வணிகர்களும், தொல்லியலில் குபேரனும்

வரலாற்றில் தொல்லியல் சுவடுகளில் குபேரனின் பெயர் தாங்கிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் குவிரா என்று இருக்கும். குபேரா என்பதின் தமிழ் சொல் குவிரா என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

குவிரன் என்பது குபேரன் என்ற பிராக்ருத (அ) சமசஸ்கிருத மொழிச் சொல்லின் தமிழ் வடிவம் என்றேன். இதனைக் கூறிய ஆய்வாளர்கள் திரு. ஐராவதம் மகாதேவன் மற்றும் திரு. சுப்புராயலு அவர்கள்.

குவிரன் என்பது குபேரன் என்பதன் மரூஉ என்றேன். தமிழக குடவரையிலும், கொடுமணல் அகழாய்விலும் குவிரன் என்ற தமிழி கல்வெட்டாக இப்பெயர் வருகிறது.
குவிரா, குயிரா – தமிழ்
குபிரா – பழஞ்சிங்களம்
குபேரா – வடமொழி

 

சிலர் குவி என்பது தமிழ்ச்சொல்லே. அது செல்வம் குவிந்த வணிகரை குறிக்கும் அல்லது பொருட்கள் குவிந்த வணிகரை குறிக்கும் என்றும் கருதுகின்றனர். வ, ப மாற்றத்தால் குவிரன் குபேரன் ஆகியிருக்கலாம் என்பது அவர்களின் வாதம். குப்பைக்கும் குவை என்ற பெயருள்ளது. அதே போல பொன்னை உருக்கக்கூடிய கலத்திற்கும் குவை என்ற பொருள்ளது.

“இருந்தைக் குவை யொத்தன” (தணிகைப்பு. திருநாட்டுப்.63);

குவா, குவன், குஅன் போன்ற பெயர்களும் தமிழி கல்வெட்டில் வருகின்றன.

குவிந்த என்ற சொல்லுறகு உயர்ந்த என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டை ஆண்ட முத்தரைய மன்னர்கள் மாறன் குவாவன், குவாவன் மாறன், குவாவன் சாத்தன், இரவி குவாவன் என்ற பெயர்களைக்கொண்டு விளங்கினர். இங்கு குவாவன் என்ற சொல்லுக்கு உயர்ந்தோன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.” என்கின்றனர்.

தொல்காப்பிய உரையில், குபேரா என்ற சொல்லுக்கு, “நிதியின் கிழவர்” என்ற சொல் பயின்று வருகிறது. நிதியின் கிழவர் வணிகரின் அடையாளமாகக் கூறப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினமும், மதுரையும் என்பன வணிகர் குரிய அவர்கள் தோன்றிய ஊர்கள் என்று கூறப்படுகிறது. நிதியின் கிழவர் என்ற புலவரும் தமிழ் முதற்சங்க காலத்திலயே இருந்துள்ளார்.

படம்: கீழடி பானை ஓட்டில் குவிரன் ஆதன்.

Join our Whatsapp: https://chat.whatsapp.com/EPHbtNtUgsVAWSn8795ZQo

Leave a Reply