தன்று அருள்மிகு மீனாட்சி அம்மையாருக்கு அணிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை பழைய கல்யாண மண்டபத்தில் கவர குலத்தை சேர்ந்த திரு அழகிரிசாமி நாயடு அவர்களின் 6 வது தலைமுரை கட்டளைக்காரர் திரு மல்லினேனி சதிஷ் குமார் நாயுடு அவர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.